PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGAN PATHAM POTRI......GURUVE SARANAM SARANAM...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் ..மன இருளைப்போக்கி ஆரோக்கிய வாழ்வைத்தரும் சூரியனை வழிபாடு செய்து தங்களனைவருக்கும் கிரகதோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெற வாழ்த்தி வணங்குகிறேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் 

காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகி .. 
பூசனை உலகோர் போற்ற எங்கும் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா!
எமை ரட்சிப்பாய் செங்கதிரோனே ! போற்றி ! போற்றி !

இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் 
ஒளியால் அறியாமை என்னும் இருள் அகற்றி அறிவென்னும் 
ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. அதிகாரம் .. ஆட்சி .. ஆளுமை போன்றவற்றிற்கு அதிகாரம் உள்ளவர் இவரே ! சூரியனின் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது .. 

சூரியனை வழிபடுவதால் உலகில் அடையமுடியாதவையே 
இல்லை .. உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் அருட்கடல் .. 
இதயநோயை நீக்குபவர் ..தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிப்பது சிறந்தது .. “ ஓம் ஆதித்யாய நமஹ”
எனும் மந்திரம் ஆதவனின் அருளைப் பெற உதவும் .. 

சூரியனைப்போற்றுவோம் ! சகலநன்மைகளையும் பெறுவோமாக! ஓம் சூர்யாய நமஹ ! வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING  .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA ..
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS 
" OM SURYAAYA NAMAHA " .. jAI SURYA DEV ..

SWAMI SARANAM...GURUVE SARANAM..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து பாவங்களும் களைந்து .. நினைத்த காரியங்கள் வெற்றியளிக்கவும் அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ! 
ப்ரஸீத ப்ரஸீத ! ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் ! 

மஹாலக்ஷ்ம்யை நமஹ !! 

வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மையைத்
தரும் .பஞ்சமுக குத்துவிளக்கேற்றி பூஜிப்பது மிகவும் விசேஷம் .. அம்பிகையின் ஆலயங்களைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

மஹாலக்ஷ்மி ஸதோத்திரம் .. மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம் .. அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றை
பக்தியுடன் பாராயணம் செய்வோர்க்கு சகலகாரியசித்தியும் ..
நினைத்தவைகள் கைகூடுதலும் .. அரசபோகமும் .. உண்டாகும் ..

ஆதியந்த்ரஹிதே தேவி ! ஆதிசக்தி மஹேஷ்வரி !
யோகஜே ! யோகஸம்பூதே ! மஹாலக்ஷ்மி நமோஸ்துதே !! 

பொருள் - முதலும் முடிவும் அற்ற தேவியானவள் பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மஹேஷ்வரியாக விளங்குபவள் .. யோகநிலையில்தோன்றியவளும் .. யோகவடிவாகத் திகழ்பவளுமாகிய மஹாலக்ஷ்மியே ! உன்னை வணங்குகின்றோம் ! காத்தருள்வாயாக ! 

மஹாலக்ஷ்மியைப் போற்றுவோம் ! அன்னையின் நெஞ்சகத்தில் என்றும் நிலைத்து நிற்போமாக !! 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

GOOD MORNING .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
AND MAY GODDESS LAKSHMI SHOWER HER DIVINE BLESSINGS ON YOU WITH GOOD HEALTH .. WEALTH AND GOOD FORTUNE .. 
JAI MAA LAKSHMI .. OM SHAKTHI OM .. 

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதராகிய ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் பாபாவின் அருட்கடாக்ஷ்மும்
மனதில் சாந்தியும் .. அமைதியும் நிலவிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷிர்டி வாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி ! 
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!

சாயி கவசம் -
சீரடி வாழும் சாயிநாதா !
சேவடி பணிந்தோர்க் கருளும் ஈசா !
துவாரகமாயி ஆன சுடரே ! 
ஆலம் அமர்ந்த தெட்சிண குருவாய் ! 
வேலம் அமர்ந்த வித்தக வடிவே ! 
சாவடி என்ற தங்குமிடத்தில் 
சேவடி சாற்றிச் சிறப்புச் செய்தாய் !
பாவடி புனைந்த பக்தர்க்கெல்லாம் 
பரமபதத்தைப் பரிவுடன் தந்தாய் ! 

அன்பே சிவமாய் ஆனவரே ! 
அன்னைவடிவே அருள்நிதியே ! 
இன்ப துன்பம் கடந்தவரே ! 
எங்கள் குருவே சாயீஸ்வரா ! 

இருளாம் துயரை தீர்ப்பவரே ! 
அருளும் ஒளியைத் தருபவரே !
மருளும் மனதை மீட்பவரே ! 
மகிமைமிக்க சாயீஸ்வரா ! 
ஆதி அந்தம் அற்றவரே ! 
அடியார் போற்றும் அற்புதமே !
வேதவடிவாய் ஆனவரே ! 
வெற்றி அருள்வீர் சாயீஸ்வரா !! 

