” பச்சைமா மலைபோல் மேனி !
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசி விரதமும் கூடிவருவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழவும் .. அனைத்து நலன்களையும் தந்தருளுமாறும்
பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசி விரதத்தை “ விஜயா ஏகாதசி “ என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது .. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றிகிட்டுகிறது .. மிகவும் மேன்மைவாய்ந்த இவ்விரத மஹாத்மிய கதையைக் கேட்பதாலும் .. படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப்பெறுகின்றன .. மற்றும் முற்பிறவி .. இப்பிறவி இரண்டின் பாபத்தையும் அழிக்கவல்லது ..
இந்நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின்மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல்கடந்து சென்று வெற்றிபெறுவீர் .. கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர் ..
விஜய ஏகாதசி அனைத்து விருப்பங்களை பூர்த்திசெய்து வெற்றியையும் தரவல்லது .. அவதார புருஷரான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியே இதனை அனுஷ்டித்து ராவணனை வென்று சீதையை மீட்டார் என்றால் இதன் பெருமை சொல்லிமாளாது ..
பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் ரூபம் எவ்விதமானாலும் சரி .. அவரை பூஜிப்பதால் சர்வமனோகாம்யங்களும் பூர்த்தி அடையும் .. ஸ்ரீராமர் தான் விஷ்ணுவின் அவதாரம் என்று அறிந்து இருந்ததாலும் .. தான் எடுத்துள்ள மானுட அவதாரத்தில் சகலருக்கும் நன்மார்க்கத்தை காட்டுவதற்காக விஷ்ணுவை ஆராதிக்கும் ஏகாதசி விரதத்தை தானும் ஒரு சாதாரண மனிதராகவே மேற்கொண்டு வெற்றியும் பெற்றார் ..
பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் வெற்றி காண்போமாக !
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment