PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE PURATTAASI 1ST SATURDAY .. MAY LORD SHANI DEV PROTECT YOU FROM ALL EVIL FORCES & BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. PLEASE DO AVOID ANY ARGUMENTS DURING THIS SHANI DESA (PERIOD) WORK PLACE OR SIGNING DOCUMENTS & WHILE DRIVING .. STAY BLESSED " JAI SHREE SHANI DEV "

நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம் “
பொருள் - மைபோன்று கருமை நிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே ! எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே ! சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புரட்டாசி மாதத்தின் முதலாம் சனிக்கிழமையாகிய இன்று அனைத்து கிரகதோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெற்று சுபீட்சமான வாழ்வுதனைப் பெற்றிட சனீஸ்வரபகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் காகத்வஜாய வித்மஹே !
கட்கஹஸ்தாய தீமஹி !
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத் !!
சனீஸ்வரபகவான் அவரவர் வினைக்கேற்ப தவறு செய்தவர்களை மட்டுமே தண்டிப்பார் .. முன் ஜென்ம வினைக்கேற்ப இந்தப் பிறவியில் ஒருவரின் ராசிக்கட்டத்தில் அமர்கிறார் சனிபகவான் .. நீதிதவறாதவர் .. இவரது தினமான புரட்டாசிச் சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்ரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் .. துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும் ..
ஏழரைச்சனி ஒருவருடைய வாழ்வில் முதல்முறையாக வரும்பொழுத் அவர் ..பள்ளி .. கல்லூரியில் படிக்கும் காலமேயாகும் .. அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும் .. பரீட்சை மண்டபத்திற்குள் போனதும் படித்தது மறந்துபோகும் சோம்பல்வரும் .. எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும் .. தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும் ..
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தோஷ நட்சத்திரமுள்ளவர்கள் சிவாலயம் சென்று எள்ளை கருப்புத் துணியில் சிறுபொட்டலமாகக்கட்டி மண்சிட்டியில் வைத்து நல்லெண்ணை ஊற்றி அதனை சனீஸ்வரபகவானை 9முறை சுற்றி வலம்வந்தபின் எரிக்க தோஷங்கள் அகலும் ..
“ சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை ! கெடுப்பவனுமில்லை ! சனிகொடுத்தால் அதை யாராலும் தடுக்கவும் முடியாது “ என்பது ஜோதிடக்கூற்று ..
“ ஓம் சனீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, text

SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " RADHA ASHTAMI " .. THE BIRTH OF SHRI RADHARANI .. RADHAJI BELIEVED TO BE THE INCARNATION OF GODDESS LAKSHMI ..RADHARANI IS CONSIDERED AS THE GREATEST EXAMPLE OF IMMORAL LOVE & TRUE DEVOTION .. THE LOVE OF LORD KRISHNA & RADHA IS REGARDED AS THE MOST SOULFUL & PIOUS LOVE WHICH HAS EVER TAKEN PLACE BETWEEN ANY TWO PEOPLE .. BOTH OF THEM ARE CONSIDERED AS ONE SOUL & THEREFORE LORD KIRISHNA AMALGAMATES IN RADHARANI .. THE DEVOTEES WHO OFFER PRAYERS & WORSHIP RADHARANI ARE BESTOWED WITH THE BLESSINGS OF GODDESS LAKSHMI & LORD VISHNU .. STAY BLESSED .. " JAI SHREE RADHAKRISHNA "

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ராதாஷ்டமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! “ ராதாஷ்டமி “ என்றால் ஸ்ரீமதி ராதாராணியின் அவதாரத் திருநாளாகும் .. இப்புண்ணிய நாளில் ராதா கிருஷ்ணரை நினைத்து பக்தி வெள்ளத்தில் அமிழ்வோம் !
ஓம் ராதிகாயை ச வித்மஹே !
காந்தா விகாயச தீமஹி !
