வருபொருட்செல்வம் ஞானம் வளர்புகழ் தானேயாகிப்
பெருவினை அகல நாளும் பிதற்றுவார் உள்ளே தோன்றும்
திருவினை வயிரவ தேவை திருந்தடி வாழ்த்துவோமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையும் .. தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று காலபைரவரை வழிபடுவதற்கு உகந்த நாளுமாகும்
பைரவரைத் துதித்து சனிதோஷங்களிலிருந்து நிவாரணம் பெறவும் .. தொழில்விருத்தியும் .. கடன்சுமை குறையவும்
தங்கள் இல்லங்களில் என்றும் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே !
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!
மாசிமாத தேய்பிறை அஷ்டமித் திதியுமாகிய இன்று பைரவருக்கு உகந்த நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது ..
பைரவருக்கு 64 திருவடிவங்கள் என கூறப்பட்டுள்ளன ..
பொதுவாக ஆலயங்களில் அருளும் பைரவர் தலையின்மீது ஜுவாலை .. திருவடிகளில் சிலம்பு .. மார்பில் கபாலமாலை போன்றவற்றைத் தரித்தவர் .. முக்கண்கொண்டவர் .. திரிசூலம் .. கபாலம் .. நாகபாசம் .. உடுக்கை .. டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர் .. ஆடை அணியாவடிவில் நாய்வாகனத்துடன் காட்சிதருவார் ..
சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும் .. இரவில் அர்த்தஜாமவழிபாடு நிறைவுபெற்ற பின்னரும் திருக்கோவிலின் அனைத்து சந்நிதிகளையும் பூட்டி அந்த சாவிகளை பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்னரே ஆலயத்தைப் பூட்டுவது மரபு .. சிவாலயத்தின் காவலராக இருந்து எந்த இடையூறோ இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை
“ க்ஷேத்ரபாலகர் “ என பக்தர்கள் வணங்குகின்றனர் ..
இழந்த சொத்துக்களையும் .. பொருள்களையும் மீளத்தரவல்லவர் ..
பிரபஞ்சத்தில் சகலஜீவராசிகளும் வான்மண்டலத்தில் உள்ள சூரியன் முதலான கிரகங்களும் .. நட்சத்திரங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே ! காலச்சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவர் ஆவார் .. காலத்தின் கட்டுப்பாட்டைமீறி நன்மை செய்பவரும் இவரே ! காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாற்றுவதால் “ ஆபத்துத்தாரண பைரவர் “
என்று போற்றப்படுகிறார் ..
பைரவரைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment