PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று ‘ சங்கடஹர சதுர்த்தி ‘ விரதமும் சேர்ந்து வருவதால் .. ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது மேன்மையைத் தரும் .. தங்கள் அனைவரது எண்ணங்கள் யாவும் நிறைவேறவும் ..சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் வாழ்த்துகிறேன் .. கணபதியை 
வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகர் ஒருமுறை ஆனந்தமாய் நடனம் செய்துகொண்டிருந்தவேளையில் அங்கே வந்த சந்திரன் விநாயகரின் பெருத்த தொந்தியையும் .. துதிக்கையையும் .. அவற்றைத் தூக்கிக்கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்துவிட்டுப் பெரிதாய்ச் சிரித்தான் ..சந்திரன் தன்னைப்பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் 
அவனின் கலைகள் தேய்ந்து போனவை .. தேய்ந்தவையாகவே இருக்கும் எனக்கூறவே ..மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும் .. தன்னுடைய தவற்றை நீக்கவும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விரதமிருந்து விநாயகரின் அருளைப்பெற்றான் ..ஒவ்வொரு பௌர்ணமிக்குப் பின்பு வரும் சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகிறது ..

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் விநாயகரைப் போற்றித் துதித்து .. அனைத்து சங்கடங்களும் நீங்கி .. செல்வாக்கும் .. சொல்வாக்கும் .. பெறுவீர்களாக ..
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD GANESH PROTECT YOU .. AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE ON THIS SANKADAHARA SADURTI DAY .. " JAI GANAPATI " ..

No comments:

Post a Comment