PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று சனிக்கிழமையும் .. ஸ்ரவண விரதமும் .. திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் இந்நாளில் மஹாவிஷ்ணுவை வழிபடுவது சிறந்தது .. 
( திருவோணம் மாலைவரை ) 

தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் ..மனநலமும் .. உடல்நலமும் நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளன்று நாராயணனை விரதங்காப்பது ஸ்ரவண விரதமுமாகும் .. 
தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத்தரும் இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் இருக்காது .. வாழ்வில் அமைதி ஏற்படும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. பகைவர் நண்பராவர் .. அனைத்து துன்பங்களும் நீங்கும் .. 

108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதா மாதம் “ ஸ்ரவணம் “ என்கின்ற விழா பிரசித்தம் .. “ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ - என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் ! என்ற சரமச்லோகப் பகுதி எம்பெருமானின் வலக் கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. 

” தனக்கு ஒப்பாரும் .. மிக்காரும் இலார் “ என்கின்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் .. 

உப்பிலியப்பனை துதித்து சொல்லவேண்டிய ஸ்லோகம் - 

என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப் பெற்றவளாய் ! 
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய் மின்னப்பொன்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன் தன் எனாப்பா ரிலப்பன் ! தந்தனன் தனதாள் நிழலே !! 

நாராயணனைப் போற்றுவோம் ! வேண்டியவன யாவும் நிறைவேறும் ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS TOO .. " JAI SHREE NAARAAYANAA "

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM...

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையும் .. தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று ஸ்ரீபைரவருக்கு உகந்த நாளுமாகும் .. மாலையில் ஆலயம் சென்று பைரவரை தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. ( மாலையில் அஷ்டமித் திதி ஆரம்பமாகின்றது ) 

தங்களனைவரினதும்.. காலத்தினால் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து ..உத்தியோகத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டவும் .. செய்யும் தொழிலில் மேன்மையும் .. தனலாபமும் பெற்றிடவும் பைரவப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வாநத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் .. விநாயகப்பெருமானை வணங்கி எந்த இடையூறும் ஏற்படாமலிருக்க அருள்புரியுமாறு பிரார்த்தித்தபின்பு ஆரம்பிக்கலாம் .. 

அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கும் பைரவரை வணங்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .. ஆகையால் தினமும் விளக்குபோட முடியாதவர்கள் ஒரேநாளில் தேய்பிறை அஷ்டமி நாளன்றே ஏற்றிவிட்டு வரலாம் .. 

விளக்குபோட ஆரம்பித்ததிலிருந்து மாறுதல்களை உணர்வீர்கள் .. தெளிந்த பக்குவப்பட்ட மனநிலையைப் பெற்று இருப்பீர்கள் .. பைரவரே நம்வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் .. ஒரு குருவாக இருந்து வழிநடத்துவார் .. சூட்சுமவடிவில் எப்போதும் கூடவே இருப்பார் .. வாழ்க்கை எமை கைவிட்டாலும் எமக்கு காவலாக இருந்து உண்மையை உணரவைப்பவரும் பைரவரே ! 

ஆனால் நம்முடைய கர்மவினை நம்மை பைரவரை வழிபட அனுமதிக்காது .. நிறைய தடைகளை ஏற்படுத்தும் சோம்பேறித்தனத்தை உண்டுபண்ணும் .. நாமே ஏதாவது காரணம் சொல்லி சிறிது நாட்களிலே விட்டுவிடுவோம் .. இந்தமாதிரியான தடைகளையெல்லாம் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்திவிட்டு .. நாமதான் விடாமுயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வரவேண்டும் .. ஆரம்பத்தில் சிரமமாகத்தானிருக்கும் ..போகப்போக சரியாகிவிடும் .. ஒருநிறைவான வாழ்க்கை அமைந்தபின்னும் வாழ்நாள்முழுவதும் தொடர்ந்து செய்துவாருங்கள் அனைத்து அஷ்டமாசித்திகளையும் பெறுவீர்களாக .. 

“ ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A DIVINE ASHTAMI AND MAY LORD BHAIRAVA BLESS YOU AND FREE YOU FROM ALL DEBTS .. ILLNESS .. AND FEAR .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY TOO .. 
" JAI BHAIRAVAAYA NAMAHA "

SWAMI SARANAM..GURUVE SARANAM

 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று குருவருளும் .. திருவருளும் கூடிவரும் இந்நாளில் சஷ்டித் திதியும் சேர்ந்து வருவது விசேஷமாகும் ..ஆலயம் சென்று முருகப்பெருமானையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. 

வேலவன் அருளால் தங்களனைவருக்கும் நல் ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் .. என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும் .. நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் நிறைந்திடவும் ஷண்முகனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! 

முருகனுக்கு கிழமை .. நட்சத்திரம் .. திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன .. 
கிழமைகளில் - செவ்வாய் 
நட்சத்திரங்களில் - கிருத்திகை 
திதியில் - சஷ்டி .. ஆகியவை முருகனுக்கு உகந்தவை .. இந்நாட்களில் விரதமிருந்து முருகனை வழிபடுவது சகலதடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு .. 

கந்தசஷ்டி கவசம் .. கந்தகுரு கவசம் .. ஷண்முக கவசம் .. திருப்புகழ் .. கந்தர் கலிவெண்பா போன்றவற்றையும் பாராயணம் செய்தோ கேட்டோ கந்தனின் அருளைப் பூரணமாகப் பெறுவோமாக .. 

எங்கள் எண்ணம் .. சொல் .. செயலுக்கு எட்டாத பரம்பொருளே ! ஆறுமுகப்பெருமானே ! உனது திருவடிகளை சரணடையும் பாக்கியத்தைத் தந்து எம்மைக் காத்தருள்வாயாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SASHTI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " OM MURUGA "

SWAMI SARANAM...GURUVE SARANAM




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. STRENGTH .. AND .. HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும்
ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து பகவானின் திருவருளும் ..
அருட்கடாக்ஷ்மும் தங்களனைவருக்கும் கிடைக்கப்பெற்று 
குடும்பத்தில் சுபீட்சமும் .. நல்லாரோக்கியமும் .. நிலவிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும் .. அவனைவிட நம்மிடம் அதிகப்பரிவுடையது அவன்நாமமே ! திரௌபதிக்கு ஆடைசுரந்ததே உன்னாலன்றி வேறுயாரால் அது சாத்தியமாகும் ..? என்று கேட்டால் பகவான் சொல்கிறார் “ நானில்லை ! என் கோவிந்த நாமமே ! அவளை ரக்ஷித்தது என .. 

நாம் எழுந்திருக்கும்போது .. துயிலெழும்போது ..
ஹரிர் ஹரி ! ஹரிர் ஹரி ! என்று 7 முறை சொல்லவேண்டும் .. உரக்க சொல்லனுமா ..? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா..? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும்தான் .. மற்றவர்கள் கேட்கும்படி சொன்னால் அதைக்கேட்டபடி எழுந்திருப்பார்கள் .. பரோபரகரமாகவும் இருக்கும் ..

சொல்கின்ற அந்த நேரத்திலே மனசு அளவுகடந்த பக்தியிலே நிரம்பியிருக்கனும் .. “ சொல்லிப்பார்ப்போமே பலனிருக்கிறதாவென்று “ பரீட்சார்த்தமாகச் சொல்லக்கூடாது .. காரணம் அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை .. “ சர்வோத்தம்ஸ்ய கிருபையா “ சர்வ உத்தமமான பகவானுடைய நாமங்களை நம்மை உச்சரிக்கவைப்பதும் அவனுடைய கிருபைதான் .. கருணைதான் .. 

விஷ்ணு சகஸ்ரநாமத்தை யார் தினமும் கேட்கின்றனரோ .. இதனைக்கொண்டு ஆண்டவனைத் துதிக்கின்றனரோ .. அவர்கள் இம்மையிலும் .. மறுமையிலும் .. சிறிதும் கெடுதலை அடையமாட்டார்கள் .. 

உள்ளத்தூய்மையும் .. புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் புருஷோத்மனை ஆயிரம் நாமங்களால் துதிப்பவர்கள் .. நோயால் துன்புறுபவர்கள் அந்நோயிலிருந்து விடுபடுகின்றனர் .. ஆபத்தில் சிக்கியவன் மீள்கிறான் .. கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்துவிடுகிறான் .. 

சிரத்தையும் பக்தியும் கொண்டவனாக இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவன் .. பொறுமை .. செல்வம் .. மன உறுதி .. நினைவாற்றல் ..புகழ் இவற்றைப் பெறுவானாக .. 

நாமும் நாராயணாய ! நாராயணாய ! நாராயணாய எனச்சொல்வோமே ! பலனாயிரம் பெறுவோமே ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

SWAMIYE SARANAM...GURUVE SARANAM SARANAM


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. PEACE AND HAPPINESS .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையும் .. செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாழ்வும் .. தன்னிகரில்லாதளவு புகழும் .. 
மாபெரும் சக்தியையும் .. பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும் தந்தருளுமாறு வேண்டுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

செவ்வாய் என்பது சிவந்தவாய் என்பதின் சுருக்கம் .. இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு அதனால் ரிஷிகளால் அந்தக்காலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டது .. 

நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடும் பொழுது செவ்வாய்க்கிரகம் மற்றும் அதனை சம்மந்தப்பட்ட தெய்வங்களுக்கு பூஜைசெய்யப்படல் வேண்டும் .. 

முருகனை வணங்குவதால் நிலம் ..சம்மந்தப்பட்ட தொழிலில் வரும் பிரச்சினைகளை சீர்செய்வதோடு முருகன் மிகப்பெரிய அளவில் விரிவு செய்தருளுவான் .. 

சரவணமந்திராக்ஷ் ஸ்தோத்திரம் - 
பவாய பர்காய பவாத்மஜாய 
பஸ்மாய மாநாத்புர விக்ரஹாய 
பக்தேஷ்ட காமப்ரத கல்பகாய 
பகாரரூபாய நமோ குஹாய !! 

பொருள் -
மங்களவடிவினனும் .. பாவங்களைப் போக்குகிறவனும் .. விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் .. பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் .. ‘ ப ‘ என்ற ( சரவணபவ ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குமரப் பெருமானே ! நமஸ்காரம் ! எமை என்றும் காத்தருள்வாயாக !! 

முருகப்பெருமானைப் போற்றுவோம் ! வாழ்வில் சகலநலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று “ சங்கடஹர சதுர்த்தி விரதமும் “ அனுஷ்டிப்பதால் மாலையில் ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவரது சங்கடங்கள் யாவும் நீங்கி வாழ்வில் நிலையான நிம்மதியும் .. செல்வமும் .. தீராத உடல் உபாதைகளும் நீங்கப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ .. விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீம
ஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

இந்த கணேஷ காயத்ரி மந்திரத்தையும் .. விநாயகர் அகவலையும் பாராயணம் செய்து தியானித்தால் கூடுதல் பலன்கிட்டும் .. 

சிவபெருமானின் புதல்வனே ! ஓங்கார வடிவினனே ! 
பக்தர்களின் துயர்களைபவனே ! ஊழிக்காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே ! செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணை நிற்கும் ஆதிபரம் பொருளே ! உன்னை சரணடைந்து போற்றுகின்றோம் ! எம்மைக் காத்தருள்வாயாக !! 

மஹிமை பெற்ற விக்னவிநாயகரை நாமும் வாழ்த்தி வணங்கி வளம்பெறுவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL AND A VICTORIOUS MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE AND SHOWER YOU WITH .. BEST HEALTH .. WEALTH AND HAPPINESS ON THIS DIVINE CHATHURTI DAY .. " JAI GANESHA
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானை வழிபடுவது சாலச்சிறந்தது .. அன்றாடம் தன்பணியை பயன்கருதாது செய்துவரும் சூரியபகவானைத் துதித்து .. கல்வி .. வேள்விகளிலும் .. கலைகளிலும் சிறந்து விளங்கவும் .. சூரியனின் அருள் தங்களனைவருக்கும் சிறப்பான எதிர்காலத்தை அருளிடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

நவக்கிரக நாயகர்களிலே சூரியபகவானே அரசர் என்று அழைக்கப்படுகிறார் .. அவரின் அருளாசியின்றி எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதில்லை .. அவரின் ஒளிக்கதிரின் வீச்சின்றி எதுவுமே நடைபெறாது .. நமக்கு ஒளியையும் .. பிராணவாயுவையும் தருபவர் .. 

காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகி !
பூசனை உலகோர் போற்ற எங்கும் புசிப்போடு சுகத்தை நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த தேசிகா ! எமை ரட்சிப்பாய் ! செங்கதிரரோனே ! போற்றி ! போற்றி ! 

இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருள் அகற்றி 
அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறார் .. அதிகாரம் .. ஆட்சி .. ஆளுமை போன்றவற்றிற்கு அதிகாரம் உள்ளவர் இவரே ! சூரியனின் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது .. 

சூரியபகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! 
” ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் 
நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. PEACE .. AND PROSPERITY .. " JAI SURYA DEV "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து சகல கிரகதோஷங்களும் நீங்கி .. புத்துணர்வும் .. மகிழ்ச்சியும் பெற்றிட .. எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன்

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்ணியம்செய்து இருந்தால் தான் கிடைக்கும் .. சிவன் ஒருவரைப் பூஜைசெய்துவிட்டால் 
மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜைசெய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர் .. 

எவ்வாறு மரத்தின் அடியில் நீர்விடுவதால் மரங்கள் திருப்தியடைந்து மலர்களையும் .. பழங்களையும் .. தருகின்றனவோ அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர் என்று வாயு ஸம்ஹிதையில் 
தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது ..

”அசலனே ஆயினும் அச்சவை தன்னில் அசலையாம்
அம்மை எதிர் ஆடும் அசல உருவிலச் சக்தி ஒடுங்கிட ஓங்கும் அருணாசலம் என்றறி “
- அருணாசல நவமணி மாலை - 

பொருள் - இயல்பில் பரமேஸ்வரனும் அவர் சக்தி அம்பிகையும் சலனமற்றவர்களே ! ஆனால் தில்லையாகிய சிதம்பரத்தில் சலனமற்ற அம்பிகை 
( சக்தி ) முன் ஈசன் நடராஜனாக நடனம் செய்கிறான் .. திருவண்ணாமலையிலோ பரமேஸ்வரன் சலனமற்று அருணகிரி வடிவில் இருக்க சக்தியாகிய அம்பிகை ஈசனுள் ஒடுங்கி ஒன்றுபட்டு செயலற்று இருப்பதால் ஈசன் அருணையில் ஞான சொரூபியாய் ஒளியுடன் ஓங்கி நிற்கின்றான் .. 

விளக்கம் - நம் உள்ளமாகிய இதயகுகையிலிருந்து வெளிப்படும் மனம் .. புத்தி .. பிராணன் இவ்வனைத்தின் 
செயல்பாடுகளுக்கும் முளைவித்தாக உள்ள ஆணவம் 
( அகந்தை ) இவை அனைத்தும் சேர்ந்து ‘ மனம்’ என்று
சொல்லப்படும் சக்தி செயலற்று ஒடுங்கி இதயத்தில் ஒன்றுபட்டால் நம்முள் ஈசன் பரம ஞான உணர்வு ஒளியாக மேலோங்கி நிற்கும் .. 

“ சிவாய நமஹ “ என்று சொல்வோமே ! அபாயம் ஒருநாளும் இல்லை என்போமே ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS OF GODDESS ' MAA LAKSHMI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS .. BEST HEALTH & PROSPERITY .. " OM SHAKTHI OM " .. JAI MAA LAKSHMI .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று பாற்கடலரசனின் புத்ரியும் .. ஸ்ரீரங்கநாயகியும் .. தேவஸ்திரீகளனைவரையும் பணிப்பெண்களாய்க் கொண்டவளும் .. உலகுக்கெல்லாம் விளக்குபோன்றவளும் இந்திரன் .. பிரம்மா .. சிவன் ஆகியோரின் பெருமைக்குத் தன் அழகிய கடைக்கண் பார்வையைக் காரணமாக உடையவளும் .. மூவுலகையும் குடும்பமாக .. முந்தனுக்குப் பிரியமான அன்னை மஹாலக்ஷ்மியை நாமும் துதித்து .. அன்னையின் பேரரும் கடாக்ஷ்மும் .. சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோமாக ! ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! விஷ்ணு பத்னீ ச தீமஹி ! தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! அன்னை மஹாலக்ஷ்மியின் கடைக்கண்பார்வை எங்கெல்லாம் விழுகிறதோ ! அங்கெல்லாம் ஐஸ்வர்யங்களும் இதோ ! இதோ ! என்று வந்து சேர்கின்றன அதுபோல் தங்கள் இல்லம் நாடி .. ஓடோடி வந்து சேரும் அனைத்து செல்வங்களும் ! பாற்கடலில் உதித்து மஹாவிஷ்ணுவை மணாளனாக அடைந்த அந்த சக்தியையே நாம் மஹாலக்ஷ்மி என்கிறோம் .. லக்ஷீயம் என்றால் அடையாளம் என்று பொருள் .. இறைவன் இருக்கிறான் என்பதற்கு பகிரங்கமான அடையாளமாகவும் மகத்தான லக்ஷ்யமாகவும் விளங்குவதால் அன்னை மஹாலக்ஷ்மி என்ற பெயரைப் பெற்றாள் .. வேத ரூபினியும் .. ஜகன்மாதாவுமான அன்னையை தினந்தோறும் துதித்து சகல சம்பத்துகளையும் அடைவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் சுவாமியே சரணம் ....குருவே சரணம்..

