அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இன்று அஷ்டமித் திதி காலை 10.45க்குமேல் ஆரம்பமாகின்றது .. இதனை “ அசோகாஷ்டமி “ என்றழைப்பார்கள் .. இந்த அஷ்டமி ஸ்ரீராமநவமி அன்றோ அல்லது அதற்கு முதல்நாளாகிய இன்றும் அனுஷ்டிக்கப்படுகின்றது ..
சுகம் தரும் மருதாணி மரத்திற்கு வடமொழியில் “அசோகம்” என்று பெயர் .. பங்குனிமாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமித் திதிக்கு துன்பத்தைப்போக்கி இன்பத்தைத்தரும் சக்தி உள்ளது ..
சோகம் என்றால் - துன்பம்
அசோகம் என்றால் - துன்பமில்லாதது ..
அதனால் “ அசோகாஷ்டமி “ என்று பெயர் வந்தது ..
சோகம் என்றால் - துன்பம்
அசோகம் என்றால் - துன்பமில்லாதது ..
அதனால் “ அசோகாஷ்டமி “ என்று பெயர் வந்தது ..
இன்று மருதாணி மரம் இருக்கும் இடத்திற்குச் சென்று அதற்கு தண்ணீர் ஊற்றலாம் .. மூன்றுமுறை வலம்வந்து முற்கள் இல்லாது ஏழுமருதாணி இலைகளைப் பறித்து அதை கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியபின் வாயில்போட்டு மென்று சாப்பிடலாம் ..
“ த்வாம சோக நரா பீஷ்ட மது மாஸ ஸமுத்பவ !
பிபாமி சோக ஸந்தப்போ மாம் அசோகம் ஸதா குரு”
பிபாமி சோக ஸந்தப்போ மாம் அசோகம் ஸதா குரு”
பொருள் -
ஓ ! மர்ஹுதாணி மரமே ! உனக்கு அசோகம் (துன்பத்தைப் போக்குபவன்) எனப் பெயர் அல்லவா ..? .. மது என்னும் வசந்தகாலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய் .. நான் உனது அருளைப் பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிடுகிறேன் .. நீ பலவித துன்பங்களால் சிரமப்படும் எனக்கு எவ்விதமான துன்பமும் அணுகாமல் பாதுகாப்பாயாக ! என்பதே இதன் பொருளாகும் .. இதனால் நோய்களும் .. நோய் ஏற்பட காரணமான பாவமும் விலகும் என்று கூறுகிறது லிங்கபுராணம் ..

ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டாள் .. சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்கள் அறிந்து தனது கிளைகளாலும் .. இலைகளாலும் சீதையை துன்பத்திலிருந்து காக்குமாறு இறைவனைப் பிரார்த்தித்தன ..
இறுதியில் சீதாராமர் அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்துகொண்டபின் சீதை இந்த அசோகமரங்களிடம் .. “ உங்களை யார் ஜலம்விட்டு வளர்க்கிறார்களோ .. பூஜிக்கிறார்களோ .. உன் இலைகளை சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராது என்று ஸ்ரீராமரின் அனுமதியுடன் வரமளித்தாள் .. ஆகவேதான் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள் .. எந்தக்கஷ்டமும் அப்பெண்களுக்கு நேராது என்று சீதாதேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே “ அசோகாஷ்டமி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment