PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் ஐஸ்வர்யமிக்க நாளாகவும் அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! .. 

பாற்கடலில் உதித்து மஹாவிஷ்ணுவை மணாளனாக அடைந்த அந்த சக்தியையே நாம் மஹாலக்ஷ்மி என்கிறோம் ..
இறைவன் இருக்கிறான் என்பதற்கு பகிரங்கமான அடையாளமாகவும் .. மகத்தான லக்ஷ்யமாகவும் விளங்குவதால் அவள் மஹாலக்ஷ்மி என்ற பெயரைப் பெற்றாள் .. ( லக்ஷ்யம் என்றால் அடையாளம் என்று பொருள்) 

அவள் ஸ்வர்க்கத்தில் - ஸ்வர்க்கலக்ஷ்மி ..
பூவுலகில் அரசர்களிடையே - ராஜலக்ஷ்மி .. 
வீடுகளில் - இல்லத்தரசிகளின் உருவில் க்ருஹலக்ஷ்மி .. 
என்றெல்லாம் புகழ் பெறுகிறாள் .. 

ஸ்ரீஹரியின் நாமம் எந்த இல்லத்தில் ஒலிக்கிறதோ அங்கு அன்னை கட்டாயம் செல்வாள் .. மஹாலக்ஷ்மியின் மனம் மகிழச்செய்யுங்கள் .. அவள் மங்களங்கள் யாவும் தந்து நித்யவாசம் செய்து உங்களை மகிழ்விப்பாள் ..

அன்னையைப் போற்றுவோம் ! அவளது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்று .. இன்புற்று வாழ்வோமாக ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. “ ஓம் மஹாலக்ஷ்மியே நமோஸ்துதே “ 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. 
MAY 'MAA' LAKSHMI BRING BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment