SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM...


” உலகம் புகழும் தெய்வம் எங்கள் அங்காளம்மாவே ! 
செவிக்குளிர பாடிடுவோம் கேளுங்கள் அதையே !
எங்களின் குலதெய்வம் என்றும் நீயே ! 
உன்னையே பணிந்திருப்போம் ! அங்காளம்மாவே !
நின்னருள் வேண்டியே அங்காளம்மாவே !
நித்தம் நித்தம் பூஜை செய்தோம் அங்காளம்மாவே 
நின்னருளே எமக்கெங்கும் கவசமம்மா !
நீச்சமடைய செய்யுமது பகையையம்மா !
நினைவுகள் என்றுமே உன்னிடமம்மா ! 
நல்லதை நிறைவேற்றி வாழவைப்பாயே ”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
மாசிமாத அமாவாசையாகிய இன்று அன்னை அங்காள பரமேஷ்வரிக்கு விசேஷ விழாவாக
“ மயானக்கொள்ளை “ எனும் விழா சிறப்பாக நடைபெறும் .. இந்நாளில் அன்னையைத் துதித்து தங்களுக்கு அல்லல் தருவோரிடமிருந்து தங்களனைவரையும் இரட்சித்துக் காத்தருளும்படி அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓங்கார உருவினளே ! ஓம்சக்தி ஆனவளே !
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே ! 
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே ! 
அருளிடும் அம்பிகையே ! அங்காள பரமேஷ்வரியே !
காத்தருள்வாயாக ! போற்றி ஓம் ! போற்றி ஓம் !
மாசிமாதம் வரும் அமாவாசை திதியன்று தான் அங்காள பரமேஷ்வரி அம்மன் தன் பூரண வலுவோடும் .. பலத்தோடும் இருப்பாள் .. அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி சுடுகாட்டில் ஆவிகள் .. ஆன்மாக்கள் 
போன்ற அனைவருக்கும் சூரை இடும்நாள் ஆகும் .. அதுவே “ மயானக்கொள்ளை “ என்று கூறப்படுகிறது .. 
சூரை என்றால் - உணவு அளிப்பதைக் குறிக்கும் ..
இதன்பிண்ணனியில் ஒரு புராணக்கதை உள்ளது -
இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம்கொய்த நிகழ்வுதான் .. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப்போன்றே ஐந்து தலைகள் இருந்தன .. எனவே சிவனை நாம் ஏன் வணங்கவேண்டும் என்று ஆணவம் கொண்டார் பிரம்மா 
அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மாவின் ஒருதலையைக் கொய்ததால் பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக்கொண்டதுடன் கொய்யப்பட்ட பிரம்மனின் தலையும் சிவனின் கரத்திலே வந்து அமர்ந்துகொண்டது ..
அதை அவர் கீழேபோட்டாலும் மீண்டும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது .. அதனை கீழேபோடாமல் சிறிதுநேரம் கையிலேயே வைத்திருக்கும்படி அன்னை பார்வதிதேவி கூறவும் அவரும் அவ்வாறே செய்ய பிரம்மாவின் தலை கபாலமாக மாறி சிவனின் கரத்திலேயே ஒட்டிக்கொண்டது .. அதில் போடப்படும் உணவையெல்லாம் கபாலமே உண்டதால் உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை ..
இந்நிலையில் பிரம்மாவின் தலைகொய்யப்பட்ட வேதனையில் இருந்த சர்ஸ்வதிதேவியும் கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம்கொண்டு “ கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக “ என சாபமிட அன்னை பார்வதியும் பலதலங்களில் அலைந்து முடிவில் மலையனூர் வந்து அங்கே “ அங்காள பரமேஷ்வரியாக “ 
கோவில் கொண்டாள் ..
ஈஸ்வரனும் மலையனூர் வர .. அன்னை சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட அனைத்தையும் கபாலமே விழுங்கிவிட்டது .. இதனைக்கண்ட மஹாலக்ஷ்மி .. பரமேஷ்வரிக்கு ஒரு உபாயம் கூற அதன்படியே இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட .. அதனையும் கபாலமே உண்ண .. மூன்றாவது கவளத்தை கைதவறியது போன்று கீழே போட்டாள் அன்னை .. உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம் அதனை உண்பதற்காக சிவனின் கரத்தைவிட்டு கீழிறங்கியது .. அன்னை விஸ்வரூபமெடுத்து பிரம்மகபாலம் மீண்டும் எழாதவாறு தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள் .. ஈசனைப்பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது ..
இந்த வரலாற்றினை உணர்த்தவே அங்காள பரமேஷ்வரி அம்மன் ஆலயங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது .. அன்னையின் அருட்பார்வை கிடைக்கும் விதத்தில் மனாதார வேண்டிட மூன்று ஆற்றல்களான இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி என்ற முப்பெரும் சக்திகளும் நம் உடலில் நிறைந்து நன்மை பயக்கும் ..
மனிதரைப் பீடித்த துஷ்ட ஆவிகள் யாவும் அங்காளபரமேஷ்வரியின் அருட்பார்வைபட்டாள் சூரியனைக்கண்ட பனிபோல் தானாக மறைந்து .. அழிந்து 
ஒழிந்துவிடும் .. 
” ஓம் அங்காளபரமேஷ்வரித்தாயே ! போற்றி ! போற்றி “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A NEW MOON DAY WITH THE DIVINE BLESSINGS OF 
MAA ANGALA PARAMESHWARI .. THE MAYANA KOLLAI 
(LOOTING OF THE GRAVEYARD) FESTIVAL IS CELEBRATED AMIDST THE DEAD .. OBSERVED IN THE ANGALAMMAN TEMPLES IN THE VILLAGES OF TAMIL NADU .. THIS FOLKFESTIVAL SYMBOLISES ONE OF THE MAIN CULTURAL SCRIPTS OF TAMIL LIFE THAT FEMININE ENERGY IS CAPABLE OF REJUVENATING .. RECOVERING & REVITALISING HUMAN LIFE BEYOND DEATH & DESTRUCTION .. LORD SHIVA SEVERED ONE OF THE HEADS OF BRAHMA & BROUGHT AN END TO CREATION .. ANGALAMMAN WALKS ALONG WITH SHIVA TO THE CREMATION GROUND THAT THE WORLD HAS BECOME & DANCES WITH HIM TO BRING BACK LIFE .. 
" JAI MAA ANGALA PARAMESHWARI "
Image may contain: 3 people, indoor

No comments:

Post a Comment