அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து சகல கிரகதோஷங்களும் நீங்கி .. புத்துணர்வும் .. மகிழ்ச்சியும் பெற்றிட .. எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன்

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவனிடத்தில் பக்தி ஏற்பட வேண்டுமெனில் கோடி ஜன்மங்களில் புண்ணியம்செய்து இருந்தால் தான் கிடைக்கும் .. சிவன் ஒருவரைப் பூஜைசெய்துவிட்டால் 
மற்றேனைய தேவதைகள் யாவரும் பூஜைசெய்யப்பட்டவர்களாகக் கருதி மகிழ்ச்சியே அடைகின்றனர் .. 

எவ்வாறு மரத்தின் அடியில் நீர்விடுவதால் மரங்கள் திருப்தியடைந்து மலர்களையும் .. பழங்களையும் .. தருகின்றனவோ அவ்வாறு மகிழ்ந்து வரமளிக்கின்றனர் என்று வாயு ஸம்ஹிதையில் 
தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது ..

”அசலனே ஆயினும் அச்சவை தன்னில் அசலையாம்
அம்மை எதிர் ஆடும் அசல உருவிலச் சக்தி ஒடுங்கிட ஓங்கும் அருணாசலம் என்றறி “
- அருணாசல நவமணி மாலை - 

பொருள் - இயல்பில் பரமேஸ்வரனும் அவர் சக்தி அம்பிகையும் சலனமற்றவர்களே ! ஆனால் தில்லையாகிய சிதம்பரத்தில் சலனமற்ற அம்பிகை 
( சக்தி ) முன் ஈசன் நடராஜனாக நடனம் செய்கிறான் .. திருவண்ணாமலையிலோ பரமேஸ்வரன் சலனமற்று அருணகிரி வடிவில் இருக்க சக்தியாகிய அம்பிகை ஈசனுள் ஒடுங்கி ஒன்றுபட்டு செயலற்று இருப்பதால் ஈசன் அருணையில் ஞான சொரூபியாய் ஒளியுடன் ஓங்கி நிற்கின்றான் .. 

விளக்கம் - நம் உள்ளமாகிய இதயகுகையிலிருந்து வெளிப்படும் மனம் .. புத்தி .. பிராணன் இவ்வனைத்தின் 
செயல்பாடுகளுக்கும் முளைவித்தாக உள்ள ஆணவம் 
( அகந்தை ) இவை அனைத்தும் சேர்ந்து ‘ மனம்’ என்று
சொல்லப்படும் சக்தி செயலற்று ஒடுங்கி இதயத்தில் ஒன்றுபட்டால் நம்முள் ஈசன் பரம ஞான உணர்வு ஒளியாக மேலோங்கி நிற்கும் .. 

“ சிவாய நமஹ “ என்று சொல்வோமே ! அபாயம் ஒருநாளும் இல்லை என்போமே ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..

No comments:

Post a Comment