அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று மஹாகந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகின்றது . . கவசம் என்பது ஆபத்தான காலத்தில் எமது உடலை பாதுகாக்க அணியும் ஒரு உடை அல்லது பாதுகாப்புத்தரும் ஒருகருவி என கூறலாம் ..
ஆனால் .. இங்கு “ கந்தசஷ்டி கவசம் “ எம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் .. தீமைகள் .. கஷ்டங்களிலிருந்தும் ..
மும்மலதோஷங்களின் தாக்கங்களில் இருந்தும் எம்மைக்
காப்பாற்றுகின்றது ..

தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்நாளாகவும் .. உடல் நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் கந்தனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ..
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ..
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் ..
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !!
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ..
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் ..
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !!
சஷ்டிவிரதம் ஐப்பசிமாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமைமுதல் ஆரம்பித்து .. ஆறாம் நாளான சஷ்டித்திதி வரையிலான ஆறுதினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்
அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப்பேரருளை அடைவதற்காகச் சைவப்பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதமாகும் ..
ஆணவம் .. கன்மம் .. மாயை ..ஆகிய மும்மலங்களை மட்டுமின்றி .. ஆறுவகை எதிரிகளான .. காமம் .. கோபம் .. பேராசை .. செருக்கு .. மயக்கம் .. தற்பெருமை .. ஆகியவைகளை அழித்து .. முற்றுணர்வு .. வரம்பிலாற்றல் ..
தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் .. ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டுவதால்
“ ஒப்பரும் விரதம் “ என ஸ்கந்தசஷ்டி விரதமகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகிறது ..
தன்வயமுடைமை .. வரம்பின்மை .. இயற்கையுணர்வு .. பேரருள் .. ஆகிய தேவகுணங்களை நிலைநாட்டுவதால்
“ ஒப்பரும் விரதம் “ என ஸ்கந்தசஷ்டி விரதமகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகிறது ..
முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணாநோன்பிருந்து பக்திசிரத்தையுடன் வழிபட்டு ..தியானத்திலும் .. பஜனை செய்வதிலும் .. கந்தரனுபூதி .. கந்தசஷ்டிகவசம் .. கந்தரலங்காரம் ஓதுவதிலும் .. கந்தபுராணம் பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர் ..
முருகனைப்போற்றுவோம் ! அனைத்து நலங்களையும் பெறுவோமாக ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ ..
“ ஓம் சரவணபவாய நமஹ “ ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SHASHTI
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. HAPPINESS AND PROSPERITY .. " OM SARAVANABAVAAYA NAMAHA " ..
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. HAPPINESS AND PROSPERITY .. " OM SARAVANABAVAAYA NAMAHA " ..

No comments:
Post a Comment