PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM....

” கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியானை கண்டோம்
கண்கவர் அலங்கரிப்பில் கனிவு ததும்பும் பார்வியினை கண்டோம்
தொண்டீர் எல்லோரும் துதித்து நிற்க தூயனின் பூஜையின் எழில் கண்டோம்

வாரீர் தொழுது தொழுது அவன் பாதம் பணிவோம்
வரும் நாளில் சபரி மண்மேல் முடிதாங்கி நிற்போம்”















SWAMY SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " KARTHIGAI DEEPAM " WISHES TOO .. MAY THIS FESTIVAL OF DEEPAM BRIGHTEN & ENLIGHTEN YOUR LIFE LIKE THE LIGHT OF LAMPS & GLOW LIKE THE DEEPAM .. " OM NAMASHIVAYA ! JAI BHOLE NATH "




 ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்காமிக்க ஜோதியே துளங்கு மெண்டோட்சுடர் மழுப்படையுனானே ! ஆதியே யமரர் கோவே யணியணா மலையுளானே ! நீதியானின்னை யல்லானினையுமா நினைவிலேனே “ (திருநாவுக்கரசர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. கார்த்திகைத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. தங்கள் இல்லத்தில் ஒளிதீபம் ஏற்றி .. நல் உள்ளத்தில் மகிழ்ச்சி எனும் ஒளி என்றும் பிரகாசமுடன் ஒளிர்ந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானையும் .. அண்ணாமலை .. உண்ணாமலை அம்மனையும் போற்றித்துதிப்போமாக!
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும் கார்த்திகை மாதத்தில் ஒளிவடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவதும் இல்லத்தில் இருவேளைகளிலும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை மேலும் பிரகாசிக்கச் செய்து ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம் !
பஞ்சபூதங்களில் ஒருவரான அக்னி பகவானான நினைத்தாலே முக்தியளிக்கும் அருள்மிகு உண்ணாமுலையம்மன் உடனாய அண்ணாமலையார் ஆண்டுதோறும் மலைமீது ஒளிவெள்ளம் பெருக அருள்கின்றார் ..
ஆலயத்தின் வெளியே அர்த்தநாரீஸ்வரராக ஆனந்தத்தாண்டவம் ஆடுகின்றார் .. அனைத்து உயிர்களையும் அரவணைக்கின்றார் .. அத்தகைய இறைவனை ஒளிவடிவில் தரிசிப்பதே தீபத் திருநாளாகும் ..
திருக்கோயில்களிலோ .. நமது இல்லத்திலோ தீபம் ஏற்றி வழிபட்டால் பல நன்மைகள் உண்டு .. தீபமானது இருளை அகற்றி ஒளிகொடுப்பதைப்போன்று இறைவன் நம்முடைய பாவமாகிய இருளை அகற்றி முக்தி எனும் ஒளியை அளிப்பார் என்பது ஐதீகமாகும் ..
ஏராளமான இறை அடியார்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து இறைவனை அடைந்துள்ளனர் .. 
63 நாயன்மார்களில் ஒருவரான “கலியநாயனார் “ திருவெற்றியூர் திருத்தலத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து இறைவனை அடைந்தார் .. தீபம் ஏற்ற எண்ணை வாங்க பொருள் இல்லாத நிலையிலும் தன் இரத்தத்தால் தீபம் ஏற்றி இறைவனையே வியக்க வைத்தார் .. ஆகவே தீபவழிபாடு என்பது மிகச்சிறந்த வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது ..
மகாதேவனான இறைவன் திருவண்ணாமலையில் மலைவடிவில் விளங்குகிறார் .. 
அண்ணாமலையானது கிருதாயுகத்தில் -
அக்னிமலையாகவும் ..
திரேதயுகத்தில் - மாணிக்கமலையாகவும் ..
துவாபரயுகத்தில் - பொன்மலையாகவும் விளங்கியதாக திருத்தலவரலாறு கூறுகிறது ..
இம்மலையில் கார்த்திகைத் தீபத்தன்று மலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது .. பெரிய கொப்பரையில் 24 அடி முழதுணி யை கற்பூரத்தூள் சேர்த்து திரியாகத் தயாரிக்கப்படுகிறது கொப்பரையில் 35ஓ கிலோ நெய்வார்த்து தீபம் ஏற்றப்படுகிறது .. இந்தத் தீபப் பெருஞ்சுடரானது 11 நாட்களுக்கு எரியும் என்று கூறப்படுகிறது .. 60 கி.மீ . தொலைவுவரை இந்தத்தீப ஒளி தெளிவாகத் தெரிகிறது ..
முக்தியளிக்கும் மூலம் பரம்பொருளாம் இறைவன் அக்னி சொரூபமாக காட்சி தரும் அண்ணாமலையானை தீபத்திருநாளில் வணங்கினால் வளம் அனைத்தும் பெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .. அவ்வாறு இத்தலத்திலேயே பலகாலம் தங்கி வழிபட்ட மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திரு அம்மானை என்ற குருபதிகமே பாடி இறையருள் பெற்றுள்ளார் ..
“ கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையோனைப் பாடுதும் காண் அம்மானாய்”
(மாணிக்கவாசகர்)

