PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM....GURUVE SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS TOO .. " OM MURUGA "





” சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனை விளங்கு வள்ளிகாந்தனைக்
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைத் துதித்து தன்னிகரில்லாத புகழும் .. பொங்கிவரும் நல் உள்ளங்களில் தன்னம்பிக்கையையும் தந்தருளுமாறு பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வரபுத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!

குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்பவன் ..
தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர் .. கந்தனைக் கரம்குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும் காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது ..

மலையேறிவந்து தன்னை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உச்சியை அடைந்து எப்போதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டுள்ளார் .. செவ்வாயன்று முருகனை வணங்கினால் கவலைகள் அகலும் .. செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது சிறப்பு .. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான் .. அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமானே !
செவ்வாய் என்பது சிவந்தவாய் என்பதின் சுருக்கம் .. இந்த கிரகத்தின் நிறம் சிவப்பு .. அதனால் அந்தக்காலத்தில் ரிஷிகள் இந்த பெயரை வைத்தார்கள் .. நிலம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடும் பொழுது செவ்வாய்கிரகம் மற்றும் அதனை சம்மந்தப்பட்ட தெய்வங்களுக்கும் பூஜை செய்யவேண்டும் .. முருகனை வணங்குவதால் நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வரும் பிரச்சினைகளை சீர்செய்யலாம் ..
முருகனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் ..
சிறுகுழந்தைகளுக்கு அவன் - குமரனாகவும் ..
இளைஞர்களுக்கு அவன் - சிங்காரவேலனாகவும் ..
கலைஞர்களுக்கு அவன் - ஸ்கந்தனாகவும் ..
வீரர்களுக்கு அவன் - வேலாயுதனாகவும் ..
இல்லறத்தார்க்கு - வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யனாகவும் ..
உபதேசம் வேண்டுவோருக்கு - சுவாமிநாதனாகவும் ..
துறவிகளுக்கு அவன் - பழநி ஆண்டவனாகவும் ..
மேலும் பலரூபங்களில் நமக்கு வழித்துணையாகவும் வருவான் திருத்தணி முருகன் ..

வள்ளலான முருகப்பெருமானைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
.
 Image may contain: 1 person

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A BLESSED SOMAVAR VIRADAM & MAY LORD SHIVA'S DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS & REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS TOO .. " OM NAMASHIVAYA " JAI BHOLE NATH .. SWAMI SARANAM....GURUVE SARANAM.


” பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி !
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி !
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி !
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி !
விண்ணும் நிலனுந் தீ ஆனாய் போற்றி !
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி !
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி !
கயிலைமலையானே ! போற்றி ! போற்றி “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையுமாகிய இன்று சோகங்களைப் போக்கி சுகங்களைத் தரவல்ல சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாகத் திகழ்ந்திடவும் .. வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலவிடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன் இந்த சோமவார விரதத்தை கடைபிடித்து மேன்மை பெற்றான் .. சந்திரன் சோமவார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம்பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான் .. இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திரசேகரர் .. சந்திரமௌலீஸ்வரர் .. சசிதரர் .. சோமசுந்தரர் .. சோமநாதர் .. சசாங்கசேகரர் .. சசிசேகரர் என்றும் புகழப்பட்டார் ..
சந்திரனின் வேண்டுதலுக்கு இணங்கி சோமவார விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருளவேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள்பாலித்தருளினார் ஐயனும் ..
நாமும் சிவனைப்போற்றி ஐயனின் மனதில் ஓர் பௌர்ணமியாக இடம்பெற்று வாழ்வில் மிளிர்வோமாக !
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .


SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM...


” உலகம் புகழும் தெய்வம் எங்கள் அங்காளம்மாவே ! 
செவிக்குளிர பாடிடுவோம் கேளுங்கள் அதையே !
எங்களின் குலதெய்வம் என்றும் நீயே ! 
உன்னையே பணிந்திருப்போம் ! அங்காளம்மாவே !
நின்னருள் வேண்டியே அங்காளம்மாவே !
நித்தம் நித்தம் பூஜை செய்தோம் அங்காளம்மாவே 
நின்னருளே எமக்கெங்கும் கவசமம்மா !
நீச்சமடைய செய்யுமது பகையையம்மா !
நினைவுகள் என்றுமே உன்னிடமம்மா ! 
நல்லதை நிறைவேற்றி வாழவைப்பாயே ”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
மாசிமாத அமாவாசையாகிய இன்று அன்னை அங்காள பரமேஷ்வரிக்கு விசேஷ விழாவாக
“ மயானக்கொள்ளை “ எனும் விழா சிறப்பாக நடைபெறும் .. இந்நாளில் அன்னையைத் துதித்து தங்களுக்கு அல்லல் தருவோரிடமிருந்து தங்களனைவரையும் இரட்சித்துக் காத்தருளும்படி அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓங்கார உருவினளே ! ஓம்சக்தி ஆனவளே !
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே ! 
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே ! 
அருளிடும் அம்பிகையே ! அங்காள பரமேஷ்வரியே !
காத்தருள்வாயாக ! போற்றி ஓம் ! போற்றி ஓம் !
மாசிமாதம் வரும் அமாவாசை திதியன்று தான் அங்காள பரமேஷ்வரி அம்மன் தன் பூரண வலுவோடும் .. பலத்தோடும் இருப்பாள் .. அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி சுடுகாட்டில் ஆவிகள் .. ஆன்மாக்கள் 
போன்ற அனைவருக்கும் சூரை இடும்நாள் ஆகும் .. அதுவே “ மயானக்கொள்ளை “ என்று கூறப்படுகிறது .. 
சூரை என்றால் - உணவு அளிப்பதைக் குறிக்கும் ..
இதன்பிண்ணனியில் ஒரு புராணக்கதை உள்ளது -
இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம்கொய்த நிகழ்வுதான் .. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போன்றே ஐந்து தலைகள் இருந்தன .. எனவே சிவனை நாம் ஏன் வணங்கவேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா 
அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மாவின் ஒருதலையைக் கொய்ததால் பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக்கொண்டதுடன் கொய்யப்பட்ட பிரம்மனின் தலையும் சிவனின் கரத்திலே வந்து அமர்ந்துகொண்டது ..
அதை அவர் கீழேபோட்டாலும் மீண்டும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது .. அதனை கீழேபோடாமல் சிறிதுநேரம் கையிலேயே வைத்திருக்கும்படி அன்னை பார்வதிதேவி கூறவும் அவரும் அவ்வாறே செய்ய பிரம்மாவின் தலை கபாலமாக மாறி சிவனின் கரத்திலேயே ஒட்டிக்கொண்டது .. அதில் போடப்படும் உணவையெல்லாம் கபாலமே உண்டதால் உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை ..
இந்நிலையில் பிரம்மாவின் தலைகொய்யப்பட்ட வேதனையில் இருந்த சர்ஸ்வதிதேவியும் கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம்கொண்டு “ கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக “ என சாபமிட அன்னை பார்வதியும் பலதலங்களில் அலைந்து முடிவில் மலையனூர் வந்து அங்கே “ அங்காள பரமேஷ்வரியாக “ 
கோவில் கொண்டாள் ..
ஈஸ்வரனும் மலையனூர் வர .. அன்னை சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட அனைத்தையும் கபாலமே விழுங்கிவிட்டது .. இதனைக்கண்ட மஹாலக்ஷ்மி .. பரமேஷ்வரிக்கு ஒரு உபாயம் கூற அதன்படியே இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட .. அதனையும் கபாலமே உண்ண .. மூன்றாவது கவளத்தை கைதவறியது போன்று கீழே போட்டாள் அன்னை .. உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம் அதனை உண்பதற்காக சிவனின் கரத்தைவிட்டு கீழிறங்கியது .. அன்னை விஸ்வரூபமெடுத்து பிரம்மகபாலம் மீண்டும் எழாதவாறு தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள் .. ஈசனைப்பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது ..
இந்த வரலாற்றினை உணர்த்தவே அங்காள பரமேஷ்வரி அம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .. அன்னையின் அருட்பார்வை கிடைக்கும் விதத்தில் மனாதார வேண்டிட மூன்று ஆற்றல்களான இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்ற முப்பெரும் சக்திகளும் நம் உடலில் நிறைந்து நன்மை பயக்கும் ..
மனிதரைப் பீடித்த துஷ்ட ஆவிகள் யாவும் அங்காளபரமேஷ்வரியின் அருட்பார்வைபட்டாள் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து .. அழிந்து 
ஒழிந்துவிடும் .. 
” ஓம் அங்காளபரமேஷ்வரித்தாயே ! போற்றி ! போற்றி “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A NEW MOON DAY WITH THE DIVINE BLESSINGS OF 
MAA ANGALA PARAMESHWARI .. THE MAYANA KOLLAI 
(LOOTING OF THE GRAVEYARD) FESTIVAL IS CELEBRATED AMIDST THE DEAD .. OBSERVED IN THE ANGALAMMAN TEMPLES IN THE VILLAGES OF TAMIL NADU .. THIS FOLKFESTIVAL SYMBOLISES ONE OF THE MAIN CULTURAL SCRIPTS OF TAMIL LIFE THAT FEMININE ENERGY IS CAPABLE OF REJUVENATING .. RECOVERING & REVITALISING HUMAN LIFE BEYOND DEATH & DESTRUCTION .. LORD SHIVA SEVERED ONE OF THE HEADS OF BRAHMA & BROUGHT AN END TO CREATION .. ANGALAMMAN WALKS ALONG WITH SHIVA TO THE CREMATION GROUND THAT THE WORLD HAS BECOME & DANCES WITH HIM TO BRING BACK LIFE .. 
" JAI MAA ANGALA PARAMESHWARI "
Image may contain: 3 people, indoor

