GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED ' MAHA SIVARATRI ' & A DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY THE GLORY OF LORD SHIVA SHANKAR UPLIFT YOUR SOUL & MAY HAPPINESS & PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..SWAMI SARANAM ...GURUVE SARANAM

” வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி 
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி 
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி 
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி 
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி 
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி 
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி 
கயிலைமலையானே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ சிவராத்திரி தின நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. இன்று வெள்ளிக்கிழமையும் .. பிரதோஷ விரதமும் மற்றும் 
மஹாசிவராத்திரியும் கூடிவருவது சிவ வழிபாட்டிற்கு மிகுந்த சிறப்புமிக்க நன்நாளுமாகும் ..
மாதமோ மாசி ! இதில் மகாதேவனைப் பூசி ! திருமுறைகளை வாசி ! கிடைக்கும் அவன் ஆசி ! சிவாய நமஹ என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் என்று எதுவுமில்லை .. உபாயம் ஒன்றே ஏற்படும் .. இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் பக்திப்பூர்வமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
இன்று சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும் .. மனைசிறக்கும் .. அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவபுராணம் .. யுகம்யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக்காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக ஒரே ஒருநாள் இரவு விழித்திருந்து அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரியே அது ! அதுவே சிவராத்திரி !
” ராத்ர “ என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள் .. எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது ராத்திரி எனும் பெயர் பெற்றது .. இந்த புண்ணியகாலத்தில் சிவநாமம் சொல்லி பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் .. இதனால் இம்மையில் சுகானந்த வாழ்வையும் .. மறுமையில் சுகப்பேரானந்த வாழ்வையும் பெற்று சிறக்கலாம் ..
ராத்ர என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒருபொருள் . ஆக சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர் .. 
“ உணவும் .. உறக்கமும் உயிர்க்குப் பகை “ இந்த இடத்தில் 
உணவு என்பது - வினைகள் .. அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்கநேரும் .. 
உறக்கம் என்பது - மாயைக்குட்பட்டு மயங்குதலாகும் 
ஆக உணவு நீக்கம் என்பது - வினைகளை அகற்றுதலும் .. விழித்திருத்தல் என்பது - ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும் ..
இந்த தாத்பரியத்தின்படி மகாசிவராத்திரி தினத்தில் ஊண் உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே ! என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள் ..
சிந்தைமகிழும் சிவராத்திரியில் லிங்கதரிசனம் செய்வதும் வழிபடுவதும் விசேஷம் .. லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின .. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன .. படைப்பு .. காப்பு .. அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கின்றன புராணங்கள் .. சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன் .. சிவன் .. மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன ..
எப்போதும் சிவநாமம் கூறி சீரானவாழ்வும் .. செல்வ வளமும் பெறுவீர்களாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 
..

No comments:

Post a Comment