#நாகலபுரம்
விஜய நகர மன்னர் கிருஷ் தேவராயரால் நிறுவப்பட்ட ஆலயமாக சொல்லப்படுகிறது. திருகோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக காணப்படுகிறது .தெலுங்கு கல்வெட்டுகளும் அங்காங்கே காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயன் தன் தாயார் நினைவாக இந்த கோவிலையும் ஊரையும் உருவாக்கி தனது தாயாரின் பெயரான நாகலா தேவி என்பதனையே நாகலாபுரம் என்று சூட்டினார் . இக்கோயிலின் சிறப்பு வேத நாராயணப் பெருமாள் மேற்கு திருக்காட்சி தரிசனம்தருகிறார். வேதவல்லி தாயார் கிழக்கு நோக்கி அருளுகிறார். திருக்கோயில் நான்கு புறமும் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சி தருகிறது. அதனையடுத்து ஆலயத்தின் இரண்டாம் பிரகார ராஜ கோபுரத்தை கடந்தால் ஆலயத்தின் கொடிமரம் , பலிபீடம் , கருடாழ்வார் மேற்கு நோக்கி அருளுகிறார்கள் .அதனை தொடர்ந்து மூன்றாவது ராஜ கோபுரத்தை கடந்தால் ஷேத்தரபாலகர் மற்றும் தும்பிக்கையாழ்வார் அர்த்த மண்டப முகப்பில் அருளுகிறார்கள் மற்றும் உள்ளே பணித்தால் ஜெயன் விஜயன் காட்சி தருகிறார்கள். இவர்களை கடந்தால் உள்ளே கருவறையில் சங்கு சக்கரம் அபய வரத ஹஸ்தத்துடன் மச்சவடியில் வேத நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக காட்சிதருகிறார் . மேலும் ஆலயத்தின் இரண்டாம் பிறகாரத்தில் பிரம்மோற்சவ வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் தென்கிழக்கு மூலையில் பக்த ஆஞ்சநேயர் திருக்காட்சி தருகிறார். மற்றும் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் வேதவல்லி தாயார் அருளாட்சி நல்குகின்றார். மேலும் இங்கு லக்ஷ்மி நரசிம்மர் , வீர ஆஞ்சநேயர் , பக்தஆஞ்சநேயர் , இராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதி கொண்டு அருளுகின்றனர்.
ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயில், ஆந்திரா.
ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை தாலுகாவில் உள்ள வொண்டிமிட்டா நகரில் அமைந்துள்ள ஸ்ரீராமருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில் கோதண்டராம கோயில். விஜயநகர கட்டிடக்கலை பாணியின் உதாரணமான இந்த கோயில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய கோயில் என்று கூறப்படுகிறது. இது கடப்பாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இது ராஜம்பேட்டைக்கு அருகில் உள்ளது. கோயிலும் அதன் அருகிலுள்ள கட்டிடங்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும்.