அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வெள்ளிக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் கூடிவருவதால் விஷ்ணு ஆலயம் சென்று பகவானைத் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் சகல சம்பத்துக்களும் பெற்று .. ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசியை ‘நிர்ஜலா ஏகாதசி’ என்பர் .. பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒருமுறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி .. குருதேவா! துன்பங்கள் பலப்பல அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது .. கலியுகத்திலோ கேட்கவே வேண்டாம் .. அடைமழைபோல நேரம் .. காலம் பாராமல் அனைவரையும் படுத்தும் இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள் என வேண்டினார் ..
தர்மபுத்திரா ! எல்லாத்துன்பங்களையும் நீக்கக்கூடியது எகாதசி விரதம் மட்டுமே ! ஏகாதசியன்று உபவாசமிருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை .. சகலவிதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன என்று பதில் சொன்னார் வியாசர் ..
அருகில் இருந்து இதைக்கேட்ட பீமன் .. உத்தமரான முனிவரே!
என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள் .. என் தாயும் .. மனைவியும் உட்பட .. எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது ?
ஒருவேளை சாப்பிட்டு அடுத்தவேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது .. என்னைப்போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது?
விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது (பீமனின் வயிற்றில் அதிகமான பசியைத் தூண்டும் இந்தத் தீ இருந்ததால் தான் அவன் விருகோதரன் என அழைக்கப்பட்டான்) ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது .. வருடத்துக்கு ஒரே ஒருநாள் என்னால் உபவாசம் இருக்கமுடியும் எனவே எனக்குத் தகுந்தாற்போல எல்லாவிதமான ஏகாதசிகளின் பலனையும் .. சுவர்க்கப் பிராப்தியையும் தரும் ஓர் ஏகாதசியை
எனக்குச் சொல்லுங்கள் என வேண்டினான் ..
இந்த நிர்ஜலா ஏகாதசியன்று தண்ணீர்கூட அருந்தாமல் விரதம்
இருக்கவேண்டும் அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி என வழிகாட்டினார் வியாசர் .. வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜலா ஏகாதசி அன்று தண்ணீர்கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான் மறுநாள் துவாதசியன்று உணவு உண்டான் ..
அன்றுமுதல் அந்த துவாதசி ‘பாண்டவ துவாதசி ‘ என்றும் .. பீமன் விரதம் இருந்த ஏகாதசி ‘பீமஏகாதசி’ என்றும் அழைக்கப்படலாயிற்று .. துன்பங்கள் அனைத்தும் போக்கும் ஏகாதசி இது .. மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் சகல துன்பங்கள் யாவும் களைந்திடுவோம் ..
ஓம் நமோ பகவதே ! வாஸுதேவாய நமோ நமஹ !!
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SACRED DAY OF EKADASI .. MAY LORD VISHNU BLESS YOU WITH BEST HEALTH .. WEALTH AND HAPPINESS ..
'OM NAMO NAARAAYANAA'
Swamiye Saranam
Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam
No comments:
Post a Comment