தந்நோ ராதா ப்ரசோதயாத் !!
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் - கோகுலாஷ்டமி என்றழைப்பதுபோல .. ஸ்ரீராதாராணி அவதரித்த திருநாள் “ ஸ்ரீராதாஷ்டமி “ ..என்று அழைக்கப்படுகிறது .. கண்ணன் ஆவணி அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் மதுரா சிறைச்சாலையில் வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார் .. அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில் விசாக நட்சத்திரத்தில் வ்ருஷபானு - கீர்த்திதா தம்பதியருக்கு பர்ஸான என்னுமிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித்தாள் ..
ராதிகா கண்ணனின் ஆத்மா .. கண்ணன் ராதிகாவை தனது ஆத்ம அனுபூதியில் அமிழ்த்தியுள்ளனர் .. எனவே கண்ணனுக்கு “ ஆத்மராமன் “ என்று பெயர் என ஸ்காந்த புராணத்தில் உள்ளது .. கண்ணன் சர்க்கரை என்றால் .. ராதை இனிப்பு .. கண்ணன் தீபமென்றால் .. ராதை ஒளி .. கண்ணன் சந்தனமென்றால் ..
ராதை குளிர்ச்சி .. கண்ணன் மலரென்றால் ..
ராதை மணம் ..
கண்ணனையே நினைத்தால் ராதை கிடைப்பாள் .. அதாவது மனதில் நிறைவு உண்டாகும் .. முக்தி கிடைக்கும் .. “ ராதாகிருஷ்ணன் “ என்று சொல்லும் ஒருவார்த்தையால் மனம் கிருஷ்ணனிடம் ஈர்க்கப்படுவதோடு அல்லாமல் ராதையால் முக்தியும் கிடைக்கும் .. ராதை - ஜீவாத்மா ..
கண்ணன் - பரமாத்மா !
ராதாராணி அவதார மகிமை -
ராதாராணி அவதரித்த விதம்பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது .. யமுனைநதியில் தாமரை மலரில் அவதரித்தார் .. யமுனை நதியில் ஓர் தாமரைமலரில் தங்க ஒளிவீசுவதுபோன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதைக்கண்ட மன்னர் வ்ருஷபானுமுன் பிரம்மதேவன் காட்சியளித்து .. நீ தரிசிக்கும் இந்தக்குழந்தை சாதாரண குழந்தை அல்ல .. லக்ஷ்மிதேவியின் அமசம் ஆவார் .. மிகக்கவனமாக வளர்த்துவா என ஆசீர்வதித்தார் ..
ராதாராணியோ பிறந்ததிலிருந்து யாரையும் தனது கண்கொண்டு பார்க்கவில்லை .. இதனை மஹரிஷி நாரதரிடம் கூறி வருத்தப்பட .. கவலைப்படவேண்டாம் இந்த தெய்வீகக் குழந்தையின் பிறப்பிற்கும் ஒருவிழா நடத்துங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார் மன்னரும் விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட .. அங்கு தனது நண்பர்கள் .. உறவினர்கள் உட்பட ஸ்ரீகிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜவும் .. குழந்தைகள் கிருஷ்ணர் பலராமனுடனும் விழாவிற்கு வந்திருந்தனர் ..
அப்போதுதான் சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து ராதாராணியின் தொட்டில் அருகே சென்று நின்றதும்தான் ராதாராணி உடனே தன் கண்களைத் திறந்து முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள் .. அவரது பார்வையும் .. மகிழ்ச்சியும் சிரிப்பும் கண்டு குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின ..
கிருஷ்ணர்மீது ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும் .. தூயபக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர வேறுயாரையும் முதலில் தரிசிக்கக்கூடாது என்று ராதாராணி உறுதி எடுத்திருந்ததாலும் இந்த தெய்வீகத் திருவிளையாடல் நடந்தேறியது ..
