” பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி !
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி !
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி !
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி !
விண்ணும் நிலனுந் தீ ஆனாய் போற்றி !
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி !
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி !
கயிலைமலையானே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையுமாகிய இன்று சோகங்களைப் போக்கி சுகங்களைத் தரவல்ல சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாகத் திகழ்ந்திடவும் .. வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலவிடவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன் இந்த சோமவார விரதத்தை கடைபிடித்து மேன்மை பெற்றான் .. சந்திரன் சோமவார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம்பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான் .. இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திரசேகரர் .. சந்திரமௌலீஸ்வரர் .. சசிதரர் .. சோமசுந்தரர் .. சோமநாதர் .. சசாங்கசேகரர் .. சசிசேகரர் என்றும் புகழப்பட்டார் ..
சந்திரனின் வேண்டுதலுக்கு இணங்கி சோமவார விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருளவேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள்பாலித்தருளினார் ஐயனும் ..
நாமும் சிவனைப்போற்றி ஐயனின் மனதில் ஓர் பௌர்ணமியாக இடம்பெற்று வாழ்வில் மிளிர்வோமாக !
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment