SWAMI SARANAM...GURUVE SARANAM




GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE PROTECT YOU FROM ALL SINS AND EVIL SPIRITS AND SHOWER YOU WITH PEACE AND HAPPINESS ..
" OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று பாபங்களை நீக்குவதுடனும் .. மகத்தான புண்ணிய பலனையும் தந்து நம் வாழ்வினை ஒளிமயமாக்கச்செய்யும் கலியுகவரதனாம் 
கந்தப்பெருமானைப் பிரார்த்திப்போமாக .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

பிரணவச் சொரூபியான முருகப்பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் .. ஒருங்கே நிறைந்துள்ளது .. 
காக்கும் கடவுளான - முகுந்தன் .. 
அழிக்கும் மூர்த்தியான ருத்ரன் ..
படைக்கும் கடவுளான - கமலோற்பவன் 
ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்றுஎழுத்துகள் ஒன்றிணைந்ததே “ முருகா “ என்னும் 
திருநாமம் .. 

“ துதிப்போர்க்கு வல்வினை போம் ! துன்பம் போம் ! நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தசஷ்டி கவசந்தனை .. அமரர் இடர்தீர அமரம் புரிந்தத குமரனடி நெஞ்சே குறி .. 

பொருள் - துதிப்போர்க்கு வலியவினைகள் போகும் .. பல பிறவிகளாகச் செய்த செயல்களின் பயன்களையும் இப்பிறவியிலும் .. இனிவரும் பிறவிகளிலும் அனுபவிப்போம் .. தீவினைகள் துன்பமாகவும் . நல்வினைகள் இன்பமாகவும் மாறி மாறி பயன் தந்துகொண்டிருக்கின்றது .. இதனைத் துதிப்போர்க்கு தீவினைப்பயன்களான துன்பங்கள் போகும் .. என்பதனை 
“ வல்வினை போம் ! துன்பம் போம் ! என்று தெளிவாக எடுத்துச் சொல்கிறார் தேவராய சுவாமிகள் .. மனம் .. மொழி 
மெய் என்னும் முக்காரணங்களாலும் ஒன்றி வழிபட இப்பயன்கள் யாவும் கிட்டும் .. 

இறைவன் எங்கு நிறைந்திருந்தாலும் அடியவர்களுக்கு திருக்கோவில்களே இறையருளைத் தருவதைப் போல் இவன் முழுவதும் அழகன் என்றாலும் இவன் திருவடிகளே அடியார்கள் வேண்டுவதை எல்லாம் தருவதால் ” குமரனடி 
நெஞ்சே ! குறி “ என்று அருளியுள்ளார் ! 

முருகனின் திருவடிகளையே நெஞ்சில் நிறுத்தி நாமும் சஷ்டிகவசத்தை பாராயணம் செய்து தீவினைப் பயன்களை
அகற்றி வாழ்வில் மகிழ்ச்சியும் .. நிம்மதியும் பெறுவோமாக! “ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment