PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும் .. ஆலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் என்றும் நிலைத்திட கலியுகவரதனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 


முருகப்பெருமானின் பல்வேறு பெயர்களும் .. அதன் காரணமும் - 

1 - சித்தன் - எல்லாம்வல்ல சித்தராக அடியவருக்குச் சித்தியை வழங்கும் வள்ளலாக விளங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது .. 

2 - சேயோன் - இளமையும் .. செம்மை நிறமும் கொண்டவராக முருகப்பெருமான் விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது 

3 - வேள் - வேள் என்றால் விருப்பம் .. எல்லோராலும் விரும்பப்படுவதாலேயே முருகனுக்கு இந்தப்பெயர் .. மன்மதனுக்கும் வேள் என்ற பெயருண்டு .. செம்மை நிறம்கொண்ட முருகக்கடவுள் செவ்வேள் .. கருமை நிறங்கொண்ட மன்மதன் கருவேள் என புராணம் அழைக்கிறது 
வேள் என்ற சொல்லுக்கு உதவுதல் என்ற பொருளும் உண்டு .. அடியவருக்கெல்லாம் ஆபத்தில் உதவும் கந்தன் வேள் என அழைக்கப்படுவதும் பொருத்தமானதே ! 

4 - வேலன் - வெற்றியைத்தரும் சக்திவேலை கையில் தாங்கி நிற்பதால் வேலன் .. இலக்கியங்கள் சேவற்கொடியோன் .. கொற்றவை சிறுவன் .. மாற்றோர் கூற்று .. அறுவர்பயந்த ஆறமர் செல்வன் என பலவாறு அழைக்கிறது .. 

5 - அரன்மகன் - அரனாகிய சிவபெருமானின் மகன் என்பதால் இத்திருநாமம் .. 

6 - அறுமீன் காதலன் - கார்த்திகைப்பெண்கள் அறுவரின் அணைப்பால் வளர்ந்த குழந்தை முருகன் என்பதால் இவ்வாறும் அழைக்கப்படுகிறார் .. 

7 - அறுமுகன் .. ஆறுமுகன் - ஆறுமுகங்களை உடையவன் ..
ஈசனின் “ ஐந்துமுகத்தோடு அதோமுகமும் தந்து திருமுகங்கள் ஆறாகி செந்தழற்க்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறி ஆறு உய்ப்ப “ எனவரும் கந்தர் கலிவெண்பா ஆறுமுகனைப்போற்றிப் பாடுகிறது ..

8 - குரு - சிவபெருமானுக்கு பிரணவமந்திரம் உரைத்தாலும் அகத்தியர் .. நாரதர் .. நந்தி .. தசரதர் .. வாமதேவமுனி .. பராசரமுனிவர் மகன்கள் ஆறுபேருக்கும் முருகப்பெருமானே 
பிரம்மவித்யா மரபுகளை விளக்கிய ஞான ஆசிரியனாய் விளங்கியதால் சிவகுரு .. லேககுரு .. ஜகத்குரு என போற்றப்படுகிறார் ..

9 - சேவற்கொடியோன் - சேவலை கொடியில் கொண்டதால் ..

10 - கங்கை மைந்தன் - இமவான் மகளாக குடிலை எனும் பெயர்கொண்ட கங்கை சக்திதேவிக்கு மூத்தவராகத் தோன்றியதால் கங்கையும் முருகனுக்குத் தாயாகிறாள் .. எனவே இப்பெயர் .. 

11 - கடம்பன் - கடம்பமாலை சூடியவன் .. இது முருகப்பெருமானின் தூய்மையைக் குறிக்கும் .. 

12 - கந்தன் - ஸ்கந்தம் என்றால் தோள் - வலிமையான தோள்களைக் கொண்டவன் எனப்படும் .. கந்தன் என்றால் ..
ஒன்று கூட்டப்பட்டவர் என்றும் பொருள்படும் .. அறுவராக வளர்ந்த குமரன் சக்திதேவியால் ஒன்று சேர்க்கப்பட்டதால் 
கந்தன் எனப்பட்டான் என்றும் குறிக்கப்படுகிறது .. 

முருகனை வழிபடுவோம் ! சகலநலன்களும் பெறுவோமாக !
“ ஓம் முருகா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH PEACE .. HAPPINESS .. AND PROSPERITY.

" OM MURUGA " ..

No comments:

Post a Comment