SWAMY SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " KARTHIGAI DEEPAM " WISHES TOO .. MAY THIS FESTIVAL OF DEEPAM BRIGHTEN & ENLIGHTEN YOUR LIFE LIKE THE LIGHT OF LAMPS & GLOW LIKE THE DEEPAM .. " OM NAMASHIVAYA ! JAI BHOLE NATH "




 ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்காமிக்க ஜோதியே துளங்கு மெண்டோட்சுடர் மழுப்படையுனானே ! ஆதியே யமரர் கோவே யணியணா மலையுளானே ! நீதியானின்னை யல்லானினையுமா நினைவிலேனே “ (திருநாவுக்கரசர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. கார்த்திகைத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. தங்கள் இல்லத்தில் ஒளிதீபம் ஏற்றி .. நல் உள்ளத்தில் மகிழ்ச்சி எனும் ஒளி என்றும் பிரகாசமுடன் ஒளிர்ந்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானையும் .. அண்ணாமலை .. உண்ணாமலை அம்மனையும் போற்றித்துதிப்போமாக!
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும் கார்த்திகை மாதத்தில் ஒளிவடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவதும் இல்லத்தில் இருவேளைகளிலும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை மேலும் பிரகாசிக்கச் செய்து ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம் !
பஞ்சபூதங்களில் ஒருவரான அக்னி பகவானான நினைத்தாலே முக்தியளிக்கும் அருள்மிகு உண்ணாமுலையம்மன் உடனாய அண்ணாமலையார் ஆண்டுதோறும் மலைமீது ஒளிவெள்ளம் பெருக அருள்கின்றார் ..
ஆலயத்தின் வெளியே அர்த்தநாரீஸ்வரராக ஆனந்தத்தாண்டவம் ஆடுகின்றார் .. அனைத்து உயிர்களையும் அரவணைக்கின்றார் .. அத்தகைய இறைவனை ஒளிவடிவில் தரிசிப்பதே தீபத் திருநாளாகும் ..
திருக்கோயில்களிலோ .. நமது இல்லத்திலோ தீபம் ஏற்றி வழிபட்டால் பல நன்மைகள் உண்டு .. தீபமானது இருளை அகற்றி ஒளிகொடுப்பதைப்போன்று இறைவன் நம்முடைய பாவமாகிய இருளை அகற்றி முக்தி எனும் ஒளியை அளிப்பார் என்பது ஐதீகமாகும் ..
ஏராளமான இறை அடியார்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து இறைவனை அடைந்துள்ளனர் .. 
63 நாயன்மார்களில் ஒருவரான “கலியநாயனார் “ திருவெற்றியூர் திருத்தலத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து இறைவனை அடைந்தார் .. தீபம் ஏற்ற எண்ணை வாங்க பொருள் இல்லாத நிலையிலும் தன் இரத்தத்தால் தீபம் ஏற்றி இறைவனையே வியக்க வைத்தார் .. ஆகவே தீபவழிபாடு என்பது மிகச்சிறந்த வழிபாடு என்பது குறிப்பிடத்தக்கது ..
மகாதேவனான இறைவன் திருவண்ணாமலையில் மலைவடிவில் விளங்குகிறார் .. 
அண்ணாமலையானது கிருதாயுகத்தில் -
அக்னிமலையாகவும் ..
திரேதயுகத்தில் - மாணிக்கமலையாகவும் ..
துவாபரயுகத்தில் - பொன்மலையாகவும் விளங்கியதாக திருத்தலவரலாறு கூறுகிறது ..
இம்மலையில் கார்த்திகைத் தீபத்தன்று மலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது .. பெரிய கொப்பரையில் 24 அடி முழதுணி யை கற்பூரத்தூள் சேர்த்து திரியாகத் தயாரிக்கப்படுகிறது கொப்பரையில் 35ஓ கிலோ நெய்வார்த்து தீபம் ஏற்றப்படுகிறது .. இந்தத் தீபப் பெருஞ்சுடரானது 11 நாட்களுக்கு எரியும் என்று கூறப்படுகிறது .. 60 கி.மீ . தொலைவுவரை இந்தத்தீப ஒளி தெளிவாகத் தெரிகிறது ..
முக்தியளிக்கும் மூலம் பரம்பொருளாம் இறைவன் அக்னி சொரூபமாக காட்சி தரும் அண்ணாமலையானை தீபத்திருநாளில் வணங்கினால் வளம் அனைத்தும் பெறலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .. அவ்வாறு இத்தலத்திலேயே பலகாலம் தங்கி வழிபட்ட மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திரு அம்மானை என்ற குருபதிகமே பாடி இறையருள் பெற்றுள்ளார் ..
“ கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையோனைப் பாடுதும் காண் அம்மானாய்”
(மாணிக்கவாசகர்)

எனவே அலையாக வரும் பக்தர்கள் மலைமீது ஒளிவீசும் மங்காதஜோதியான அருட்கடலாம் ஆண்டவரை வணங்குவோம் ! வளம் அனைத்தும் பெறுவோம் ! 
“ அருள்மிகு உண்ணாமுலையம்மன் திருவடி மலரடி போற்றி ! போற்றி “ 
அருள்மிகு அண்ணாமலையார் திருவடி மலரடி போற்றி ! போற்றி “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person

No comments:

Post a Comment