PANVEL BALAGAR
காரடையான் நோன்பு: எல்லா நன்மைகளையும் அருளும் யமாஷ்டகம்
காரடையான் நோன்பு அன்று யமாஷ்டகம் துதியை பாராயணம் செய்பவர்கள் சகல நலன்களையும் அடைவார்கள். தன் பத்தினிப் பண்பால் தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்டாள் சாவித்திரி. யமதர்மராஜனைக் குறித்து யமாஷ்டகம் பாடி அவ்வாறு அவள் தன் கணவனை மீட்டுக்கொண்ட நாளே காரடையான் நோன்பு நாளாக சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படுகிறது. சாவித்திரி துதித்த இத்துதியை காரடையான் நோன்பு அன்று பாராயணம் செய்தால் மங்கலங்கள் பெருகும். கணவனின் ஆயுள் விருத்தியாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா
தர்மம் ஸூர்ய ஸுதம் தர்மராஜம் நமாம்யஹம்
முன்பு ஒரு சமயம் புஷ்கரம் எனும் க்ஷேத்திரத்தில் சூரிய பகவான் தவம் செய்து தர்மதேவதையை ஆராதித்து, தர்மன் என்ற மகனை அடைந்தார். அந்த தர்மராஜரை நமஸ்கரிக்கிறேன்.
ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண:
அதோ யந்நாம ஸமனம் இதி தம் ப்ரணமாம்யஹம்
எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் சாட்சியாக இருக்கும் யமதர்மராஜனே நமஸ்காரம். அனைத்துப் பிராணிகளையும் சமமாக பாவிப்பதால், சமனன் என்றும் பெயர் கொண்ட யமதர்மராஜனே நமஸ்காரம்.
யேனாந்தச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம்
காமானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவை ஒவ்வொன்றன் ஆயுளையும் முடிவு செய்யும் காரணத்தால் கிருதாந்தன் என்றும் போற்றப்படும் யமதர்மராஜனே நமஸ்காரம்.
பிபர்த்தி தண்டம் தண்டாய பாபிநாம் சுத்தி ஹேத வே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வஜீவினாம்
மனிதர்களுக்கு (சாஸ்தாவாக) எஜமானனாக இருந்து கொண்டு பாவம் செய்பவர்கள், தாம் செய்யும் அந்தப் பாவத்திலிருந்து விலகுவதற்காகத் தண் டனையைத் தருவதால் தண்டதரன் என்றும் பெயர் பெற்ற யமதர்மராஜனே நமஸ்காரம்.
விச்வம் ச கலயத்யேவ ய: ஸர்வேஷு சஸந்ததம்
அதீவ துர்நிவார்யம் சதம் காலம் ப்ரணமாம்யஹம்
காலவடிவாக இருந்து கொண்டு ஜீவராசிகளின் காலத்தைக் கணிப்பவரும், எவராலும் ஏமாற்ற முடியாதவருமான காலன் என்ற யமதர்மராஜனே, நமஸ்காரம்.
தபஸ்வீ ப்ரஹ்மநிஷ்டோ ய: ஸம்யமீ ஸந் ஜிதேந்த்ரிய:
ஜீவானாம் கர்மபலத : தம் யமம் ப்ரணமாம்யஹம்
சிறந்த தபஸ்வியாக, பிரம்மநிஷ்டராக, இந்திரிய, மன அடக்கமுள்ளவராக, ஜீவன்களின் வினைக்குத் தகுந்த பயனை அளிப்பவராகத் திகழும் யமதர்மராஜனே நமஸ்காரம்.
ஸ்வாத்மாராமச்ச ஸர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதாம் பவேத்
பாபிநாம் க்லேசதோ நித்யம் புண்யமித்ரம் நமாம்யஹம்
ஆத்மாவில் ரமிப்பவரே, எல்லாம் அறிந்தவரே, புண்ணியம் செய்பவர்களுக்கு நண்பராக விளங்குபவரே, பாவிகளுக்குத் துன்பம் அளிப்பவரே, பு ண்ணியமித்ரன்
என்ற பெயருள்ளவரே, யமதர்மராஜனே, நமஸ்காரம்.
யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரம்மதேஜஸா
யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவரே, பிரம்மதேஜஸால் ஒளிர்பவரே, பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவரே, ஈசனாகத் திகழ்பவரே, யமதர்மராஜனே நமஸ்காரம்.
யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய ய: படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வ பாபாத் விமுச்யதே
சாவித்திரி துதித்த இந்த யமாஷ்டகத்தைத் தினமும் காலையில் படிப்பவர்கள் யம பயத்தை அடைய மாட்டார்கள்; எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். குறிப்பாக காரடையான் நோன்பு அன்று இத்துதியை பாராயணம் செய்பவர்கள் சகல நலன்களையும் அடைவார்கள்.
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " MAHA SHIVARATRI " & MAY THE GLORY OF LORD SHIVA SHANKAR UPLIFT YOUR SOUL & BANISH ALL YOUR TROUBLES & HAPPINESS & PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM NAMASHIVAYA ! JAI BHOLE NATH "SWAMY SARANAM GURUVE SARANAM
” கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும்
ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்ப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே “
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும்
ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்ப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ மஹா சிவராத்திரி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! சோமவாரத்தில் சிவராத்திரியும் கூடிவருவது மிகவும் சிறப்பே !
“ மாதமோ மாசி ! இதில் மகாதேவனைப் பூசி !
திருமுறைகளை வாசி !
கிடைக்கும் அவன் நல்லாசி “
இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் பக்திப்பூர்வமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக !
“ மாதமோ மாசி ! இதில் மகாதேவனைப் பூசி !
திருமுறைகளை வாசி !
கிடைக்கும் அவன் நல்லாசி “
இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் பக்திப்பூர்வமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மாசிமாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே ”மகாசிவராத்திரி ” சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள் இது .. இந்நாளில் இரவு முழுவதும் கண்விழித்து .. சிவாலயங்களில் நடைபெறும் நான்குகால பூஜைகளில் கலந்துகொண்டு சிவவழிபாடு செய்ய அனைத்து நற்பலன்களும் வந்துசேரும் ! மாதாந்திர சிவராத்திரி நாட்களில் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள்
மஹா சிவராத்திரியன்று வழிபட்டால் ஆண்டுதோறும் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும் ..
மஹா சிவராத்திரியன்று வழிபட்டால் ஆண்டுதோறும் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும் ..
சிவராத்திரி இம்முறை திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷம் .. இதனை “லோகசிவராத்திரி” என்பர் .. சிவராத்திரி என்பது ஒருவருடத்திற்கு ஒருமுறையேனும் ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமையை எண்ணிப் பார்க்கின்ற ஒருநாளாய் அமைகின்றது .. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் .. வார்த்தைகளையும் .. எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குரிய வழிவகைகளை ஆராயும் ஒருநாளாகவும் இந்நாள் அமையட்டும் ..
இறைவனை வழிபட்டு அவர் திருவருளை வேண்டி நின்று கண்விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளங்குகின்றது .. இவ்வளவு சிறப்புகளையும் உண்மைகளையும் உணர்த்தும் சிவராத்திரியை ஏற்றமுறையில் உணர்ந்து அனுசரிப்பது அவசியம் ..
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது சிவபெருமான் தனது அடிமுடிகாண அவ்விருவருக்கும் கட்டளை இட்டார் .. ஆனால் அவர்களால் அதனைக் காணமுடியாமல் தோல்வியுறவே . அவர்களது அகந்தை அழிந்தது .. ஈசனும் நெருப்பு உருவமாய் அவர்களுக்கு காட்சியளித்து “ திருவண்ணாமலையாக “ மாறிய நாள்
“ சிவராத்திரி “
“ சிவராத்திரி “
இன்று ஈசனை சிவலிங்கத் திருமேனியனாகத் தரிசித்து .. தீங்கு இல்லா வாழ்வினைப் பெறுவோமாக!
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Subscribe to:
Posts (Atom)