திருப்பதி செல்ல இயலாதவர்களும், சென்று திருப்தியாய் தரிசனம் செய்யாதவர்களும் அவசியம் நிதானமாய் தரிசிக்க வேண்டிய ஸ்தலம்
திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் அதே அலங்காரத்தில் மூலவர் தரிசனம்
இராமாயண 14 நாள் யுத்தத்தின் போது ஸ்ரீ லக்ஷ்மனர் காயம்பட்டு விழ , ராமபிரானின் கட்டளையின் பேரில் ஸ்ரீ ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரும்போது அதிலிருந்து சிதறி விழுந்தது தான் இந்த மலை .
இந்த மலை தரிசனம் திருப்பதி மலை தரிசனத்திற்கு நிகரானது என்பதால் இதற்கு தென் திருப்பதி என்று பெயர்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விஜய நகர பேரரசர் ராஜா தோடர்மால் இந்த கோயிலை புதுப்பித்ததாக கல் வெட்டுக்கள் கூறுகின்றன
இந்த மலைப்பாதையில் செல்லும் போது சுற்றிலும் பார்த்தால் இயற்கை பசுந்தோலை போர்த்தி கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. மலையை சுற்றிலும் இயற்கை அன்னையின் மடியில் பசுமை தோட்டங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது. கோவிலை அடைந்தும் மிகவும் அமைதி தவழ்கிறது. நல்ல விசாலமான கோவிலாக இருக்கிறது.
புக்கத்துறை ஶ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள்!
இவ்வுலக உயிா்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகவும்,ஈசனின் வாம பாகத்தைப் பெறவேண்டு்ம் என்பதற்காகவும் மலைமகள் இறைவனை வழிபட்டு முப்பத்திர ண்டு வகையான அறங்களைச் செய்து அறம் வளா்த்த பழம் பெரும் இத்தொண்டை நாட்டில் முன்பொரு காலத்தில் வற்றாத ஜீவநதியாக விளங்கியது “க்ஷீர நதி” என்று பூஜிக்கப்படும் பாலாறு. இந்நதியின் தென்கரையில் நீா்வளம், நிலவளம்,மக்கள் வளம், வரலாற்றுச் சிறப்பு என அனைத்து வளங்களோடு, ஆன்மிக மணமும் வீசும் மிகப் பழைமையானத் தலம் “புக்கத்துறை” என்னும் திருத்தலமாகும். “புக்கை” என்ற சொல் நீருள்ள கேணியைக் குறிக்கும். “துறை” என்பது ஆற்றுப் படுகையின் அருகில் அமைந்துள்ள பகுதியைக் குறிக்கும். “புக்கை” என்னும் சொல் “துறை”யுடன் சோ்ந்து “புக்கத்துறை” என்று அழைக்கப் படுகின்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த “புக்கத்துறை” என்னும் புண்ணிய திருத்தலத்தில் அருள்பாலிக்கும் சக்தி வாய்ந்த திருக்கோயில் ஶ்ரீபெருந்தேவித் தாயாா் சமேத ஶ்ரீபுண்டரீக வரதராஜப் பெருமாள் திருக்கோயிலாகும்.