PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பிரதோஷவிரதமும் .. 
வைகாசிமாத சுவாதி நட்சத்திரங் கூடிய பிரதோஷ நாளில் என்பெருமானாகிய ஸ்ரீமஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதன் பொருட்டு தூணில் ஸ்ரீநரசிம்ம அவதாரமாகத் 
தோன்றியருளிய நாள் ..
“ நரசிம்மரை நம்பியவர்களுக்கு நாளை என்பது இல்லை “
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே !
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி !
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !!
பிரதோஷ காலத்தில் நரசிம்மர் அவதாரம் செய்ததால் 
“ பிரதோஷ நரசிம்மா “ என்ற பெயர் உண்டு .. மிக ஆபத்தான சூழ்நிலையிலும் .. சங்கடமான நிலையிலும் அச்சத்தில் இருக்கும் தருவாயிலும் நரசிம்மரை நினைந்து இதயப்பூர்வமாகவும் .. நம்பிக்கையுடனும் .. உறுதியுடனும் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஓடோடி வந்து 
காத்து ரக்‌ஷிப்பார் ..
தொழில் மேன்மை பெற .. வேலை கிடைக்க .. நிம்மதிகிடைக்க நரசிம்மரின் மூன்றாவது கண்ணை வழிபட்டால் குறைகள் தீர்ந்து அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் ..
நரசிம்மரைப் போற்றுவோம் ! சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோம் ! ஜெய் நரசிம்ஹா ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD NARASIMHA ! 
MAY HE REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU A PROSPEROUS AND HAPPY LIFE !! .. " JAI NARASIMHA " ..
Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
Temple imagesஇதிகாசங்களும், சாஸ்திரங்களும் மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல நல்ல வழிகளை சொல்லி, வழி காட்டுகின்றன. அவற்றின்படி நம்மால் நடக்க முடிகிறதோ இல்லையோ, அதன்படி நடந்தவர்கள், நன்மையே அடைந்துள்ளனர் என்பதை, நாம் தெரிந்து கொள்வதன் மூலம், நம் வாழ்வை நெறிபடுத்திக் கொள்ளலாம். காசியில், தர்மபாலன் என்ற அந்தணர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல, நற்குணங்கள், நிறைந்தவர். அவரது மகன் தட்சசீலத்தில் இருந்த ஒரு வித்யாலயாவில், கல்வி கற்றுக் கொண்டிருந்தான். ஒருசமயம், குருகுலத்தில், குருவின் மகன், சிறு வயதிலேயே இறந்து விட்டான். அதுகுறித்து, மாணவர்கள் வருந்திப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எங்கள் வம்சத்தில் இப்படி யாரும் சிறு வயதில் இறந்ததில்லை... என்றான் தர்மபாலனுடைய மகன். இந்த விஷயத்தை, மாணவர்கள், குருவிடம் சொல்ல, அவர், அவனை அழைத்து விவரம் கேட்டார். அதற்கு அவன், எங்கள் பரம்பரையில், ஏழு தலைமுறைகளாக அனைவருமே முதுமையடைந்து தான் இறந்திருக்கின்றனர். சிறு வயதில் யாருமே இறந்ததில்லை... என்றான். அது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்த குரு, இதன் உண்மையை அறிந்து கொள்வதற்காக, ஆட்டு எலும்புகளை ஒரு பையில் சேகரித்து, காசியில் இருக்கும் தர்மபாலனின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தர்மபாலனிடம், உங்கள் பையன் திடீரென இறந்து விட்டான். இதோ பாருங்கள் அவன் எலும்புகள்... என்று சொல்லி, ஆட்டு எலும்புகளை காட்டினார். இதைக் கேட்ட தர்மபாலன் சிறிதும் கலங்காமல், சிரித்தபடியே, இவை என் பையனின் எலும்புகளாக இருக்க முடியாது; அவன் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டான். காரணம், எங்கள் பரம்பரையில், ஏழு தலைமுறைகளாக யாருமே, சிறு வயதில் இறந்தது கிடையாது... என்றார். குருநாதர், ஆச்சர்யம் அடைந்து, உண்மையை சொல்லி, உங்கள் பிள்ளையும் இதையே தான் கூறினான். இது எப்படி சாத்தியம்? எனக் கேட்டார். தர்மபாலன் சொன்னார்: இதில், வியப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தர்மத்தின்படி நடக்கிறோம்; தீயவர்களுடன் சேர்வது இல்லை, நல்லவர்களைப் பிரிப்பது இல்லை. பொய் சொல்ல மாட்டோம்; துறவிகள், அந்தணர்கள் மற்றும் ஏழைகள், பிச்சை கேட்போர், யாத்திரிகர்கள் ஆகியோருக்கெல்லாம், முழு மனதோடு, இனிமையாக பேசி, உணவு அளிக்கிறோம். நாங்கள் செய்யும் இத்தகைய நன்மைகள் தான், எங்களை வாழ வைக்கின்றன. அதன் காரணமாகவே, எங்கள் பரம்பரையில் யாரும், சிறு வயதில் இறப்பதில்லை. - இவ்வாறு அவர் கூறினார். உண்மையை உணர்ந்த குரு, தன் செயலை எண்ணி வருந்தியபடி, ஊர் திரும்பினார் என்பது கதை. நமக்காக இல்லாவிட்டாலும், நம் சந்ததிகளின் நன்மையை நினைத்தாவது, முடிந்தவரை, நல்லதை செய்ய முயற்சிப்போம்.

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் மனநலமும் .. உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் .. அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழவும் வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன்

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !!

சிவமந்திரத் தத்துவம் -
சிவனை நாம் வணங்கும்போது ‘ஓம் சிவாயநம’ என்ற மந்திரத்தை ஓதி வணங்குகிறோம் .. இம்மந்திரம் பல பெரிய தத்துவங்களை உணர்த்துகிறது .. இதில் உள்ள
சி - எனும் எழுத்து சிவனையும் .. 
வா - எனும் எழுத்து அம்பாளையும்
ய - எனும் எழுத்து மனிதர்களையும் 
நம - எனும் சொல் மும்மலங்களான மாயை .. ஆணவம் .. மற்றும் கர்வத்தையும் குறிக்கிறது ..
மனிதன் இம்மந்திரத்தைச் சொல்லி இறைவனையும் .. இறைவியையும் வேண்டும்போது .. கர்வம் .. ஆணவம் .. மற்றும் உலக மாயையிலிருந்து (ஆசை) விடுபடலாம் என்பர் .. 

“ சிவாய நம ஓம் “ என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை .. 
சிவனைப்போற்றுவோம் ! அவரது திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக .. 
ஓம் சிவாய நமஹ !! .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. 
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. "OM SHIVAAYA NAMAH "
Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

