அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று “ சங்கடஹர சதுர்த்தி “ விரதமாகும் .. தங்களனைவரது சங்கடங்கள் யாவும் பனிப்போல் நீங்கிவிடவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் தடையின்றி வெற்றி பெறவும் .. விக்னங்களை களையும் விக்னேஷ்வரனை வணங்குகின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஸ்ரீவிநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களைத் தரவல்லது .. சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் .. தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப்பெருமானை நினைத்து கடும்தவம் செய்ய சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் ..
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்த நன்னாளை “ சங்கடஹர சதுர்த்தியாக “
வழிபட்டு வருகின்றோம் ..
’ சங்கடம் ‘ என்றால் .. இக்கட்டு .. தொல்லைகள் .. கஷ்டங்கள் ..
தடைகள் என்று அர்த்தம் .. ‘ ஹர ‘ என்றால் நீக்குவது .. அழித்தல் என்று பொருள் .. வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று வாழ்வாங்கு வாழ சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிக அவசியமானதாகின்றது ..
ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும்
சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும் .. சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சமும் .. தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையவும் .. சகலசௌபாக்கியங்களையும் பெறலாம்
கேட்டவரம் தரும் பிள்ளைக்குணம் கொண்டு என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் ..
அந்தக் கணேஷன் ..
யாராலும் அறிந்துகொள்ள முடியாத பரம்பொருளாகவும் ...
எல்லாவற்றையும் அறியச்செய்யும் இறைவனாகவும் திகழும்
கணபதியே ! உன்னைச் சரணடைந்து போற்றுகின்றோம் ! எம்மைக்காத்தருள்வாயாக ! ஓம் விக்னேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED
" SADURTHI DAY " AND MAY LORD GANAPATHY BLESS YOU ALL AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS ..
" JAI GANESHA "

No comments:
Post a Comment