SOME MEMORABLE PHOTOS OF GS VISIT TO RAMAKRISHNAN SON ARUN MARRIAGE......SWAMY SARANAM























GOOD MORNING DEAR FRIENDS .. CHITRA PAURNAMI IS THE TIME WHERE YOUR SINS CAN ALL BE CLEANSED BY OFFERING FOOD FOR THE POOR AND NEEDY PEOPLE .. MAY LORD CHITRAGUPTA PROTECT YOU FROM ALL BAD KARMA TOO .. " JAI CHITRAGUPTHAAYA NAMAHA " .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சித்ரா பௌர்ணமியாகிய இன்று சித்ரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் .. அது கடுகளவாக மாறும் .. அதுபோலவே இன்று நாம் செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி .. முக்கியமாக நோட்டுப்புத்தகம் .. பேனா .. பென்சில் .. முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு மென்மேலும் சிறக்கும் என்பது நம்பிக்கை .. சித்ரா பௌர்ணமியும் சித்ரகுப்தனும் - சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைத்திறமையால் அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தார் .. அந்த ஓவியம் சாதாரண ஓவியமாக இல்லாமல் நிஜகுழந்தைபோல் தத்ரூபமாக இருந்ததைக் கண்ட சிவபெருமான் பார்வதியிடம் நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறிக்கொண்டே தன்கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சுக்காற்றை அந்த ஓவியத்தின் மேல் பதிக்கவும் ஓவியக்குழந்தை உயிர்பெற்று சிரிக்க ஆரம்பித்தது .. தான் வரைந்த சித்திரக்குழந்தைக்கு சித்ரகுப்தன் என அன்னை பெயரிட்டாள் .. சித்திரத்திலிருந்து வந்தாலும் ரகசியத்தைக் காப்பவராக இருந்ததாலும் ( குப்தன் ரகசியத்தைக் காப்பவன் ) இப்பெயர் ஏற்பட்டது .. யமதர்ம ராஜன் இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும்போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும் தண்டனைகளையும் தரவேண்டும் என்பது ஈசனதும் விஷ்ணுபகவானதும் கட்டளை .. அதனை கண்டுபிடிப்பது சிரமம் என்பது யமதர்மராஜனின் கவலை .. அதனை நிவர்த்தி செய்தார் பிரம்மதேவன் .. சித்ரகுப்தனை அறிமுகப்படுத்தியதன் மூலம் .. சித்ரகுப்தனே நாம் செய்யும் பாவம் புண்ணியங்களது கணக்கு வழக்கை எழுதிவருகிறார் .. நாமும் பாவங்களைக் குறைத்து புண்ணியங்களை செய்து சித்ரகுப்தனை வணங்கி வர நாம் அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விமோசனம் பெறுவோமாக... “ ஓம் சித்ரகுப்தாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த
நாளுமாகும் .. “ ஓம் நமோ நாராயணாய “ என்ற மஹாமந்திரத்தை நாமும் ஜெபிப்போமாக .. வாழ்வில் துன்புறும் அனைவரும் அவரவர் துயர் நீங்கி தங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று சகலசௌபாக்கியங்களுடன் வாழ மனதார பிரார்த்திக்கின்றேன் ..
எந்நேரமும் நாராயணா ! நாராயணா ! என உச்சரிப்பதால் என்ன பயன்..? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம் .. //
சதா சர்வகாலமும் “ ஓம் நமோ நாராயணாய “ என்று சொல்லிவரும் நாரத மஹரிஷிக்கு தனது சந்தேகத்தினை தீர்க்குமுகமாக வைகுண்டம் சென்று பரந்தாமனிடம் வினவ .. அவரும் இதனை அனுபவப்பூர்வமாகவே விளக்கவேண்டும் .. அதுவரை சொல்வதை தட்டாது கேட்கவேண்டும் என்றார் .. நாரதரும் ஒத்துக்கொள்ளவே மஹாவிஷ்ணுவும் நாரதரை பூலோகத்திற்குபோய் ஒரு சிறுபுல்லிடம் தன்நாமத்தை கூறும்படி சொன்னார் ..
அதன்படி நாரதரும் செய்ய .. அப்போதுதான் முளைத்திருந்த அப்புல் அடுத்தகணம் கருகி கீழே சாய்ந்துவிடுகிறது .. நாரதரும் பகவானிடம் சென்று இதுவா உன் மஹிமை என்று கேட்டார் .. பரந்தாமனும் அதுபோகட்டும் இம்முறை ஒரு புழுவிடம் போய் என் நாமத்தைச் சொல் என்றார் .. அதுபோலவே சொல்ல என்ன கொடுமை அந்தபுழு துடிதுடித்து இறந்தது .. மீண்டும் வைகுண்டம் சென்று புல்லைப்போலவே இதுவும் மரணித்துவிட்டது இதுதானா உன் நாமத்தின் பெருமை ..? எனக்கே சற்று சந்தேகமாக இருக்கிறது என்று குமுறுகிறார் ..
சரி இந்தமுறை வேறொரு ஜீவனிடம் முயற்சித்து பாரேன் என்றார் .. முட்டையிலிருந்து பொரிந்து அப்போதுதான் வெளியே வந்த குருவிக்குஞ்சிடம் சென்று நாமத்தைக் கூறுமாறு பணிக்க நாரதரும் அவ்வாறே செய்ய அதுவும் உயிரை விட்டுவிடுகிறது ..
அடுத்து ஒரு கன்றுகுட்டி .. அதற்கும் அதேகதிதான் .. இப்படியாக புல் .. புழு .. பறவை .. விலங்கு என்று தானே கொன்று குவிக்கிறோமே என்கிற பீதி ஏற்படுகிறது நாரதருக்கு .. கடைசியாக ஒரேஒருமுறை பூலோகத்திற்குச் சென்று விதர்ப்ப நாட்டு மன்னனுக்கு இன்று பிறந்திருக்கும் குழந்தையிடம் சொல்லிப்பாரேன் என்கிறார் பகவான் ..
நாரதரோ அலறியடித்துக்கொண்டு பிரபோ ! இதுவரை நான் கூறியதெல்லாம் உயிரினங்களுக்கு ..அதனால் பிரச்சினையில்லை .. இது ராஜகுமாரன் .. அக்குழந்தைக்கு ஏதாவதென்றால் மன்னன் என்னை சும்மாவிடமாட்டார் .. கொன்றேவிடுவார் .. இந்தவிளையாட்டு போதும் என்றார் .. நாரதா ! நிபந்தனையை மீறினால் எப்படி என்று பகவானும் வினவ 
என்னை காத்தருளவேண்டும் என்று கூறிவிட்டு சென்று அக்குழந்தையின் காதில் .. நாராயணா ! நாராயணா ! நாராயணா ! என்று கூற .. அங்கு அனைவரும் ஆச்சர்யப்படும்படி அந்தக்குழந்தை வாய்திறந்து நாரதருக்கு நன்றி கூறி நாராயணனின் பெருமையை பேச ஆரம்பித்தது ..
நாரத மஹரிஷியே ! நான் போன பலபிறவிகளில் புழுவாகவும் .. பூச்சியாகவும் .. மற்ற ஜந்துக்களாகவும் பிறந்து அல்லல்பட்டு கொண்டிருந்தேன் .. எனது அதிர்ஷ்டம் நீர் எனது போன எல்லா பிறவிகளிலும் உடனே வந்து நாராயணனின் நாமத்தைக் கூறியதால் இம்மனிதப் பிறவியை அடைந்தேன் .. அதுமட்டுமல்ல பிறந்தவுடன் பேசும் சக்தியையும் பெற்றுவிட்டேன் .. நாராயணா என்ற நாமம் இல்லை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் பலகாலம் உழன்று அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டிருப்பேன் .. எனக்கு ஸ்ரீமன் நாராயணனை
அடைய வழிகாட்டியதற்கு நன்றி என்று கூறியது ..
நாராயணா நாமத்தின் மஹிமையை தவறாக புரிந்துகொண்டமைக்காக வெட்கப்பட்ட நாரதர் இறைவனின் கருணையை பின்னர் எண்ணி கண்ணீர்வடித்தார் .. நாராயணா ! என்னே உன் நாமத்தின் மஹிமை ! எனவியந்து மகிழ்ந்தார் ..
ஒருபுழுவே நாராயணனின் நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால் மனிதப்பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப்பாருங்கள் .. இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் அத்ற்கு நிச்சயம் பலனுண்டு .. நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் .. உள்ளத்தின்மூலம் இருக்கட்டும் .. தங்கள் பிரார்த்தனை என்றும் வீண்போகாது .. “ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " OM NAMO NAARAAYANAAYA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. துன்பங்களை போக்கி .. இன்பங்களை அருளும் ஈசனை இப்புனித பிரதோஷ நாளாகிய இன்று வழிபாடு செய்து வாழ்வில் வளம்பெறுவோமாக .. தோஷம் என்றால் குற்றமுடையது என்று பொருள் .. அதேநேரம் பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள்படும் .. எனவே குற்றமற்ற இந்தபொழுதில் இறைவனை வழிபடுவதால் தோஷங்கள் அனைத்தும் நீங்கப்பெறும் .. ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்கிறார் .. வளர்பிறையின் 13ம்நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்தல் நலம் .. நந்திதேவரின் இருகொம்புகளின் நடுவே ஈசனை தியானிப்பது சிறப்பாகும் .. பிரதோஷத்தின் சிறப்பையும் .. பயனையும் உரைக்கும் பாடல் --- பேரிடர் நீங்குமே ! பிணியாதாயினும் சாம்பலாகுமே ! மறைபோற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும் ! புவியுறை சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே ! பூதலத்தே நின்ற சிவனம்பலமெல்லாம் ஏகித் தொழுத பேறு பெற ப்ருஹந்நாயகியுறை தக்ஷிணமேரு தன்னை கைதொழுதக்கால் ! சிவனே! தரிசனம் தருவான் ! பொய்யல்ல ! தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே !! .. சிவனைப் போற்றுவோம் ! சிவ அபசாரம் நீங்கி சகலமங்களங்களும் தங்களனைவருக்கும் பெருகுவதாக! “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ! GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " PRADOSHAM " AND MAY LORD SHIVA FULFILL ALL YOUR WISHES AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL THE SINS AND OBSTACLES IN YOUR LIFE AND SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அனைத்திற்கும் மூலமாக விளங்கும் சிவபெருமானின் உச்சம் பெற்றநாள் திங்கட்கிழமையாகும் .. திங்கள் எனில் சந்திரனைக் குறிக்கும் .. சந்திரனை தலையில் சூடிய சிவன் சோமசுந்தரர் என்றழைக்கப்படுகிறார் .. சிவனைத் துதித்து தங்களனைவரது மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறந்திடவும் .. இன்றையநாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! கணவனும் மனைவியும் ஒற்றுமையுடனும் .. தீர்க்காயுளுடனும் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் .. இந்நாளில் தம்பதி சமேதராக சிவாலயம் சென்று வழிபட்டு வரவேண்டும் .. வாழ்வில் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை .. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து .. இனி அவ்வாறான தவறுசெய்யாமல் இருக்க உறுதிபூண்டால் அவர்களது பாவங்கள் அனைத்தும் களையப்படும் என்பது நம்பிக்கை .. சிவனைப் போற்றுவோம் ! பிரச்சினைகளை சமாளிக்கும் மனோதிடமும் .. செல்வச்செழிப்பும் பெற்றிடுவோமாக ! ” ஒம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..






GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED EKADASI AND MAY THE DIVINE BLESSINGS OF LORD VISHNU BRING YOU ETERNAL BLISS AND FULFILL ALL YOUR DESIRES ..
" OM NAMO NAARAAYANAAYA NAMAHA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மோட்சத்தை அளிக்கும் விரதமாகிய ஏகாதசி நன்னாளாகிய இன்று தங்களனைவரது விருப்பங்கள் யாவும் நிறைவேறவும் .. மனதில் மகிழ்ச்சி நிலவிடவும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
சித்திரைமாத வளர்பிறை ஏகாதசியை “ காமதா ஏகாதசி “ என்பர் .. இதனை அனுஷ்டிப்போர்க்கு தாம் விரும்பிய அனைத்துப் பேறும் கிடைக்கும் என்பர் .. நினைத்தகாரியம் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும் ..
இந்து தர்ம சாஸ்திரங்கள் .. புராணங்களில் ஏகாதசி விரதமஹிமை பற்றி சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது .. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும் .. தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும் .. ஒவ்வொரு மாதமும் .. அமாவாசை .. பௌர்ணமி நாட்களிலிருந்து 11ம் நாள் ஏகாதசி எனப்படுகிறது ..
வளர்பிறை ஏகாதசி - சுக்லபட்ச ஏகாதசி என்றும் .. 
தேய்பிறை ஏகாதசி - கிருஷ்ணபட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன ..
வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும் .. அதாவது பதினோராவது தினம் என்று பொருள் .. 
கர்ம இந்திரியங்கள் - 5 
ஞானேந்திரியங்கள் - 5 
இதனுடன் மனம் ஒன்று கூடினால் - 11 ஆகும் .. 
இந்த பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி இருப்பதே விரதம் .. இந்த 11 இந்திரியங்களால் தெரிந்தோ .. தெரியாமலோ செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால் அழிந்துவிடுவது உறுதி .. ஒவ்வொரு மாத ஏகாதசிக்கும் ஒவ்வொரு பலன்கிடைக்கும் என்பது ஐதீகம் ..
அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம் .. பாகவதம் .. ராமாயணம் போன்ற இறைத்திருவிளையாடல்கள் நூல்களையோ .. விஷ்ணு சகஸ்ரநாமம் .. நாலாயிரதிவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது .. பாராயணத்தால் பயனடைவதோடு முறையற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம் ..
ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம் - 
தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ ..
த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குருகேசவ ..
கருணாகரனை கண்விழித்துப் போற்றுவோம் ! கவலைகளை துரத்துவோம் ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..




