GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " VARALAKSHMI PUJA " & A BLESSED FRIDAY TOO .. THIS PUJA IS PERFORMED MOSTLY BY MARRIED WOMEN FOR THE WELL BEING OF THEIR HUSBAND .. THIS IS THE MOST IMPORTANT FESTIVALS FOR ALL WOMEN & IS CELEBRATED & OBSERVED WITH GREAT BELIEF THAT WORSHIPPING GODDESS VARALAKSHMI ON THIS DAY IS EQUIVALENT TO WORSHIPPING " ASHTALAKSHMI " THE EIGHT FORCES OF ENERGY KNOWS AS WEALTH .. EARTH LEARNING .. LOVE .. FAME .. PEACE .. PLEASURE & STRENGTH .. MAY YOU BE BLESSED .. " JAI MATA DI SWAMY SARANAM...GURUVE SARANAM"

” வரம் தருவாய் அம்மா ! வரலக்ஷ்மி ! எங்கள் வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி ! 
ஆதிகேசவனின் அழகு மார்பினிலே வாசம் செய்கின்ற ஆதிலக்ஷ்மி ! தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும் தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி ! 
வெள்ளைப்பாற்கடலில் உதித்து மாலவனின் உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி ! எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து தோற்றம் கொண்ட சந்தானலக்ஷ்மி ! வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும் அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி ! 
எட்டுக்கரங்களுடன் சுற்றிவரும் பகைகள் வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி ! மாயை இருள்களைந்து ஞானஒளியேற்றி முக்தி அளிக்கும் வித்யாலக்ஷ்மி ! 
அஷ்டலக்ஷ்மி வடிவாக வந்திருந்து இஷ்டம்பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி ! உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம் உய்ய அருள் செய்வாய் ராஜ்யலக்ஷ்மியே”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மங்களங்களையும் .. சகல ஐஸ்வர்யங்களையும் வாரிவழங்கும் வெள்ளிக்கிழமையில் .. அஷ்டலக்ஷ்மிகளும் ஒன்றாக வரலக்ஷ்மியாக நம் இல்லத்தில் திருவடி பதிக்கும் நன்னாளாகிய
“ வரலக்ஷ்மி விரதநாளில் “ அன்னையைத் துதித்து தங்களனைவரும் நீண்ட ஆயுள் .. புகழ் .. செல்வம் .. நல்லாரோக்கியம் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திப்போமாக !
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
பௌர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் “ வரலக்ஷ்மி விரதம் “ அனுஷ்டிக்கப்படுகின்றது .. சகலசௌபாக்கியங்களையும் தந்தருளும் அஷ்டலக்ஷ்மிகளை வணங்குவதால் “வரம்தரும் லக்ஷ்மிவிரதம் “ என்றும் இதனை அழைப்பர் ..
வரலக்ஷ்மி விரதம் என அழைக்கப்படும் இவ்விரதத்தை விவாகமாகிய சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் மஹாலக்ஷ்மியைக் குறித்து அனுஷ்டிக்கும் மிகச்சிறப்பான விரதமாகும் .. இவ்விரதத்தை அனுஷ்டிப்பதனால் இல்லத்தில் செல்வம் கொழித்து .. மகிழ்ச்சி களித்தோங்கும் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியம் பெறுகின்றனர் .. கன்னிப்பெண்களுக்கு சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப்பெற்று சிறப்பான குடும்பவாழ்க்கையும் அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன ..
லக்ஷ்மிதேவி தன் பக்தர்களுக்கு பொருள்வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள் அவள் வித்தியா சக்தியிலிருந்து நல்ல கல்வியும் தருகிறாள் .. அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதோ கேட்பதோ சிறப்பாகும் ..
மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி .. அச்ஜ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது .. எனவே ஒன்பது நூல் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக்கயிறை (சரடை) பூஜையில்வைத்து .. பூஜையின் முடிவில் வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் மூன்றுமுடிச்சுகள் போட்டு கட்டிக்கொள்ளவேண்டும் ..
அன்பு .. அமைதி .. புகழ் .. இன்பம் .. வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலக்ஷ்மியின் அம்சங்கள் .. எனவே நம்வாழ்வில் இந்த அம்சங்கள் யாவும் நிறைந்திருக்கும் .. மஞ்சள் குங்குமம் .. மஞ்சள் கயிறு .. பூ .. வஸ்திரம் .. மங்கள திரவியங்கள் .. உணவு முதலியவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுப்பார்கள் ..
“ எம் நெற்றியிலே உன் குங்குமமே நிறையவேண்டும் 
அம்மா ! நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும் “

அகிலமெலாம் போற்றும் அகிலாண்ட நாயகியே ! 
எமை ஈன்ற ஆதிசக்தி தாயே ! போற்றி ! போற்றி ! 
“ ஓம் தீர்க்கசுமங்கலி பவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .


Image may contain: 6 people No automatic alt text available.Image may contain: 1 person, indoorImage may contain: indoor

No comments:

Post a Comment