" என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான் ! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான் நேர்கோடு வட்டமாகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம் ! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான் ! அவன் வருவான் ! கண்ணில் மழை துடைப்பான் ! இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான் ! அந்தக் கண்ணனை அழகு மன்னனை தினம்பாடி வா மனமே “ அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. தங்கள் அகத்தில் பொங்கட்டும் ஆனந்தம் .. இல்லங்களில் என்றும் பொழியட்டும் மங்களம் ! சத்தியத்தைக் காப்பதற்காகவும் .. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மஹாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமே ஸ்ரீகிருஷ்ணாவதாரமாகும் இன்றைய நாளில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று என்றும் மகிழ்ச்சியோடு வாழ கிருஷ்ணபகவானைப் பிரார்த்திப்போமாக ! ஓம் தாமோதராய வித்மஹே ! ருக்மணி வல்லபாய தீமஹி ! தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! இன்று மாலை ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய அஷ்டமித் திதியும் கூடிவருவருவது சிறப்பே ! கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்படுவதால் பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன .. அஷ்டமித் திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர் இதனால் இந்தத் திதியானது “ கோகுலாஷ்டமி “ என்று போற்றப்படுகிறது .. ” நான் எங்கும் இருப்பேன் ! எத்தனை கோடி பக்தர்களையும் பார்ப்பேன் ! காப்பேன் ” என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிக் கோலம் போடுகிறார்கள் .. “ நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ! அல்லது பூவைக்கொடு ! இல்லை .. பழத்தைக் கொடு ! அதுவும் இல்லையெனில் கொஞ்சம் தண்ணீர் கொடு எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடு .. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் உண்பேன் ” என்றார் கீதையில் கண்ணன் .. பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை பக்தியோடு வணங்கினால் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார் .. “ ஜெயக் கிருஷ்ணா முகுந்தா முராரே “ எனப்பாடினாலே எந்த அசுர சக்தியாலும் எமை வீழ்த்தமுடியாது .. கண்ணனின் அருளாசியுடன் சகல நலங்களும் பெற்று .. வளமோடும் .. நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோமாக ! “ ஜெய்ஸ்ரீகிருஷ்ணா “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment