PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
சுவாமியே சரணம் ஐயப்பா...அனைவருக்கும் அன்பான செவ்வாய் காலை வணக்கங்கள். 


அவன் இடுகிறான் அன்றாடம் அன்னம்!
அவனை நினந்துருகிப் பக்தி செய்வோம் இன்னும்!
மனம் இருப்பதோ அவனிடம் என்றும்
மங்காத அருளைத் தருகிறான் என்றும்
கணமும் அவனடி நினைக்கும் வேளை
குணக் கேடுகள் தீர்ப்பதவன் வேலை
மன மன்றில் நீயே நடமாடுகின்றாய்
தினம் என் கனவில் தடம்பதிக்கின்றாய்
எது வந்தபோதும் இனி உந்தன் எல்லை
விதி மாறக் கூடும் கதியேதும் இல்லை
குருநாதன் நீயே வழிகாட்டுவாயே
சருகான வாழ்வில் ஒளி கூட்டுவாயே
.

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM.......PANVEL BALAGAN POTRI POTRI....


 Image result for ganesh images
People may wonder how Ganesha cures diabetics.  Read this intereting article.

Gajananam Bhoota Ganadi Sevitam,
Kapittha Jambu phalasara bhakshitam
Umasutam Shoka Vinasha karanam
Namami Vighneswara pada pankajam”


“Oh Elephant-faced, worshiped by the existing beings,
of all living beings, tasting the elephant apple (kaith) and jambolana (jamun),
the Son of Uma, destroyer of grief,
I bow to the lotus feet of Ganesh who is lord of all.”

Many l of us have come across this powerful mantra of Lord Ganesha.  The meaning of this mantra is also widely known.  Now let us look at this mantra in another context and you will see the message of surviving today Diabetes.

Gajananam means = very big,  very much, very high, plenty, sufficient
Bhoota means = having bitter taste  (example, the taste of bitter guard Karela )
Ganadi means = in total, or in totality, from top to bottom, from bottom to top etc
Sevitam, means =  if consumed, if drunk, or if eaten
Kapittha means = the stem of Lotus (lotus flower)
Jambu phala means =  fruit of jambun or jamun (one kind of fruit, very famous and having medicinal values)
sara means = every, all, juice
bhakshitam =  if consumed, if eaten, if drunk etc
Uma means = sweet
sutam means = which takes birth, taken birth from, taken birth of
Shoka means =   disease, illness
Vinasha karanam means =  the destroying factor, or the destroying element
pada pankajam means = both the legs
Vighneswara means =  to take immense care, take extra ordinary care (yourself to remove all odds)
Namami means = keeping clean, keeping neat
Now,  let us combine this, understand  and study the message.

The first verse of the mantra directs saying – Take the bitter guard (including roots, stems, flowers, and bitter guard), stem of lotus flower, and the jamun fruit,  in equal quantities and make the juice of it.  Now consume the same.  The word gaNAdi gives us the meaning for taking these items in ‘equal quantity’

Then what will happen -

Umasutam Shoka Vinasham, means the illness, the disease, the sickness which takes birth from uma ( here to be read as from sweet), will be vinASa kAraNam, means it will vanish.  Here the shoka , which means the roga or the disease we get from sweet ..?  No doubt, it is Diabetes.


Also the mantra states those who are having Diabeties, they are warned to be careful and protect their legs (ie, keep it very neat, clean and without dust, mud.)

Regular Chanting of this mantra keeping the bhakti or divine spirit of Ganesha in mind, no doubt, it will do away all hurdles in life.  But if one chants this mantra with the thinking explained above, it will result into destroying the Diabetes.   Thus, this powerful mantra is not only to praise Lord Ganesha but if one is chanting this mantra he will be cured from Diabetes.
SWAMIYE SARANAM IYYAPPA...
GURUVE SARANAM SARANAM....
PANVEL BALAGAN PATHAM POTRI POTRI..

GOOD MORNING FRIENDS....TODAY WE ALL WISH THE 30TH WEDDING ANNIVERSARY OF SWAMY BALU......WISH HIM THE LORD PANVEL BALAGAR SHOWER ALL HAPPINESS..
WE REMEMBER KANCHI SANKARACHARYA A LOVABLE INCIDENT ..NARRATED IN TAMIL FOLLOWS...
அநுஷம் முடிந்த மறுநாள். காஞ்சியில் ஏராளமாக பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி.
“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று பாட்டி கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”-- மகா பெரியவா.
“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?…அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
''பிடிப்பு இருக்கட்டும்னு குடுத்தேன் '' சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது?
சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் இப்படி ஒரு விண்ணப்பமா!
“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போன புறமா இருக்கே.!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.
“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட என் வீடு ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..”
பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
பாட்டிக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக் கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.
பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….
“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை…”
“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
ருத்ர முகம்!
“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.
“கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ?
எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? 
நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?”
குண்டுகளாக துளைத்தன!
பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! 
மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?
“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

swamiye saranam iyyappa...guruve saranam saranam,,,,panvel balagan patham potri potri...



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT SATURDAY AND MAY THE BLESSINGS OF LORD SHIVA ALWAYS BE WITH YOU AND SHOWER YOU WITH SUCCESS .. PROSPERITY & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. மனநலமும் . உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

தெய்வங்களிலே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் மஹேஸ்வரர் .. உள்ளம் உருகி உண்மையான அன்போடும் 
பக்தியோடும் ஐயனை வேண்டினால் வேண்டும் வரம்தருபவர் .. 

சிவபெருமான் அன்பிற்கு அடிபணிகிறார் .. செருக்குற்றவரைச் சீறி அழிப்பார் .. அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள்மிக்கவர் .. இருபது தோல்களையுடைய சிவபக்தன் .. இசைக்கலைஞன் .. தன் இசைத்திறத்தால் இறைவனையே தன்வசப்படுத்தும் ஆற்றல்மிக்கவன் .. அப்படிப்பட்ட “ இராவணனும் “ செருக்குற்றபோது இறைவன் அவனைத் தண்டித்தான் .. 

காலம் தவறாது உயிர்களைக் கொள்ளும் எமன் .. மார்க்கண்டேயரது உயிரை எடுக்க முற்பட்டபோது தன்னையே சரணடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்த கால்களை உடையவன் சிவனே ! 

கைலாயத்தில் அப்பனும் அம்மையும் இருக்கும்போது அசுரன் ஒருவன் மகாதேவரை வரம்வேண்டி தவம் இருந்தான் .. அசுரனின் பக்திகண்ட மகாதேவர் அசுரன்முன் தோன்றி என்ன வரம்வேண்டுமென கேட்டார் .. அதற்கு கர்வம் கொண்ட அசுரனோ மகாதேவரை தனக்கு சேவகனாக இருக்குமாறு வரம்கேட்க அசுரனின் தவத்தால் மகிழ்ந்த மகாதேவன் அசுரனுக்கு சேவனாக இருந்தார் ..

அகிலத்தை ஆளும் ஆதிமூலர் சேவகராக இருப்பதைக் கண்ட ஆதிசக்தி கோவம் கொண்டாள் .. அசுரகுலத்தையே அழித்துவிடுவேன் என்றாள் .. அசுரனும் பயந்து தன் தவறை உணர்ந்து தான்பெற்ற வரத்திலிருந்து மகாதேவருக்கு முக்தி அளித்தான் .. 

அப்பொழுது அன்னை பார்வதிதேவி ஐயனிடம் யாராவது மகாதேவர் ஆகவேண்டுமென தவமிருந்தால் அவ்வரத்தையும் கொடுப்பீர்களா .. ? என்றாள் .. அதற்கு ஐயனே ! அப்பக்தனின் பக்தி உண்மையானதாக இருந்தால் அவ்வரத்தையும் நிச்சயம் கொடுப்பேன் என்றார் பக்தர்களின் மேல் கருணைகொண்ட சர்வேஸ்வரன் .. 

ஈஸ்வரனைப் போற்றுவோம் ! சகல நன்மைகளையும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !


SWAMYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....



GOOD MORNING DEAR FRIENDS ..WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE ELIMINATE ALL NEGATIVE FORCES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH WISDOM .. STRENGTH .. & PROSPERITY .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சஷ்டித் திதியாகிய இன்று கந்தப்பெருமானைத் துதித்து சகலதடைகளையும் நீக்கி தங்கள் வாழ்வில் வெற்றியையும் .. வசந்தத்தையும் .. நல்லாரோக்கியத்தையும் தந்தருளும்படி பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

இப்பிறவிக்குத் தேவையான பொருட்செல்வத்தையும் .. மறுபிறவிக்குத் தேவையான அருட்செல்வத்தையும் தன் 
பன்னிருகரங்களாலும் வாரிவழங்கும் வள்ளல் முருகப்பெருமானே ! முருகநாமத்தைச் சொன்னால் முன்வினைப்பாவம் நீங்கி புண்ணியம் சேரும் .. 

ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவமலம் வலுவிழந்து ஆன்மபரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தசஷ்டி விரதமாகும் .. 

கந்தசஷ்டி விரதத்தின் மஹிமையால் அகப் ‘பை’ என்னும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் .. 

கவசம் என்பது ஆபத்தான காலத்தில் எமது உடலை பாதுகாக்க அணியும் ஒரு உடை அல்லது பாதுகாப்புதரும் கருவி எனகூறலாம் .. ஆனால் .. இங்கு கந்தசஷ்டிகவசம் எம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் .. தீமைகள் .. மும்மலதோஷங்களின் தாக்கங்களில் இருந்தும் எம்மைக் காத்தருளுகின்றது .. 

கந்தசஷ்டி கவசம் .. கந்தரனுபூதி .. கந்தரலங்காரம் ஆகிய இறைசிந்தனைகள் நிறைந்த பக்தி பாசுரங்களைப் படித்தோ கேட்டோ அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக .. 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA..PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
“ தேய்பிறை பஞ்சமித் திதியாகிய “ இன்று கூப்பிட்டகுரலுக்கு ஓடோடிவந்து அன்பிலும்சரி .. ஆதரவிலும்சரி . ஒரு பெற்றதாயைப்போன்று பாசமிக்கவளுமாகிய ” அன்னை வராஹிதேவிக்கு “ உகந்த நாளுமாகும் .. 
அன்னையைப் பிரார்த்தித்து தங்களனைவரது எண்ணிய எண்ணங்கள் யாவும் ஈடேறவும் ..வல்வினைகள் அகலவும் .. வெற்றி.. புகழ்..வந்துசேரவும் வாழ்த்துகிறேன் அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம்
 ஸ்யாமளாயை வித்மஹே ! 
ஹல ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !! 

சப்தகன்னியர் ஏழுபேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன் ! பஞ்சமித் தாய் ! வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள் .. அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்தகன்னியர் ஆகும் 

சப்தகன்னியர் என்னும் .. பிராம்மி .. மகேஸ்வரி .. வைஷ்ணவி .. கௌமாரி .. வராஹி .. இந்திராணி .. மற்றும் சாமுண்டி இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் இந்த வராஹி .. மனித உடலும் வராஹி பன்றிமுகமும் கொண்டவள் .. கோபத்தின் உச்சம் தொடுபவள் .. 

ஆனால் அன்பில் மழைக்கு நிகரானவள் .. இவளது ரதம் கிரிசக்கர காட்டுபன்றிகள் இழுக்கும் ரதமாகும் .. 
மனதால் பிறருக்கு தீங்குநினைக்காமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பவர்களுக்கும் ..
திருவாதிரை .. சதயம் .. சுவாதி .. பரணியில் பிறந்தவர்களுக்கும் வராஹி அன்னையின் அனுக்கிரகம் சுலபமாகக் கிட்டும் .. 

அன்னையை வழிபடத்தொடங்கியதும் நம்கூடவே இருந்து பழகி நமக்கு துரோகம் செய்தவர்கள் படிப்படியாக நம்மைவிட்டு விலகிச்சென்றுவிடுவார்கள் .. நாம் அறியாமையால் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படும் நல்ல ஆத்மாக்கள் நம்மோடு பழக ஆரம்பிப்பார்கள் .. எதிர்பாராத உதவிகள் கிட்டும் .. எதெற்கெடுத்தாலும் புலம்புவதும் .. பயப்படுவதும் நம்மைவிட்டு விலகிச்சென்றுவிடும் .. வராஹி மந்திர ஜபத்தின் மஹிமையால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓர் பாதுகாப்புக் கவசமாக பாதுகாக்கப்படுவர் .. 

பின்வரும் அன்னையின் 12 பெயர்களோடு வராஹி சித்தரின் பெயரையும் சேர்த்து ( 13) ஜபிக்கத்தொடங்குங்கள் . 
ஓம் ரீங் வாத்தியாரையா ..
பஞ்சமீ ..
தண்டநாதா ..
சங்கேதா ..
சமேஸ்வரீ ..
சமயசங்கேதா ..
வராஹி ..
போத்ரிணீ ..
சிவை ..
வார்த்தாளி ..
மஹாசேனா ..
ஆக்ஞாசக்ரேஸ்வரீ ..
அரிக்நீ .. 

இவைகளை ஒருமுறை ஜபித்தாலே ’வராஹி பரணியை ’
ஒருமுறை பாடியமைக்கான பலன்கிட்டும் ..
வராஹி அம்மனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் வராஹி சிவசக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. வளர்க வராஹி அருளுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" PANJAMI DAY " MAY GODDESS VARAAHI PROTECT YOU AGAINST ALL ODDS AND GUIDES YOU ALONG THE RIGHT PATH 
AND MAY YOU BE RELIEVED FROM ALL EVIL FORCES TOO .. . 

" JAI MAA VARAAHI "


GOOD MORNING DEAR FRIENDS .. MAY THIS DIVINE ' SADURTHI ' BRINGS YOU WITH SUCCESS IN ALL YOUR ENDEAVORS AND MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE TOO .. " JAI GANESHAAYA NAMAHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்காரவடிவமாக விளங்குபவருமான ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது .. 

தங்களனைவரது சங்கடங்கள் யாவும் நீங்கி ஆயுள் .. அபிவிருத்தி .. பதவி உயர்வு .. மற்றும் வாழ்வில் சந்தோஷம் என்றும் மிளிரவும் விக்னவிநாயகரைப் போற்றுகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

ஸ்ரீ விநாயகமூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்தபோதிலும் .. சங்கடஹர சதுர்த்திவழிபாடு மிகமிக முக்கியமானது .. ஒவ்வொரு பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான தேய்பிறை சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி திதியாகும் .. 

சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப்பெருமானை நினைந்து கடும்தவம் செய்ய .. சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் .. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது .. அந்த நன்னாளைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம் .. 

