PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam....Guruve saranam....The Last pooja of this year at sannidhanam.......31-12-2021

 




Swamy saranam. guruve saranam...

 *#கேசவர்கோவில், #சோமநாத்பூர்

கேசவர் கோயிலில் நுழைந்தவுடன் இடப்புறம் உள்ள கன்னடமொழிக் கல்வெட்டு. இக் கல்வெட்டு கோயில் நிறுவியதைப் பற்றி அறிவிக்கின்றது
கேசவர் கோவில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சோமநாத்பூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பழமையான கோவில். இதுவே ஓய்சாளர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோவில். சோம்நாத்பூர் மைசூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது (பெங்களூரில் இருந்து தென்மேற்காக 140 கி.மீ தொலைவில் உள்ளது). ஓய்சாளர் கட்டிடக்கலையால் ஆன கோவில்களுள் இதுவே நன்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான கோவில். இது மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. இக்கோயில் கி.பி. 1268 இல் கட்டப்பட்டது. அக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் ஒய்சாளர்கள் 260 ஆண்டுகளாக கருநாடகத்தில் ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றார்கள்.
சோமநாதபுரக் கேசவர் கோயிலின் ஒருபக்கம்
இக்கோயிலில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வழக்கத்தில் இருந்து சற்று வேறானது. சிற்பிகளில் புகழ்மிக்க மல்லித்தம்மாவும் குறிப்பிடப்படுகின்றார். கோயிலில் புறச்சுவரில் உள்ள 194 சிற்பங்களில் 40 சிற்பங்களை மல்லித்தம்மா செதுக்கியதாக குறிப்பிடப்பட்டுளன. மற்ற சிற்பிகளாகிய பல்லையா, சௌடைய்யா, பார்மய்யா,காமய்யா, நஞ்சய்யா ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன



Chamundeshwari Temple, Mysore

swamy saranam,////guruve saranam..Today pooja at sannidhanam 27-12-2021

 Atulya Nadheswarar Temple, Arakandanallur,

விழுப்புரம் அருகே #டிஎடையாறில் உள்ளது மருந்தீசர் திருக்கோயில். சுந்தரரின் தேவாரப்பாடலில் இடம்பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 13வது தலமாகும். சில சிவால யங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன்தான் அருள் பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் சிவ, பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார். சுந்தரர் இத்தலத்திற்கு வந்துபாடியுள் ளார். 39 தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.



Mandala Pooja Blessings to all GS

 





Ulagalantha Perumal Temple, Tirukoyilur


Swami saranam...guruve saranam....

 Aramkandanallur

Kabilar Kundru (or Kabilar rock) is a hill rock in the middle of the Ponnaiyar River near Tirukoilur in Viluppuram district, Tamil Nadu, India.[1][2] It is known for Tamil poet Kapilar did Vadakirrutal (fast unto death) here, after his friend Vēl Pāri was killed in a battle.[3] It is one of the protected monuments in Tamil Nadu by the Archaeological Survey of India.#கபிலர்குன்று
#KabilarKundru #Thirukovilur
மன்னன் மலையமான் வம்சத்தினர் சங்க காலத்தில் திருக்கோயிலூர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பை ஆண்டு வந்தனர்.
இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த சங்கப் புலவர் கபிலர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நெருங்கிய நண்பராவார். முடியுடை மூவேந்தர்கள் பாரியையும் அவன் ஆண்ட பரம்பு நாட்டையும் முற்றுகையிட்டு அழித்துவிட பாரி வள்ளல் தன் இரு மகள்கைளையும் அங்கவை , சங்கவை..........
(சிவாஜி படத்தில வாங்க பழகிக்கலாம்தான் உடனே ஞாபகம் வரும் ..............)
பாரிவேளின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர்.
கபிலரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டான்.
அதன் பிறகு கபிலர் தனது நண்பரின் மகள்களைத் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் நீத்த இடம்தான் திருக்கோயிலூர் பெண்ணையாற்றின் நடுவே உள்ள சிறு குன்றாகும். இக்குன்றே கபிலர் குன்று என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
தனித்த பாறையும், அதன் மேல் சிறு கோவில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடமும் கொண்டது கபிலர் குன்று. குறுகிய படிக்கட்டுகள் வழியாக இக்குன்றை அடையலாம்.கோயிலின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. இக் கட்டிடம் 16 ம் நூற்றாண்டு கட்டிட பாணியைச் சேர்ந்தது என தொல்லியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேல்புறம் நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சுவாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேற்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன.


#திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் ஊரில் கீழூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும்