PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM.....GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY & A PROSPEROUS " KRISHNA JAYANTI " .. MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS OF LORD KRISHNA .. " JAI SHREE KRISHNA "

 கண்ணனைப் பணி மனமே தினமே !
மண்ணில் யசோதை செய்புண்ய ஸ்வரூபனை மாதவனை நமது யாதவதீபனை பாண்டவர் நேயனை பக்தசகாயனை பவளச் செவ்வாயனை பரமனை மாயனை மங்களமூலனை கோகுலபாலனை மணமிகு துளசீமாலனை பாலனை விண்ணவர் போற்றவே மண்ணில் வரும் வேத பண்ணனை ஸ்யாமளவண்ணனை தாமரைக் கண்ணனை பணி மனமே ! தினமே கண்ணனை பணி மனமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! தங்கள் அகத்தில் பொங்கட்டும் ஆனந்தம் ! இல்லங்களில் என்றும் பொழியட்டும் மங்களம் !!
ஓம் தாமோதராய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !!
ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நட்சத்திரமான ரோகிணியும் .. அஷ்டமித்திதியும் இம்முறை நள்ளிரவிலே கூடிவருவதால் வடமாநிலங்களில் மறுநாளே “ஜென்மாஷ்டமி” என்று சிறப்பாக கொண்டாடுகின்றனர் இந்நாளில் இறைவனை எண்ணித் துதிப்பது சிறப்பாகும் .. இதனால் நமக்குள் உண்டாகும் ஆணவம் அகந்தை அகன்று நல் அறிவினைப் பெற்று .. அனைத்து உறவுகளுடனும் ஒன்றாக இணைந்து பண்டிகையைக் கொண்டாடும்போது நம்மனதளவில் புத்துணர்ச்சியும் .. மகிழ்ச்சியும் உண்டாகும் ..
எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ ! அப்போதெல்லாம் நான் தோன்றுவேன் ! கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பற்காகவும் .. தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகந்தோறும் அவதரிப்பேன் என்பது கீதைநாயகன் ஸ்ரீகிருஷ்ணரின் அருள்வாக்கு “
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாகச் செய்யவேண்டும் என்பதை ” பகவத்கீதை “ மூலம் ஸ்ரீகிருஷ்ணர் உணர்த்தியுள்ளார் .. பிறவிப்பயன் தெரியாமல் இறைநிலையை உணரமுடியாமல் உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணங்கள் ஸ்ரீகிருஷ்ணரைப் பின்பற்றினால் மாறும் ..
கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை மட்டுமல்ல .. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்துடன் ரசித்தவன் .. “ மகிழ்ச்சி வெளியில் இல்லை ! மனதில்தான் உள்ளது “ என்பதனை உலகிற்கு உணர்த்தியவன் .. கிருஷ்ண பரமாத்மா தனக்காக இல்லையென்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர் அதனால்தான் இவரை “ கண்ணா “ என்கிறோம் .. அதாவது கண்ணைப்போல் காப்பவர் ..
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும் .. குழந்தைகளுக்கு மூர்க்ககுணம் ஏற்படாது .. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள் .. அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத்திறமை அதிகரிக்கும் .
” ஜெயக்கிருஷ்ணா ! முகுந்தா முராரே “ என்று பாடினாலே எந்த அசுரசக்தியாலும் எம்மை வீழ்த்தமுடியாது ..வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் நம் கண்ணன் வருவான் !!
“ ஜெய்ஸ்ரீகிருஷ்ணா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD ARDHANARISHVARA .. TODAY IS THE LAST DAY OF THE TAMIL MONTH " AADI " GODDESS MAA SHAKTHI BECAME ARDHANARISHWARI .. ARDHANARISHVARA REPRESENTS THE SYNTHESIS OF MASCULINE & FEMININE ENERGIES OF THE UNIVERSE (PURUSHA & PRAKRITI) THE FEMALE PRINCIPLE OF GOD IS INSEPARABLE FROM SHIVA THE MALE PRINCIPLE OF GOD STAY BLESSED .. " OM SHIVSHAKTHI OM ' SWAMY SARANAM...GURUVE SARANAM SARANAM



அன்னையும் அரனும் இணைந்த திருக்காட்சி 
ஆண் பெண் சமமென உணர்த்தும் நற்சாட்சி 
அம்மையும் அப்பனுமாய் துதித்திடும் அடியவர்க்கு அருள்தரும் அர்த்தநாரீஸ்வரடிபணிந்திடுவோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சூறைக்காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைத்த ஆடிமாதம் இன்றோடு நிறைவு பெறுகிறது .. வேப்பிலைமுதல் .. விக்கிரகங்கள்வரை நீக்கமற நிறைந்திருந்த மகாசக்தி .. இன்றுமுதல் சிவனுள் ஐக்கியமாகின்றாள் .. தங்களது துக்கங்கள் யாவும் இந்த ஆடிக்காற்றில் பறந்தோடும் .. சர்வமங்களங்களும் தங்கள் இல்லம் தேடிவரும் ..
ஓம் தபஸ்ய ச வாமபாகமாய வித்மஹே ! 
சிவசக்தாய தீமஹி ! 
தந்நோ அர்த்தநாரீஸ்வரா ப்ரசோதயாத் !!
” அவனின்றி ஒரு அணுவும் அசையாது ” என்பர் .. அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம் இயற்கையின் பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில்கொள்ள வழிவகுக்கும் பொன்னாள் ..
அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் .. 
” அர்த்தம் “ என்றால் - பாதி என்று பொருள் .. 
“ நாரி “ என்றால் - பெண் என்று பொருள்படும் .. 
சிவன்பாதி .. பார்வதி பாதி என்று இருவரும் இணைந்து இருப்பதால்தான் “அர்த்தநாரி + ஈஸ்வரர் = அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் கொண்டது ..
சிவனின்றி சக்தியில்லை .. சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாக திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் .. வாழ்வியலில் ஆணின்றி பெண்ணும் .. பெண்ணின்றி ஆணும் சாத்தியமில்லை என்ற பொருளையும் தருகிறது ..
ஆடிமாத இறுதிநாளில் தம்பதி சமேதராக சிவாலயங்களுக்குச் சென்று எந்த நிலையிலும் பிரியாத வரம்வேண்டும் எஅன அம்மையப்பனைத் தொழுவோமாக !
“ நெற்றியிலே உன் குங்குமமே நிலைக்கவேண்டும் அம்மா ! நெஞ்சினிலே உன் திருநாமம் நிறையவேண்டும் “
“ஓம் சிவசக்தி ஓம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person


GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY " INDEPENDENCE DAY " & A DIVINE " AAVANI AVITTAM " TOO .. AAVANI FALLS IN SHRAVANA PURNIMA .. BRAHMIN MEN OFFER SRADHA TO THE RISHI'S WHO COMPOSED THE VEDIC HYMNS .. WHEN A BRAHMIN BOY IS INVESTED WITH HOLY THREAD .. SYMBOLICALLY HIS THIRD EYE OR THE EYE OF WISDOM IS OPENED .. THIS FESTIVAL OF ' UPAKARMA ' REMINDS THE WEARER OF THE SACRED THREAD OF IT'S GLORIOUS SPIRITUAL SIGNIFICANCE .. IT'S CALLED AAVANI AVITTAM " IT IS VERY IMPORTANT THAT ALL BRAHMIN MEN & CHILDREN (BOYS) PERFORM THIS RITUALS WITHOUT FAIL & DO PRAYASHCHITA FOR REMOVAL OF ALL THE SINS & SECURE THE DIVINE BLESSINGS .. " HARA HARA SHANKARA ! JAYA JAYA SHANKARA "...SWAMY SARANAM. GURUVE SARANAM

" ஒரு பிறப்பும் எய்தாமை உடையார் தம்மை உலகியல்பின் உபநயன முறைமையாகும் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறைமுனிவரெதிரே நின்று வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுரவாக்கால் பொருவிறப்ப ஓதினார் புகலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனிதவேதம்
(12ம்திருமுறை திருஞானசம்பந்தர் )
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அனைத்து இந்தியர்களுக்கும் எங்கள் “இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக “ குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் “ஆவணி அவிட்டமும் “ சேர்ந்து வருவது மிகுந்த சிறப்பாகும் .. இன்றையநாளில் பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திப்பூர்வமான பண்டிகையை “ ஆவணி அவிட்டம் “ என்பார்கள் ..
ஆவணி பௌர்னமியையொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது .. இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் .. மற்றும் உபநயனம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வர் .. திருமணம் ஆகாதவர் ஒருபூணூலையும் .. திருமணம் ஆனவர் இரண்டுபூணூலையும் .. திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்றுபூணூலையும் அணிந்து கொள்வர் .. அதன்படி இன்று ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயனம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும் .. ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள் ..
” நயனம் “ என்றால் - கண் .. நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்) இருக்கின்றன .. அவை ஊனக்கண்கள் .. இதுதவிர மூன்றாவதாக ஒருகண் தேவை .. அது ஞானக்கண் .. ஞானம் எனும் கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் “ உபநயனம் “ அதாவது “துணைக்கண்” என்று அர்த்தம் .. ஞானம் எனும் கல்வி அறிவைப் பெற்றால் மட்டுமே ஒருவன் வாழ்வில் முழுப்பயனைப் பெறுகிறான் என்பது ஆன்றோர் வாக்கு .. கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவு .. அதனால் பூணூல் அணியும் சடங்கினை “ பிரம்மோபதேசம் “ என்று குறிப்பிடுகின்றனர் ..
மஹாவிஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார் .. அதில் வாமன அவதாரமும் ஒன்று .. அதிதி .. காச்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமனமூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் செய்துவைத்தார் .. பகவானே பூணூல் அணிந்துகொண்டதன்மூலம் இந்தச்சடங்கின் சிறப்பை உணரலாம் .. பூணூலை “யக்ஞோபவீதம் “ என்பார்கள் .. அதாவது மிகவும் புனிதமானது என்று அர்த்தம் ..
இப்படி உபநயனம் செய்விக்கப்பட்டபின் தாங்கள் அணிந்த பூணூலை ஆண்டுதோறும் ஆவணி அவிட்டநாளில் மாற்றி புதிய பூணூல் அணிவார்கள் .. அதுவே ஆவணி அவிட்டம் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது ..
உலகம் சிறக்கவும் .. நாடு சிறக்கவும் .. தன் நகரம் சிறக்கவும் .. தனது கிராமம் சிறக்கவும் .. தனது வீடு சிறக்கவும் காயத்ரீ ஜபத்தை சொல்லவேண்டும் .. காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் சொல்வது மிகவும் முக்கியம் ..
சொல்லாலும் .. செயலாலும் .. மனதாலும் தீங்கிழைக்காத வைராக்கியத்தை மேற்கொள்ளவேண்டும் .. வைராக்கியம் இருந்தால் எல்லாம் சித்திக்கும் .. வைராக்கியம் போனால் சகலமும் போய்விடும் என்பதை மனதில் இருத்தவேண்டும் ! என்பதே ஆவணி அவிட்டத்தின் நோக்கமாகும் ..
“ ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: flower and food
Image may contain: 1 person

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " VARALAXMI PUJA " .. THIS PUJA IS PERFORMED MOSTLY BY MARRIED WOMEN FOR THE WELL BEING OF THEIR HUSBAND & THE YOUNG TO GET GOOD BRIDEGROOM .. WORSHIPPING GODDESS VARALXMI ON THIS DAY IS EQUIVALENT TO WORSHIPPING " ASHTALAKSHMI " .. THE EIGHT FORCES OF ENERGY KNOWN AS WEALTH .. HEALTH .. LEARNING .. FAME .. LOVE PEACE .. PLEASURE .. & STRENGTH .. STAY BLESSED .. " JAI MATA DI ! DEERGA SUMANGALI BAWA "SWAMY SARANAM... GURUVE SARANAM



வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி ! எங்கள் வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி ஆதிகேசவனின் அழகு மார்பினிலே வாசம் செய்கின்ற ஆதிலக்ஷ்மி தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும் தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி
பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி
வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின் உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி
எம்மைக்க காக்கவென்றே அன்னையாக வந்து தோற்றம் கொண்ட சந்தானலக்ஷ்மி
வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும் அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி
எட்டுக்கரங்களுடன் சுற்றிவரும் பகைகள் வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி
மாயை இருள்களைந்து ஞானஒளியேற்றி முக்தி அளிக்கும் வித்யாலக்ஷ்மி
அஷ்டலக்ஷ்மி வடிவாக வந்திருந்து இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம் உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ வரலக்ஷ்மி நோன்பு “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! சர்வ மங்களங்களையும் தந்தருளும் திருமகள் நம் இல்லத்தில் திருவடி பதிக்கும் நாளாகிய இன்று தங்களனைவரும் நீண்ட ஆயுள் .. புகழ் .. செல்வம் மற்றும் நல்லாரோக்கியம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணுபத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயத் !!
வரலக்ஷ்மி நோன்பு என்பது பதினாறுவகைச் செல்வத்துக்கும் அதிபதியான லக்ஷ்மியின் அருள்வேண்டி சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும் .. இந்த விரதம் ஆடிமாதம் வளர்பிறையில் பௌர்ணமி தினத்திற்குமுன் வரும் வெள்ளிக்கிழமையில் அதாவது இன்று கடைபிடிக்கப்படுகிறது .. சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் அஷ்டலக்ஷ்மிகளையும் வணங்குவதால் 
“வலம்தரும் லக்ஷ்மி விரதம் “ என்றும் அழைப்பார்கள் .
நியமவிதிப்படி இல்லத்தில் அனுஷ்டிப்பதால் அன்னை லக்ஷ்மிதேவி நம் இல்லத்தில் வாசஞ்செய்வாள் .. இயலாதோர் ஆலயங்களிலும் குத்துவிளக்கேற்றி லக்ஷ்மியை ஆவகணம் செய்து பூஜித்து அன்னையின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறலாம் ..
உள்ளத்தூய்மையுடன் .. உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்டலக்ஷ்மியாக விளங்கும் அம்பிகையை வழிபடுவதனால் தங்கள் இல்லத்தில் செல்வம் கொழித்து மகிழ்ச்சி களித்தோங்கும் .. கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்கசுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுகின்றனர் .. கன்னிப்பெண்களுக்கு சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப்பெற்று சிறப்பான குடும்ப வாழ்வும் அமையப்பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன ..
லக்ஷ்மிதேவி தன் பக்தர்களுக்கு பொருள்வளத்தை மட்டுமல்லாது .. உயர் ஞானத்தையும் அருள்கிறாள் அவள் வித்யாசக்தியிலிருந்து நல்ல கல்வியும் தருகிறாள் .. இன்று அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதோ கேட்பதோ சிறப்பாகும் ..
மஞ்சள் கயிறு மங்களத்தின் அறிகுறி அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது .. எனவே ஒப்பது நூல் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக்கயிறை பூஜையில் வைத்து .. பூஜையின் முடிவில் வலதுமணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் மூன்று முடிச்சுகள் போட்டு கட்டிக்கொள்ளவேண்டும் ..
அன்பு .. அமைதி .. புகழ் .. இன்பம் .. வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலக்ஷ்மியின் அம்சங்கள் .. எனவே நம்வாழ்வில் இந்த அம்சங்கள் யாவும் நிறைந்திருக்கும் ..
“ ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே ! சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே “
பொருள் - எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்யதேவியே ! ஷேமத்தைக் கொடுப்பவளே எல்லாவற்றையும் சாதிக்கக்கூடியவளே ! நாராயணியே உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே ! உனக்கு நமஸ்காரங்கள் !!
“ திருமகள் வருவாள் ! அருள்மழை பொழிவாள் “
“ ஓம் சக்தி ஓம் ! தீர்க்கசுமங்கலி பவ “
Image may contain: 1 person, indoor

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE VISHAKA NAKSHATRA OF LORD MURUGAN ( BIRTH STAR) .. MAY HE REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER HIS BENIGN BLESSINGS ON YOU & MAY HAPPINESS & PEACE SURROUND YOU TOO ..SWAMY SARANAM GURUVE SARANAM

 கருணை முகங்கள் ஓராறு காக்கும் கரங்களோ ஈராறு முருகன் வாழும் வீடாறு
முகம்பார்த்து இறங்க வேராறு ! கந்தன் துணை அன்றி ஐயனின் வடிவேலை தொழுவதன்றி வேறென்ன வேலை ! வினையை தீர்ப்பது குகன் வேலை
வேலை போற்றுதல் வாழ்வின் வேலே 
அடியார்கள் அகமே அவன் கோவில்
அன்பே ஆலய தலைவாயில் குடியாய் இருப்பவன் குறைதீர்ப்பான் குமரன் நம் குடியை வாழவைப்பான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று ,, கந்தப்பெருமானுக்கு உகந்த விசாக நட்சத்திரமும் சேர்ந்துவருவது சிறப்பாகும் .. கந்தனை வழிபடுவோருக்கு வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும் வருங்காலமும் நலமாகும் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
அருணகிரிநாதர் முருகப்பெருமானை வர்ணித்து பாடும்போது அவரது ஆறுமுகத்திற்கு அழகாக விளக்கம் சொல்கின்றார் -
“ மயிலேறி விளையாடும் முகம் ஒன்று ..
ஈசனுடன் பேசி உறவாடும் முகம் ஒன்று ..
அடியவர்களின் குறைகேட்டு அகற்றும் முகம் ஒன்று ..
குன்றத்தில் வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று ..
அசுரனை வதைப்பதற்காக எடுத்த முகம் ஒன்று ..
வள்ளியம்மை மணம் காண வந்த முகம் ஒன்று ” ..
நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் .. எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும் .. வரங்களைக் கொடுக்கும் கரங்கள் பன்னிரண்டு கொண்ட வேலவனை நேருக்கு நேராக ஆலயத்தில் நின்று கைகுவித்து வணங்கிட போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் !
முருகனே ! செந்தில் முதல்வனே ! ஈசன் மகனே ! ஒரு கை முகன் தம்பியே ! நின்னுடைய திருவடியை எப்பொழுதும் நம்பியே கைதொழுவோம் நாம் “ என்று கூறி வழிபடுங்கள் .. உங்களின் நம்பிக்கை வீண்போகாதபடி முருகப்பெருமான் அருள்புரிவார் ..
” ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 3 people