”சங்கடம்” என்றால் - இக்கட்டு .. தொல்லைகள் .. கஷ்டங்கள் .. தடைகள் என்று அர்த்தம் .. 
“ ஹர “ என்றால் - நீக்குவது .. அழித்தல் என்று பொருள் .. 

சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகரின் திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் .. நெற்றியில் முழுநிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறுபெற்றான் .. விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு .. மேலும் இந்த சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்கவேண்டிய முறையும் உண்டாகியது .. 

வாழ்வில் கஷ்டநஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழ விக்னவிநாயகரைப் பணிவோமாக ! 
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMI SARANAM...GURUVE SARANAM




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM ALL SINS AND EVIL SPIRITS AND SHOWER YOU WITH PEACE AND HAPPINESS ..
" OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பாபங்களை நீக்குவதுடனும் .. மகத்தான புண்ணிய பலனையும் தந்து நம் வாழ்வினை ஒளிமயமாக்கச்செய்யும் கலியுகவரதனாம் 
கந்தப்பெருமானைப் பிரார்த்திப்போமாக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

பிரணவச் சொரூபியான முருகப்பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் .. ஒருங்கே நிறைந்துள்ளது .. 
காக்கும் கடவுளான - முகுந்தன் .. 
அழிக்கும் மூர்த்தியான ருத்ரன் ..
படைக்கும் கடவுளான - கமலோற்பவன் 
ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்றுஎழுத்துகள் ஒன்றிணைந்ததே “ முருகா “ என்னும் 
திருநாமம் .. 

“ துதிப்போர்க்கு வல்வினை போம் ! துன்பம் போம் ! நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தசஷ்டி கவசந்தனை .. அமரர் இடர்தீர அமரம் புரிந்தத குமரனடி நெஞ்சே குறி .. 

பொருள் - துதிப்போர்க்கு வலியவினைகள் போகும் .. பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களையும் இப்பிறவியிலும் .. இனிவரும் பிறவிகளிலும் அனுபவிப்போம் .. தீவினைகள் துன்பமாகவும் . நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறி பயன் தந்துகொண்டிருக்கின்றது .. இதனைத் துதிப்போர்க்கு தீவினைப்பயன்களான துன்பங்கள் போகும் .. என்பதனை 
“ வல்வினை போம் ! துன்பம் போம் ! என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள் .. மனம் .. மொழி 
மெய் என்னும் முக்காரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் யாவும் கிட்டும் .. 

இறைவன் எங்கு நிறைந்திருந்தாலும் அடியவர்களுக்கு திருக்கோவில்களே இறையருளைத் தருவதைப் போல் இவன் முழுவதும் அழகன் என்றாலும் இவன் திருவடிகளே அடியார்கள் வேண்டுவதை எல்லாம் தருவதால் ” குமரனடி 
நெஞ்சே ! குறி “ என்று அருளியுள்ளார் ! 

முருகனின் திருவடிகளையே நெஞ்சில் நிறுத்தி நாமும் சஷ்டிகவசத்தை பாராயணம் செய்து தீவினைப் பயன்களை
அகற்றி வாழ்வில் மகிழ்ச்சியும் .. நிம்மதியும் பெறுவோமாக! “ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED ON THIS DIVINE ' SOMVAR ' AND SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " 
JAI BHOLE NATH .. 


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று தாங்கள் வேண்டும் வரங்கள் யாவும் தந்தருள்பவராகிய சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. ஆலயம் சென்று சிவனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. நல்லாரோக்கியமும் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

திங்கட்கிழமை தோறும் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் ஒன்று “ சோமவார விரதமாகும் “ இந்த விரதத்தை சந்திரபகவான் அனுஷ்டித்ததால் இவ்விரதத்திற்கு சோமவார விரதம் எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர் .. 

“ சோமன் “ என்றால் சந்திரன் .. சந்திரனை தலையில் சூடிய சிவனை “ சோமசுந்தரர் “ என்பர் . கணவனும் .. மனைவியும் ஒற்றுமையுடன் தீர்க்காயுளுடனும் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் .. இந்நாளில் தம்பதி சமேதராய் சிவாலயம் சென்று வழிபடுவது சிறப்பு .. 

வாழ்வில் தவறுசெய்யாத மனிதர்களே இல்லை .. இதற்காக மனம்வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து இனி அவ்வாறு தவறு செய்யாமல் இருக்க உறுதி எடுத்தால் அவர்களது பாவங்கள் களையப்படும் என்பது நம்பிக்கை .. 

பதவி உயர்வுக்காகவும் இந்தவிரதத்தை அனுஷ்டிக்கலாம் சங்கு லக்ஷ்மிகடாக்ஷ்முடையது .. எனவே இந்நாளில் செல்வ அபிவிருத்திக்காக சிவனுக்கு சங்காபிஷேகம் செய்கின்றனர் .. அதுமட்டுமல்ல சிவபெருமான் அபிஷேகப்பிரியர் .. அன்று அவருக்கு சங்காபிஷேகம் செய்வதால் சமுதாயத்திற்கு நாம் நன்மை செய்தவர்களாவோம் ! 

இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும் .. மழை தேவையான அளவுக்குப் பொழியும் .. என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்கமாகும் .. 

“ சிவாய நமஹ “ என்று சிந்திப்போர்க்கு .. அபாயம் ஒருநாளும் இல்லை .. உபாயம் ஒன்றே ஏற்படும் “ என்று நம்முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள் .. 

சிவனைப் போற்றுவோம் ! ஈசனுக்கு பிரியமானவராக மாறுவோம் ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

Blessings to all of you GS







swamiye saranam iyyappa...


 


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND MAY THE DIVINE BLESSINGS OF LORD SURYA BE UPON YOU AND MAY YOU BE BLESSED WITH FAME .. COURAGE & WILLPOWER .. " JAI SURYA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நம் மன இருளைப் போக்கி
நல் ஆரோக்கியவாழ்வைத் தந்தருளும் சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்கள் அனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி எல்லா நலங்களும் பெறுவீர்களாக ! 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

தலைமைப்பண்பு .. ஆளுமைத்திறன் .. புகழ் .. தந்தை .. தைரியம் .. மனோவலிமைக்கு சூரியனே அதிபதி .. 

இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவமாகத் திகழ்கிறான் .. ஆதவனை வணங்குபவர்களுக்கு சுடர்மிகும் அறிவுடன் சுட்டும் விழிச்சுடரான கண்பார்வையும் கிட்டும் .. மாறுபட்ட 
குணாதியங்கள் உள்ள பலபேரை ஒரேதிசையில் வழிநடத்திச் செல்லக்கூடிய தலைமைகுணம் கிடைக்கும் .. 

நேர்மையான வழியை மட்டுமே மனம் எப்போதும் சிந்திப்பதால் நிமிர்ந்த நடையும் .. நேர்கொண்டபார்வையும் ..
புவியில் யாருக்குமே அஞ்சாத வைர நெஞ்சமும் கொண்டவராகத் திகழ்வார்கள் ..

விவஸ்தானாதி தேவஸ் ச தேவதேவோ திவாகர ! 
தன்வந்தரிர் வ்யாதிஹர்தா தத்ரு குஷ்ட விநாசன ! 

இந்தவரிகள் கூறும் பொருள் - 
ஓ ! ஆதிதேவனான சூர்யபகவான் வியாதியைப் போக்கும் தன்வந்திரியின் உருவம் கொண்டவன் .. சொறி .. சிரங்கு .. குஷ்டம் எனும் பெருவியாதி போன்ற நோய்களையும் .. அடியோடு போக்குபவன் ..

ஆதித்யஹ்ருதய மஹா சக்திவாய்ந்த சூரியமந்திரம் .. இராவணனுடனான போரின்போது இராமபிரான் மனச்சோர்வு பெற்றபோது அகத்திய மாமுனிவரால் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரம் .. 

சூரியனின் ஆற்றலை .. திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்துவந்தால் .. 
பகைகள் விலகும் .. தடைகள் நீங்கும் .. வேலை.. தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமல் 

சூரியனைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெற்றிடுவோம் .. ஓம் சூர்யா நமஹ ..வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ வைகாசி விசாகத்திருநாள் நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. இந்நன்நாளில் தங்களனைவரது சங்கடங்கள் யாவும் நீங்கப்பெற்று .. வாழ்வில் அனைத்து நலங்களும் .. மகிழ்ச்சியும் வந்துசேர்ந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி !
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

வைகாசி விசாகம் என்பது முருகன் அவதாரம் செய்த நாளாகும் .. வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை “ வைகாசி பூர்ணிமா ”
அல்லது “ வைசாகி பூர்ணிமா ” என்று அழைப்பார்கள் .. பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம் பிரகாசமாக இருக்கும் .. ஆகாயவெளியில் வெள்ளியைப்போல் மின்மினுக்கும் சந்திரன் வெளிவரும்போது ஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப்போன்ற உணர்வு ஏற்படுகின்றது .. இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும் .. 

’ விசாகன் ‘ எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 
” விசாகம் “ என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக் கருதப்படுகிறது .. விசாக நட்சத்திரத்தன்று ஆறு நட்சத்திரங்கள் ஒன்றுசேர்வதினால் ஆகாயம் ஒரு நுழைவாயிலைப்போலத் தோன்றும் .. 

வைகாசி விசாகதினம் சைவ .. வைஷ்ணவ .. மற்றும் புத்தமதத்தினருக்கும் முக்கியமானது .. சைவர்களைப் பொறுத்தவரை முருகன் அவதரித்த தினம் ..
வைஷ்ணவர்களுக்கு அது பெரியாள்வார் ஜெயந்தி ..
புத்தமதத்தினருக்கு அற்புதங்கள் நிகழ்த்திய .. ஞானம் பெற்ற புத்தமகான் மஹாசமாதி அடைந்த தினமாகும் ..

முருகன் பிறப்பை “ ஷண்முக அவதாரம் “ என்கின்றனர் ..
சூரபத்மன்.. சிங்கமுகன் .. மற்றும் தாரகன் என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்ட முருகன் 
அவதரித்த தினமாகும் .. அந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலன்பெற்று இருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர் .. தேவர்கள் சிவபெருமானை வேண்டிட .. சிவனும் ஆறுமுகனைப் படைத்தார் .. 

தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறுநெருப்புத் துளிகளை வெளியேற்ற .. அது ஜொலித்தவாறு உலகில் வெளிவந்தது .. அந்தபொறிகளை வாயுவும் .. அக்னியும் கொண்டுபோய் கங்கையில் சேர்க்க அது அவற்றை சரவணப்பொய்கையில் தாமரைமலர்களும் .. கோரைப்புற்களும் இருந்த இடத்தில் வெளித்தள்ளியது .. 

தாமரையை நல்ல இதயம்போலவும் .. நாணல்புதரை உடலின் நரம்புகள் போலவும் தத்துவார்த்தமாகக் கருதவேண்டும் .. அந்த நதி தெய்வீக உருவமாக இருந்ததினால் தாமரையும் மற்றும் நாணல்புதர் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்றிணைந்துள்ள தத்துவம் விளங்கும் .. 

ஒருவரின் ஆறுகுணங்களான - உடல் .. மூச்சு ..மனம் .. உணர்வு .. விவேகம் .. மற்றும் அகம்பாவங்களைக் குறிப்பவையே முருகனின் ஆறுமுகங்கள் .. 

ஏரியில் விழுந்த அந்த ஆறுபொறிகள் ஆறுகுழந்தைகளாக
மாறிவிட ..ஆறுகிருத்திகைகள் எடுத்து வளர்த்தன .. அந்த ஆறுகுழந்தைகளையும் சக்திதேவி எடுத்து அணைக்க .. அந்த ஆறுகுழந்தைகளும் .. ஆறுமுகமும் .. பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே குழந்தையாக மாறின ... அதுவே வைகாசிமாத பூர்ணிமாவில் தெய்வீகம் பொருந்திய “ ஷண்முக அவதாரம் “ எனக்கூறப்படுகிறது .. 

“ அறுவமும் உருவமாகி .. அனாதியாய் பலவாய் ஒன்றை பிரும்மமாய் நின்ற ஜோதி பிலம்பதோர் மேனியாக கருணைக்கோர் முகங்கள் ஆறும் .. கரங்கள் பன்னிரெண்டு கொண்டே ஒருதிருமுருகன் வந்திங்கு உதித்தானாம் உலகம் உய்ய ! அவனே ஆறுமுகன் ” .. !! 
( காசியப்ப சிவாச்சாரியார் அருளியது ) 

பொருள் - உலகத்திற்கு விமோசனம் தருவதெற்கென்று முருகன் ஆறுமுகங்களுடனும் .. பன்னிரெண்டு கைகளுடனும் .. ஒன்றுக்கு மேற்பட்டவராகவும் .. உருக இல்லாத உருவத்துடனும் .. ஒளிவெள்ளம்போன்ற பிரும்மனாக அவதரித்தார் .. 

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் தான் சாஸ்திர ஜோதிடக்கலைக்கும் அதிபதி .. எனவே அவரது அவதார திருநாளாகிய இன்று அவரைப் போற்றி சகல நன்மைகளையும் பெறுவோமாக .. 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED ON THIS ' VISAKAM ' WITH BEST HEALTH .. STRENGTH AND HAPPINESS .. 
" OM MURUGA "


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A 
" HAPPY NARASIMHA JAYANTI " AND MAY HE PROTECT YOU FROM ALL EVIL SPIRITS AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND SUCCESS IN YOUR CAREER TOO .. 
" JAI SHREE NARASIMHA DEV " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..

” ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி நல்வாழ்த்துகளும் ” உரித்தாகுக .. 
‘ எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன் “ என்று நமக்கு உணர்த்தவே பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தி அவதரித்த நாள் இன்றாகும் .. வைகாசிமாதம் சதுர்த்தசி திதியும் .. சுவாதி நட்சத்திரமும் கூடிய இந்நாளே நரசிம்ம ஜெயந்தி நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது .. 

இந்நாளில் தங்களனைவரது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து வெற்றிபெறவும் .. வேண்டிய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறவும் .. ஸ்ரீநரசிம்மனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே ! 
தீக்ஷ்ணதம் ஷீட்ராய தீமஹி ! 
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !! 

மஹாவிஷ்ணு இரண்ய கசிபுவின் கொடுமையில் இருந்து பிரகலாதனை காப்பாற்றவும் .. இரண்ய கசிபுவின் அறியாமையைப் போக்கவும் எடுத்த அவதாரமே ! நரசிம்ம அவதாரமாகும் .. 

பக்தனோ ! பகைவனோ ! யாராயினும்சரி .. எவர் காட்டிய இடத்திலும் தான் இருப்பதை மெய்ப்பிப்பதற்காகவே நரசிம்மமூர்த்தி தூணிலிருந்து தோன்றுகிறார் .. அவரது அவதார தோற்றமே உக்கிரம்தான் .. 

“ நரசிம்மரை நம்பியவர்களுக்கு நாளை என்று இல்லை “ என்பதை நிரூபித்துக் காட்டியவர் .. 

திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே ! திடீரெனத் தோன்றிய அவதாரமாகும் .. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும் .. இடது கண்ணில் சந்திரனும் ..
புருவமத்தியில் அக்னியும் உள்ளனர் .. நரசிம்மன் என்றாலே ! ஒளிப்பிழம்பு ! என்று அர்த்தம் .. 

மிக ஆபத்தான சூழ்நிலையிலும் .. சங்கடமான அச்சத்தில் இருக்கும் தருவாயிலும் ஸ்ரீநரசிம்மப் பெருமாள் ஸ்துதியை இதயப்பூர்வமாகவும் .. நம்பிக்கையுடனும் .. உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்துகொண்டால் ஓடோடிவந்து காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த உண்மை ..

நரசிம்மனைப் போற்றுவோம் ! சகலவெற்றிகளையும் அடைவோமாக ! வெற்றி நிச்சயம் ! 
“ ஓம் நரசிம்ஹாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
.


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" PRADOSHAM " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HE REMOVE ALL YOUR SINS AND NEGATIVE KARMA AND ILLUMINATE YOUR LIFE WITH POWER AND STRENGTH .. 
" OM NAMASHIVAAYA " JAI BHOLEY NATH " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நன்னாளில் பிரதோஷமும் சேர்ந்து வருவது சாலச் சிறந்தது .. 

பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரும் .. நம்பாவங்களை நீக்கி அனைவரது மனக்கவலைகளைப் போக்குபவருமாகிய ஈஸ்வரரைத் துதித்து தங்களனைவரது எண்ணங்கள் யாவும் இனிதே ஈடேறவும் ..சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவும் 
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!

பிரதோஷ வழிபாடு சிவவழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான வழிபாடாகும் .. தோஷம் என்ற வடமொழிச்சொல்லிற்கு - குற்றம் என்று பொருள் .. பிரதோஷம் என்றால் - குற்றமற்றது என்று பொருள் .. குற்றமற்ற இந்தப்பொழுதில் 
( மாலை 4.30 - 6.00 மணிவரை ) ஈசனை வழிபட்டோமேயானால் .. நாம் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம் .. 

உலகை காக்கும் பொருட்டு ஆலகாலவிஷத்தை தான் உண்டு நம்மைக் காத்தவேளையே பிரதோஷ வேளையாகும் .. இவ்வேளையில் ஆலயம் சென்று நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கூடாக சிவனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு தரிசிப்போருக்கு இகபர சௌபாக்கியங்களையும் பெறுவர் .. 

பிரதோஷகாலம் சூரிய அஸ்தமனத்தோடு தொடங்குகிறது 
இவ்வேளையில் பரமேஸ்வரனைத் தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும் .. அதாவது ஈஸ்வரனைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்
உலகம் ஒடுங்குகிறது .. மனம் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே பகலின் முடிவு .. சந்தியாகாலத்தின் ஆரம்பம் .. சிருஷ்டிமுடிவுபெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக்கொள்ளும் நேரம் .. 

வில்லைவிட்டு அம்பு சென்றுவிட்டாலும் மந்திர உச்சாரணபலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம்செய்வது போல ஈஸ்வரன் தான் விட்டசக்தியை எல்லாம் தன்வசப்படுத்திக் கொள்கிறான் .. உலகசக்தி முழுவதையும் தன்வசம் ஒடுக்கிக்கொண்டு நர்த்தனம் செய்யும் வேளையில் ஈசனை பிறையணிந்த பெருமானாக 
தேவியோடும் .. முருகனோடும் .. சோமஸ்கந்தமூர்த்தியாக தரிசித்து சகலநலன்களையும் பெறுவோமாக .. அலுவலகபணியில் உள்ளோர்கள் இந்நேரத்தில் (4.30-6.00) ஒருவிநாடி “ ஓம் நமசிவாய “ என்று மனதளவிளாவது நினைத்துக் கொள்வீர்களாக .. 
” ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM






அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
“ துவாதசித் திதியாகிய ” இன்று அன்னதானம் செய்வது சாலச்சிறந்தது .. நமது கர்மவினைகளை மாற்றும் சக்தி 
( கலியுகத்தில் ) அன்னதானத்திற்கு மட்டுமே உண்டு .. பூர்வபுண்ணியம் உள்ளவரே இவ்வாறு அன்னதானம் செய்யமுடியும் என்பதையும் .. அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுப்பூர்வமாக உணரமுடியும் .. 

உணவின்றி உயி
ரில்லை .. உலகில்லை .. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது .. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானமாகும் .. மற்றப்பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும் பெறுபவர் இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றச் செய்யும் .. ஆனால் அன்னதானம் செய்தால் மட்டுமே ! போதும் ! போதும் ! என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டுவரும் .. ஆகையினாலே! பூரணமான தானம் அன்னதானமேயாகும் ! 

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் நமது முன்னோர்கள் சொத்துக்காக சண்டையிட்ட சாபங்கள் நீங்கும் .. காசியில் ஒருவருக்கு இடப்படும் அன்னதானமானது மற்ற இடங்களில் ஒருலட்சம் பேர்களுக்குஅளிக்கப்படும் அன்னதானத்தைவிட உயர்வானது .. ஆனால் திருவண்ணாமலையில் ஏழை ஒருவனுக்கு அளிக்கப்படும் அன்னதானமானது காசியில் ஒருகோடி பேர்களுக்கு அளித்த அன்னதானத்தையும் விட உயர்வானது .. அதிலும் துவாதசித் திதியன்று திருவண்ணாமலையில் ஒருவர் அன்னதானம் செய்தால் தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுவர் .. அவர்களுக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என சிவமகாபுராணத்தின் வித்யாசார சம்ஹிதை விவரிக்கிறது .. 

பூமிதானத்தைவிட .. சொர்ணதானத்தைவிட அன்னதானம் மேன்மையானதும் .. சிரேஷ்டமானதுமாகும்
என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் .. உதரம் நிறைந்து (வயிறு) உள்ளம் நிறைந்த வாழ்த்துகள் ஈரேழு ஜென்மங்களையும் தொடர்ந்துவரும் .. அன்னதானம் செய்தவரைமட்டும் சென்றடையாமல் செய்தவரின் சந்ததியினரையும் காத்துத்தொடரக்கூடியது .. 

துவாதசிநாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது அன்னதானம் செய்து புண்ணியங்களைப்
பெறுவீர்களாக .. “ அன்னதான சுகி பவ “ ..
ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE 
' DWADASHI ' AND WHOEVER IS GENEROUS ENOUGH OF FEEDING THE POOR ON THIS DAY WILL BE BENEFITED AND ..
( EVEN THE DEPARTED SOULS ) BE BLESSED BY LORD SHIVA ..
IT BRINGS PROSPERITY AND LONG LIFE TO THE FAMILY TOO .. " OM NAMASHIVAAYA " .. JAI
BHOLE NATH .

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய முருகப்பெருமானைப் பிரார்த்தித்து தங்களனைவரது துயர்களைந்து .. வேண்டியன யாவும் வேண்டியபடியே நிறைவேறிடவும் ..வாழ்வில் நிம்மதி .. சந்தோஷம் என்றும் நிலைத்திடவும் வாழ்த்துகிறேன் .. கந்தவேளை வணங்குகின்றேன் ! 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்கள் உண்டு .. இது “ஆற்றுப்படுத்துதல் “ என்ற பொருள்கொண்டு விளங்குகிறது .. 

வறுமை நீங்கி .. வளமாய்வாழும் ஒருவர் வறுமையில் உழலுபவரிடம் வள்ளல்கள் இருக்கும் இடத்தைக்கூறி அங்கு சென்றால் வறுமையை ஒழித்துவிடலாம் என்பார் 
இதனால் ஏழையின் மனம் ஆறுதல் அடைகிறது .. இதுபோலவே இறைவனான முருகன் அருள்கூர்ந்து பக்தர்களின் வறுமையை ஒழிப்பான் .. என்ற அர்த்தத்தில் நக்கீரர் பாடினார் .. அதுவே திருமுருகாற்றுப்படை .. 

அனைவரும் கைவிட்டநிலையில் கந்தனிடம் சரண்புகவேண்டும் .. கைவிடப்பட்டோரை காப்பதே கந்தவேளின் கடமை .. இது பொய்யல்ல சத்தியமே ! அருணகிரிநாதர் முதல் பலரை இதற்கு உதாரணமாகக் கூறலாம் .. 

முருகன் உங்களுக்கு அனைத்து நலனையும் அருள்வான் என்பது உறுதி .. ஸ்ரவணத்தின் மஹிமை சரவணனுக்கு தெரியாதா என்ன ..? 

மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டிகவசம் .. கந்தகுருகவசம் .. 
கந்தர் அனுபூதி .. சுப்ரமண்ய புஜங்கம் .. போன்ற தெரிந்த துதிகளைப் பாராயணம் செய்து வேலவனின் அருட்கடாக்ஷ்த்தால் அனைத்து நலன்களையும் பெறுவீர்கள் .. 

“ யாமிருக்க பயமேன் ! அபயம் தருவான் குமரக்கடவுள் “ 
ஓம் சரவணபவாய நமஹ ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM MURUGA "