SWAMIYE SARANAM IYYAPPA...




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ வைகாசி விசாகத்திருநாள் நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. இந்நன்நாளில் தங்களனைவரது சங்கடங்கள் யாவும் நீங்கப்பெற்று .. வாழ்வில் அனைத்து நலங்களும் .. மகிழ்ச்சியும் வந்துசேர்ந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி !
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

வைகாசி விசாகம் என்பது முருகன் அவதாரம் செய்த நாளாகும் .. வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை “ வைகாசி பூர்ணிமா ”
அல்லது “ வைசாகி பூர்ணிமா ” என்று அழைப்பார்கள் .. பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம் பிரகாசமாக இருக்கும் .. ஆகாயவெளியில் வெள்ளியைப்போல் மின்மினுக்கும் சந்திரன் வெளிவரும்போது ஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப்போன்ற உணர்வு ஏற்படுகின்றது .. இது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும் .. 

’ விசாகன் ‘ எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 
” விசாகம் “ என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக் கருதப்படுகிறது .. விசாக நட்சத்திரத்தன்று ஆறு நட்சத்திரங்கள் ஒன்றுசேர்வதினால் ஆகாயம் ஒரு நுழைவாயிலைப்போலத் தோன்றும் .. 

வைகாசி விசாகதினம் சைவ .. வைஷ்ணவ .. மற்றும் புத்தமதத்தினருக்கும் முக்கியமானது .. சைவர்களைப் பொறுத்தவரை முருகன் அவதரித்த தினம் ..
வைஷ்ணவர்களுக்கு அது பெரியாள்வார் ஜெயந்தி ..
புத்தமதத்தினருக்கு அற்புதங்கள் நிகழ்த்திய .. ஞானம் பெற்ற புத்தமகான் மஹாசமாதி அடைந்த தினமாகும் ..

முருகன் பிறப்பை “ ஷண்முக அவதாரம் “ என்கின்றனர் ..
சூரபத்மன்.. சிங்கமுகன் .. மற்றும் தாரகன் என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்ட முருகன் 
அவதரித்த தினமாகும் .. அந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலன்பெற்று இருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர் .. தேவர்கள் சிவபெருமானை வேண்டிட .. சிவனும் ஆறுமுகனைப் படைத்தார் .. 

தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறுநெருப்புத் துளிகளை வெளியேற்ற .. அது ஜொலித்தவாறு உலகில் வெளிவந்தது .. அந்தபொறிகளை வாயுவும் .. அக்னியும் கொண்டுபோய் கங்கையில் சேர்க்க அது அவற்றை சரவணப்பொய்கையில் தாமரைமலர்களும் .. கோரைப்புற்களும் இருந்த இடத்தில் வெளித்தள்ளியது .. 

தாமரையை நல்ல இதயம்போலவும் .. நாணல்புதரை உடலின் நரம்புகள் போலவும் தத்துவார்த்தமாகக் கருதவேண்டும் .. அந்த நதி தெய்வீக உருவமாக இருந்ததினால் தாமரையும் மற்றும் நாணல்புதர் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்றிணைந்துள்ள தத்துவம் விளங்கும் .. 

ஒருவரின் ஆறுகுணங்களான - உடல் .. மூச்சு ..மனம் .. உணர்வு .. விவேகம் .. மற்றும் அகம்பாவங்களைக் குறிப்பவையே முருகனின் ஆறுமுகங்கள் .. 

ஏரியில் விழுந்த அந்த ஆறுபொறிகள் ஆறுகுழந்தைகளாக
மாறிவிட ..ஆறுகிருத்திகைகள் எடுத்து வளர்த்தன .. அந்த ஆறுகுழந்தைகளையும் சக்திதேவி எடுத்து அணைக்க .. அந்த ஆறுகுழந்தைகளும் .. ஆறுமுகமும் .. பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே குழந்தையாக மாறின ... அதுவே வைகாசிமாத பூர்ணிமாவில் தெய்வீகம் பொருந்திய “ ஷண்முக அவதாரம் “ எனக்கூறப்படுகிறது .. 

“ அறுவமும் உருவமாகி .. அனாதியாய் பலவாய் ஒன்றை பிரும்மமாய் நின்ற ஜோதி பிலம்பதோர் மேனியாக கருணைக்கோர் முகங்கள் ஆறும் .. கரங்கள் பன்னிரெண்டு கொண்டே ஒருதிருமுருகன் வந்திங்கு உதித்தானாம் உலகம் உய்ய ! அவனே ஆறுமுகன் ” .. !! 
( காசியப்ப சிவாச்சாரியார் அருளியது ) 

பொருள் - உலகத்திற்கு விமோசனம் தருவதெற்கென்று முருகன் ஆறுமுகங்களுடனும் .. பன்னிரெண்டு கைகளுடனும் .. ஒன்றுக்கு மேற்பட்டவராகவும் .. உருக இல்லாத உருவத்துடனும் .. ஒளிவெள்ளம்போன்ற பிரும்மனாக அவதரித்தார் .. 

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் தான் சாஸ்திர ஜோதிடக்கலைக்கும் அதிபதி .. எனவே அவரது அவதார திருநாளாகிய இன்று அவரைப் போற்றி சகல நன்மைகளையும் பெறுவோமாக .. 
“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED ON THIS ' VISAKAM ' WITH BEST HEALTH .. STRENGTH AND HAPPINESS .. 
" OM MURUGA "


No comments:

Post a Comment