” மந்திரம் உரைத்தாற் போதும் மலரடி தொழுதால் போதும் மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும் இந்திரப்பதவி கூடும் இகத்திலும் பரங்கொண்டோடும் இணையனு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஆவணிமாத வளர்பிறை பஞ்சமித்திதியை ”மஹாலக்ஷ்மி பஞ்சமி “ என்றழைப்பார்கள் .. இன்றுமுதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் செல்வமும் .. செல்வாக்கும் தந்தருள்வாளாக !
ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணுபத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
விஷ்ணுபத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
பக்தர்களின் மனக்குறைகளை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாக விளங்குபவள் அன்னை மஹாலக்ஷ்மி யாக - சாலைகளிலும் .. எந்த ஆலய குடமுழுக்கு விழாவின்போதும் .. வீட்டின் சகலபூஜைகளிலும் லக்ஷ்மிவழிபாட்டிற்கென ஓர் தனி இடம் உண்டு ..
அஷ்ட ஐஸ்வர்யங்கள் எனப்படுவது யாதெனில் - செல்வம் .. ஞானம் .. உணவு .. மனவுறுதி ..புகழ் .. வீரம் நல்ல புதல்வர்கள் .. விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் .. இவற்றை அடைவதற்கு அன்னை மஹாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே போதுமானது ..
பூஜிக்கத்தகுந்த மஹாபாக்கியம் உள்ளவர்களாகவும் தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குபவர்கள் நம் இல்லப்பெண்மணிகள்தான் .. இவர்கள் கிரகலக்ஷ்மியாகத் திகழ்பவர்கள் .. ஆகவே இல்லப்பெண்மணிகளை தீயச்சொல்கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது .. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்திரமாகக் குடிகொண்டு வசிப்பாள் .. தினமும் காலையிலும் மாலை இருவேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதாலும் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும் .. இல்லங்களில் செல்வம் சேரும் ..
குங்குமம் லக்ஷ்மிகடாக்ஷ்ம்மிக்கது .. பெண்கள் குங்குமம் இடுவதால் மஹாலக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள் .. குங்குமத்தை மோதிரவிரலால்தான் இடவேண்டும் .. சிவப்புநிற குங்குமமே புனிதமானது .. மாங்கல்யம் .. நெற்றி .. தலை உச்சிவகிட்டின் ஆரம்பம் இம்மூன்று இடங்களிலும் ஸ்ரீலக்ஷ்மிதேவி உறைகின்றாள் ..
மஹாலக்ஷ்மியைப் போற்றும் யாவரும் அனைத்திலும் வெற்றி பெறுபவர்களாகவும் .. ராஜ்யங்களை அடைந்தவர்களாகவும் இருப்பார்கள் .. அன்னையைப் போற்றுவோம் சகல நலன்களையும் பெற்றிடுவோம் !
“ ஓம் சக்தி ஓம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் சக்தி ஓம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment