அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடிமாதத்தில் வரும் முதல் அமாவாசைத் திதியான இன்று .. நம்மைவிட்டு .. இவ்வுலகைவிட்டு நீங்கிய நம் மூதாதையர்களை நினைந்து வழிபடுவதற்கு உகந்த நாளாகிய
“ ஆடி அமாவாசையாகும் “ .. நாம் நம் முன்னோர்களின் ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் .. இதனையே
“பிதுர் தர்ப்பணம்” என்றழைப்பார்கள் ..
“ ஆடி அமாவாசையாகும் “ .. நாம் நம் முன்னோர்களின் ஆராதனைக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும் .. இதனையே
“பிதுர் தர்ப்பணம்” என்றழைப்பார்கள் ..
அமாவாசை என்றால் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாளாகும் .. சூரியனை தந்தைவழி முன்னோராகவும் நினைந்து அவர்களது ஆன்மாவிற்கு மரியாதை செய்யும் விதமாக அமாவாசையன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் தந்து வழிபடுவர் .. ஏழை .. எளியோர்க்கு வஸ்திரதானம் அன்னதானம் செய்வதும் சிறப்பு ..
ஆடி அமாவாசை விரதம் நமது முன்னோர்களைவேண்டி வணங்கும் விரதம் என்றாலும் .. இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள் .. கோயில் . குளம் .. நதிக்கரை .. கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி .. நம் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் விட்டு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் .. பின்னர் வீட்டில் முன்னோர் படங்களுக்கு மலர்ச்சரம் அணிவித்து அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளுடன் .. பூசணிக்காய் .. வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் சமைத்து படைக்கவேண்டும் .. பின்னர் காகங்களுக்கும் .. அதிதிகளுக்கும் உணவளித்து அதன் பிறகே நாம் உண்ணுதல் சிறப்பு .. முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் .. நம் அனைத்து கர்மவினைகளும் நீங்கும் ..
ஆடி அமாவாசையில் நம் முன்னோரை நினைந்து வழிபடுவோம் ! அவர்களது ஆசியையும் பெற்றிடுவோம் .. “ ஓம் பித்ரு தேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Aadi 4th and last Friday Blessings to everyone of you GS
No comments:
Post a Comment