அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையாகிய இன்று தங்களனைவரது சகல கிரகதோஷங்களும் நீங்கி .. உடல்நலமும் .. மனநலமும் .. புத்துணர்வு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
த்ந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!
நமசிவாய ! என்பதற்கு சிவனை வணங்குகிறேன் என்பது பொருள் .. நமசிவாய என்று ஜெபித்துவர சிவனருளால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும் ..
இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவை .. திருநீறு .. ருத்திராட்சம் .. திருவைந்தெழுத்து .. ஆகிய சாதனங்கள் ..திருநீறும் .. ருத்திராட்சமும் புறச்சாதனங்கள் ..
திருவைந்தெழுத்து எனப்படும் பஞ்சாட்சரம் அகச்சாதனம் .. இம்மந்திரமானது உயிரில் பதிந்து மூச்சுக்காற்றில் கலந்துவருவதால் நம்முள் இருந்தே நமக்கு பயன்தருவதாக இருக்கும் மந்திரங்கள்பல இருந்தாலும் .. அவற்றில் தலையாயது பஞ்சாட்சர மந்திரம் என்பர் ..
வேத ஆகமங்களில் நடுநாயகமாக நிலைபெற்றிருப்பது பஞ்சாட்சர மந்திரமே ! ரிக் .. யஜுர் .. சாம என்ற மூன்றில் நடுவாகிய யஜுர் வேதத்தில் ஏழு காண்டங்களில் நடுக்காண்டத்தின் மையமாகிய நான்காவது சம்ஹிதையில் நடுநாயகமாக இருப்பது ருத்ராத்யாயம் .. அதன் நடுநாயகமா இருப்பது ருத்திர ஜெபம் ருத்திரத்தின் நடுவில்வரும் மந்திரம்
நம் சோமாயச நமசிவாய என்பது இம்மந்திரத்தை தனிவாக்கியமாக ஒருமுறை ஓதும்போது “ நமசிவாய “ என்றும் .. பலமுறை உச்சரிக்கும்போது “ சிவாய நம “ என்றும் ஒலிக்கும் ..
சிவனைப் போற்றுவோம் ! சகலஐஸ்வரங்களையும் பெற்றிடுவோம் ! .. ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! நலமுடனும் !
WISH YOU ALL A VERY HAPPY SATURDAY MORNING WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " JAI BHOLENATH "
No comments:
Post a Comment