ஷீரடி பாபாவைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் 
வெற்றி காண்போமாக ! வெற்றி நிச்சயம் ! ஓம் சாய் ராம் !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. 
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND PEACE .. 
" OM SAI RAM " ..

Night Dharshan of Thennankur sri krishna

மகாமக வருடத்தில் திருமணங்கள் செய்யக் கூடாதா
 
வரும் பிப்ரவரி மாதம் மகாமகம் வருகிறது. அந்த மாதம் மற்றும் வருடம் முழுக்கவும் திருமணங்கள் நடத்த கூடாது எனவும், அப்படி நடத்தினால் திருமண ஜோடிகளின் வாழ்கை சுபமாக இருக்காது என்றும் ஒரு தகவல் கும்பகோணம் மக்கள் மத்தியில் தீயாய் பரவி, அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவானும், சூரியபகவானும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்வதே மகாமகம் என கொண்டாடப்படுகிறது. இந்த பெரிய மகாமகத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் தமிழகம் முழுக்கவே செய்யக் கூடாது என வதந்தி பரவி வருகிறது. இதனால், திருமண ஏற்பாட்டை செய்து வரும் மணமக்கள் வீட்டார்கள், தை மாதத்திலேயே திருமணத்தை நடத்த ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனால், திருமண மண்டபம் உட்பட திருமணத்துக்கு தேவையான அனைத்துக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த பயம் காரணமாக அடுத்த வருடம் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என தள்ளி வைக்கவும் செய்கிறார்கள். தீயாய் பரவும் வதந்தியால், திருமண ஏற்பாட்டை செய்து வருபவர்கள், மனம் நொந்து காணபடுகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலரான சத்தியமூர்த்தியிடம் பேசினோம்.
“கும்பகோணத்தில் நடைபெரும் மகாமகம் தென்னகத்து கும்ப மேளா என்றழைக்கபடுகிறது. இதற்கு இந்தியா முழுக்க மற்றும் வெளிநாட்டில் இருந்தும் பல லட்சம் மக்கள் கூடுவார்கள்.
இங்கு உள்ள மகாமகம் குளத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும் என பல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இப்படிபட்ட சிறப்புகள் வாய்ந்த மகாமகத்தில் அந்த வருடத்திலும், மாசி மாதத்திலும் திருமணங்கள் நடத்தக் கூடாது என பலவாறு வதந்திகள் கிளம்பி, மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் நடத்தக் கூடாது என ஆன்மீக அன்பர்கள் இதுவரை யாரும் சொல்லவில்லை. 1992, 2004-ம் ஆண்டு மகாமகம் வருடத்தில் எல்லாம், எல்லோரும் திருமணங்களை நடத்தினார்கள். எனவே வதந்திகளை நம்பாமல் எல்லோரும் சுபகாரியங்களை நடத்தலாம்” எனக் கூறினார்.
தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வரும் சேகர் என்பவரிடம் பேசினோம்.
”என் பொண்ணுக்கு திருமண ஏற்பாட்டை செய்து வந்தேன். எல்லோரும் மகாமக வருடத்தில் திருமணம் செய்ய வேண்டாம் என எச்சரித்தார்கள். நானும் திருமண ஏற்பாட்டை நிறுத்திவிட்டேன்.
அதன்பின் மணமகன் வீட்டார் வற்புறுத்த, ஆன்மீக வட்டாரத்தில் விசாரித்தபோது, மகம் வரும் மாசி மாதத்தை தவிர்த்து அடுத்தடுத்த மாதங்களில் திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். அதனால், இப்போது நான் என் மகள் திருமணத்தை, வருகின்ற பங்குனி மாதத்தில் நடத்த ஏற்பாடு செய்து வருகிறேன்” என்றார்.
இதுகுறித்து தஞ்சாவூர் சந்தோஷி அம்மன் கோவில் குருக்கள் ரமேஷ் சிவத்திடம் கேட்டபோது, ”மாசி மாதம் 10-ம் நாள் (பிப்ரவரி 22-ம் தேதி) மகாமகம் வருகிறது. 12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த மகாமகம் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
மகாமகத்தின்போது கும்பேஸ்வரன், சாரங்கபாணி கோவில்களுக்கு மட்டும் இல்லாமல் கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்துவதுடன் அந்த கோவில்களுக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு மகாமகம் நடத்தப்படும்.
விழா ஏற்பாடு செய்யப்பட்டவுடன், கோவில்களில் கொடி ஏற்றி காப்பு கட்டப்படும். இந்த நாட்களில் வேறேதும் சுபகாரியங்கள் நடந்தால் கவனம் சிதறும் என சாஸ்திரங்கள் கூறுகிறது.
எனவே கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும், அந்த பன்னிரண்டு நாட்களுக்கு மட்டும் திருமணம் உள்ளிட்ட சுகாரியங்கள் நடத்தக் கூடாது. இது கும்பகோணத்துக்கு மட்டும்தான்; தமிழகத்துக்கு இல்லை. எனவே யாரும் பயப்படாமல் வதந்திகளை நம்பாமல், வருடம் முழுக்கவும் திருமணத்தை நடத்தலாம்” என்றார்.
இனி… கெட்டிமேளம்… கெட்டிமேளம்தான் போங்க!

Lord Balaji temple,Balajipuram,Betul District of Madhya Pradesh in India

ஒரே உருவத்தில் பத்து அவதாரம் ..!!!

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM..

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று .. நீக்கமற நிறைந்திருப்பவரும் ..
விருப்பு .. வெறுப்பு இல்லாதவரும் .. நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும் .. துக்கங்களை 
களைபவருமான கணபதியை “ சங்கடஹர சதுர்த்தியாகிய “ 
இன்று பிரார்த்தித்து சகல நன்மைகளையும் பெறுவோமாக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பலவிரததினங்கள் இருந்தாலும் விரததத்தில் மிகச்சிறந்ததும் 
பழமையானதும் .. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய
“ சங்கடஹர சதுர்த்தியில் “ விரதம் இருந்தால் அளவுகடந்த 
ஆனந்தத்தையும் அடையலாம் .. சகல சௌபாக்கியங்களையும்
பெறலாம் .. ஒவ்வொரு மாதமும் வரும் “ சங்கடஹர சதுர்த்தி”
நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும் .. தடைகளின்றி எல்லாகாரியங்களும் வெற்றியடையும் ..
‘ ஹர ‘ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. 

வாழ்க்கையில் தொடர்ந்து பலவகைத் துன்பங்களுக்கு 
ஆளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையமுடியும் 
சிறப்பான கல்வியறிவு ..புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் .. நிலையான செல்வம் .. நன்மக்கட்பேறு .. என பலவிதமான நன்மைகளைப் பெறலாம் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் .. 

விரதமிருப்பது எப்படி ..? ..
அதிகாலை நீராடி பால் .. பழம் அருந்தி .. உணவு உட்கொள்ளாமல் மாலைவரை கணநாதன் நினைவோடு உபவாசமிருந்து .. மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொண்டு ஆலயத்தை எட்டுமுறை வலம்வருதல்
வேண்டும் .. அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும் .. 

கணபதியைப் போற்றுவோம் ! அனைத்து தடைகளையும் களைவோமாக !ஓம் விக்னேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SANKADAHARA SADURTI DAY " AND MAY LORD GANESHA'S 
BLESSINGS REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE AS HE REMOVES THE DARKNESS FROM THE UNIVERSE .. 
" JAI GANESHA " ..

SWAMYE SARANAM...PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
“ இந்திய குடியரசுதின நல்வாழ்த்துக்களும் “ உரித்தாகுக .. 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும்
இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. இல்லத்தில் சுபீட்சமும் .. மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திடவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
ஞானமே உடலாகவும் .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி
என்னும் முச்சக்திகளை மூன்றுகண்களாகவும் .. இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகனே !
தன் அடியார்கள் வேண்டும் நலங்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம்வாய்ந்தவன் .. நம் உள்ளத்தைக்
கவரும் பண்புடையான் .. முருகனை அன்புடன் வழிபட்டு என்றும் குறையாத செல்வத்தைப் பெறுவீர்களாக .. 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A 
" HAPPY REPUBLIC DAY " AND MAY LORD MURUGA GUIDE YOU AND
PROTECT YOU ALWAYS IN WHATEVER YOU DO AND WHEREVER 
YOU ARE .. " OM MURUGA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...







 SWAMI SARANAM .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOUR DAY WILL BE FILLED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. 
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் வருவதால் 
சிவவழிபாட்டிற்கு உகந்த நாளாகும் .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழவும் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றிபெறவும் 
பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் .. பார்வதியுடன் கூடிய 
சிவபெருமான் என்றும் கூறுவர் .. தன்னுடைய கொடியநோய் 
குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து நவக்கிரகங்களில் ஒருவராகத்திகழும் பேறுபெற்றான் .. அவனது பெயரால் தோன்றியது தான் சோமவார விரதம் .. திங்கள் கிழமையான இந்நாளில் சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான் ..
பெருமான் வரமருள இந்த விரதம் “ சோமவார விரதமாக “ 
சிறப்பு பெற்றது .. 

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழ கடைப்பிடிக்கவேண்டிய முக்கியவிரதங்களுள் ஒன்று சோமவார விரதமாகும் .. 
சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதமும் ஒன்று .. சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது .. 

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து மேன்மை பெற்றான் .. அவனுக்கு சிவபெருமான் அருள்புரிந்ததுடன் அவனுடைய ஒருகலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகர் என்ற பெயரையும் பெற்றார் .. சந்திரனின் நல்வாழ்வுக்காக சந்திரனின் மனைவி ரோகிணி இந்தவிரதத்தைக் கடைப்பிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய் நொடிகள் தாக்காதிருக்கவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கின்றனர் .. 