Image may contain: 3 people
அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுக்கரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல் ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின்மேல் நழுவி விழுந்தது .. இப்படியாக கிருஷ்ணரும் தன் அன்பை ராதாராணிக்குத் தெரிவித்தார் ..
ஆயிரக்கணக்கான வருடங்கள் தவங்கள் செய்தாலும்கூட கிருஷ்ணர் ராதாராணியின் தெய்வீக அன்பைப் புரிந்துக்கொள்ள இயலாது .. தூயபக்தர் ஒருவரின் கருணையால் மட்டுமே ஸ்ரீஸ்ரீராதாகிருஷ்ணரின் புகழை உணர இயலும் ..
இன்றைய திருநாளில் ராதாராணியின் திருப்பாத தரிசனமே விசேஷம் .. ராதாஷ்டமி அன்று மட்டுமேஅன்னையின் திருப்பாதங்களை தரிசிக்கமுடியும் ..
ஸ்ரீமதி ராதா ராணியே ! உங்களை வணங்குகின்றோம் ஆன்மீக குருவிற்கும் .. உங்களுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக ! என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து பகவத்சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால் .. ஜடவுலகின் பிறப்பு .. இறப்பு .. முதுமை .. நோய் ஆகிய துன்பங்களில் இருந்து விடுபட்டு ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை ..
“ ஜெய்ஸ்ரீராதாகிருஷ்ணா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE " PANJAMI THITHI " TOO .. MAY GODDESS MAA LAKSHMI BRING YOU COUNTLESS BLESSINGS & ILLUMINATE YOUR LIFE WITH GOOD HEALTH WEALTH & HAPPINESS .. " JAI MATA DI "

” மந்திரம் உரைத்தாற் போதும் மலரடி தொழுதால் போதும் மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும் இந்திரப்பதவி கூடும் இகத்திலும் பரங்கொண்டோடும் இணையனு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஆவணிமாத வளர்பிறை பஞ்சமித்திதியை ”மஹாலக்ஷ்மி பஞ்சமி “ என்றழைப்பார்கள் .. இன்றுமுதல் நான்கு நாட்களுக்கு விரதம் இருப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் செல்வமும் .. செல்வாக்கும் தந்தருள்வாளாக !
ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணுபத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
பக்தர்களின் மனக்குறைகளை நீக்கும் அதிர்ஷ்ட தேவதையாக விளங்குபவள் அன்னை மஹாலக்ஷ்மி யாக - சாலைகளிலும் .. எந்த ஆலய குடமுழுக்கு விழாவின்போதும் .. வீட்டின் சகலபூஜைகளிலும் லக்ஷ்மிவழிபாட்டிற்கென ஓர் தனி இடம் உண்டு ..
அஷ்ட ஐஸ்வர்யங்கள் எனப்படுவது யாதெனில் - செல்வம் .. ஞானம் .. உணவு .. மனவுறுதி ..புகழ் .. வீரம் நல்ல புதல்வர்கள் .. விரும்பியதை விரைவாக முடிக்கும் ஆற்றல் .. இவற்றை அடைவதற்கு அன்னை மஹாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை ஒன்று மட்டுமே போதுமானது ..
பூஜிக்கத்தகுந்த மஹாபாக்கியம் உள்ளவர்களாகவும் தூய்மை உள்ளவர்களாகவும் விளங்குபவர்கள் நம் இல்லப்பெண்மணிகள்தான் .. இவர்கள் கிரகலக்ஷ்மியாகத் திகழ்பவர்கள் .. ஆகவே இல்லப்பெண்மணிகளை தீயச்சொல்கூறி திட்டுவதோ அல்லது அப்பெண்கள் பிறரை திட்டுவதோ கூடாது .. பக்தியுடன் தெய்வீகமாக பெண்கள் திகழும் இல்லத்தில் திருமகள் நிரந்திரமாகக் குடிகொண்டு வசிப்பாள் .. தினமும் காலையிலும் மாலை இருவேளைகளிலும் விளக்கேற்றி வழிபடுவதாலும் நம் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும் .. இல்லங்களில் செல்வம் சேரும் ..
குங்குமம் லக்ஷ்மிகடாக்ஷ்ம்மிக்கது .. பெண்கள் குங்குமம் இடுவதால் மஹாலக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள் .. குங்குமத்தை மோதிரவிரலால்தான் இடவேண்டும் .. சிவப்புநிற குங்குமமே புனிதமானது .. மாங்கல்யம் .. நெற்றி .. தலை உச்சிவகிட்டின் ஆரம்பம் இம்மூன்று இடங்களிலும் ஸ்ரீலக்ஷ்மிதேவி உறைகின்றாள் ..
மஹாலக்ஷ்மியைப் போற்றும் யாவரும் அனைத்திலும் வெற்றி பெறுபவர்களாகவும் .. ராஜ்யங்களை அடைந்தவர்களாகவும் இருப்பார்கள் .. அன்னையைப் போற்றுவோம் சகல நலன்களையும் பெற்றிடுவோம் !
“ ஓம் சக்தி ஓம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, smiling

GOOD MORNING DEAR FRIENDS ! WISH YOU ALL A BLESSED & A DIVINE " GANESH CHATHURTI " .. MAY LORD GANESHA SHOWER YOU WITH ABUNDANT GOOD LUCK & MAY HE SLWAYS BESTOW YOU WITH HIS DIVINE BLESSINGS TOO .. " JAI SHREE GANESHA " - GANAPATHI BAPPA MORAYA -

” வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ விநாயகர் சதுர்த்தி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! உலகத் தொல்லைகள் பிறவித் தொல்லைகள் போகவும் .. செல்வமும் .. கல்வியும் .. கருணையும் வந்துசேரவும் கணபதியைக் கைதொழுவோமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
இன்று நம் முதல்வன் விநாயகருக்கு பிறந்தநாள் ! விநாயகர் அவதரித்த நாளான ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தித் திதியை
“விநாயக சதுர்த்தி “ எனப் போற்றுவர் ..
நான்கு வேதங்களும் .. பதினெட்டுப் புராணங்களும் .. இரண்டு இதிகாசங்களும் போற்றும் முழுமுதற் கடவுள் விநாயகரே ! நமது விருப்பங்கள் ஈடேறத் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமைமிக்க விசேஷ விரதம் ஆவணிமாத விநாயகர் சதுர்த்தியாகும் ..
“ காணாபத்யம் “ என்னும் கணபதி வழிபாடு அறுவகைச் சமயங்களில் முதலாவது .. இந்துக்கள் .. சமணர்கள் .. பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள் .. உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது .. “ தனது அடிவழிபடும் அவர் இடர் கடிகணபதி” என்று திருஞானசம்பந்தர் துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார் .. முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமையும் ..
ஐந்துகரங்களும் .. யானைமுகமுகமும் .. சந்திரனைப்போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக்கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும் .. நலங்கள் பெருகும் என்று 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார் ..
விநாயக சதுர்த்தியாகிய இன்று மனம் .. வாக்கு .. காயத்தால் தூய்மையாய் இருந்து தானதருமங்கள் செய்து .. இறைவனை இடைவிடாது நினைத்திருந்து வீடுகளிலும் .. ஆலயங்களிலும் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொள்வதோடு இறைவனை சிந்தித்திருப்பது சிறப்பு ..
“ மங்களமூர்த்தி மகாராஜா ! அடுத்தவருடமும் வா ராஜா “
வேழமுகத்தானைப் போற்றுவோம் ! சகல செயற்பாடுகளிலும் வெற்றி பெறுவோம் !
” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லௌம் கம் கணபதயே வரத சர்வஜனமேய வஸமாயை ஸ்வாஹா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
Image may contain: 2 people