எனவே அலையாக வரும் பக்தர்கள் மலைமீது ஒளிவீசும் மங்காதஜோதியான அருட்கடலாம் ஆண்டவரை வணங்குவோம் ! வளம் அனைத்தும் பெறுவோம் ! 
“ அருள்மிகு உண்ணாமுலையம்மன் திருவடி மலரடி போற்றி ! போற்றி “ 
அருள்மிகு அண்ணாமலையார் திருவடி மலரடி போற்றி ! போற்றி “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person

SWAMY SARANAM... GURUVE SARANAM...




” உண்ணமுலை உமையாளொடும் 
உடன் ஆகிய ஒருவன் பெண் ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ மண் ஆர்த்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினைவழுவாவணம் அறுமே “ (திருஞானசம்பந்தர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று ஞானத்தை அளித்து பாவத்தை மட்டுமன்றி ஆணவத்தை இறக்கிவைக்கும் தலமாகிய திருவண்ணாமலையில் பரணி நட்சத்திரமாகிய இன்று “ மஹாபரணி தீபம் “ ஏற்றும் புனிதமான நன்னாளாகும் .. இன்றைய நாளிலிருந்து தங்கள் வாழ்வும் ஓர் தீபமென என்றும் ஒளிமயமானதாக பிரகாசிக்கவும் .. அனைத்து கவலைகளும் நீங்கி மகிழ்ச்சிகரமானதாக திகழவும் 
அண்ணாமலையானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியே பெரிய கார்த்திகை எனப்படும் .. இந்நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் மிகச்சிறப்பான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது .. அண்ணாமலியில் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையான 14 கி.மீ . தூரத்தை நடந்தே சென்றால் அப்படி பயணிப்பவர்களின் கர்மவினைகள் பெருமளவு கரைந்துவிடும் ..
இங்கு அண்ணாமலையே சிவபெருமானாக காட்சியளிக்கிறார் .. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சித்தர்கள் இங்கு கிரிவலம் வருவார்கள் .. துறவி வடிவில் அல்ல நம்மைப்போலவே சாதாரண உடை அணிந்து வருவார்கள் .. நாமும் பௌர்ணமிக்கு கிரிவலம் சென்றால் நமது முன்னோர்களில் யாரும் சித்தராக இருந்திருந்தால் அவர்களது அருட்பார்வையும் நம்மீதுபட்டு நம் பாவங்கள் மட்டுமல்ல நமது முந்தைய மனிதப் பிறவிகளிலும் செய்தபாவவினைகள் தீர்ந்துவிடும் ..
கார்த்திகை மாத பௌர்ணமியன்று பிரபஞ்சம் முழுவதும் இருந்து அனைத்து சித்தர்களும் அண்ணாமலைக்கு வருகை தருவார்கள் .. கிரிவலம் வரும் சிலருக்கு காட்சியளிப்பதும் உண்டு .. பலரிடம் பேசுவதும் உண்டு ..
மஹாவிஷ்ணு .. பிரம்மா இருவருக்கும் சிவபெருமான ஜோதிப்பிழம்பாய் காட்சி அளித்தநாள் அன்னை பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்த நாளும் கார்த்திகை பௌர்ணமி தினமாகும் 
பௌர்ணமி நாலில் முழுநிலவின் ஒளியிலிருந்து பதினாறு கலைகள் பிரகாசிப்பதாலும் .. அண்ணாமலையில் ஒளிக்கதிர்கள் சிதறி மலை வலம்வரும் பக்தர்களின் உடலிலும் .. உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்வதாலும் .. மலை வலம் வரும்போது பக்தர்கள் எண்ணுவதை அப்படியே நிறைவேற்றிவிடுவார் ..
அருளும் .. பொருளும் .. நோயற்ற வாழ்வும் .. வெற்றியும் .. மகிழ்வும் .. திருமணம் நடைபெறவும் .. புத்திரப்பேறு ஏற்படவும் .. தரித்திரத்தையும் .. துக்கத்தையும் .. வறுமையையும் நீக்கி .. செல்வத்தைத் தந்திடவும் “ ஓம் நமசிவாய “ என்று பிரார்த்தித்தவாறு மலை வலம் வருவோம் ! மனநலம் பெறுவோம் !
“ ஓம் அருணாசலேஸ்வராய போற்றி ! போற்றி ” 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Image may contain: 1 person