14-04-16 THURSDAY
Vishu kani
VISHU KANI TAMIL / MALAYALAM NEW YEAR
Vishu is one of the important festivals of Kerala. It comes in the month of April usually on the 14th. According to the traditional Malayalam calendar, it is the 1st day of Malayalam month Medam which is the astronomical New Year. Traditional rituals are followed to bring in another year of prosperity. 
'Kani-Kanal' is the main event of the day. The night before Vishu, the mistress of the house prepares the Kani. In a big pot, coconuts, a gold ornament, a new cloth, fruits, cereals and Konna (cassia fistula) flower is kept. Behind the pot a mirror and the garlanded deity of Krishna is kept. Around the deity, lighted lamps will be arranged. Early morning on the Vishu day, the master of the house sees the 'Kani' and then the rest of the family follows. Children are brought blind folded from their beds to where the Kani is kept. The elder in the family give money to the youngsters (Vishu Kaineetam) and bless them. It is believed that the Kani we see and its good tidings will stay with you till the year ends. In Kerala, the Kani in the temples of Guruvayur, Ambalapuzha and Sabarimala are famous. Special pujas are held in these temples where the people go to worship and pray for a prosperous New Year. 
விஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது பிசு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் - மே) மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "சமம்" என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது.
விஷு\ (மேடத்தின் முதல் நாள் ) ஆருட புத்தாண்டாக கொண்டாடப்படினும் அதிகாரப்பூர்வமாக சிங்க மாதத்தின் (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்நாளே மலையாள புத்தாண்டு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் இவர்களின் தெய்வமாகிய விஷுக்கணி க்கு படையல்கள் அளிக்கப்படுகின்றது. அவர்களது பூஜை அறையில் புனிதமாக, அரிசி, புதிய துணி, வெள்ளரிக்காய், வெற்றிலை, பாக்கு, உலோகக் கண்ணாடி, மஞ்சள் நிற கொன்றை மலர் (காசியா பிஸ்டுலா ), தெய்வீகமான புத்தகங்கள் மற்றும் காசுகளை வெங்கல உருளி யில் வைத்துப் படைக்கின்றனர். வெண்கல நிலா விளக்கை யும் ஏற்றி அருகே வைத்திருப்பர். இவ்வெல்லாவற்றையும் முதல் நாளே ஏற்பாடு செய்து வைத்து விடுவர். விஷூ அன்று விடியற்காலையில் எழுந்து கண்களை திறக்காமல் நேரே பூஜை அறைக்குச் சென்று விஷூக்கனியின் முன்னரே விழிக்கின்றனர். இந்நாள் இவர்களின் புத்தாண்டின் துவக்கமாகையால் புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர் இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர். அன்றைய தினம் பக்தர்கள் காலையில் சபரிமலை ஐயப்பன், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய கோயில்களை அடைந்து "விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர்.

 

Swamiye Saranam..Guruve Saranam.,.,.






அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் .. புத்துணர்வும் பெற்றிட சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

“ சிவாய நமஹ “ என்று சிந்திப்போர்க்கு .. அபாயம் ஒருபோதும் இல்லை .. உபாயம் ஒன்றே ஏற்படும் என்று நம்முன்னோர்கள் சொல்லிவைத்தனர் .. 

நமசிவாய ! என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும் .. சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும் .. 

சிவலிங்கத்திற்கு வலைகட்டி பாதுகாத்த சிலந்தி .. மறுபிறவியில் கோட்செங்கட்சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பலமாடக்கோயில்களைக் கட்டி சிவதிருப்பணி செய்து புகழ் பெற்றான் ..

சிவன்கோவில் விளக்கு எரிய திரியைத் தூண்டிவிட்ட எலி .. மறுபிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தான் .. 

சிவன் நாமத்திற்கு அப்படியொரு மஹிமை ! சிவ ! சிவ !
என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும் .. பாவங்கள் நீங்கும் .. மனம் தூய்மையடையும் .. 

சிவனைத் துதித்து அவனருளால் ..அவன் அருள் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD SHIVA SHOWER HIS BENIGN BLESSINGS ON YOU AND MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE AND STRENGTH .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

SWAMI SARANAM..GURUVE SARANAM




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் அனைத்து தெலுங்கு அன்புள்ளங்களுக்கும் எங்கள் இனிய ‘ யுகாதித் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக 
யுகாதித் திருநாள் புதிய வாழ்க்கையின் ஆரம்பமாகக் கொண்டாடப்படுகிறது .. “ யுகாதி “ என்றால் புதியபிறப்பு 
( யுகம் + ஆதி - யுகாதி - ) யுகத்தின் தொடக்கம் .. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் நலமாகவும் .. ஒற்றுமை உணர்வை தூண்டுவதாகவும் அமையவேண்டும் என்னும் நோக்கத்தில் சிறப்புப் பெறுகிறது .. 

யுகாதி அன்று ராமாயணக்கதை ஒன்றையும் உதாரணமாகச் சொல்வார்கள் .. ராமர் காட்டிற்கு புறப்பட்டார் .. மகனின் பிரிவைத்தாங்காத தாய் கௌசல்யா அவருடன் காட்டுக்கு வருவதாக அடம்பிடித்தாள் .. 

” அம்மா ! கணவருக்கு பணிவிடை செய்வதே மணைவிக்குரிய தர்மம் .. நீங்கள் அப்பாவைக் கவனித்துக்கொண்டு இங்கேயே இருங்கள் .. “ என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி தாயை சமாதானப்படுத்தினார் ராமர் .. 

இதையடுத்து சீதையும் அவருடன் வருவதாக கிளம்பியபோது .. “ சீதா நீ அங்கே வராதே ! கல்லிலும் .. முள்ளிளும் சிரமப்படுவாய் வேண்டாம் என்றார் .. “ 

“ ஸ்ரீராமா ! என்ன நியாயம் இது ..? உங்கள் அம்மா உங்களுடன் கிளம்பியபோது கணவனைக் காப்பது மனைவியின் கடமை என்று தர்மத்தைப் போதித்தீர்கள் ..
அதே தர்மம்தானே எனக்கும் பொருந்தும் ..? அம்மாவுக்கு ஒருவிதி .. மனைவிக்கு ஒரு விதியா ..? நானும் உங்களுக்கு சேவை செய்யவேண்டுமல்லவா .. நீங்கள் இருக்குமிடமே எனக்கு அயோத்தி .. நின்பிரிவினும் சுடுமோ பெரும்காடு ..! அதனால் உங்களோடு வருகிறேன் என்று சாதுர்யமாக பதிலளித்தாள் .. ராமரால் பேசமுடியவில்லை .. மனைவியை அழைத்துச் செல்ல சம்மதித்தார் .. 

கணவனுக்காக மனைவி .. மனைவிக்காக கணவன் .. குடும்பத்துக்காக பிள்ளைகள் .. என்ற ஒற்றுமை தத்துவத்தை இந்தக்கதை போதிக்கிறது .. யுகாதியன்று இதுபோல் ராமாயண சம்பவங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் .. குடும்ப ஒற்றுமை ஓங்க யுகாதி நன்னாளில் சபதமேற்கும் நன்னாளாகும் .. 
“ ஜெய் சீதாராம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்..” 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY AND A PROSPEROUS UGADI FESTIVAL .. MAY LORD SITHARAM SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. PROSPERITY AND GOOD LUCK TOO .. " JAI SITHARAM " ..