PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM...GURUVE SARANAM SARANAM./....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
மார்கழிமாத சஷ்டித் திதியும் .. வருட இறுதிநாளுமாகிய இன்று
தங்களனைவருக்கும் கலியுகவரதனாகிய கந்தப்பெருமான் 
அனைத்துத் தடைகளையும் நீக்கி .. வாழ்க்கையில் வெற்றியையும் .. வசந்தத்தையும் .. நல்லாரோக்கியத்தையும்
தந்தருளும்படி இருகரம்கூப்பி இறைஞ்சுகின்றேன் .. 


ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

உயிர்களுக்கு வேண்டுவது மூன்று சுகம் .. இகம் .. பரம் .. வீடுபேறு .. இந்தமூன்று இடங்களிலும் காத்தருளும் தெய்வம் முருகனே ! அதனால் அப்பொருளை மூன்று உகரங்களுடன் கூடிய “ முருகு “ என்ற சொல்லையுடைய தனிப்பெருந்தெய்வமாக விளங்குகின்றான் .. 

இப்பிறவிக்குத் தேவையான பொருட்செல்வத்தையும் .. மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் பன்னிருகரங்களாலும் வாரிவழங்கும் வள்ளல் முருகனே ! 
“ முன்செய்த பழிக்குத்துணை முருகா “ என்னும் நாமங்கள் முருகனுக்கு உண்டு என்பார் அருணகிரிநாதர் .. அதனால்
முருகநாமத்தைச் சொன்னால் முன்வினைப் பாவம் நீங்கி 
புண்ணியம் சேரும் .. 

ஞானவேல் தாங்கி .. சேவற்கொடியில் .. மயில்வாகனத்தில் வலம்வரும் முருகப்பெருமானை நம்மனவாகனத்தில் ஏற்றிவைப்போம் ! பதினாறு பேறுகளைத் தன் பன்னிரெண்டு கரங்களாலும் வாரிவழங்குவான் வடிவேலன் .. 

“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA 
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS

" OM MURUGA "

No comments:

Post a Comment