SWAMIYE SARANAM IYYAPPA..PANVEL BALAGANE SARANAM SARANAM...GURUVE SARANAM..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
மார்கழிமாத தேய்பிறை பஞ்சமித் திதியாகிய இன்று ..
அகிலத்திற்கே அன்னையாகிய பார்வதிதேவியின் அம்சமான
“ அன்னபூரணியை “ வழிபடும் நாளாகும் ..
அன்னம் என்பது உணவையும் .. பூரணம் என்பது முழுமையையும் குறிக்கும் .. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை ஈஸ்வரியே ! உலகின் பசிபோக்குபவள் ! வெறும் வயிற்றுபசி அல்ல .. ஒவ்வொரு மனிதரின் ஞானப்பசியையும்
போக்க கருணை உருவத்துடன் காசியில் எழுந்தருளியிருக்கிறாள் ..
“ இரையைத்தேடுவதோடு .. இறையையும் தேடு “ என்பார்கள்
மனிதன் உயிர்வாழ அடிப்படையானது உணவு .. அந்த உணவினைத் தரும் ஒப்பற்ற கடவுள் அன்னபூரணி .. அவளது மகிமை ஒப்பற்றது ..
காசி ( வாரணாசி ) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறாள் .. 
கா - என்பது காரணத்தையும் ..
ச - என்பது அமைதியையும் ..
இ - என்பது உடலையும் குறிக்கும் .. எனவே இந்நகரம் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர் ..
ஆதிசங்கரர் அன்னபூரணியைத் துதித்தது - 
நித்யானந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ !
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ் மஹேஸ்வரி !
ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரி !
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ !
பொருள் - 
அனுதினமும் ஆனந்தம் அளிப்பவளே ! அபயகரங்கள் உடையவளே ! அழகின் ரத்னக்கடலே ! எம்பாவத் தொகுப்பை 
நாசம் செய்பவளே ! காட்சிதந்து அருளும் மஹேஸ்வரியே !
மலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே ! காசிபுரத்து நாயகியே ! பக்தர்பால் கருணைகாட்டுபவளே ! அன்னையே ! அன்னபூரணி !
எமக்கு பிக்க்ஷையிட்டு அருள்வாய் !!
இந்துமரபுக் கதைகளின்படி - 
சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம் உலகம் மாயை என்றும் .. இம்மாயையில் உணவும் ஒருபகுதி எனக்கூற உணவு உற்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார் .. இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி)
உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார் ..
பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது .. உலகமே வெறுமையானது .. எங்குமே உணவின்றி எல்லோரும் பசியால்வாடினர் .. மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார் .. உடனே தன் உணவுத்தட்டை எடுத்துக்கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன் “ இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் .. மாயையல்ல என்றும் அறிந்துகொண்டேன் ” என்று கூறுகிறார் .. இதைக்கேட்டு மகிழ்ந்த அன்னையும் தன்கையால் உணவுவழங்கி மகிழ்ந்தார்
அப்போதிலிருந்து பார்வதி நல்வாழ்வுக்கான கடவுளாக வணங்கப்படுகிறார் .. கையில் தங்கக்கரண்டியும் உணவுப்பாத்திரமும் கொண்டுள்ளவராக வர்ணிக்கப்படுகிறார்
அன்னையைப்போற்றுவோம் ! தங்கள் இல்லங்களிலும் செல்வமும் .. அன்னமும் பெருகிட அன்னை அருள்புரிவாளாக 
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE PANJAMI DAY OF GODDESS ANNAPURNA .. ANNAPURNA IS AN INCARNATION OF THE HINDU GODDESS PARVATI THE WIFE OF LORD SHIVA .. AS SUCH AS ANNAPURNA ALSO SYMBOLIZES THE DIVINE ASPECT OF NOURISHING CARE .. THE TEMPLE ART IN INDIA OFTEN DEPICTS LORD SHIVA WITH HIS BEGGING BOWL (SKULL) ASKING ANNAPURNA TO PROVIDE HIM FOOD .. THAT GIVES ENERGY TO ACIEVE KNOWLEDGE .. AND 
ENLIGHTMENT .. " JAI MATA DI
"

No comments:

Post a Comment