PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM...GURUVE SARANAM SARANAM./....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
மார்கழிமாத சஷ்டித் திதியும் .. வருட இறுதிநாளுமாகிய இன்று
தங்களனைவருக்கும் கலியுகவரதனாகிய கந்தப்பெருமான் 
அனைத்துத் தடைகளையும் நீக்கி .. வாழ்க்கையில் வெற்றியையும் .. வசந்தத்தையும் .. நல்லாரோக்கியத்தையும்
தந்தருளும்படி இருகரம்கூப்பி இறைஞ்சுகின்றேன் .. 


ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம் .. இகம் .. பரம் .. வீடுபேறு .. இந்தமூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகனே ! அதனால் அப்பொருளை மூன்று உகரங்களுடன் கூடிய “ முருகு “ என்ற சொல்லையுடைய தனிப்பெருந்தெய்வமாக விளங்குகின்றான் .. 

இப்பிறவிக்குத் தேவையான பொருட்செல்வத்தையும் .. மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிருகரங்களாலும் வாரிவழங்கும் வள்ளல் முருகனே ! 
“ முன்செய்த பழிக்குத்துணை முருகா “ என்னும் நாமங்கள் முருகனுக்கு உண்டு என்பார் அருணகிரிநாதர் .. அதனால்
முருகநாமத்தைச் சொன்னால் முன்வினைப் பாவம் நீங்கி 
புண்ணியம் சேரும் .. 

ஞானவேல் தாங்கி .. சேவற்கொடியில் .. மயில்வாகனத்தில் வலம்வரும் முருகப்பெருமானை நம்மனவாகனத்தில் ஏற்றிவைப்போம் ! பதினாறு பேறுகளைத் தன் பன்னிரெண்டு கரங்களாலும் வாரிவழங்குவான் வடிவேலன் .. 

“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA 
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS

" OM MURUGA "

SWAMIYE SARANAM IYYAPPA..PANVEL BALAGANE SARANAM SARANAM...GURUVE SARANAM..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
மார்கழிமாத தேய்பிறை பஞ்சமித் திதியாகிய இன்று ..
அகிலத்திற்கே அன்னையாகிய பார்வதிதேவியின் அம்சமான
“ அன்னபூரணியை “ வழிபடும் நாளாகும் ..
அன்னம் என்பது உணவையும் .. பூரணம் என்பது முழுமையையும் குறிக்கும் .. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை ஈஸ்வரியே ! உலகின் பசிபோக்குபவள் ! வெறும் வயிற்றுபசி அல்ல .. ஒவ்வொரு மனிதரின் ஞானப்பசியையும்
போக்க கருணை உருவத்துடன் காசியில் எழுந்தருளியிருக்கிறாள் ..
“ இரையைத்தேடுவதோடு .. இறையையும் தேடு “ என்பார்கள்
மனிதன் உயிர்வாழ அடிப்படையானது உணவு .. அந்த உணவினைத் தரும் ஒப்பற்ற கடவுள் அன்னபூரணி .. அவளது மகிமை ஒப்பற்றது ..
காசி ( வாரணாசி ) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறாள் .. 
கா - என்பது காரணத்தையும் ..
ச - என்பது அமைதியையும் ..
இ - என்பது உடலையும் குறிக்கும் .. எனவே இந்நகரம் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர் ..
ஆதிசங்கரர் அன்னபூரணியைத் துதித்தது - 
நித்யானந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ !
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ் மஹேஸ்வரி !
ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரி !
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ !
பொருள் - 
அனுதினமும் ஆனந்தம் அளிப்பவளே ! அபயகரங்கள் உடையவளே ! அழகின் ரத்னக்கடலே ! எம்பாவத் தொகுப்பை 
நாசம் செய்பவளே ! காட்சிதந்து அருளும் மஹேஸ்வரியே !
மலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே ! காசிபுரத்து நாயகியே ! பக்தர்பால் கருணைகாட்டுபவளே ! அன்னையே ! அன்னபூரணி !
எமக்கு பிக்க்ஷையிட்டு அருள்வாய் !!
இந்துமரபுக் கதைகளின்படி - 
சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம் உலகம் மாயை என்றும் .. இம்மாயையில் உணவும் ஒருபகுதி எனக்கூற உணவு உற்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார் .. இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி)
உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார் ..
பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது .. உலகமே வெறுமையானது .. எங்குமே உணவின்றி எல்லோரும் பசியால்வாடினர் .. மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார் .. உடனே தன் உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன் “ இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் .. மாயையல்ல என்றும் அறிந்துகொண்டேன் ” என்று கூறுகிறார் .. இதைக்கேட்டு மகிழ்ந்த அன்னையும் தன்கையால் உணவுவழங்கி மகிழ்ந்தார்
அப்போதிலிருந்து பார்வதி நல்வாழ்வுக்கான கடவுளாக வணங்கப்படுகிறார் .. கையில் தங்கக்கரண்டியும் உணவுப்பாத்திரமும் கொண்டுள்ளவராக வர்ணிக்கப்படுகிறார்
அன்னையைப்போற்றுவோம் ! தங்கள் இல்லங்களிலும் செல்வமும் .. அன்னமும் பெருகிட அன்னை அருள்புரிவாளாக 
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE PANJAMI DAY OF GODDESS ANNAPURNA .. ANNAPURNA IS AN INCARNATION OF THE HINDU GODDESS PARVATI THE WIFE OF LORD SHIVA .. AS SUCH AS ANNAPURNA ALSO SYMBOLIZES THE DIVINE ASPECT OF NOURISHING CARE .. THE TEMPLE ART IN INDIA OFTEN DEPICTS LORD SHIVA WITH HIS BEGGING BOWL (SKULL) ASKING ANNAPURNA TO PROVIDE HIM FOOD .. THAT GIVES ENERGY TO ACIEVE KNOWLEDGE .. AND 
ENLIGHTMENT .. " JAI MATA DI
"

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE POTRI POTRI...GURUVIN PADHARA VINDHANGALE POTRI POTRI...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று சதுர்த்தித் திதி மாலைவரை
இருப்பதால் கணபதியையும் .. செவ்வாய்க்கு அதிபதியும் .. 
கலியுகவரதனுமாகிய கந்தனையும் ஆலயம் சென்று தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் .. மனநலமும் .. உடல்நலமும் நல்
ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் .. முருகப்பெருமானைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரப் புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

ஆறுமுகம் உடையவன் ஷண்முகன் .. கணேஷா .. சிவ .. சக்தி 
ஸ்கந்தா .. விஷ்ணு .. சூர்ய .. என்ற ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதம் ஒன்றிய வடிவினன் .. அதாவது - 
மு என்றால் விஷ்ணு .. முகுந்த ..
ரு என்றால் ருத்ரன் .. சிவன் ..
கு என்றால் கமலத்தில் உதித்தவன் - பிரம்மன் .. 
முருகனின் ஒரு திருநாமம் கோடிநாமங்களுக்குச் சமன் என்பர்
முருகன் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் .. 

” ஓம் “ எனும் பிரணவமந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர் .. அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவைச் சிறையில் அடைத்தவர் .. சூரனைச் சம்ஹாரம் செய்தவர் ..மஹாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர் .. இவ்வாறு மும்மூர்த்திகளாகவும் திகழ்கிறார் ..
இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான் ஆவணி .. மாசிமாத திருவிழாவின்போது 
சிவன் .. விஷ்ணு .. பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக
காட்சி தருகிறார் .. 

முருகன் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சிதருகிறார் ..
வெண்ணிற ஆடையில் பிரம்மாவாவின் அம்சமாக அருளுகிறார் ..
பச்சைவஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார் .. 

காவேரியில் நீர்பெருகி கரையுடந்து வந்து விட்டால் கடைசியிலே கொள்ளுமிடம் கொள்ளிடம் ..
கார்த்திகையில் பிறந்தவன் கவலையெல்லாம் தீர்ப்பது தான் கந்தன் என்று சொல்லும் ஒரு சொல்லுமிடம் .. என்பதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் .. 

“ கந்தா ” என்று சொல்லுங்கள் .. “ இந்தா “ என்று வரம் தருவான் கருணைமிக்கவன் .. கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA 
MAY HIS DIVINE BLESSINGS BRINGS YOU ETERNAL BLISS AND 
FULFILL ALL YOUR DESIRES .. " OM MURUGA "

KANNI SWAMI PETTAI THULLAL......SWAMIYE SARANAM IYYAPPA....







SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM





அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று “ சங்கடஹர சதுர்த்தி “ விரதமாகும் .. தங்களனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கிவிடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் தடையின்றி வெற்றி பெறவும் .. விக்னங்களை களையும் விக்னேஷ்வரனை வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

ஸ்ரீவிநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரவல்லது .. சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் .. தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப்பெருமானை நினைத்து கடும்தவம் செய்ய சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் ..

தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்த நன்னாளை “ சங்கடஹர சதுர்த்தியாக “ 
வழிபட்டு வருகின்றோம் ..

’ சங்கடம் ‘ என்றால் .. இக்கட்டு .. தொல்லைகள் .. கஷ்டங்கள் ..
தடைகள் என்று அர்த்தம் .. ‘ ஹர ‘ என்றால் நீக்குவது .. அழித்தல் என்று பொருள் .. வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழ சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக அவசியமானதாகின்றது .. 

ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும்
சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும் .. சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும் .. தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையவும் .. சகலசௌபாக்கியங்களையும் பெறலாம்
கேட்டவரம் தரும் பிள்ளைக்குணம் கொண்டு என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் ..
அந்தக் கணேஷன் .. 

யாராலும் அறிந்துகொள்ள முடியாத பரம்பொருளாகவும் ...
எல்லாவற்றையும் அறியச்செய்யும் இறைவனாகவும் திகழும்
கணபதியே ! உன்னைச் சரணடைந்து போற்றுகின்றோம் ! எம்மைக்காத்தருள்வாயாக ! ஓம் விக்னேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" SADURTHI DAY " AND MAY LORD GANAPATHY BLESS YOU ALL AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. 
" JAI GANESHA "

Sabarimala Yatra Experience 11-12-15 to 20-12-15



–T.Bagavathi. Swami
From the day 1 starting from Anugragha pooja at my house till our return to Chennai on 20-12-15 the experiences  gained is immense.

 Guru swami, on day 1- 11-12-2015 after arriving at airport 11:30 am, inspite of continuous visits and poojas   in Pammal –Sethuswami’s house & Perungalathur – arrived at 6pm as scheduled made myself wonder on finding his Willpower ,Time management,  & Care & fulfilling  His Sheshiyargal desire without considering his strain  .                                                                                                                                                                                         Pooja in my house went for 3 hours and more , in that his praise for Ramakrishna swami bhakthi towards Panvel Balagar & him by singing  the song rendered by Ramakrishna swami in his magical way of  raga & bhaavam attracted everybody –and make everybody to understand the involvement of Ramakrishnan swamigal and the kaigariyam of communication of Panvel balagar  poojas ,daywise related religious significance & details with photos with the creation of panvelBalagar site & continuation of same with full dedication.                                                                                                                                                                         Guruswami description of his attachment to my family for his hereditary wise association & for  the affinity towards his  native village  Patterpuram where myself belongs –he described how it got reviewed after the gap of 40years on my family visit to his Panvel home there myself attracted & pulled towards him on Balagar karunai , at the same time there  i got the fulfillment of getting a honorable Guru for taking my life  useful & effective , Guruswami described this  in detail again at Thiruppanithura   viratham concluding pooja. This gives me how Guruswami is having affection towards myself and make myself confident for taking my life  to how best for dedicating  myself for my family & those who  come in my life.
After our Pooja along with Swamimargal he reached the next destination Mohan swami house in midnight at 2.pm & after 3 hours he made himself dedicated for MohanSwami’s home pooja started at 11am –this hectic program without bothering for him continued till the finish of Yatra at Thirupanithura-everytime  his break between poojas is less & even in that time  his mind will work in planning for next events-which are all  lessons for all of us for Bhakthi, Management Quality, Dedication & Selflessness.   
                                                                                                                                                                              Palagar Majestic , Smiling & Great appearance  &  Alangaram different from one another by Guruswamigal attracted all of us towards him in Poojas  at everyplace starting from my house ,Mohan Swami house, Ramakrishna Swami house &  Shakunthala Mami house at Perugalathur  & Kattuneera in Papanaasam ( the significant first time performance of Pusbanjali to Balagar in Sakuntala Mami house & next in Papanasam)  , Erumeli, Pamba , Sannithanam  & Thiruppanithura – This effort gave us the Dedication-Bhakthi, Courage-Mental Strength & Peacefulness-by getting rid of our selfdesire.                                                                                                                             In Sannithanam –Naithengai taking occasion -Panvel Balagar Magimai & Our Guruswami Bhakthi  found with his random  selection of kanniswami kattu  coming as first.                                                                                            
 Panvel Balagar & Guruswami Magimai also found with the arrival of Seshan Swamigal  in his miraculous recovery from illness while climbing for Sannithanam from Pampa  & through the holy 18 steps just before the closure of the day  along with Balu Swamigal’s help-this also shows that how one should help each other in needed situation with involvement & by  forgoing of  his selfness.
Involvment of Swamigal –Bhakthi  of Siva,Mohan,Balu ,Nagaraj Swamigal-                           Kaigiryam of Sivaram ,Kannan swamigal in this yatra will be a rolemodel for others.
All Swamigals  equal participation in fulfiiling GuruSwamigal directions in this yatra will get retained in our mind.
In every yatra Iam learning a lot remembering me the slogan in Tamil
‘ Katturthu kaimannallvu kallaathathu ulagaluvu’ –
ie) What we have Learnt is only Handful –but what we have not learnt is worldwide-     we have to forego our ego for learning & ulitametely use the knowledge for helping others.
Swami Charanam
Panvel Balagar & Guruswami  Charanam

PHOTOS SENT BY MUTHUSWAMYH PUBLISHED HERE......SWAMIYE SARANAM IYYAPPA