PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " VARALAXMI PUJA " .. THIS PUJA IS PERFORMED MOSTLY BY MARRIED WOMEN FOR THE WELL BEING OF THEIR HUSBAND & THE YOUNG TO GET GOOD BRIDEGROOM .. WORSHIPPING GODDESS VARALXMI ON THIS DAY IS EQUIVALENT TO WORSHIPPING " ASHTALAKSHMI " .. THE EIGHT FORCES OF ENERGY KNOWN AS WEALTH .. HEALTH .. LEARNING .. FAME .. LOVE PEACE .. PLEASURE .. & STRENGTH .. STAY BLESSED .. " JAI MATA DI ! DEERGA SUMANGALI BAWA "SWAMY SARANAM... GURUVE SARANAM



வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி ! எங்கள் வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி ஆதிகேசவனின் அழகு மார்பினிலே வாசம் செய்கின்ற ஆதிலக்ஷ்மி தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும் தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி
பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி
வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின் உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி
எம்மைக்க காக்கவென்றே அன்னையாக வந்து தோற்றம் கொண்ட சந்தானலக்ஷ்மி
வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும் அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி
எட்டுக்கரங்களுடன் சுற்றிவரும் பகைகள் வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி
மாயை இருள்களைந்து ஞானஒளியேற்றி முக்தி அளிக்கும் வித்யாலக்ஷ்மி
அஷ்டலக்ஷ்மி வடிவாக வந்திருந்து இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம் உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ வரலக்ஷ்மி நோன்பு “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! சர்வ மங்களங்களையும் தந்தருளும் திருமகள் நம் இல்லத்தில் திருவடி பதிக்கும் நாளாகிய இன்று தங்களனைவரும் நீண்ட ஆயுள் .. புகழ் .. செல்வம் மற்றும் நல்லாரோக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயத் !!
வரலக்ஷ்மி நோன்பு என்பது பதினாறுவகைச் செல்வத்துக்கும் அதிபதியான லக்ஷ்மியின் அருள்வேண்டி சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும் .. இந்த விரதம் ஆடிமாதம் வளர்பிறையில் பௌர்ணமி தினத்திற்குமுன் வரும் வெள்ளிக்கிழமையில் அதாவது இன்று கடைபிடிக்கப்படுகிறது .. சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் அஷ்டலக்ஷ்மிகளையும் வணங்குவதால் 
“வலம்தரும் லக்ஷ்மி விரதம் “ என்றும் அழைப்பார்கள் .
நியமவிதிப்படி இல்லத்தில் அனுஷ்டிப்பதால் அன்னை லக்ஷ்மிதேவி நம் இல்லத்தில் வாசஞ்செய்வாள் .. இயலாதோர் ஆலயங்களிலும் குத்துவிளக்கேற்றி லக்ஷ்மியை ஆவகணம் செய்து பூஜித்து அன்னையின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறலாம் ..
உள்ளத்தூய்மையுடன் .. உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்டலக்ஷ்மியாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதனால் தங்கள் இல்லத்தில் செல்வம் கொழித்து மகிழ்ச்சி களித்தோங்கும் .. கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுகின்றனர் .. கன்னிப்பெண்களுக்கு சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப்பெற்று சிறப்பான குடும்ப வாழ்வும் அமையப்பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன ..
லக்ஷ்மிதேவி தன் பக்தர்களுக்கு பொருள்வளத்தை மட்டுமல்லாது .. உயர் ஞானத்தையும் அருள்கிறாள் அவள் வித்யாசக்தியிலிருந்து நல்ல கல்வியும் தருகிறாள் .. இன்று அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதோ கேட்பதோ சிறப்பாகும் ..
மஞ்சள் கயிறு மங்களத்தின் அறிகுறி அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது .. எனவே ஒப்பது நூல் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக்கயிறை பூஜையில் வைத்து .. பூஜையின் முடிவில் வலதுமணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் மூன்று முடிச்சுகள் போட்டு கட்டிக்கொள்ளவேண்டும் ..
அன்பு .. அமைதி .. புகழ் .. இன்பம் .. வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலக்ஷ்மியின் அம்சங்கள் .. எனவே நம்வாழ்வில் இந்த அம்சங்கள் யாவும் நிறைந்திருக்கும் ..
“ ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே ! சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே “
பொருள் - எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்யதேவியே ! ஷேமத்தைக் கொடுப்பவளே எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவளே ! நாராயணியே உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே ! உனக்கு நமஸ்காரங்கள் !!
“ திருமகள் வருவாள் ! அருள்மழை பொழிவாள் “
“ ஓம் சக்தி ஓம் ! தீர்க்கசுமங்கலி பவ “
Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment