Swamy saranam..Today pooja at sannidhanam 27/4/22


சிறுவாபுரி முருகனை நினைத்தாலே வேண்டியது கிடைக்கும்.

சென்னைக்கு வடமேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் மேற்கே பிரியும் 33வது கிலோ மீட்டரில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தோரண வாயில் அமைந்துள்ளது.
இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் சின்னம்பேடு என்று தற்போது அழைக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
செங்குன்றத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தச்சூர் கூட்டு சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ தொலைவு சென்றால் ஆலயத்திற் குச் செல்லும் வழியை அடையலாம்.
செங்குன்றத்திலிருந்து செல்ல வாகன வசதிகள் உண்டு. நுழைவு வாயிலைக் கடந்து ஆலயத்தை நோக்கிச் செல்லும்போது இரண்டு பக்கமும் பசுமையான நிலங்களும் வாழைத் தோப்புகளும் காணும்போது கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
செல்லும் வழியில் சப்தமாதா ஆலயம், அகத்தீஸ்வரர் ஆலயம், பெருமாள் ஆலயம், விஷ்ணு துர்க்கை ஆலயம் என எண்ணற்ற ஆலயங்கள் இருக்கும் இடத்தில் வடக்குவாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.
சிறுவாபுரி முருகன் அபிஷேகத்தின் போது பார்க்க, அவர் மாமன் பெருமாளைப் போல இருக்கிறார்.
ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி எதிரே சிறுவாபுரி முருகனை காண்பித்தால் ஏதோ பெருமாள் கோவிலின் கருவறைக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றே தோன்றும்.
திருமலையில் ஸ்ரீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதே போல இவரும் நிற்கிறார்.
முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டுச் சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் மற்ற தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.
திரேதா யுகத்தில் இராமர் அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்டார். அப்போது யாகப் பசுவாக அனுப்ப வேண்டிய குதி ரையை ஏவிவிட்டார்.
அந்தக் குதிரை வால்மீகி முனிவர் ஆசிர மத்திற்கு வர, அங்கு வளர்ந்த இராமரின் பிள்ளைகள் லவனும் குசனும் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டனர்.
இதனை அறிந்த இராமர் உடனே லட்சு மணனை அழைத்து குதிரையை மீட்டு வரச் சொன்னார்.
அது முடியாமல் போகவே, இராமரே நேரில் சென்று சிறுவர்களிடம் போரிட்டு அவர்களை வென்று குதிரையை மீட்டுச் சென்றார். இராமரிடம் லவனும் குசனும் போர் செய்த இடமே சிறுவாபுரி. இது இராமாயணச் செய்தியாகும்.
அருணகிரி நாதர் நான்கு திருப்புகழ்ப் பாடல்களால் இந்த அழகு முருகனைப்பற்றிப் பாடியுள்ளார் என்றால் இந்த ஆலயம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இருந்தி ருக்கிறது என்பதை அறியலாம்.
முருகம்மையார் என்ற முருக பக்தர் சிறுவா புரியில் வாழ்ந்து வந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார்.
இதனைப் பொறுக்காத இவரின் கணவர் தன் மனைவி முருகம்மையாரின் கரங்களை வெட்டினார். உடனே முருகா என்று அம்மையார் முருகனை நினைத்து அழுதார்.
விரைவில் முருகன் அம்மையாருக்கு தரி சனம் தந்து வெட்டிய கரத்தை மீண்டும் பழையபடியே சேர்த்து வைத்தார். இந்த அற்புதம் இந்தத் தலத்தில்தான் நடந்தது.
இதனை தவத்திரு முருகதாச சுவாமிகள் பாடல் மூலமாக எழுதியுள்ளார். இந்த ஆலய இராஜ கோபுரம் ஐந்து நிலை களுடன் கம்பீரமாக வருக வருக என்று கூறி பக்தர்களை அழைக்கிறது.
உயரமான கொடி மரத்திற்கு முன்னால் மரகதப் பச்சை மயில் வீற்றிருக்கிறது. இதைப் போன்ற பச்சைமயில் அமைப்பு வேறெங்கும் காண முடியாது.
இந்த ஆலயத்திலிருந்து வெளியில் வரும் வழியிலிருந்து மரத்தால் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்தப் படிக்கட்டுகள் வழியாக ஏறித்தான் மூலவரை தரிசிக்க முடியும்.
தரிசிக்கும் வழியில் தெற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியன் சந்நிதியும் கிழக்கே இராஜகணபதி மரகதக் கல்லில் காட்சி அளிக்கும் சந்நிதியும் உள்ளன.
அடுத்து அண்ணாமலையார். மரகதப் பச்சையில் சந்நிதி கொண்டுள் ளார். அடுத்து முருகன் வள்ளியுடன் திருமணக் கோலத்துடன் காட்சி தருகிறார்.
நீண்ட காலம்திருமணம் நடக்காதவர்கள் இந்தச் சந் நிதியில் வந்து பூஜைகளும் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.
அடுத்து உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் அனைவரும் பிரார் த்தனை செய்யலாம். அடுத்து ஆலயத்தைச் சுற்றி வரும் வழியில் ஸ்ரீ மரகத விநாயகர் சந்நிதியும், அருகில் மகிழம்பூ மரமும் உள்ளன.
ஆதிமூலவர் பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த முருகர் மிக மிக எளிமை யானவர். எதிர்பார்ப்பு அற்றவர்.
இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.
திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. முனீஸ்வரர் சந்நிதியும் அபி ஷேக மண்டபமும் உள்ளது. பைரவர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீவெங்கட்ராயர் ஆகியோர்க்கும் தனிச்சந்நிதிகளும் ஈசான்ய மூலையில் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம் அன்னதானக்கூடமும் திருக்குளமும் உள்ளன.
துதிக்காதவர்களைக் கூட தடுத்தாட்கொள்பவன் தண்டபாணி. துதிப்பவர்களை விட்டுவிடுவானா?
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்.


This Year Sabarimala Yatra Programme for December 2022 has been finalized and put before Balagar in today's Pooja n got His Approval. The Yatra programme will be informed later. Blessings GS

 



காணிக்கை கொண்டு வந்தேன் - உனக்கு

காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா

கடைக்கண்ணால் பாருமய்யா  ஐயப்பா

காணிக்கை கொண்டு வந்தேன்

வேண்டி தொழுபவர்க்கு வேண்டும் வரம் கொடுப்பாய்

கண்ணுக்கிமை போல் என்னை காத்து ரட்சித்துடுவாய்

காணிக்கை கொண்டு வந்தேன்      -ஐயப்பா

கடைக்கண்ணால் பாருமய்யா....ஐயப்பா.....

கானென வழிச்சுமையுடனே நடந்து நடந்து உனை

கானென வழிச்சுமையுடனே நடந்து...நடந்து....உனை

காண மனதில் மிக ஆசை கொண்டேன்

உனை....காண...மனதில் மிக ஆசை கொண்டேன்

கானவரதன் திருநாமம் அதைப் புகழ்ந்து

பொன்னானந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு

பொன் ஆனந்தமுடன்...சன்னிதானம் அடைவதற்கு

காணிக்கை கொண்டு வந்தேன்.. ஐயப்பா

கடைக்கண்ணால் பாருமய்யா...ஐயப்பா

காணிக்கை கொண்டு வந்தேன்....ஐயப்பா...........





Swamy saranam. guruve saranam...today pooja at ankleshwar 6/4/22

 


என்ன விலை அழகே! - எல்லோரா குகைக் கோயிலின் கைலாச கோயில்
வியக்க வைக்கும் எல்லோரா குகைக் கோயில் அழகு....
மகாராஷ்டிர மாநிலத்தில் எல்லோரா மலையில், குடைந்து கட்டப்பட்டிருக்கும் கைலாசநாதர் கோயிலைப் பார்த்தவுடன் அனைவரின் மனங்களிலும் ஒரு கேள்வி எழும். உலக அதிசயங்களில் ஒன்றாக இதை ஏன் சேர்க்கவில்லை என்பதே