GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " MAHODAYA AMAVASYA " .. (AMAVASAI) TODAY IS THE MOST POWERFUL AMAVASYA DEDICATED TO HONOR THE DEPARTED SOULS .. IT'S THE RIGHT TIME TO DO THE THARPANAM & MAY YOU BE BLESSED BY THE PITHRUS BY OFFERING FOOD TO THE POOR & NEEDY ONES .. " OM PITHURU DEVO BAWA "

” பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் 
பெம்மான் என்று உள்ளத்து உள்ளித் தொழுவார் 
தங்கள் உறுநோய்கள் தள்ளிப்போக அருளும் தலைவன் சித்திவிநாயகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையில் தை அமாவாசையும் மற்றும் திருவோண நட்சத்திரமும் கூடிவருவது பித்ரு வழிபாட்டிற்கும் .. நீத்தார்கடன் செய்வதற்கும் சிறப்பைத் தருகின்றது .. இதனை 
“ மஹோதய அமாவாசை “ என்பர் .. நம் முன்னோர்களை சிரத்தையோடு நினைந்து தர்ப்பணம் .. தான தருமம் செய்து வழிபடுவது மிகமிக அவசியம் ..
திங்கள் கிழமையும் .. ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோண நட்சத்திரமும் .. வ்ய்தீபாத யோகமும் .. சதுஷ்பாத கரணமும் சேர்ந்து அமைந்தால் அதனை “ மஹோதய புண்யகாலம் “ எனச் சிறப்பாகக் கூறப்படுகிறது ..
மஹோதய நாளில் வரும் சூரிய உதயம் மகத்தானது என்கிறது சாஸ்திரம் .. இந்நாளில் பித்ரு தேவைகளுக்கு ஸ்ரார்த்தம் போன்ற கர்மங்கள் செய்வது அனந்தமான பலனைத் தரும் என்றும் .. அந்த நாள் கோடி சூர்யக்ரஹணத்திற்கு சமானம் என்றும் ரிஷிகள் கூறியுள்ளனர் ..
புனிதமான தை அமாவாசையன்று முன்னோரையும் மறைந்த தாய் தந்தையரையும் நினைந்து திதிகொடுப்பது புண்ணிய நதிகள் .. கடல் போன்ற இடங்களில் புனிதநீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு .. சிறப்பு பூஜைகள் செய்வது ஏழைகள் .. இல்லாதோர் .. இயலாதோருக்கு அன்னதானம் .. வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள் .. கர்மவினைகள் .. தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் ..
மனிதப் பிறவி என்பது மகத்தானதோர் பிறவியாகும் 
மனிதனாகப் பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடையமுடியும் .. வேறு எந்தப்பிறவிக்கும் இந்தச்சிறப்பு கிடையாது .. வானுலகில் தேவராக இருந்தாலும்கூட இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமேயொழிய அவரோடு இரண்டறக் கலக்கமுடியாது .. இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் நன்றிக்கடனாக அமாவாசை .. பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம் !
தை அமாவாசையில் நாம் தரும் பிண்டமும் .. எள்ளும் .. தண்ணீருமே அவர்களுக்கு உணவு .. பிண்டம்தான் ஆத்மரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும் .. பித்ருகடன் தீர்த்து இறைவனின் அருளையும் .. பித்ருக்களின் ஆசியையும் பெற்று சுபீக்‌ஷங்களை தடையின்றி பெறுவீர்களாக !
“ ஓம் கம் கணபதயே நமஹ “ 
“ ஓம் பித்ருதேவோ பவ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: water

GS VISIT TO CHENNAI.... ATTENDED BAGAVATHI SWAMY DAUGHTERS MARRIAGE AND BLESSED THE COUPLE