SWAMIYE SARANAM IYYAPPA...GURUV E SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND WITH DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA MAY HIS BLESSINGS BRING YOU ETERNAL BLISS & FULFILL ALL YOUR DESIRES TOO .. ' OM NAMASHIVAAYA ' JAI BHOLE NATH



” உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி !
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்து உகந்த ஈசாபோற்றி
பண்ணார் இசையின் சொற்கேட்டாய் போற்றி
பண்டே என்சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலைமலையானே ! போற்றி ! போற்றி “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று தங்களனைவரது கிரகதோஷங்கள் யாவும் நீங்கி நல்லாரோக்கியமும் பெற்றிடவும் எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

உடம்பை மெய் என்கிறோம் .. அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள் .. ”ஸத்வஸ்து “ என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார் ..
வேதங்களை எல்லாம் ஒருசரீரமாக மெய்யாக வைத்துக்
கொண்டால் அதில் உயிராக மெய்ப்பொருளாக இருப்பது சிவநாமம் .. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ” ஹ்ருதயம்” என்றால் அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது .. இதைத்தான் ஞானசம்பந்தர்
“ வேதநான்கிலும் மெய்ப்பொருளாவது நாத(ன்) நாமம் நமசிவாயமே “ என்றார் ..

உலகின் மிகவும் பழமையான ரிக்வேதத்தில் சிவனது திருப்பெயர்கள் வருகின்றன .. “ சிவன் “ என்பது மிகவும் புராதன சொல் .. இதற்கு கல்யாணம் .. மங்களம் .. சுபம் .. நன்மை .. மகிழ்ச்சி .. லக்ஷ்மிகரம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம் ..
பொதுவாக தெய்வங்களை மரியாதையாக “ மஹா “ என்ற அடைமொழியுடன் அழைக்கிறோம் .. மஹாவிஷ்ணு ..
மஹாலக்ஷ்மி .. மஹாகணபதி .. அதுபோல் மஹாசிவன்
என்று சிவனை அழைப்பதில்லை .. அதற்குப்பதிலாக
“ சதாசிவன் “ என அழைக்கிறோம் ..
“ சதா “ என்பது -சிறப்பான சொல் ..
இதற்கு எங்கும் எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்றும் கொள்ளலாம் ..

சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும்
பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும் ..
இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும் ..
மூன்றுவேளையும் வணங்கினால் யாகங்கள் செய்வதால்
உண்டாகும் பலன்கிடைக்கும் ..

சிவனுக்கு உகந்த மந்திரம் நமசிவாய என்கிற பஞ்சாட்சரமாகும் .. இதில் தூலம் .. சூக்குமம் .. காரணம் .. எனப்பலவகைகள் உண்டு .. இவற்றை தக்க குருவின் மூலம் அறியலாம் .. ஆனால் .. குரு உபதேசமின்றி எல்லோரும் எப்போதும் ஜபித்துப் பேறு பெற
“ நமசிவாய “ என்ற திருநாமமே ! போதுமானது ..

சிவலிங்கத்திருமேனியை தரிசித்து தீங்கு இல்லா வாழ்வினைப் பெறுவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED ' MAHA SIVARATRI ' & A DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY THE GLORY OF LORD SHIVA SHANKAR UPLIFT YOUR SOUL & MAY HAPPINESS & PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..SWAMI SARANAM ...GURUVE SARANAM

” வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி 
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி 
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி 
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி 
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி 
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி 
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி 
கயிலைமலையானே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ சிவராத்திரி தின நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. இன்று வெள்ளிக்கிழமையும் .. பிரதோஷ விரதமும் மற்றும் 
மஹாசிவராத்திரியும் கூடிவருவது சிவ வழிபாட்டிற்கு மிகுந்த சிறப்புமிக்க நன்நாளுமாகும் ..
மாதமோ மாசி ! இதில் மகாதேவனைப் பூசி ! திருமுறைகளை வாசி ! கிடைக்கும் அவன் ஆசி ! சிவாய நமஹ என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் என்று எதுவுமில்லை .. உபாயம் ஒன்றே ஏற்படும் .. இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் பக்திப்பூர்வமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
இன்று சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும் .. மனைசிறக்கும் .. அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவபுராணம் .. யுகம்யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக்காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக ஒரே ஒருநாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரியே அது ! அதுவே சிவராத்திரி !
” ராத்ர “ என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள் .. எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது ராத்திரி எனும் பெயர் பெற்றது .. இந்த புண்ணியகாலத்தில் சிவநாமம் சொல்லி பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் .. இதனால் இம்மையில் சுகானந்த வாழ்வையும் .. மறுமையில் சுகப்பேரானந்த வாழ்வையும் பெற்று சிறக்கலாம் ..
ராத்ர என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒருபொருள் . ஆக சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர் .. 
“ உணவும் .. உறக்கமும் உயிர்க்குப் பகை “ இந்த இடத்தில் 
உணவு என்பது - வினைகள் .. அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்கநேரும் .. 
உறக்கம் என்பது - மாயைக்குட்பட்டு மயங்குதலாகும் 
ஆக உணவு நீக்கம் என்பது - வினைகளை அகற்றுதலும் .. விழித்திருத்தல் என்பது - ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும் ..
இந்த தாத்பரியத்தின்படி மகாசிவராத்திரி தினத்தில் ஊண் உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே ! என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள் ..
சிந்தைமகிழும் சிவராத்திரியில் லிங்கதரிசனம் செய்வதும் வழிபடுவதும் விசேஷம் .. லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின .. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன .. படைப்பு .. காப்பு .. அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கின்றன புராணங்கள் .. சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன் .. சிவன் .. மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன ..
எப்போதும் சிவநாமம் கூறி சீரானவாழ்வும் .. செல்வ வளமும் பெறுவீர்களாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..



நேரமும் காலமும் கிடையாதே உனை வணங்க
பாரம் இறக்கி வைப்பதுன் பாதமல்லவா
விரதமும் பூஜையும் தேவையில்லை என் பாலகனுக்கு
கரந்தன்னைக் குவித்து சுவாமி சரணமென்றால் போதும்
செல்வம் கொணர்ந்து குவிக்கத் தேவையில்லை எம் பாலகருக்கு
உள்ளம் கனிந்துருகி ஏழைக்கோர் உணவளித்தால் போதும்
கோவில் சென்று தரிசனம் செய்யத்தேவையில்லைஎம் பாலகருக்கு
மனமே கோவிலாய் எம் அன்பே மலர்களாய்
குரு தினம் செய்யும் பூஜை பார்த்தால் போதும்
சபரி  சென்று வழிபட வாய்ப்பில்லை எனில்
உன் உடல் உளத் தூய்மையுடன் சரணம் சுவாமி சரணம்  என்றழை போதும்
ஐயப்பன்  எங்கும் நிறை பரம்பொருள் பிற உயிர்களைப் பேணும் பாலகர்  காத்தருள்வார்


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " VIJAYA EKADASI " & MAY LORD VISHNU BLESS YOU & SHOWER YOU WITH STRENGTH .. COURAGE & EVERY SUCCESS IN YOUR CARRIER TOO .. OBSERVING VIJAYA EKADASI HELPS IN REMOVING ALL THE GUILT ASSOSIATED WITH SINS COMMITTED & ALSO HELPS IN ATTAINING VICTORY .. IT IS BELIEVED THAT LORD RAMA OBSERVED VIJAYA EKADASI TO CROSS THE OCEAN TO REACH LANKA & DEFEAT RAVANA .. " OM NAMO NAARAAYANAAYA " SWAMI SARANAM GURUVE SARANAM SARANAM



” பச்சைமா மலைபோல் மேனி !
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசி விரதமும் கூடிவருவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழவும் .. அனைத்து நலன்களையும் தந்தருளுமாறும்
பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!

இன்றைய ஏகாதசி விரதத்தை “ விஜயா ஏகாதசி “ என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது .. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றிகிட்டுகிறது .. மிகவும் மேன்மைவாய்ந்த இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பதாலும் .. படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப்பெறுகின்றன .. மற்றும் முற்பிறவி .. இப்பிறவி இரண்டின் பாபத்தையும் அழிக்கவல்லது ..

இந்நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின்மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல்கடந்து சென்று வெற்றிபெறுவீர் .. கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர் ..

விஜய ஏகாதசி அனைத்து விருப்பங்களை பூர்த்திசெய்து வெற்றியையும் தரவல்லது .. அவதார புருஷரான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியே இதனை அனுஷ்டித்து ராவணனை வென்று சீதையை மீட்டார் என்றால் இதன் பெருமை சொல்லிமாளாது ..

பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் ரூபம் எவ்விதமானாலும் சரி .. அவரை பூஜிப்பதால் சர்வமனோகாம்யங்களும் பூர்த்தி அடையும் .. ஸ்ரீராமர் தான் விஷ்ணுவின் அவதாரம் என்று அறிந்து இருந்ததாலும் .. தான் எடுத்துள்ள மானுட அவதாரத்தில் சகலருக்கும் நன்மார்க்கத்தை காட்டுவதற்காக விஷ்ணுவை ஆராதிக்கும் ஏகாதசி விரதத்தை தானும் ஒரு சாதாரண மனிதராகவே மேற்கொண்டு வெற்றியும் பெற்றார் ..

பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் வெற்றி காண்போமாக !
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

" சிவராத்திரி " மற்றும் " மஹா சிவராத்திரி " பற்றி நாம் நன்கு அறிந்ததே . இருப்பினும் ஓர் எளிய குறிப்பினை காண்போம்.





சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும் சில சமயங்களில் மிக அரிதாக த்ரியேதசி பகல் பொழுதில் முடியும் பட்சத்தில் அதே நாளில் வரும். மாதத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் பன்னிரண்டு மகா சிவராத்திரியும் சேர்த்து .
மஹா சிவராத்திரி
இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 24-02-2017 வெள்ளிக்கிழமை வருகின்றது.
எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்.
அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,
கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது,
பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது,
என்றும் பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,
அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.
மஹா சிவராத்திரியும் நான்கு கால பூஜைகளும் :
முதல் கால பூஜை
இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் " பிரம்மன் " எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்.
அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும் .
பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .
இரண்டாவது கால பூஜை
திருவடி தேடி சென்ற பரம்பொருள் "விஷ்ணு" அவர்களால் அப்பனுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், ஸ்வர்ண நாணயங்களை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன் நடைபெறும் .
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்.
மூன்றாவது கால பூஜை
அம்பாள் அவர்கள் செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "கற்கண்டு அன்னம்" நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் பூஜை செய்வது நன்று .
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காவது கால பூஜை
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது



நேரிலே வந்து தேரிலே ஏற்றினாய் 
காரிருள் விலக்கத் தாமதமேன்- வாழ்க்கைப்
போரிலே பட்ட சில காயங்கள் ஆற்றினாய்
சூழ்நிலை மாற்றவே பாடுகள் பட்டாய்
வேரிலே சுடுநீர் கொட்டிய வேதனைகள் மாற்றி
ஆற்றியே சென்றாய் எம்மை
காற்றிலே கலந்தது உன் அருள் வாசம்
சேற்றிலே மலர்ந்த செந்நாமரையானேன்
கூற்றவன் வரினும் பயப்படேன்
போற்றுவேன் நின் பத்ம பாதம்
ஏற்றுவேன் என் ஆன்ம தீபம்
சாற்றினேன் நித்தமும் பாடல் உனக்கு
ஏற்றுக்கொள் என்னை உன் அடியவராய்
r

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND & A BLESSED ASHTAMI THITHI WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HE REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & SUCCESS .. " JAI SHREE BHAIRAVA DEV "



” திருவுறைச் சொல்லுமாகித் தெறிமனம் பொருளுமாகி
வருபொருட்செல்வம் ஞானம் வளர்புகழ் தானேயாகிப்
பெருவினை அகல நாளும் பிதற்றுவார் உள்ளே தோன்றும்
திருவினை வயிரவ தேவை திருந்தடி வாழ்த்துவோமே “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையும் .. தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று காலபைரவரை வழிபடுவதற்கு உகந்த நாளுமாகும்
பைரவரைத் துதித்து சனிதோஷங்களிலிருந்து நிவாரணம் பெறவும் .. தொழில்விருத்தியும் .. கடன்சுமை குறையவும்
தங்கள் இல்லங்களில் என்றும் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவிடவும் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே !
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!

மாசிமாத தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று பைரவருக்கு உகந்த நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது ..
பைரவருக்கு 64 திருவடிவங்கள் என கூறப்பட்டுள்ளன ..
பொதுவாக ஆலயங்களில் அருளும் பைரவர் தலையின்மீது ஜுவாலை .. திருவடிகளில் சிலம்பு .. மார்பில் கபாலமாலை போன்றவற்றைத் தரித்தவர் .. முக்கண்கொண்டவர் .. திரிசூலம் .. கபாலம் .. நாகபாசம் .. உடுக்கை .. டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர் .. ஆடை அணியாவடிவில் நாய்வாகனத்துடன் காட்சிதருவார் ..

சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும் .. இரவில் அர்த்தஜாமவழிபாடு நிறைவுபெற்ற பின்னரும் திருக்கோவிலின் அனைத்து சந்நிதிகளையும் பூட்டி அந்த சாவிகளை பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்னரே ஆலயத்தைப் பூட்டுவது மரபு .. சிவாலயத்தின் காவலராக இருந்து எந்த இடையூறோ இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை
“ க்ஷேத்ரபாலகர் “ என பக்தர்கள் வணங்குகின்றனர் ..
இழந்த சொத்துக்களையும் .. பொருள்களையும் மீளத்தரவல்லவர் ..

பிரபஞ்சத்தில் சகலஜீவராசிகளும் வான்மண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் .. நட்சத்திரங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே ! காலச்சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவர் ஆவார் .. காலத்தின் கட்டுப்பாட்டைமீறி நன்மை செய்பவரும் இவரே ! காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாற்றுவதால் “ ஆபத்துத்தாரண பைரவர் “
என்று போற்றப்படுகிறார் ..

பைரவரைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

 



SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " PANJAMI DAY " & MAY GODDESS MAA VARAHI PROTECT YOU FROM ALL EVIL FORCES & GUIDE YOU ALONG THE RIGHT PATH & SHOWER YOU WITH HAPPINESS .. " JAI MAA VARAHI DEVI "



” ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில் 
களிக்கும் இச்சிந்தையில் காரணமாம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் 
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையும் .. தேய்பிறை பஞ்சமித் திதியுமாகிய இன்று அன்னை வராஹிதேவிக்கு (வாராஹி) உகந்த நாளுமாகும் .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. செல்வாக்கும் .. சொல்வாக்கும் பெற்று .. தங்கள் எண்ணமெல்லாம் ஈடேறவும் அன்னை வராஹியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஸ்யாமளாய வித்மஹே ! 
ஹலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
என்னும் காயத்ரி மந்திரத்தை துன்பங்கள் வரும்போதுமட்டுமல்லாது .. எப்போதும் பாராயணம் செய்து அனைத்திலும் வெற்றிகாண்பீர்களாக ..
வராஹி அம்மன் என்பது மஹாகாளியின் அம்சமாகும் .. அன்னையை வழிபட எதிரிகள் பயம் நீங்கும் .. வராஹி வழிபாட்டிற்கு மிகவும் முக்கியம் உள்ளத்தூய்மையும் .. சுத்தமும்தான் .. அன்னை தேவகுணமும் .. மிருகபலமும் கொண்டவள் .. இதனால்தான் உக்கிர தெய்வம் என்று சொல்வார்கள் .. தவறுக்கான தண்டனையும் கடுமையானதாக இருக்கும் .. கோவத்தின் உச்சம்தொடுபவள் .. ஆனால் .. அன்பிலே ! ஆதரவிலே ! பன்மடங்கானவள் .. பெற்றதாயினைப் போன்றவள் .. அவளே ! பஞ்சமித்தாய் ! வாழ்வில் பஞ்சங்களைத் துரத்துபவள் ..
பன்றிமுகத்தோடு காட்சியளிப்பவள் .. இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் .. 
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது .. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும் .. அன்னைக்கும் மூன்று கண்கள் உண்டு .. இது சிவனின் அம்சமாகும் ..
ஸ்ரீவராஹி வாக்குசித்தி அருள்வதில் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியைப் போலவே முதன்மையானவள் .. பக்தர்களுக்கு பக்கத்துணை .. பகைவருக்கோ பெரும்நெருப்பு .. யாரையும் சபிக்கக்கூடாது .. அவை உடனேபலிக்கும் .. ஆனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான தண்டனையும் விரைவில் நம்மையே வந்துசேரும் .. அதிலிருந்து அன்னை எம்மைக் காக்கமாட்டாள் .. எனவே ! எவருக்கும் அழிவுவேண்டி வணங்காமல் “ எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு “ வழிபடவேண்டும் ..
ஒருமனதோடு .. தர்மசிந்தனையுடன் அன்னையை வழிபட்டு அனைத்திலும் வெற்றி காண்போமாக ! 
“ கருணாசாகரி ! ஓம் ஸ்ரீமஹாவராஹி ! நின்பத்மபாதம் நமோஸ்துதே “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMVAR VIRADAM & MAY LORD SHIVA BLESS YOU & REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAYA " JAI BHOLE NATH SWAMIYE SARANAM...GURUVE SARANAM


 ..



” சிவாய நம வென்றாலே ! சிந்தை தெளியும் முனைந்தீசன் பாதம் முழுவதுமாய்ப் பற்றின் வினையெலாம் நீங்கிவிடுமே ! விந்தை அனைத்துயிர்க்கும் அம்மையப்பனென்றாகும் அத்தன் துணையிருக்கச் செம்மையே எந்நாளும் செப்பு சிவாயநம”

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் சிவ விரதங்களுள் உத்தமமான விரதமுமாகிய சோமவாரமும் அனுஷ்டிக்கப்படுகின்றது ..
தங்கள் பாவங்கள் நீங்கி இன்றைய நாள் ஓர் வெற்றிமிகு நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

சிவபெருமானை நினைத்து அனுஷ்டிப்படும் இந்த விரதம் ஈசனின் அருளைப்பெற சிறந்தவழியை ஏற்படுத்தித் தரும் விரதமுறையாகும் .. திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது .. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது ..

தட்சனின் சாபத்தால் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக்கண்ட சந்திரன் பிரம்மாவிடம் சென்று முறையிட்டான் .. அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தினார் .. இதையடுத்து சந்திரன் சிவனிடம் போய் தஞ்சமடைந்தான் .. சந்திரன்மீது இரக்கம்கொண்ட ஈசன் அவனைத் தனது சடைமுடியில் வைத்துக்கொண்டார் .. சந்திரன் அன்றுமுதல் வளர்ந்தான்
ஆனால் அதன்பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான் .. இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும் .. சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர் ..

சந்திரனும் சோமவாரத்தன்று இறைவனைப் பூஜிப்போர்களுக்கு நற்கதியைக் கொடுத்து அருளும்படி வேண்ட சிவபெருமானும் அப்படியே தந்தருளினார் .. நம்வாழ்வும் தேய்பிறையிலிருந்து வளர்பிறையாக வளர
சிவபெருமானின் அருட்கடாக்ஷ்த்தினையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமாக ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD SURYA MAY YOUR SUNDAY BE FILLED WITH PEACE .. LOVE & HAPPINESS .. " JAI SHREE SURYA DEV "

” காசினி இருளைநீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த
தேசிகா எமை ரட்சிப்பாய் செங்கதிரோனே ! போற்றி !
போற்றி ”

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானுக்கு உகந்த நாளாகும் .. பயன்கருதாது தன்பணியைச் செய்துவரும் சூரியபகவானைத் துதித்து நல்லாரோக்கியமும் வாழ்வில் அனைத்து வளநலங்களைப் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!

ஜோதிடசாஸ்திரம் சூரியபகவானை நவக்கிரகநாயகனாக போற்றுகிறது .. மனித வாழ்விற்கும் .. தாழ்விற்கும் .. இன்பத்திற்கும் .. துன்பத்திற்கும் காரணங்கள் கிரகங்கள் இவற்றிற்கு தலைமை வகிப்பவர் சூரியன் .. இப்பிரபஞ்சத்தையும் .. கோள்களையும் பரிபாலித்து உலகை இயக்குகிறார் .. ஒருவரது ஜாதகத்தில் சூரியபலத்தைப் பொறுத்தே ஆளுமைத்தன்மை .. ஆட்சி .. அதிகாரம் அமையும் ..
“ கண்கெட்டபிறகு சூரியநமஸ்காரமா ..? “ என்ற பழமொழி உண்டு .. சூரியநமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இது காட்டுகிறது .. கண்ணொளி வழங்கும் சூரியனின்சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது ..
அதிகாலை நேரத்தில் நம் உடலில்படும் சூரியஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கியபங்குவகிக்கிறது .. இதைத்தான் நமது பாரதபூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலைவெயிலில் ஆரம்பிக்கும் பித்தம் மாலைவெயிலில் தணிந்துபோகும் என்றனர் .. சூரியஒளியைக் கொண்டு கொடியநோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வணவேதம் ..
சூரியநமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்தநேரம் சூரிய உதயமாகும் .. அதிகாலை நேரம் இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்புச்சக்தியைக் கொண்டுள்ளது ..
இரவில் தூக்கத்தால் உடலுக்கும் .. மனதிற்கும் ஓய்வுகிடைப்பதால் அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும் ..

வாழ்வில் சகலசெயல்களிலும் வெற்றியை அருளவல்ல
அகத்தியர் அருளிய “ ஸ்ரீ ஆதித்யஹ்ருதயம் “ மந்திரத்தைப் பாராயணம் செய்து வாழ்வில் வெற்றிபெறுவோமாக !
“ ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..