PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS ! WISH YOU ALL A BLESSED & A DIVINE " GANESH CHATHURTI " .. MAY LORD GANESHA SHOWER YOU WITH ABUNDANT GOOD LUCK & MAY HE SLWAYS BESTOW YOU WITH HIS DIVINE BLESSINGS TOO .. " JAI SHREE GANESHA " - GANAPATHI BAPPA MORAYA -

” வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ விநாயகர் சதுர்த்தி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! உலகத் தொல்லைகள் பிறவித் தொல்லைகள் போகவும் .. செல்வமும் .. கல்வியும் .. கருணையும் வந்துசேரவும் கணபதியைக் கைதொழுவோமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
இன்று நம் முதல்வன் விநாயகருக்கு பிறந்தநாள் ! விநாயகர் அவதரித்த நாளான ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தித் திதியை
“விநாயக சதுர்த்தி “ எனப் போற்றுவர் ..
நான்கு வேதங்களும் .. பதினெட்டுப் புராணங்களும் .. இரண்டு இதிகாசங்களும் போற்றும் முழுமுதற் கடவுள் விநாயகரே ! நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமைமிக்க விசேஷ விரதம் ஆவணிமாத விநாயகர் சதுர்த்தியாகும் ..
“ காணாபத்யம் “ என்னும் கணபதி வழிபாடு அறுவகைச் சமயங்களில் முதலாவது .. இந்துக்கள் .. சமணர்கள் .. பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள் .. உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது .. “ தனது அடிவழிபடும் அவர் இடர் கடிகணபதி” என்று திருஞானசம்பந்தர் துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார் .. முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமையும் ..
ஐந்துகரங்களும் .. யானைமுகமுகமும் .. சந்திரனைப்போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக்கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும் .. நலங்கள் பெருகும் என்று 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார் ..
விநாயக சதுர்த்தியாகிய இன்று மனம் .. வாக்கு .. காயத்தால் தூய்மையாய் இருந்து தானதருமங்கள் செய்து .. இறைவனை இடைவிடாது நினைத்திருந்து வீடுகளிலும் .. ஆலயங்களிலும் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொள்வதோடு இறைவனை சிந்தித்திருப்பது சிறப்பு ..
“ மங்களமூர்த்தி மகாராஜா ! அடுத்தவருடமும் வா ராஜா “
வேழமுகத்தானைப் போற்றுவோம் ! சகல செயற்பாடுகளிலும் வெற்றி பெறுவோம் !
” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லௌம் கம் கணபதயே வரத சர்வஜனமேய வஸமாயை ஸ்வாஹா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
Image may contain: 2 people

No comments:

Post a Comment