PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE " MAHALAYA PAKSHA " (PITRU PAKSHA) IT'S BEING OBSERVED FROM TODAY & ENDS ON THE MAHALAYA AMAVASYA DAY THE LAST OF SHRADH PAKSHA .. DURING THESE DAYS THE SOULS OF THE PITRUS WILL DESCEND TO EARTH IN THE FORM OF SPIRITS & WILL BE PRESENT AROUND US TO BLESS .. THIS PAKSHA HAS IMMENSE VALUES & GIVES SATISFACTION TO THE PITHRUS .. IT'S THE RITUALS THAT PROVIDES AN OPPORTUNITY TO REPAY DEBT TO OUR ANCESTORS .. IF THEY HAVE CURSES WE CAN RELIEVE THEM BY OFFERING FOOD FOR THE POOR IT PURIFIES THE MIND OF UNWANTED DECEIVES & BRING PROSPERITY & LONG LIFE TO THE FAMILY .. " OM PITHRU DEVO BAWA "




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று .. நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த நம் முன்னோர்களுக்கு நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் “ மஹாளய பக்ஷ்ம் “ எனப்படும் மகிமைமிக்க புண்ணிய காலம் இன்றுமுதல் ஆரம்பமாகின்றது ..
பக்ஷ்ம் என்றால் - 15 நாட்கள் .. 
மஹாளயம் என்றால் - மகான்களின் இருப்பிடம் .. இறந்து போனாலும் நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷ்ம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக ஐதீகம் .. ஆகவே இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் ..
இன்றிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையிலான காலமே மஹாளய பக்ஷ காலம் அனுஷ்டிக்கப்படுகின்றது .. நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்த போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது .. மாதப்பிறப்பு .. இறந்த அவர்களது திதி மற்றும் மஹாளயபக்ஷ தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் ..
எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்களும் அதனை இங்கு நேரடியாகப் பெற்று எம்மை ஆசீர்வதிப்பார்கள் .. மஹாளயபக்ஷ் புண்ணிய காலத்தில் தவறான சிந்தனையை மறந்து நமக்காக தியாகங்கள் செய்த நமது முன்னோர்களை மனதார நினைத்து பித்ரு தர்பணம் செய்யவேண்டும் ..
 Image may contain: food
நமக்காக வாழ்ந்தவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தர்பணம் செய்வது புண்ணியத்தைத் தேடித்தரும் .. இந்த 15 நாட்களும் முன்னோர்களை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் நம்மைத்தேடிவரும் ..
பல்வேறு சிறப்புகள் மிக்க மஹாளயபக்ஷ் காலத்தில் நம் முன்னோர்களை நினைந்து பிதிர்வழிபாடு செய்து பிதுர் ஆசி .. குரு ஆசி .. தேவ ஆசி பெற்று பாவதோஷங்கள் .. தடை .. தடங்கல்கள் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வுதனை வாழ்வோமாக ! 
“ ஓம் பித்ரு தேவோ பவ “ 
 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: indoor


Image may contain: 1 person, indoor

SWAMY SARANAM....GURUVE SARANAM

வாழ்வை வளமாக்கும் விநாயகர்
வழிபாடுஎந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கியபின் தொடங்கினால் அந்த செயலில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பது அனுபவரீதியான, திடமான நம்பிக்கை.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். நமது தேவைக்கேற்றப்படி பல விதமான பொருட்களால் ஆவாஹனம் செய்து வழிபட்டு, அதற்கான பலன்களை பெற்றுக்கொள்ளலாம்

.மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டு பலன்மஞ்சளில் பிள்ளையார் (மஞ்சள் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால், சகல சௌபாகியங்களும் கிடைக்கும்.குங்கும பிள்ளையார் வழிபாட்டு பலன்குங்குமத்தில் பிள்ளையார் (குங்கும பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.புற்று மண் பிள்ளையார் வழிபாட்டு பலன்புற்று மண்ணில் பிள்ளையார் (புற்று மண் பிள்ளையார்) பிடித்து வழிபட்டால் விவசாயம் நன்கு செழிப்படையும், நோய்கள் நீங்கும்.வெல்ல பிள்ளையார் வழிபாட்டு பலன்வெல்லத்தில் பிள்ளையார் (வெல்ல பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் உடலில் ஏற்படும் கட்டிகள் குணமாகும்.கடல் உப்பு பிள்ளையார் வழிபாட்டு பலன்கடல் உப்பில் பிள்ளையார் (கடல் உப்பு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும்.வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாட்டு பலன்வெள்ளெருக்கில் பிள்ளையார் (வெள்ளெருக்கு பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் பில்லி, சூனியம் விலகி, வாழ்வில் வளமும் நலமும் சேரும்.விபூதி பிள்ளையார் வழிபாட்டு பலன்விபூதியில் பிள்ளையார் (விபூதி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் நோய்கள் நீங்கும்.சக்கரை பிள்ளையார் வழிபாட்டு பலன்சக்கரையில் பிள்ளையார் (சக்கரை பிள்ளையார், சீனி பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சக்கரை நோய் நீங்கும்.பசுமாட்டு சாண பிள்ளையார் வழிபாட்டு பலன்பசுமாட்டு சாணத்தில் பிள்ளையார் (பசுமாட்டு சாண பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகி குடும்பம் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையும். வியாபாரம் விருத்தியாகும்.சந்தன பிள்ளையார் வழிபாட்டு பலன்சந்தனத்தில் பிள்ளையார் (சந்தன பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும்.வாழைப்பழ பிள்ளையார் வழிபாட்டு பலன்வாழைப்பழத்தில் பிள்ளையார் (வாழைப்பழ பிள்ளையார்) பிடித்து வழிபாடு செய்தால் குடும்பம் விருத்தியாகும்.வெண்ணை பிள்ளையார் வழிபாட்டு பலன்வெண்ணையில் பிள்ளையார் (வெண்ணை பிள்ளையார் ) பிடித்து வழிபாடு செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் கடன் மற்றும் அனைத்து கடன்களும் நீங்கி வளம் பெருகும்.

விநாயசதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
Image may contain: food

" என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான் ! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான் நேர்கோடு வட்டமாகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம் ! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான் ! அவன் வருவான் ! கண்ணில் மழை துடைப்பான் ! இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான் ! அந்தக் கண்ணனை அழகு மன்னனை தினம்பாடி வா மனமே “ அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. தங்கள் அகத்தில் பொங்கட்டும் ஆனந்தம் .. இல்லங்களில் என்றும் பொழியட்டும் மங்களம் ! சத்தியத்தைக் காப்பதற்காகவும் .. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மஹாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமே ஸ்ரீகிருஷ்ணாவதாரமாகும் இன்றைய நாளில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று என்றும் மகிழ்ச்சியோடு வாழ கிருஷ்ணபகவானைப் பிரார்த்திப்போமாக ! ஓம் தாமோதராய வித்மஹே ! ருக்மணி வல்லபாய தீமஹி ! தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! இன்று மாலை ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமித் திதியும் கூடிவருவருவது சிறப்பே ! கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்படுவதால் பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன .. அஷ்டமித் திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர் இதனால் இந்தத் திதியானது “ கோகுலாஷ்டமி “ என்று போற்றப்படுகிறது .. ” நான் எங்கும் இருப்பேன் ! எத்தனை கோடி பக்தர்களையும் பார்ப்பேன் ! காப்பேன் ” என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிக் கோலம் போடுகிறார்கள் .. “ நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ! அல்லது பூவைக்கொடு ! இல்லை .. பழத்தைக் கொடு ! அதுவும் இல்லையெனில் கொஞ்சம் தண்ணீர் கொடு எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடு .. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் உண்பேன் ” என்றார் கீதையில் கண்ணன் .. பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை பக்தியோடு வணங்கினால் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார் .. “ ஜெயக் கிருஷ்ணா முகுந்தா முராரே “ எனப்பாடினாலே எந்த அசுர சக்தியாலும் எமை வீழ்த்தமுடியாது .. கண்ணனின் அருளாசியுடன் சகல நலங்களும் பெற்று .. வளமோடும் .. நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோமாக ! “ ஜெய்ஸ்ரீகிருஷ்ணா “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: 2 people