அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த
நாளுமாகும் .. “ ஓம் நமோ நாராயணாய “ என்ற மஹாமந்திரத்தை நாமும் ஜெபிப்போமாக .. வாழ்வில் துன்புறும் அனைவரும் அவரவர் துயர் நீங்கி தங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று சகலசௌபாக்கியங்களுடன் வாழ மனதார பிரார்த்திக்கின்றேன் ..
எந்நேரமும் நாராயணா ! நாராயணா ! என உச்சரிப்பதால் என்ன பயன்..? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம் .. //
சதா சர்வகாலமும் “ ஓம் நமோ நாராயணாய “ என்று சொல்லிவரும் நாரத மஹரிஷிக்கு தனது சந்தேகத்தினை தீர்க்குமுகமாக வைகுண்டம் சென்று பரந்தாமனிடம் வினவ .. அவரும் இதனை அனுபவப்பூர்வமாகவே விளக்கவேண்டும் .. அதுவரை சொல்வதை தட்டாது கேட்கவேண்டும் என்றார் .. நாரதரும் ஒத்துக்கொள்ளவே மஹாவிஷ்ணுவும் நாரதரை பூலோகத்திற்குபோய் ஒரு சிறுபுல்லிடம் தன்நாமத்தை கூறும்படி சொன்னார் ..
அதன்படி நாரதரும் செய்ய .. அப்போதுதான் முளைத்திருந்த அப்புல் அடுத்தகணம் கருகி கீழே சாய்ந்துவிடுகிறது .. நாரதரும் பகவானிடம் சென்று இதுவா உன் மஹிமை என்று கேட்டார் .. பரந்தாமனும் அதுபோகட்டும் இம்முறை ஒரு புழுவிடம் போய் என் நாமத்தைச் சொல் என்றார் .. அதுபோலவே சொல்ல என்ன கொடுமை அந்தபுழு துடிதுடித்து இறந்தது .. மீண்டும் வைகுண்டம் சென்று புல்லைப்போலவே இதுவும் மரணித்துவிட்டது இதுதானா உன் நாமத்தின் பெருமை ..? எனக்கே சற்று சந்தேகமாக இருக்கிறது என்று குமுறுகிறார் ..
சரி இந்தமுறை வேறொரு ஜீவனிடம் முயற்சித்து பாரேன் என்றார் .. முட்டையிலிருந்து பொரிந்து அப்போதுதான் வெளியே வந்த குருவிக்குஞ்சிடம் சென்று நாமத்தைக் கூறுமாறு பணிக்க நாரதரும் அவ்வாறே செய்ய அதுவும் உயிரை விட்டுவிடுகிறது ..
அடுத்து ஒரு கன்றுகுட்டி .. அதற்கும் அதேகதிதான் .. இப்படியாக புல் .. புழு .. பறவை .. விலங்கு என்று தானே கொன்று குவிக்கிறோமே என்கிற பீதி ஏற்படுகிறது நாரதருக்கு .. கடைசியாக ஒரேஒருமுறை பூலோகத்திற்குச் சென்று விதர்ப்ப நாட்டு மன்னனுக்கு இன்று பிறந்திருக்கும் குழந்தையிடம் சொல்லிப்பாரேன் என்கிறார் பகவான் ..
நாரதரோ அலறியடித்துக்கொண்டு பிரபோ ! இதுவரை நான் கூறியதெல்லாம் உயிரினங்களுக்கு ..அதனால் பிரச்சினையில்லை .. இது ராஜகுமாரன் .. அக்குழந்தைக்கு ஏதாவதென்றால் மன்னன் என்னை சும்மாவிடமாட்டார் .. கொன்றேவிடுவார் .. இந்தவிளையாட்டு போதும் என்றார் .. நாரதா ! நிபந்தனையை மீறினால் எப்படி என்று பகவானும் வினவ 
என்னை காத்தருளவேண்டும் என்று கூறிவிட்டு சென்று அக்குழந்தையின் காதில் .. நாராயணா ! நாராயணா ! நாராயணா ! என்று கூற .. அங்கு அனைவரும் ஆச்சர்யப்படும்படி அந்தக்குழந்தை வாய்திறந்து நாரதருக்கு நன்றி கூறி நாராயணனின் பெருமையை பேச ஆரம்பித்தது ..
நாரத மஹரிஷியே ! நான் போன பலபிறவிகளில் புழுவாகவும் .. பூச்சியாகவும் .. மற்ற ஜந்துக்களாகவும் பிறந்து அல்லல்பட்டு கொண்டிருந்தேன் .. எனது அதிர்ஷ்டம் நீர் எனது போன எல்லா பிறவிகளிலும் உடனே வந்து நாராயணனின் நாமத்தைக் கூறியதால் இம்மனிதப் பிறவியை அடைந்தேன் .. அதுமட்டுமல்ல பிறந்தவுடன் பேசும் சக்தியையும் பெற்றுவிட்டேன் .. நாராயணா என்ற நாமம் இல்லை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் பலகாலம் உழன்று அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டிருப்பேன் .. எனக்கு ஸ்ரீமன் நாராயணனை
அடைய வழிகாட்டியதற்கு நன்றி என்று கூறியது ..
நாராயணா நாமத்தின் மஹிமையை தவறாக புரிந்துகொண்டமைக்காக வெட்கப்பட்ட நாரதர் இறைவனின் கருணையை பின்னர் எண்ணி கண்ணீர்வடித்தார் .. நாராயணா ! என்னே உன் நாமத்தின் மஹிமை ! எனவியந்து மகிழ்ந்தார் ..
ஒருபுழுவே நாராயணனின் நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால் மனிதப்பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப்பாருங்கள் .. இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் அத்ற்கு நிச்சயம் பலனுண்டு .. நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் .. உள்ளத்தின்மூலம் இருக்கட்டும் .. தங்கள் பிரார்த்தனை என்றும் வீண்போகாது .. “ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " OM NAMO NAARAAYANAAYA "

No comments:

Post a Comment