SWAMY SARANAM....GURUVE SARANAM..

உத்திர நட்சத்திரத்தில் உதித்து
 உயரமான சபரிமலை மேலே அமர்ந்து இருக்கும்
பந்தளராஜகுமாரனே 

மாமலைவாசா மணிகண்டா 
இங்கே மக்கள் படும் துயர் உனக்கு தெரியவில்லையா

பன்வேலில் இருந்து பாவிகளை ரட்சிக்கும்
பரந்தாமன் மைந்தா
இன்னும் உன் மனம் இரங்கவில்லையா

தீராதநோயைதீர்த்து
வைக்கும்கலியுகவரதனே
கொடும் வியாதி குணமாகி
அனைவரையும்
காத்து
இரட்சிகனும்
பகவானே......
சுவாமியேசரணம்ஜயப்பா...







அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற நம் முன்னோர்களின் வாக்கிற்க்கு இணங்க‌,
இந்த கொடிய கொரோனா வைரஸின் பிடியில் இருந்து விரைவில் விடுபட்டு அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும், மிகுந்த மன மகிழ்வுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
இந்த புதுவருடத்தின் பெயர், 'சார்வரி வருடமாம்.
சரி, நம் முன்னோர்கள் எப்படி பெயர் வைத்தார்கள் என்று தேடிப் பார்த்தப்போ.. அதாவது, 60 பெயர்கள். முதல் வருடத்தின் பெயர், 'பிரபவ', 60-வது வருடத்தின் பெயர், 'அட்சய'. நாம் இப்போது இருப்பது, 34-வது வருடமாகிய 'சார்வரி என்றால் வீறியெழல் என்று அர்த்தம்.
வருடத்தின் பெயர்கள் மொத்தம் .....
அதென்ன, 60?. ஏன் 70‍-ஆகவோ, 100-ஆகவோ இருக்கக் கூடாது?
இதைப் பற்றி ஆராய்ந்தால், நிச்சயம் நம் முன்னோர்களின் இந்த பேரண்டத்தை பற்றிய அறிவும் (Astronomy), கணிதப் புலமையும் புலப்படும்.


*பங்குனி உத்திரம் குலதெய்வ குலசாஸ்தா வழிபாடு:*SWAMY SARANAM..GURUVE SARANAM

பங்குனி உத்திரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வருஷத்துக்கு ஒருமுறை நாமெல்லாம் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுவோம். இந்த வருஷம் நாம எல்லாம் வெளியே போக முடியாத நிலைமையில இருக்கோம். ஆனாலும் நம்ம குலதெய்வ வழிபாட்டை நாம மறக்காம செய்ய வேண்டும். குலதெய்வம் அருளால் நம்ம குடும்பம் தழைக்க, இந்த வருஷம் நம்ம வீட்டுலேயே குலதெய்வ வழிபாட செய்யத் தயாரோவோம்.
நம்ம வீடெல்லாம் முதல் நாளே பெருக்கி, மெழுகி சுத்தப்படுத்தி, பூஜையறை விளக்கு மற்றும் சாமான்களை சுத்தப்படுத்தி வைச்சு, வாசலிலே மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டி, பசுஞ்சாண நீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து மாக்கோலம் இடுவோம்.
வரும் திங்கள்கிழமை பங்குனி உத்திரத்தன்று நம்ம வீட்டு பூஜையறையில நம்ம குலதெய்வ, குலசாஸ்தா படங்கள் இருந்தா அலங்காரம் பண்ணி வைச்சுக்கலாம். படங்கள் இல்லாதவங்க, மஞ்சள் அல்லது சந்தனத்தில் குலதெய்வமா நினைச்சு பிடிச்சு வைச்சுக்கோங்க. ஒரு நிறை குடம் தண்ணியில மஞ்சள், வேப்பிலை போட்டு பூஜையறையில் வையுங்க..
குலதெய்வம் கோவிலுக்கு போய் நாம செய்யும் பிரார்த்தனைகளை குடும்பமா ஒன்று கூடி, மனசார வீட்டில செய்யுங்க. வசதியிருந்தா வீட்டுல சுத்த பத்தமா பச்சரிசி சாதம் வடிச்சு, சாம்பார், அவியல்னு சமைச்சு வீட்டுலயே படையல் போட்டோ, அல்லது சக்கரை பொங்கல் வைத்தோ நம்ம வழிபாட்டை முறையா வீட்டிலயே செய்வோம்....
குலதெய்வத்திடம் இந்த வருஷம் எங்களால கோவிலுக்கு வந்து உன்ன கும்பிடமுடியலை சாமி, அதனால வீட்டுல இருந்தே உன்ன நினைச்சு கும்பிடுறோம், எங்க குற்றம் குறைகளை எல்லாம் பொறுத்து நோய் நொடியில்லாம எங்களை காக்க வேணும்னு சொல்லி மனசார கும்பிடுங்க... முடிஞ்சா ஒரு மஞ்ச துணியில ஒரு பதினொரு ரூபாய் முடிஞ்சு வைச்சு, இந்த நோய் நொடி பரவல் எல்லாம் தீர்ந்து, மக்கள் வாழ்க்கை சகஜ நிலைமைக்கு திரும்புனா அதற்கு அடுத்த உத்திரம் நட்சத்திரத்துல (அல்லது ஒரு நல்ல நாளிலோ) உன் கோவிலுக்கு வந்து இந்த முடிஞ்சு வைச்ச பணத்தை உண்டியல்ல போட்டு, குடும்பத்தோட வந்து தரிசனம் பண்ணுறோம்னு வேண்டிக்கோங்க....
குடும்பத்தோட குலதெய்வ வழிபாட்டை செஞ்சு, கூட்டா உக்காந்து படையல் சோறு பிரசாதத்தை சாப்பிடுங்க... மறுநாள் அந்த நிறைகுடம் தண்ணீரை வீடெல்லாம் தெளிச்சுட்டு, சுத்தமான இடத்துல மரத்தடி அல்லது செடியில ஊத்திடுங்க....
குலதெய்வம் மனம் குளிருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமுமாய் வாழலாம்.
குறிப்பு: இந்த வருஷம் குலதெய்வவகோவிலுக்கு போக முடியாதே என யோசித்தவாறே இருக்கையில், என் மனதில் தோன்றிய எண்ணமே இந்த பதிவு. நீங்கள் உங்கள் விருப்பம் போல் வழிபடுங்கள், ஆனால் பங்குனி உத்திர குலதெயுவ வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்யுங்கள்