சிவனைப் போற்றுவோம் ! ஆயுள்விருத்தியும் .. மன அமைதியும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

SWAMI SARANAM....PANVEL BALAGANE SARANAM...GURUVE SARANAM...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
‘ தைப்பூசத்திருநாள் ‘ நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. 
இன்றைய நாளில் தங்களனைவருக்கும் முருகப்பெருமானின்
அருட்கடாக்ஷ்ம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. 

தைப்பூச நன்னாளில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும் ..
மேற்கில் முழுநிலவும் .. ஞானசபையில் இருந்து அக்னியான
ஜோதியும் ஒரே நேர்கோட்டில் அமையும் .. இந்த அதிசயம் 
தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் .. 

சூரனை வதம்செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞானசக்தியால் பழனிமலையில் வேல்வழங்கி ஆசிவழங்கினாள் அன்னை .. 
அதன்காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..

முருகனையும் ஜோதியையும் ( வேல் ) எப்போதும் பிரிக்கமுடியாது .. ஞானத்தின் அம்சம்தான் வேல் .. அந்தவேலைத் தாங்குகின்ற முருகப்பெருமானை
“ ஞானவேல் முருகன் “ என்று போற்றுகின்றன ஆகமங்கள் .. 
வேலினை வழிபட்டால் தீயசக்திகள் நம்மைத்தாக்காமல் 
இருப்பதுடன் அந்தசக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம் .. 

சக்தியின் வடிவாய் சக்தியிடமே உருவான வேல் கந்தனின் தங்கை என்றும் அந்த வேலைத் தோற்றுவித்து அன்னை அளித்த திருநாளே ’ தைப்பூசத் திருநாள் ‘ என்றும் போற்றி 
வழிபடுகிறார்கள் .. 

வேலாகிய ஜோதியை வழிபடும்பொழுது கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி வழிபடல்வேண்டும் .. வாழ்வில் ஏற்றம் காணலாம் .. 
“ ஓம் ஜெய ஜெய மகாவீரபகவான் ஸ்ரீஸ்கந்தா நமோ நமஹ ..
ஓம் ஜெய ஜெய மஹாஜோதி சக்தி சரவணபவாயி நமோ நமஹ “ .. 

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்தநடனம் ஆடி தரிசனம் அளித்த புண்ணியத்திருநாளும் தைப்பூசமே ! 
” அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ” எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி ஜோதியானதும் இத்திருநாளே ! 

தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்களாக ! வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா ! 
சரணம் ! சரணம் சரவணபவனே சரணம் !! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A " HAPPY THAIPUSAM .. MAY LORD MURUGA BLESS YOU AND GUIDES YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. 
' THAIPUSAM ' IS DEDICATED TO THE HINDU GOD MURUGA THE SON OF SHIVA AND PARVATI .. IT IS BELIEVED THAT ON THIS DAY GODDESS PARVATI PRESENTED A LANCE TO LORD MURUGA TO 
VANQUISH THE DEMON ARMY OF TARAKASURA .. THEREFORE THAIPUSAM IS A CELEBRATION OF THE VICTORY OF GOOD OVER EVIL .. " OM MURUGA "

swami saranam...panvel balagane saranam iyyappa

 அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று பௌர்ணமித் திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று அன்னை துர்க்காதேவியை வழிபட சிறந்தநாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி .. மனநலமும் .. உடல்நலமும் 
ஆரோக்கியமாகத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச வித்மஹே !
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

ஒளிமயமான அன்னை துர்க்காதேவியை இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள்கிடைக்கப் பெற்று
விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது .. 

கிரகங்களின் அதிர்வு பெற்றநாள் பௌர்ணமி தினமாகும் .. 
ஏழுகிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது கடலும் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும் .. 
அதற்கேற்ப மனிதனின் அறிவு .. புத்தி .. மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன .. சந்திரன் மனோகாரகன் மனதை ஆள்பவன் அதனால் பௌர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன .. 

பௌர்ணமியில் தேவி ‘ ஸ்ரீசந்திரிகா ‘ என்ற பெயர்கொண்டு 
பிரகாசித்து அருள்பாலிக்கிறார் .. துர்க்காதேவியை பௌர்ணமியில் வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் 
நிறைவேறும் ..” துர்க்கை என்றாலே துக்கங்களை அழிப்பவளாகும் ” ..

துர்க்கை அம்மனைப் போற்றுவோம் ! நம் துக்கங்களையும் ..
தடைகளையும் .. நோய்நொடிகளையும் களைவோமாக ! 
“ ஜெய் துர்க்காதேவி சரணம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
“ POORNIMA DAY “ AND MAY GODDESS DURGA REMOVE ALL THE 
OBSTACLES IN YOUR LIFE AND MAY SHE SHOWER YOU WITH HER NINE SWAROOPA .. NAME .. FAME .. HEALTH .. WEALTH .. HAPPINESS ..
HUMANITY .. EDUCATION .. BAKTHI AND SHAKTHI .. " JAI MATA DI "

Swamiye saranam iyyappa..Panvel Balagane saranam iyyappa




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் சேவித்து வணங்கப்படுகின்ற அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து தங்களனைவருக்கும் எல்லா வளமும் .. நலமும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

” லக்ஷ்மி கடாக்ஷ்ம் “ என்னும் சொல் ஏதோ செல்வச் செழிப்பை 
மட்டும் குறிப்பது அல்ல .. அது ஒரு மிகப்பெரிய பதம் .. 
சகல சௌபாக்கியங்களையும் குறிப்பது .. வெற்றி .. வித்தை ..
ஆயுள் .. சந்தானம் .. தனம் .. தான்யம் .. ஆரோக்கியம் இப்படி 
அனைத்தும் ஒருங்கே அமைவது தான் ” லக்ஷ்மி கடாக்ஷ்ம் “ 

லக்ஷ்மி என்றால் .. அழகு என்று பொருள் .. 
லக்ஷ்மீ என்றால் .. அன்பு .. கருணை .. இரக்கம் செல்வம் .. என்றும் பொருள் .. வெறும் அச்சடித்த காகிதங்களையும் .. சில்லறை நாணயங்களையும் தருபவளல்ல லக்ஷ்மி .. 

வில்வம் .. தாமரை .. வெற்றிலை .. நெல்லி .. துளசி .. மாவிலை
போன்றவை திருமகள் அருள்பெற்ற தெய்வீக மூலிகைகளாக 
கருதப்படுகின்றன .. பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே கருதப்படுகிறது .. வெள்ளிக்கிழமைகளில் வீடுகளுக்கு உப்பு வாங்குதல் மிகவும் 
விசேஷம் .. 

ராமநாமம் உச்சரிக்கபடும் இடத்திற்கு அனுமன் தேடிவந்து விடுவான் .. அதேபோல ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில் .. அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள் .. ஆகவே இல்லந்தோறும் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும் .. மாலைவேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம் .. அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அவளது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! ஓம் சக்தி ஓம் !
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ..
MAY MAA LAKSHMI 'S BLESSINGS BRINGS YOU EVERY SUCCESS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND PROSPERITY .. 
" JAI MAA SHAKTH

SWAMIYE SARANAM IYYYAPPA...GURUVE SARANAM.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று 
மஹாவிஷ்ணுவிற்கு உகந்த புதன்கிழமையும் .. ஏகாதசி விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணு
பகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் 
இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

கங்கையைவிடச் சிறந்த தீர்த்தம் இல்லை ..
விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை ..
காயத்ரியைவிட உயர்ந்த மந்திரமில்லை ..
தாயிற்சிறந்ததோர் கோயிலும் இல்லை .. 
என ஞானநூல்கள் கூறுகின்றன .. 

தைமாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை ‘ புத்ரதா ஏகாதசி ‘
என்பர் .. இதனை அனுஷ்டிப்போர் புத்திரபாக்கியம் வேண்டியிருந்தால் நல் மக்கட்பேறும் .. சுவர்க்கலோகத்தையும்
அடைவர் .. யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளை கேட்டோ .. படித்தோ வந்தாலும் நிச்சயமாக அஸ்வமேதயாகத்தின் பலனையும் அடைவர் .. அனைத்து பாவவிளைவுகளும் அழிக்கப்படும் என யுதிஸ்டிர மன்னருக்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் அருளியுள்ளார் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! பெருமாளின் பரிபூரணமான அருளையும் .. அன்பையும் பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோமாக ! ஓம் நமோ நாராயணா ! 
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" PUTRADA EKADASI DAY ".. THIS EKADASI REMOVES ALL KINDS OF SINS .. MAKES ONE FAMOUS AND BE BLESSED WITH A SON TOO .. 
" OM NAMO NAARAAYANAA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று
செவ்வாய்க்கிழமையும் .. உத்தராயணம் தொடங்கும் தைமாத கிருத்திகை நட்சத்திரமும் கூடிவருவதால் முருகப்பெருமானுக்கு உகந்த தினமுமாகும் .. முருகனாலயம்
சென்று முருகப்பெருமானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றையநாள் தங்களனைவருக்கும் முருகனின் திருவருளும் அருட்கடாக்ஷ்மும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ்ந்திட கலியுகவரதனாகிய கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி !
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

முழுமுதற் கடவுளாக கலியுகக் கந்தப்பெருமான் போற்றப்படுகிறார் .. “ எந்தவினையானாலும் கந்தன் அருள் 
இருந்தால் வந்தவழி ஓடும் “ என்பது ஆன்றோர் வாக்கு .. ஆறுமுகம் சிவாக்னியில் தோன்றியவன் .. ஆகவே 
“ ஆறுமுகமே ! சிவம் ! சிவமே ஆறுமுகம் ! “ எனப்படுகிறது .. 

கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த ஆறுகார்த்திகைப் பெண்களிடம்
சிவபெருமான் ” கார்த்திகை விரதமிருக்கும் அனைவரின் குறைகளை எல்லாம் போக்கி .. நல்வாழ்வு அளித்து .. இறுதியில் முக்தியும் கொடுப்பேன் “ என்று வரமளித்தார் .. இந்நாளில் முருகனை நினைத்து வேல்மாறல் மகாமந்திரம் 
படிப்பதும் .. சிறப்பான பலன்களைப் பெற்றுத்தரும் .. இது முருகனுக்குரிய சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்று .. 

வெற்றிவேல் ! முருகனுக்கு அரோஹரா ! என்றால் வெற்றிவேலைக்கொண்ட முருகனே ! எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப்போக்கி நற்கதியை அருள்வாயாக ! என்று உரிமையோடு முறையிடுவதாகும் .. 

கந்தனைப் போற்றுவோம் சகல நலன்களையும் பெறுவோமாக !
” ஓம் முருகா “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH .. GOOD HEALTH .. GOOD STRENGTH .. AND HAPPINESS .. " OM MURUGA "

SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த 
‘ சோமவார விரத நாளாகும் ‘ ஆலயம் சென்று ஈஸ்வரனைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாக அமைந்திட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சந்திரனுக்குரிய கிழமை திங்கள் .. பிறைநிலவை சிவபெருமான் அழகாக அணிந்துள்ளார் .. சந்திரனுக்கு 
“ சோமன் “ என்ற பெயருண்டு .. அதனால் சோமனை சூடிய 
சிவன் ‘ சோமசுந்தரர் ‘ என்றழைக்கப்படுகிறார் .. 

திங்களை முடியில் சூடியவர் என்பதனா லும் சிவவழிபாட்டிற்கு திங்கட்கிழமை முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது .. சந்திரன் சோமாவாரவிரதத்தைக் கடைப்பிடித்து சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் ஒன்றைப் பெற்றான் .. ” இந்தவிரதத்தை அனுஷ்டிப்பவரெல்லாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்
அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் “ என்று சிவன் கூறியுள்ளார் .. 

சிவனைப் போற்றுவோம் ! அவரது பொற்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY HE SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. 
" OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த ஞாயிறு காலை வந்தனங்களும் காணும்பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக ..
காணும் பொங்கல் -
பொங்கல் நான்காம் நாளாகிய இன்று மக்கள் தங்கள் உற்றார் 
உறவினர்களைச் சென்று சந்தித்து .. பகைமறந்து தங்கள் அன்பையும் .. உணவுப்பண்டங்களையும் பகிர்ந்து ஒற்றுமையை வலுப்படுத்திக்கொள்வர் .. மற்றும் பெரியோர்களின் ஆசிகளையும் பெறுவர் ..
சூரியதேவனைப் போற்றி நன்றி கூறுவோம் எதிர்வரும் ஆண்டிலும் நல்ல விளைச்சலைத் தரும்படி .. அதேபோல் 
சூரியனை பூஜிப்பதால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் பத்துமடங்காகக் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கையுமாகும் ..
பெண்கள் சூரியனுக்கு “ அர்க்யம் “ கொடுத்தால் 
( கைகளால் நீரை அள்ளி அர்ப்பணிப்பது ) ஏழு
ஜென்மங்கள் எடுத்தாலும் சுமங்கலியாகவே வாழ்வர் பெண்களை அனைத்து கஷ்டங்களிருந்தும் காப்பவன் சூரியனே! நமது நன்றியையும் .. மகிழ்ச்சியையும் சூரியபகவானுக்குத் தெரிவிப்போமாக !! 
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " JAI SURYA DEV "

என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. தைப்பொங்கலுக்கு அடுத்தநாளாகிய இன்று உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருவிழா தான் மாட்டுப் பொங்கல் .. “ கால்நடைகளே நமது மூதாதையரின் செல்வம் “ என்று பண்டைய இலக்கியங்களின் மூலம் அறியமுடிகின்றது ... மற்றும் உடன் பிறந்தோருக்கான கணுப்பிடி - பலகுடும்பங்களில் மாட்டுப்பொங்கலன்று கணுப்பிடி என்ற வழக்கமும் உண்டு .. இது உடன்பிறந்த சகோதரனின் நலனுக்காகச் சகோதரிகள் வேண்டிக்கொள்வது .. “ மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக .. நிர்மலமான மனதுடன் தானும் .. அதைப்போலவே வளமான வாழ்க்கையுடன் உடன்பிறந்த சகோதரரும் நீடூழி வாழவேண்டும் என்று பஞ்சபூதங்களிடம் மங்கையர் பிரார்த்தனை செய்துகொள்வர் .. அன்றையதினம் முதல்நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறச்சாதம் .. தயிர்சாதம் போன்றவற்றை ஒவ்வொரு கைப்பிடி பிடித்து காகத்துக்கு அர்ப்பணிப்பார்கள் .. இதுவே ‘ கணுப்பிடி ‘ என்பர் .. மேலும் .. திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம் தமிழின் பெருமையையும் .. தமிழர்களின் பெருமையையும் உலகிற்குத் தெளிவாக .. என்றும் அழியாதவகையில் வெளிப்படுத்தியுள்ளதால் இந்த நாளை “ திருவள்ளுவர் தினமாகவும் “ கொண்டாடுகின்றனர் .. தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன் வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF ALMIGHTY .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH AND PROSPERITY ..

MAHARA JOTHI 2016 ......SWAMIYE SARANAM IYYAPPA


SABARIMALAI JOTHI..SWAMIYE SARANAM IYYAPPA

DHARISANAM AT PANVEL BALAGAN SANNIDHANAM


MAHARA JOTHI AT SABARIMALAI -- 2016 TODAY JAN 15TH



Embedded image permalink
Sabarimala Petitioner Alleges 500 Threat Calls
தைபிறந்தால் வழிபிறக்கும் ‘ என்னும் கூற்றுக்கிணங்க .. தைமாதம் முதல் நாளாகிய இன்று தங்கள் இல்லங்களில் பொங்கல் பொங்க .. உள்ளங்களில் இன்பம் பொங்க .. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
இன்று சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால் மிகவும் புனிதமான நாளாகும் .. கோடையின் தொடக்கமுமாகும் .. கோடைக்காலம் தரும் சூரியனின் வடதிசைப்பயணம் அதாவது உத்தராயணம் தேவர்களின் பகல்பொழுது .. அதன் தொடக்கம் இந்த மகரசங்கராந்தி என்பதால் புலரும் சூரியனை வணங்குவது மிகவும் புண்ணியம் தரக்கூடியது ..
உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில் விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன் .. பணியாட்கள் .. மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா .. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார் .. கடல்நீரை ஆவியாக்கி மழைபொழியச் செய்கிறார் .. கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார் ..மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார் .. அவருக்குரிய நாளாக இந்தநாள் அமைந்துள்ளது ..
இத்தகைய பவித்ரமான உத்தராயண புண்ணியகாலத்தில் தொடங்கும் பொங்கல் திருநாளில் அனைவரும் சூரியவழிபாடு செய்து கிரகதோஷங்கள் நீங்கி .. சுபீட்சமான வாழ்வு மலர்ந்திடவாழ்த்துகிறேன் .. சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 
“ ஓம் சூரியபகவானே நமோஸ்துதே “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. .. WISH YOU ALL AND YOUR FAMILY
A VERY HAPPY PONGAL .. MAY THIS AUSPICIOUS CELEBRATION BRING IN THE PROMISE OF GOOD HARVEST .. SWEETNESS OF PONGAL .. BRIGHTNESS OF THE JOYOUS SUN .. AND PROSPERITY IN YOUR LIFE TOO .. " HAPPY PONGAL "

SWAMI SARANAM...PANVEL BALAGANE SARANAM IYYAPPA


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
இனிய ” போகிப் பண்டிகை “ நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக ..
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான 
நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக .. 

போகிப்பண்டிகை - 
இந்த பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளாகிய இன்று கொண்டாடப்படுகிறது .. இந்நாள் “ பழையன கழிந்து .. புதியன
புகவரும் நாளாகக் “ கருதப்படுகிறது .. பழையவற்றையும் .. பயனற்றவையும் விட்டொழிக்கும் நாளாகக் கருதப்படுகிறது .. 
பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையை 
‘ போக்கி ‘ என்றனர் .. நாளடைவில் மருகி “ போகி “ என்றாகிவிட்டது .. 

அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் “ போகி “ என்போரும் உண்டு .. வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையிலும் மக்கள் போகிப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் .. 

இந்திரனுக்கு ‘ போகி ‘ என்றொரு பெயரும் உண்டு .. மழைபொழிய வைக்கும் கடவுள் வருணன் .. அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன் .. மழை பெய்தால்
தான் பயிர்கள் செழிக்கும் .. உயிர்கள் வாழும் .. எனவே பண்டைய நாட்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது .. “ 

இவற்றோடு பழைய பழக்கங்கள் .. உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும்
“ ருத்ர கீதை ஞான யக்ஞம் “ என அழைக்கப்ப்டும் அக்னிகுண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டைமட்டுமல்ல ..
மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் .. தவறான எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும் .. 

பல்வேறு தெய்வீகக் குணங்களைத் தூண்டுவதன்மூலம் ஆன்மாவை உணர்தல் .. ஆன்மாவைத் தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது ..
இந்திரனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும்
பெற்றிடுவோம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY BOGHI FESTIVAL TOO .. BHOGI IS CELEBRATED IN HONOR OF LORD INDRA THE GOD OF CLOUDS AND RAINS .. LORD INDRA IS WORSHIPPED FOR THE ABUNDANCE OF HARVEST .. THEREBY BRINGING PLENTY AND PROSPERITY TO THE LAND .. ON BHOGI ALL THE PEOPLE CLEAN OUT THEIR HOMES FROM TOP TO BOTTOM TOO .. MAY LORD INDRA BLESS YOU ALL WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI INDRA DEV "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM .. PANVEL BALAGANE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன் கிழமையாகிய இன்று பிள்ளையாருக்கு உகந்த 
‘ சதுர்த்தி விரதமுமாகும் ‘ .. ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. இக .. பர .. சுகங்கள் அனைத்தும் பெற்றிடவும் கணபதியைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

நாயகன் என்றால் தலைவன் என்று பொருள் .. 
“ வி “ - என்பதற்கு - ‘ இல்லை ‘ என்று அர்த்தம் .. 
“ விநாயகர் “ - என்ற சொல்லுக்கு - இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை ( முதன்மையானவர் ) என்பது முழுப்பொருளாகும் . .

கோவில்களில் விநாயகபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது .. “ ஓம் அநீஸ்வராய நமஹ “ என்றும் கூறுவார்கள் .. ‘ அநீஸ்வராய ‘ என்பதற்கு - தனக்குமேல் ஒரு 
ஈஸ்வரன் ( இறைவன் ) இல்லை என்பது பொருளாகும் .. 

நவக்கிரக நாயகன் -
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன .. 
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளார் .. 
நாபியில் - சந்திரனும் ..
வலதுதொடையில் - செவ்வாயும் ..
வலதுகீழ் கையில் - புதனும் ..
வலதுமேல் கையில் - சனியும் ..
தலையில் - குருபகவானும் ..
இடதுகீழ்கையில் - சுக்ரனும் ..
இடதுமேல்கையில் - ராகுவும் .. 
இடது தொடையில் - கேதுவும் .. இடம்பெற்றுள்ளனர் .. 
எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும்
வழிபட்டு துதித்ததற்கான பலன்கிட்டும் .. 

அரசமரத்தடி ஏன் .. ? .. 
கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும் .. குளக்கரை
ஓரங்களிலும் உள்ள அரசமரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார்
அங்குதான் விநாயகரின் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள் .. நிழல்படிந்த நீரில் குளிப்பது உடல்நலத்திற்கு நல்லது .. குளித்து முடித்தவுடன் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது என்பதால் குளக்கரை ஓரம் இருக்கும் அரசமரத்தின் அடியில் விநாயகரை வைத்துள்ளனர் .

பெண்கள் அரசமரத்தை சுற்றிவரும்போது கிடைக்கும் காற்று 
பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது .. எனவே கிராமங்களில் ஆற்றங்கரைகளிலோ .. குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார் .. 

வெற்றி விநாயகரைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றியடைவோமாக ! வெற்றி நிச்சயம் ! .
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SADURTI DAY " AND MAY LORD GANAPATHY SHOWER YOU WITH EVERY SUCCESS AND DESTROY ALL THE EVILS AND OBSTACLES ..
" JAI GANESH "

swamiye saranam iyyappa....guruve saranam...panvel balagane saranam iyyappa

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த 
சோமவார விரதமுமாகும் .. சிவாலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் .. பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர் .. சந்திரன் கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான் .. தன்னுடைய கொடியநோய் குணமாக சிவபெருமானை ஆராதனை செய்து
நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும்பேறு பெற்றான் .. சந்திரனது பெயரால் தோன்றியது தான் சோமவார விரதம் .. 

திங்கள் கிழமையான இந்நாளில் சோமனாகிய சந்திரன் தன் பெயரால் இந்த விரதம் புகழ் பெறவேண்டும் என சிவபெருமானைப் பிரார்த்தித்தான் .. பெருமான் வரமருள 
இந்த விரதம் சோமவார விரதமாக சிறப்பு பெற்றது .. சிவன் சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கி ‘ சோமநாதர் ‘ ஆனார் ..
சந்திரசூடராக .. சந்திர மௌளீஸ்வரராக ஆனார் .. 

சந்திரனின் துன்பம் நீங்க சந்திரனின் மனைவி ரோகிணியும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள் .. அதனால் பெண்கள் சகல சௌபாக்கியங்களுடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் கிடைக்கவும் .. நோய் .. நொடிகள் இன்றி தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் ..

சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி .. பகைவர் .. பயம் அகற்றி அவர்களை நற்கதி அடையச்செய்வார் 
சிவபெருமான் .. சிவனைப்போற்றுவோம் சகல நன்மைகளையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS ... WISH YOU ALL A BLESSED SOMAVAARAM AND MAY LORD SHIVA SHOWER YOU WITH GOOD HEALTH .. GOOD LUCK .. AND HAPPINESS .. " JAI BHOLE NATH "

ஏறாத இடமெல்லாம் ஏறி வருவார் தினமும் ஆறாத அரும் பசியை ஆற்றும் திரு ஆரியனே !! மாறாத ரோகமெல்லாம் மாற்றி என்னைக் காத்தருளும் பேறு உனக்குநிகர் வேறுயார் மணிகண்டா !!!


GURUSWAMY SPEEACH AT ERNAKULAM



GURUVIN KATTUNIRAI.......SWAMIYE SARANAM IYYAPPA....