இன்பத்தில் திளைத்து என்னையே மறந்தேன்
இனி எங்கே காண்பேன் அவன் தேகம்
பொன்பதம் தன்னை புத்தியில் வைத்தேன்
பொன்னம்பல வாசனின் அலங்காரம்
நாதனின் நாமம் நல்கிடும் க்ஷேமம்
நாளெல்லாம் இன்பங்களே அந்த
ஆதவன் முன்னில் உருகும் பனியாய்
அகன்றிடும் துன்பங்களே
நாளெல்லாம் இன்பங்களே அந்த
ஆதவன் முன்னில் உருகும் பனியாய்
அகன்றிடும் துன்பங்களே
குருமார் வரிசையில் என்குரு நாதன்
ஒளிர்விடும் இரவியடா அவன்
பெருமைகள் கூறத் தமிழைத் தந்தான்
நான்வெறும் கருவியடா
ஒளிர்விடும் இரவியடா அவன்
பெருமைகள் கூறத் தமிழைத் தந்தான்
நான்வெறும் கருவியடா
எங்கபகவான் அவன் தங்க பகவான் என
குருநாதன் பாடலிலே
பாங்குடனே நிற்கிறான்
பன்வேலின் பாலகன்






















No comments:
Post a Comment