29.5.2015 பாண்டவ (பீமசேன) நிர்ஜல ஏகாதசி - சொட்டு நீரும் கூடாது
பீமனுக்கு ஒரு சந்தேகம். நேராக வியாசரிடம் போனான்.
''தாத்தா ,என் அண்ணா யுதிஷ்டிரன், அர்ஜுனன் மற்ற சகோதரர்கள், திரௌபதி எல்லோருமே ஏகாதசி விரதம் விடாமல் கடைப்பிடிப்பவர்கள். பீமா நீயும் உபவாசம் இரு என்கிறார்கள். எனக்கோ ஆகாரம் இல்லாமல் முடியாதே என்ன செய்வேன். இந்தமாதிரி ஏகாதசி விரதம் அனுஷ்டானம் எதுவுமே செய்யாமல் மோக்ஷம் போக முடியுமா?''
''பீமா உண்மையைச் சொல்வதானால், சுக்ல பக்ஷ, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி உபவாசம் இல்லாமல் தெய்வலோகம் செல்வது துர்லபமடா குழந்தாய்''.
''வியாச தாத்தா, இதைகேளுங்கள், நான் வாயு புத்திரன். வ்ருகோதரன். என் உடலில் ஜீர்ணசக்திக்கான வ்ரிக வாயு உள்ளது. அதற்கு தீனி போடாமல், அதாவது ஒரு வேளையாவது நான் தினமும் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. எப்படி உபவாசம் சாத்தியம்?''
அக்னியானது முதலில் விஷ்ணுவிடமிருந்து ப்ரம்மா, அவரிடமிருந்து ஆங்கிரசர், இந்த ரிஷியிடமிருந்து ப்ரிஹஸ்பதியிடம்,அப்பறம் அவரிடமிருந்து கடைசியில் தனது தந்தை சம்யுவிடம் பிறந்தது. தென் கிழக்கு வாயில் அதிபதி அக்னி.
அக்னி மூவகைப்படும். தவாக்னி, மரத்தால் படரும் தீ, ஜாடராக்னி, வயிற்றில் ஜீரணத்திற்காக உணவை எரிக்கும் வாயுவால் உண்டாகும் தீ. இதையே வ்ருகம் என்பது. இது தான் நான். என்பெயர் தான் வ்ருகோதரன் (வ்ருகம்+உதரம் (வயிறு) என்று உங்களுக்கு தெரியுமே. எனவே எதையாவது உண்ணாமல் என் வயிற்றின் தீ திருப்திடையாதே
மூன்றாவது வகை வடவாக்னி உஷ்ணம் குளிர் இரண்டும் மோதி உஷ்ணம் குளிர்ந்து பனியாவது.
தாத்தா நானும் எப்படியாவது ஒரு தடவையாவது ஏகாதசி விரதம் இருக்க முயல்கிறேன். எந்த நாளில் நான் விரதம் இருந்தால் மற்ற எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதமிருந்த பலன் கிடைக்கும். நானும் மோக்ஷம் அடைய வேண்டாமா?''
''பீமா, கலியுகத்தில் வேத சாஸ்திரம் முறையாக கடைப்பிடிக்க வழி இல்லை. புராண வழிபாட்டின் படி கிருஷ்ண பக்ஷமோ சுக்ல பக்ஷமோ ஏகாதசியில் உபவாசம் இருந்தால் போதும். நிறைந்த பலனை அது கொடுக்கும். அன்று பகவான் கிருஷ்ணனை நினை, பாடு, போற்று. அது போதும்.
''நிச்சயம் மாதத்தில் இரண்டு நாள், வருஷம் பூரா, சாப்பிடாமல் நான் இருக்கவே முடியாது தாத்தா, வேறு சுலப வழி எதாவது எனக்கு சொல்லுங்கள் . என் நிலைமையைத்தான் சொல்லிவிட்டேனே. ஏதாவது ஒரு நாள் உபவாசம் இருந்தால் அதைச் சொல்லுங்கள். எப்படியாவது அதை கடைப்பிடிக்கிறேன். ''
வேத வியாசர் யோசித்தார்.
''பீமா, இதைக் கேள். சூரியன் ரிஷப -மிதுன ராசியில் பிரவேசிக்கும்போது ஜலம் கூட குடிக்காமல் வைகாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி ஹஸ்தம் கூடிய அக்னி நக்ஷத்திர நிவர்த்தி
அன்று குளித்து பிரதி ப்ரோக்ஷண சுத்தி ஆசமனம் செய்து, உபவசாம் இருந்தாலே போதும்.
ஆசமனம் செய்யும் போது வலது உள்ளங்கையில் கடுகு முழுகும் அளவு ஜலம் மட்டுமே நாக்கில் படலாம்.
ஏகாதசி உபவாசம் காலை சூர்யோதயம் முதல் மறுநாள் த்வாதசி சூர்யோதயம் வரை.
இந்த ஒரு ஏகாதசி விரதம் மட்டும் ஒருவன் இருந்துவிட்டால் வருடம் முழுதும் 24 ஏகாதசி உபவாசம் இருந்த பலன் நிச்சயம். துவாதசி காலை குளித்து நித்ய கர்மாநுஷ்டானம் முடித்து யாராவது ஒரு பிராமணனுக்கு ஏதேனும் தானம் செய்து பிரசாதம் விநியோகித்து உபவாசம் முடிக்கலாம்.
பீமசேனா, ஸ்ரீ கிருஷ்ணனே என்னிடம் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
'' எவன் இப்படி சுக்ல பக்ஷ ஜ்யேஷ்ட வைகாசி நிர்ஜல ஏகாதசி உபவாசம் இருக்கிறானோ அவனது சகல பாபங்களும் விலகும். என்னை அடைவான்''
''பீமா, புரிகிறதா. கலியுகத்தில் இதை விட சுலப வழி இல்லை. இந்த நிர்ஜல ஏகாதசியை அனுஷ்டித்தவன் சகல புண்ய க்ஷேத்ரங்கள் சென்ற பலனையும் அடைகிறான். தான பலன்களைப் பெறுகிறான். வருஷம் பூரா ஏகாதசி உபவாசம் செய்த பலனும் சுலபத்தில் அடைகிறான். சகல சௌபாக்யமும் வந்தடையும்.
மரணாந்த காலத்தில் விஷ்ணு தூதர்கள் அவனை சகல மரியாதையோடு வைகுண்டம் கூட்டிச் செல்வர். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
பீமனோடு வியாசர் உரைத்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பாண்டவர்கள் சந்தோஷத்தோடு இந்த நிர்ஜல ஏகாதசி உபவாசம் கடைப்பிடித்தனர்.
இந்த நிர்ஜல ஏகாதசி (நாளை 29.5.2015 அன்று வருகிறது ) பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்று பெயர் பெற்றது. த்வாதசி அன்று பிராமணர்களுக்கு ஜல பாத்ரம் தானம் செய்வதும் வழக்கம்.
இதை எல்லாம் பிரம்ம வைவர்த்த புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.
நாம் இத் தகவல்களை ஸ்ரீலஸ்ரீ பக்தி வேதாந்த சுவாமிகளின் ஸ்ரீமத் பாகவதத்தில் கொள்ளை கொள்ளையாக சொல்லப்பட்டு அறிகிறோம்.
''கடை விரித்திருக்கிறார் சுவாமிகள், கொள்வார் நாம் தான் இல்லை''
இதை இன்று அவசரமாக எழுதுவதன் காரணமே, ஒருவேளை நாளை ஏகாதசி என்று தெரியாமலும், அப்படி ஏகாதசி என்று தெரிந்தாலும் அது பாண்டவ (பீமசேன) நிர்ஜல ஏகாதசி என்று தெரியாமல் இருந்தால், ஒரு நாள், உபவாசம் இருக்க முடிந்தால், உங்களுக்கு புண்யம் உண்டாகட்டுமே, அதைச் சொல்வதால் ஏதோ கொஞ்சம் புண்யம் இருந்தால் அது எனக்கும் கிடைக்கட்டுமே என்று தான்.
உடனே இதை நிறைய பேருக்கு சொல்லி வையுங்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் கூடிவருவதால் விஷ்ணு ஆலயம் சென்று பகவானைத் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் சகல சம்பத்துக்களும் பெற்று .. ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசியை ‘நிர்ஜலா ஏகாதசி’ என்பர் .. பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒருமுறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி .. குருதேவா! துன்பங்கள் பலப்பல அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது .. கலியுகத்திலோ கேட்கவே வேண்டாம் .. அடைமழைபோல நேரம் .. காலம் பாராமல் அனைவரையும் படுத்தும் இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள் என வேண்டினார் .. 

தர்மபுத்திரா ! எல்லாத்துன்பங்களையும் நீக்கக்கூடியது எகாதசி விரதம் மட்டுமே ! ஏகாதசியன்று உபவாசமிருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை .. சகலவிதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன என்று பதில் சொன்னார் வியாசர் .. 

அருகில் இருந்து இதைக்கேட்ட பீமன் .. உத்தமரான முனிவரே!
என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள் .. என் தாயும் .. மனைவியும் உட்பட .. எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது ? 

ஒருவேளை சாப்பிட்டு அடுத்தவேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது .. என்னைப்போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது? 
விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது (பீமனின் வயிற்றில் அதிகமான பசியைத் தூண்டும் இந்தத் தீ இருந்ததால் தான் அவன் விருகோதரன் என அழைக்கப்பட்டான்) ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது .. வருடத்துக்கு ஒரே ஒருநாள் என்னால் உபவாசம் இருக்கமுடியும் எனவே எனக்குத் தகுந்தாற்போல எல்லாவிதமான ஏகாதசிகளின் பலனையும் .. சுவர்க்கப் பிராப்தியையும் தரும் ஓர் ஏகாதசியை 
எனக்குச் சொல்லுங்கள் என வேண்டினான் .. 

இந்த நிர்ஜலா ஏகாதசியன்று தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் 
இருக்கவேண்டும் அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி என வழிகாட்டினார் வியாசர் .. வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜலா ஏகாதசி அன்று தண்ணீர்கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான் மறுநாள் துவாதசியன்று உணவு உண்டான் ..

அன்றுமுதல் அந்த துவாதசி ‘பாண்டவ துவாதசி ‘ என்றும் .. பீமன் விரதம் இருந்த ஏகாதசி ‘பீமஏகாதசி’ என்றும் அழைக்கப்படலாயிற்று .. துன்பங்கள் அனைத்தும் போக்கும் ஏகாதசி இது .. மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் சகல துன்பங்கள் யாவும் களைந்திடுவோம் .. 
ஓம் நமோ பகவதே ! வாஸுதேவாய நமோ நமஹ !! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SACRED DAY OF EKADASI .. MAY LORD VISHNU BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS .. 
'OM NAMO NAARAAYANAA'


Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று ‘ பாபஹர தசமி ‘ .. அனைத்து பாவங்களும் நீங்கி ..நல்வாழ்வு வாழ பிரார்த்திக்கின்றேன் .. இன்று சிவாலயம் செல்வது சிறப்பு .. கங்கையைப் பூஜித்தால் நம் அனைத்து பாவங்களும் நீங்கும் .. கங்காதேவியின் அவதார சரிதத்தைப் படிப்பதும் மேன்மையான பலன்களைப் பெற்றுத்தரும் .. அனைத்து உயிரினங்களின் பாவங்களைப்போக்கி அருளும் கங்காமாதாவின் திருஅவதார தினமும் இன்றுதான் ..
வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமிதிதியில் கங்காதேவி தேவலோகத்திலிருந்து பகீரதன் முயற்சியால் பூலோகத்திற்கு இறங்கி வந்தாள் என்று புராணம் கூறுகிறது .. 
கங்கைநதியில் அல்லது கங்காதேவியை நினைத்து நீராடினாலும் பாபங்கள் நீங்குவதுடன் அஸ்வமேத யாகம் செய்த பலன்கிட்டும் ..
ராவணவதத்தை முடித்துவிட்டுத் திரும்பிய ராமபிரான் போரினால் விளைந்த பாவங்களைத் தீர்க்க கைலாசபதியான பரமேஸ்வரனை இராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று ஸ்ரீகாந்தம் கூறுகிறது ..
இன்றைய தசமிதிதி பத்துவிதமான பாபங்களைப் போக்கும் 
‘தசஹரதசமி’ என்றும் .. ‘பாபஹரதசமி’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது .. மறுபிறப்பு இல்லாத நிலை பெறுவதற்கு 
பாவபுண்ணியங்கள் இல்லாமல் இருக்கவேண்டும் .. பாபம்செய்தால் நரகம் .. புண்ணியம் செய்தால் சொர்க்கம் .. இந்த இரண்டும் வீடுபேற்றுக்கு முட்டுக்கட்டைகள் என்று கூறப்படுவதால் நல்லதை நினை ! நல்லதை செய் ! நல்லதே நடக்கும் ! என்று கீதாசாரியன் கண்ணன் கூறியதுபோல தீவினைகள் செய்யாமல் நம்மால் முடிந்த அளவு அனைவருக்கும் நல்லது செய்தாலே மறுபிறவி இல்லாத வாழ்வு கிட்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது ..
பத்துப் பாபங்கள் -
வாக்கினால் செய்வது நான்கு .. சரீரத்தால் செய்வது மூன்று .. மனதால் இழைப்பது மூன்று .. ஆக இந்தப் பத்துப் பாபங்களையும் போக்கிக் கொள்ள இந்த பாபஹரதசமி உதவுகிறது ..
1) வாக்கினால் செய்வது நான்கு - அவை - கடுஞ்சொல் .. உண்மையில்லாதபேச்சு .. அவதூறாக பேசுவது .. அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது ..
2) சரீரத்தால் செய்வது மூன்று - நமக்குக் கொடுக்கப்படாத பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது .. அநியாயமாக பிறரைத் துன்புறுத்துவது .. பிறர் மனைவி மீது ஆசைப்படுவது
மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று - மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது .. மனதில் கெட்ட எண்ணங்கள் நினைத்தல் .. மனிதர்களிடம் பொய்யான ஆசை கொள்ளுதல் .. 
இவை அனைத்தும் நீங்க சிவபெருமானையும் .. திருமாலையும் .. கங்காதேவியையும் நினைத்து இனிமேல் பாபங்கள் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாபங்கள் நீங்கும் என்றும் சாஸ்திரம் கூறுகிறது ..
அனைத்து பாபங்களும் நீங்கி சிவபெருமானதும் .. சேது நாயகனதும் .. கங்காமாதாவின் ஆசிகளுடனும் புண்ணியமானதொரு வாழ்வைத் தொடங்குவோமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. ON THIS SACRED DAY OF 'DASAMI' WHO SO EVER OBSERVES A FAST .. HIS SINS COMPLETLY REMOVED AND OBTAINS A PROSPEROUS LIFE .. MAY THE GODDESS GANGA .. LORD SHIVA .. LORD VISHNU BLESS YOU FOR A HAPPY AND A PROSPEROUS LIFE .. 'OM NAMASHIVAAYA' ..
Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam