GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED PURNIMA (ECLIPSE IN THE EVENING) & A DIVINE " THAI POOSAM " TOO .. THE WORD THAI POOSAM IS A COMBINATION OF THE NAME OF THE MONTH THAI & THE NAME OF A STAR POOSAM .. THIS PARTICULAR STAR IS AT IT'S HIGHEST POINT DURING THE FESTIVAL COMMEMORATES THE OCCASION WHEN GODDESS PARVATI GAVE LORD MURGA A VEL .. SPEAR .. SO HE COULD VANQUISH THE EVIL DEMON SOORAPADMAN .. "OM MURUGA"

” பூசத்தின் நாயகனே ! பூவுலகம் காப்பாயாக ! 
புள்ளி மயில் ஏறி வரும் வடிவழகா 
தைமாத ஓரத்திலே தங்கரதம் கண்டவரே ! காவடியில் உன் முகம் காண்போம் கதிர்காமா ! செந்தூர்க்கடலிலும் பரங்குன்றத் தரையினிலும் பழமுதிர்ச் சோலையிலும் பழனிமலை மீதினிலும் தணிகைமலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும் சுவாமிமலை அருளினிலும் அரங்கேற்ற வந்தவரே ! ஓம் முருகா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ தைபூசத்திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. தைபூசத்திருநாளாகிய இன்று மாலை சந்திரகிரகணமும் வருவதால் பௌர்ணமிப் பூஜைகள் எல்லாம் காலை நேரத்திலே ஆலயங்களில் நடைபெறுகின்றன .. மற்றும் கிரகண நேரத்தில் ஆலயங்கள் யாவும் நடைசாத்தப்பட்டு கிரகணம் முடிந்த கையோடு மீண்டும் ஆலயங்கள் திறக்கப்பட்டு முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் ..
இந்த தைபூசத் திருநாளிலே தாங்கள் தொடங்கும் செயல்கள் யாவும் தொய்வின்றி இனிதே நிறைவேறிடவும் .. வள நலம் பெருகிடவும் எல்லாம் வல்ல முருகப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
தைப்பூச நன்னாளில் அதிகாலையில் 
கிழக்கில் - சூரியனும் 
மேற்கில் - முழுநிலவும் 
ஞானசபையில் இருந்து - அக்னியான ஜோதியும் காண்பிக்கப்படும் .. 
இவை ஒரே நேர்கோட்டில் அமையும் .. 
இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் ..
சந்திரன் என்பது - மன அறிவு 
சூரியன் என்பது ஜீவ அறிவு .. 
அக்னி என்பது - ஆன்மா அறிவு 
சந்திரன் சூரியனில் அடங்கி . சூரியன் அக்னியில் அடங்கி .. அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே 
“ தைபூசம் “
மனம் ஜீவனில் அடங்கி ..
ஜீவன் ஆன்மாவில் அடங்கி 
ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும் .. மேலும் அதிகாலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மைத் தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது ..
“ அருட்பெருஞ்ஜோதி ! தனிப் பெருங்கருணை “ எனும் மகாமந்திரத்தை உலகுக்கு தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி ஒரு தைமாத புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தார் . .
“ ஓம் ஜெய ஜெய மகாவீர பகவான் ! ஸ்ரீஸ்கந்தா நமோ நமஹ ! ஓம் ஜெய ஜெய மகாஜோதி சக்தி சரவணபவாயி நமோ நமஹ “ 
எனும் மந்திரத்தை சொல்லி தைப்பூசத்தில் ஷண்முகியாம் வேலாகிய ஜோதியை வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் காணலாம் .. வேல்வழிபாடு முருகன்வழிபாடு மட்டுமல்ல ஜோதிவழிபாடும் .. சக்திவழிபாடும் ஆகும் ..
சூரனை வதம் செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞான சக்தியால் பழனிமலையில் வேல் வழங்கி ஆசிவழங்கினாள் . அதன் காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..
வேல் ! என்பதும் ஜோதி என்பதும் வேறல்ல .. பார்வதிதேவியின் சக்தியிலிருந்து அவதரித்ததால் அந்த வேலாகிய ஜோதி முருகனுக்குத் தங்கையாகிற வேல் .. பிரம்ம வித்யா சொரூபமானது . சக்தியின் வடிவாய் சக்தியிடமே உருவான வேல் ! கந்தனின் தங்கை என்றும் .. அந்த வேலைத் தோற்றுவித்து அன்னை அளித்த திருநாள் தைப்பூசத்திருநாள் என்றும் போற்றி வழிபடுகிறார்கள் ..
முருகனையும் ஜோதியையும் (வேல்) எப்போதும் பிரிக்கமுடியாது .. எனவேதான் புராணங்களில் ஜோதியாகிய சக்திவேலை “ ஷண்முகி “ என்றும் போற்றுகின்றன .. இந்தவேல்தான் சூரபத்மனை இரண்டாகப் பிளந்து ஞானத்தை அளித்தது . எனவே ஞானத்தின் அம்சம் வேல் ! அந்த வேலைத் தாங்குகின்ற முருகப்பெருமானாக 
“ ஞானவேல் முருகன் “ என்று போற்றுகின்றன ஆகமங்கள் ..

முருகனைப் போற்றுவோம் ! சகலசௌபாக்கியங்களையும் பெற்றிடுவோமாக ! 
“ சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “ 
வாழ்க வளமுடனும் . என்றும் நலமுடனு


Image may contain: 1 person

swamy saranam... some memorble pooja songs by GS... guruve saranam