PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY AND A VERY HAPPY NEW YEAR 2016 .. MAY YOUR NEW YEAR BE FILLED WITHLOVE AND HAPPINESS .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF PANVEL BALAGAR AND OUR BELOVED GURUSWAMY. SWAMIYE SARANAM IYYAPPA GURUVE SARANAM SARANAM " .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. மலர்ந்திருக்கும் 
இப்புத்தாண்டில் தங்களனைவருக்கும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷமும் பெற்று இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்னு பத்னீச தீமஹி.. 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!

யாதேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபனே ! ஸ்ம்ஸ்தித்தா !
நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை ! நமஸ்தஸ்யை !
நமோ நமஹ !!

பொருள் - 
அனைத்து உயிர்களிலும் செல்வ வளமாய் விளங்கும் மஹாலக்ஷ்மி தேவியே ! நமஸ்காரம் ! மீண்டும் மீண்டும் நமஸ்கரிக்கின்றோம் ! எம்மை காத்தருள்வாய் அன்னையே !! 

இப்பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அன்னையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன .. அன்னைக்கு மிகப் பிரியமான பெயரால் அழைப்பது கூட ஒருவழிதான் .. 
அம்மா .. மா .. ஆயி .. ஆத்தாள் என்னும் பெயர்களே அவை .. 
அதே பொருள் கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் ..
“ ஓம் ஸ்ரீ மாந்ரே நமஹ “ 

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மிகடாக்ஷ்ம் பெருகும் ..
மஹாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் 
நெல்லிமரத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் .. நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு .. 
லக்ஷ்மி குபேரனுக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது .. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தீயசக்திகளுக்கும் அணுகமுடியாது 

அன்னயைப் போற்றுவோம் .. ! சகல ஐஸ்வர்யங்களையும் 
பெற்றிடுவோமாக ஓம் சக்தி ஓம் .. வாழ்க வளமுடனும் .. 
என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment