வருஷாதி பிரதிபந்தவேத சஹிதா
க்ராஹ்யா ரக்ஷ்னாம் பதே
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ
ஜென்மா பவத்சா திதி “
( மகா கவி காளிதாசரின் உத்தரகாலாமிருதயம் என்னும் ஜோதிட நூலில் 38ம் பாடல் )
க்ராஹ்யா ரக்ஷ்னாம் பதே
மத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ
ஜென்மா பவத்சா திதி “
( மகா கவி காளிதாசரின் உத்தரகாலாமிருதயம் என்னும் ஜோதிட நூலில் 38ம் பாடல் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. தெலுங்கு மற்றும் கன்னட அன்புச் சகோதர சகோதரிகளுக்கும் எங்கள்
“ இனிய யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளும் “
(யுகாதி சுபக்காஞ்சலு) .. உரித்தாகட்டும் .. புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வைத் தூண்டுவதாகவும் அமையவேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்போமாக!
“ இனிய யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளும் “
(யுகாதி சுபக்காஞ்சலு) .. உரித்தாகட்டும் .. புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வைத் தூண்டுவதாகவும் அமையவேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்போமாக!
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கொண்டாடும் புத்தாண்டை “யுகாதி என்றும் “உகாதி” என்றும் கூறுவர் மஹாராஷ்டிர மக்கள் இதேநாளை “குடிபட்வா” எனவும் .. சிந்தி மக்கள் “சேதிசந்த்” எனவும் பலவாறாக கோண்டாடுகின்றனர் ..
” யுகத்தின் ஆரம்பம் யுகாதி ” என அழைக்கப்படுகிறது .. ஏனென்றால் சைத்ர மாதத்தின் முதல்நாள் அன்றுதான் பிரம்மதேவன் உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணம் கூறுகிறது .. மேலும் சைத்ர மாதத்தின் முதல்நாள் வசந்தகாலத்தின் பிறப்பை குறிப்பதால் இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது ..
யுகாதி அன்று எல்லோரும் விடியற்காலையில் எழுந்து எண்ணை ஸ்நானம் செய்து புத்தாடைகள் அணிந்து இறைவழிபாடு செய்வர் .. இன்று அறுசுவௌயுடன் கூடிய (இனிப்பு .. காரம் .. கசப்பு .. உவர்ப்பு .. துவர்ப்பு .. கரிப்பு) பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது .. இதில் வெல்லம் .. வேப்பம்பூ .. மாங்காய் .. புளி .. மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்கின்றனர் .. மனித வாழ்வில் இன்பம் .. துன்பம் .. மகிழ்ச்சி .. துக்கம் முதலிய எல்லாம் கலந்தே இருக்கும் என்பதையும் அதனை பொறுமையோடு எதிர்கொள்ளவேண்டும் என்பதனையும் யுகாதி பண்டிகை உணர்த்துகின்றது ..
தமிழ்ப் புத்தாண்டைப் போலவே யுகாதியன்றும் பஞ்சாங்கம் படித்தல் நடைபெறுகிறது .. தெய்வ அனுகூலத்தையும் .. உலகமக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துக் கொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி .. வாரம் .. நட்சத்திரம் .. யோகம் .. கரணம் என்ற ஐந்துவிதமான அங்கங்களைக்கொண்ட மங்களகரமான பஞ்சாங்க படனமாக இது மலர்கிறது ..
குடும்ப ஒற்றுமை ஓங்கவும் யுகாதி நன்னாளில் சபதம் ஏற்று .. புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடுவீர்களாக ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment