###########################
நமக்கு தெரிந்த கோவில்கள் ..!
நமக்கே தெரியாத அதிசயங்கள் ..!!!
##########################
#####

1.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயிலில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது. 

10. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

11. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

12. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

13. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

14. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

15. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசிக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

16. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

17. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

18. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

19. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

20. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

21. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

22. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

23. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

நெட்டில் படித்து வியந்தவை ..!
உங்களுக்கும் வியப்பை தரும் ..!!!

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி நான்காம்நாளாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மிக்குரிய நாளாகும் .. அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் ஐஸ்வர்யமிக்க 
நன்நாளாக மிளிர்ந்திட வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !! 

இந்தப்பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அன்னையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன .. அவளுக்கு
மிக .. மிகப் பிரியமான பெயரால் அன்னையை அழைப்பதுகூட ஒருவழிதான் .. அம்மா .. மா .. ஆயி .. ஆத்தாள் .. என்னும் பெயர்களே அவை .. அதேபொருள் கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் .. “ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ “ 

இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற தாமரைமலரின்மீது வீற்றிருக்கிறாள் .. 
கஜம் என்றால் யானை என்று பொருள் .. 
இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதைப்போல் அமர்ந்திருப்பதால் கஜலக்ஷ்மி என்ற பெயரும் அமைந்தது .. 

அன்னையைப் போற்றுவோம் .. அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் பெறுவோமாக .. “ ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH PEACE .. HAPPINESS AND GOOD LUCK .. " JAI MATA DI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி மூன்றாம் நாளாகிய இன்றும் அன்னை துர்க்காதேவியைப் போற்றி வணங்கி .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் பெற்று அனைத்திலும் வெற்றி காண்போமாக .. ஓம் காத்யாயனாய வித்மஹே ! கன்யாகுமரீ ச தீமஹி ! தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் ! நவராத்திரி தோன்றிய கதை .. ஒருமுறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மஹிஷாசுரன் என்ற அரக்கனைக் கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க .. சிவன் .. விஷ்ணு .. பிரம்மா .. ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர் மூன்றுகடவுள்களின் வாயிலிருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம் .. அதற்கு பத்து கைகள் .. ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்து .. அந்தப் பெண் தெய்வம்தான் ‘ துர்க்கை ‘ .. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒருவடிவம்தான் துர்க்கை .. அன்னையிடம் அனைத்து கடவுள்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும் .. கவசங்களையும் அளித்தனர் .. துர்க்காதேவி உலகையே அச்சுறுத்திவந்த மஹிஷாசுரனை வீழ்த்தியது தான் நவராத்திரியாகும் ! அன்னையைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றிகாண்போமாக ! வெற்றி நிச்சயம் ! ” ஓம் சக்தி ஓம் ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY THIS DAY OF 'MAA DURGA' BE THE START OF YOUR GOOD LIFE .. GOOD FORTUNE .. AND LONG LASTING HAPPINESS .. JAI MATA DI ..

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி இரண்டாம் நாளாகிய இன்றும் அன்னை துர்க்கை அம்மனுக்கே உரிய நாளாகும் .. அன்னையைத் துதித்து இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் ..மனநலமும் .. உடல்நலமும் நலமே அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் காத்யாயனாய வித்மஹே !
கன்யாகுமரீ ச தீமஹி !
தந்நோ துர்க்கி ப்ரசோதயாத் !! 

பதினெட்டு கரங்களுடன் பக்தர்களைப் பரவசப்படுத்துவதினால்
“அஷ்டாதசபுஜதுர்க்கை “ என்று போற்றி வணங்குகின்றனர் ..
அன்னையை ராகுகாலத்தில் வழிபடுவதினால் ”இராகுகாலதுர்க்கை” என துதிக்கின்றனர் .. 
சினம்கொண்டு சிவந்தகண்களுடன் .. சிவந்தமேனியுடன் திகழ்வதினால் “கெப்பம்மா துர்க்கை “ என்று வழிபடுகின்றனர்..
வீராவேசம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களுக்கு அரணாக இருந்தமையால் “ கொற்றவை” என்றும் துதிக்கின்றனர் .. 
வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை ”சிவதுர்க்கை” என்று வணங்குகின்றனர் .. 
இடக்கையில் சங்கும் .. வலக்கையில் மழுவுடன் காட்சியளிக்கும் துர்க்கையை “விஷ்ணு துர்க்கை” என வழிபடுகின்றனர் .. 
அன்னைக்கு உரியதிதி எட்டாம்நாளான அஷ்டமி திதியாகும் 
அதனாலேயே பக்தர்கள் ஸ்ரீதுர்க்காஷ்டமி என்றுகூறி சிறப்பாக வழிபடுகின்றனர் ..

அன்னையை பலநாமங்களில் அழைத்து மனம் உருகி வணங்கி வழிபட்டாலும் பக்தர்களுக்கு அன்னை பேரருளை வாரிவழங்கி 
வாழ்வளிக்கின்றாள் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! “ ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY 'MAA DURGA' GUIDE YOU AND PROTECT YOU ALWAYS IN WHATEVER YOU DO .. AND WHEREVER YOU ARE .. MAY HER BLESSINGS REMOVE ALL THE OBSTACLES FROM YOUR PATH OF LIFE .. AS SHE REMOVES THE DARKNESS FROM THE UNIVERSE .. " HAPPY DURGA PUJA " .. JAI MATA DI ..

At ananthapadmanabhaswamy ambalam adyar golu


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் நவராத்திரிப்பண்டிகை நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. 
இன்று நவராத்திரி விழா (13.10.2015 ) ஆரம்பமாகின்றது .. நவராத்திரி முதலாம் நாளாகிய இன்று ஸ்ரீதுர்க்கைக்குரிய நாளாகும் .. அன்னையைப் போற்றி வணங்கும் சகலருக்கும் நல்லருள் தந்து பலவெற்றிகளைக் கொடுப்பதினால் 
“ ஜெயதுர்க்கை “ என்று போற்றுகின்றனர் .. 

இன்றைய நாள் தங்கள் அனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஐகிரி நந்தினி நந்தித மேதினி 
விஸ்வ வினோதினி நந்தனுதே !
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி 
விஷ்ணு விலாசினி ஜிஸ்னுனுதே !
பகவதி ஹே ! ஸிதிகண்ட குடும்பினி
பூரி குடும்பினி பூரிக்ருதே ! 
ஜய ! ஜய ஹே ! மஹிஷாசுரமர்தினி 
ரம்ய கபர்தினி ஷைலஸுதே !! 

இமவான் புத்ரியும் .. ஜடாமுடியுடன் திகழும் சிவபெருமானின் துணைவியும் .. மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே ! மஹிஷாசுரமர்தினியே ! உனக்கு வெற்றி தாயே!
உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் ! நம்மையும் காத்தருள்வாயாக !! 

தாயாக இருந்து உலகைக்காக்கும் அன்னையைச் சரணடைந்து
அனைத்திலும் வெற்றி காண்போம் ! வெற்றி நிச்சயம் ! 
” ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED NAVARATRI AND MAY MAA DURGA EMPOWER YOU AND YOUR FAMILY 
WITH HER NINE SWAROOPA OF .. NAME .. FAME .. HEALTH .. WEALTH ..
HAPPINESS .. HUMANITY .. EDUCATION .. BAKTI .. AND SHAKTI .. 
" JAI MATA DI

நாளை ஆரம்பமாகும் நவராத்திரி பண்டிகைக்கு தங்கள் அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களும் அன்னையின் ஆசியும் .. அருட்கடாக்ஷ்மும் பெற்று சீரும் .. சிறப்புடனும் வாழ வாழ்த்தி .. அன்னையை வணங்குகின்றோம் .. 

பூவுலகைக் காத்திடும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒருராத்திரி 
அதுவே சிவராத்திரி .. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு ஒன்பது ராத்திரிகள் .. அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது .. 

நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம் .. உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம் .. 

பரப்பிரம்மத்தையே அன்னை பராசக்தி தன் அன்பினால் கட்டுப்படுத்தியுள்ளாள் என்பதை உலகைப்படைக்கும் பிரம்மாவையும் .. காக்கும் விஷ்ணுவையும் .. அழிக்கும் உருத்திரனையும் இவர்கட்கு மேலாகவிருக்கும் ஈஸ்வரனையும் தனக்குள் மறையும்படி செய்து மீண்டும் அவர்களை வெளிப்படுத்தி அவர்களது தத்துவார்த்தங்களை அவர்கள் மூலமாகவே வெளிப்படுத்துகிறாள் அன்னை .. 

பிரபஞ்சத்தில் பிறவி எடுத்த நாம் அனைவருமே அநித்யம் .. ஆனால் ஜெகதாம்பிகை ஒருவளே ! நித்திய யுவதி .. அவளைத் தூய்மையான உள்ளத்தோடு தியானித்து துதிசெய்தால் அருட்கடாக்ஷ்த்தை அள்ளி வழங்குவாள் .. அம்பிகை அருளைப்பெற .. அந்த மங்களநாயகியின் அம்சம் கலந்த மாதமான புரட்டாதியில் வரும் நவராத்திரியில் வணங்குவது 
மிகுந்த பலனை அளிக்கும் .. 

ஒருமனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும் வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் .. அறிவும் .. வளமும் .. மிகவும் அவசியம் .. அதனை வெளிப்படுத்த உடல்வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்காதேவியும் .. வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் .. அறிவையும் .. ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதிதேவியையும் .. நாம் வழிபட்டு அருள்பெற்று .. வலிமை .. செல்வம் .. கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே 
நவராத்திரி விழாவாகும் ..
” ஓம் சக்தி ஓம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

NAVARATRI IS AN INDIAN FESTIVAL THAT HONORS THE DIVINE MOTHER IN HER VARIOUS FORMS .. NAVARATRI LITERALLY MEANS NINE NIGHTS .. 

THREE DAYS DEDICATED TO DURGA - THE GODDESS WHO HELPS US INTEGRATE THE EGO ..
THREE DAYS FOR LAKSHMI - THE GODDESS OF PROSPERITY AND 
ABUNDANCE ..
THREE DAYS FOR SARASWATI WHO BRINGS BEAUTY AND WISDOM .. 

THE FESTIVAL ENDS ON THE TENTH DAY WHICH IS THE DAY OF VICTORY .. WHEN GOOD TRIUMPHS OVER EVIL ..
MAY GODDESS 'MAA' BLESS YOU ALL .. " JAI MATA DI

BALAGARRING PARIPOORNA ARUL PALIKKUM DHARISANAM....SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM



SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதிமாதத்தில் வரும் 
“ மஹாளய அமாவாசையாகும் “ நம்முன்னோர்கள் புண்ணியகாலமாகிய இன்று பூலோகம் வரும் மகிமைமிக்க நாளாகக் கருதப்படுகிறது .. அத்தோடு மஹாளயபக்ஷ்ம் இன்றோடு முடிவடைகின்றது
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது .. அமாவாசை .. மாதப்பிறப்பு .. இறந்த அவர்களது திதி .. மற்றும் மஹாளயபக்ஷ் தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் .. எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ருதர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர் ..
பித்ருக்களின் உலகிற்குத் தலைவரான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ருபூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது ..
கங்கே ! தங்கேதி யோப் ரூயாத் யோஜநாநம் சாதரபி முச்யதே!
ஸர்வ பர்பேப்யோ விஷ்ணு லோகம் ஸகச்சதி !
பொருள் - கங்கை ! கங்கை ! என்று நூறுமைல்களுக்கு அப்பால் இருந்து சொல்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு அருளை அடைகிறான் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது ..
நமதுமுன்னோர்களான மூன்றுதலைமுறைக்கும் சேர்த்து சிரார்த்தம் செய்யும்பொழுது பித்ருதேவதைகளின் பரிபூரண ஆசிகளும் .. சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு துன்பம் அணுகாமல் இன்பமாக வாழ அருள்வார்கள் ..
அவர்களது பரிபூரண ஆசியைப்பெற்று .. பாவதோஷங்கள் .. தடை .. தடங்கல்கள் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வு வாழ்வோமாக .. “ பித்ரு தேவோ பவ “ ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY .. TODAY IS THE ' MAHALAYA AMAVASYA DAY ' .. IT'S THE RIGHT TIME AS CONSIDERED BY MANY TO RESPECT THE DEPARTED SOULS .. IT SOLVES THE PROBLEMS RELATED TO HEALTH .. MONEY AND RELATIONSHIPS ..
EVEN IF THE ANCESTORS HAVE CURSES .. WE CAN RELIEVE THEM FROM BY OFFERING TO THE POOR .. IT PURIFIES THE MIND OF UNWANTED DEIRES AND BRINGS PROSPERITY AND LONFLIFE TO THE FAMILY .. " PITHRU DEVO BAVA " ..

THANGA JIGINA SIMHASANATHIL BALAGAR AMARNDHAR.....

SWAMIYE SARANAM IYYAPPA...PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. சூரியபகவானைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் சிறந்த ஆரோக்கியத்தையும் ..அறிவுத்திறனும் .. மற்றும் அனைத்து 
சம்பத்துக்களும் பெற்றிடவும் வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

“ ஆதித்யஹ்ருதயம் “ மகத்தான சக்திவாய்ந்த மந்திரம் .. இராவணனுடன் போரின்போது இராமபிரான் மனச்சோர்வுற்றபோது அகத்திய மாமுனிவர் இராமனுக்கு அருளிய உபதேச மந்திரமே இது .. சூரியனின் ஆற்றலை .. திறனைப் போற்றித் துதிக்கும் இதனை தினமும் பக்தியோடு பாராயணம் செய்துவந்தால் பகைகள் விலகும் .. தடைகள் நீங்கும் .. வேலை.. தொழில் முதலியவற்றில் இருக்கும் சிக்கல்கள் இல்லாமலாகும் .. 

ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள் .. தந்தை ஸ்தானம் சரியில்லாதவர்கள் தினந்தோறும் பாராயணம் செய்துவந்தால் தோஷங்கள் குறையும் .. வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும் 
தலைமை பண்பு .. ஆளுமை திறன் .. புகழ் .. தந்தை .. தைரியம் மனோவலிமைக்கு சூரியனே அதிபதி .. 

சூரியனைப் போற்றுவோம் ! நலம் அனைத்தையும் பெற்றிடுவோம் ! ஓம் சூரியாய நமஹ ! வாழ்க வளமுடனும் ..
நலமுடனும் ..

Jothiswaroopane Saranam Ayyappa.....

Nilkanth Dham is a grand temple of Lord Shri Nilkanthvarnendra Swaminarayan, which is located on the beautiful river bank of Narmada at Poicha village of Narmada district,Gujarat..





Good morning to all Nandi at Chamundi Hills, Mysore, Karnataka

PANVEL BALAGANE POTRI POTRI....SWAMIYE SARANAM IYYAPPA.....SATGURUNATHANE SARANAM IYYAPPA...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று புரட்டாதி நான்காம் வாரமும் .. ‘சனிப்பிரதோஷமும் ‘ சேர்ந்து வருவது சாலச்சிறந்ததாகும் .. காலையில் சிவாலயம் சென்று சனீஸ்வரரையும் .. மாலையில் ( 4.30 - 6.00 மணிவரையிலான ) பிரதோஷ வேளையில் ஈஸ்வரனையும் தரிசிப்பது அதிவிசேஷமாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வுடன் திகழவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் சதாசிவாய வித்மஹே !
ஜடாதாராய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

தோஷம் என்றால் குற்றமுடையது .. அதேநேரம் பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள் .. எனவே குற்றமற்ற இந்தப்பொழுதில் ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) இறைவனையும் .. நந்தீஸ்வரரையும் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் .. 

(மீனாட்சி ஸுந்தரேஷ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம்) -

பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய பூதேஸ்வராய புவனத்ரய காரணாயஹலாஸ்ய
மத்யநிலயாய நமஸ்ஸிவாய .. 

பொருள் - மக்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா !
நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே!
பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே ! 
பிரதமகணங்களுக்கு ஈஷ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே ! காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே !ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! மீனாட்சிசுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் ! 

சனிப்பிரதோஷங்களில் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகலமங்களங்களும் பெருகும் .. 
“ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..

Good Morning to all Trikoteshwara Swamy Temple in Kotappakonda,a holy hill, situated in Guntur district, Andhra Pradesh,

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM IYYAPPA...


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று ஆலயம் சென்று அன்னை மஹாலக்ஷ்மியைத் தரிசனம் செய்வது சாலச்சிறந்தது .. 
தங்களனைவருக்கும் அன்னையின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் கிடைத்து .. மகிழ்ச்சிகரமாக வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே !
ஸர்வசக்த்யை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

பொருள் - மஹாசக்தியாகவும் .. உயிர்களை உய்விப்பவளாகவும் .. நம்மை நடத்திச் செல்பவளாகவும் உள்ள
தேவி எங்களைக் காத்திடட்டும் .. எங்கள் செயல்கள் யாவும் அன்னை அவளே ஊக்குவிக்கட்டும் .. 

செல்வ வளம்தந்து வறுமையை அகற்றி அருள்புரிபவள் .. பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும் அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன் அன்னைக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன .. யானையின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது .. 

விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள் .. லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள் .. விஷ்ணுபகவான் தான் எங்கும் நிறைந்துள்ளதை விளக்க உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மஹாலக்ஷ்மியாகும் .. 

மங்காத புகழையும் .. நிறைவான செல்வத்தையும் .. சர்வமங்களங்களையும் அளித்திடும் அன்னையைப் போற்றுவோம் ! அனைத்தையும் பெற்றிடுவோமாக ! 
ஓம் ! சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAXMI .. MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. 
" OM SHAKTHI OM " .. JAI MATA DI ..

ACHANKOVIL SRI DHARMASASTHA TEMPLE Achankovil is an important pilgrim centre in Kollam district located 42kms from Punalur. Believed to be consecrated by Lord Parasurama, the Dharmasastha temple here, dedicated to Lord Ayyappa attracts pilgrims from Kerala and Tamilnadu through out the year specially during the Sabarimala season. This ancient temple is located amidst dense forests of Kandamala, where the God is said to have given 'Darshan' to a worshipper who entered into a long term penance. Here the idol of the main deity, Ayyappa is called Rudraksha Shila. The two important festivals of this temple are Mandala Pooja (December-January) and The festival held at 'Ravathi' (January-February).

Night view of Shree mahakaleshwar temple Ujjain in the state of Madhya Pradesh

Good Morning to all Temple tank of Bhoganandeeshwara temple,Nandi Hills, Karnataka,

SWAMIYE SARANAM IYYAPPA..PANVEL BALAGANE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM...



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று ஏகாதசி விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாகத் திகழ்ந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்றைய ஏகாதசித் திதியை “ இந்திரா ஏகாதசி “ என்றழைப்பர்
இவ்விரதமிருந்து மூதாதையருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திரவாழ்வை வைகுண்டத்தில் பெறுவர் .. நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்கவேண்டும் என்று அருகிலிருக்கும் பகவானிடம் பரிந்துரைப்பார்கள் .. 

ஏகாதசியின் பெருமைகளை ஒருவர் படித்தாலோ .. கேட்டாலோ .. அவர் தன் பாவவிளைவுகளிலிருந்தும் விடுபட்டு .. இறுதியில் மஹாவிஷ்ணுவின் பரமத்தை அடைவர் .. 

பகவானைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! ஓம் நமோ நாராயணா !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HIS DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS ON THIS 
' EKADASI DAY ' .. " OM NAMO NAARAAYANAA " ..


சிவபெருமானின் 5 முகங்களின் விளக்கம் & 5 முகத்திலிருந்தும் தோன்றிய 25 மகேஸ்வர வடிவங்களும்

சிவபெருமானின் முகங்கள் ஐந்து ஆகும். அவையாவன:1) சத்யோஜாதம், 2) வாமதேவம்,

 3 )தத்புருஷம், 4 )அகோரம், 5) ஈசானம்.

சத்யோஜாதம்:
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.

வாமதேவம்:
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.

தத்புருஷம்:
அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.


அகோரம்:
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
ஈசானன்:
கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. சோமாஸ்கந்தர்
2. நடராசர்
3. ரிஷபாரூடர்
4. கல்யாணசுந்தரர்
5. சந்திரசேகரர்


தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. பிட்சாடனர்
2. காமாரி
3. காலாரி
4. சலந்தராரி
5. திரிபுராரி


அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:
1. கஜசம்ஹாரர்
2. வீரபத்திரர்
3. தக்ஷிணாமூர்த்தி
4. கிராதமூர்த்தி
5. நீலகண்டர்

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1. கங்காதரர்
2. சக்ரவரதர்
3. கஜாந்திகர்
4. சண்டேசானுக்கிரகர்
5. ஏகபாதர்

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
1. லிங்கோத்பவர்
2. சுகாசனர்
3. உமாமகேசர்
4. அரிஹரர்
5. அர்த்தநாரி

திருப்பதியில் வருடத்திற்கு ஒரு முறை தங்கம் மற்றும் வைரம் அலங்காரம் நடைபெறும் இந்த முறை நடந்த வைர அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்த போது....

Good Morning to all Lord Shiva at Kailash Dham , Bishangarh, Rajasthan

SWAMIYE SARANAM IYYAPPA

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று பெருமாள்வழிபாட்டிற்கு உகந்த நாளாகும் .. புரட்டாதியில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கட் கிழமைகளிலும் பெருமாள்வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகும்.. 

இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய பொன்னாளாக மிளிர்ந்திட ஏழுமலையானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

திருவருள் தரும் தெய்வம் திருமலைத் தெய்வம் ! தீராத வினையெல்லாம் தீர்த்திடும் தெய்வம் ! வரும்துயர் .. பகையாவும் மாற்றிடும் தெய்வம் ! வாய்திறந்தே கேட்டால் அனைத்தும் வழங்கிடும் தெய்வம் ! 

கருணையே உருவான தெய்வம் ! திருவேங்கடமுடையான் !
கருணையாக நோக்கி லேசாகச் சிரிக்கும் கண்களில் கருணை பொங்கிப் பிரவாகிக்கும் அற்புதத்தை உணரமுடியும் .. 

சந்திரதோஷத்தால் வரும் தடைகள் .. பணப்பிரச்சினை நோயால் அவதி .. கல்வித்தடை .. உள்ளோர்கள் திருவோணவிரதமிருந்து பகவானை வழிபட்டால் பிரச்சினைதீர்ந்து நன்மை உண்டாகும் ..

தீராதவினையெல்லாம் தீர்த்திடும் ஸ்ரீனிவாஸனைப் போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக ! 
ஓம் நமோ வேங்கடேசாய நமஹ ! கோவிந்தா ! கோவிந்தா ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BALAJI 
MAY HE SHOWER YOU WITH GOOD STRENGTH .. BEST HEALTH .. AND 
GOOD FORTUNE .. " OM NAMO VENKATESHAAYA NAMAHA " ..

Good Morning to all Lakshmi Narasimha Swami Temple Tower,Mangalagiri, Andhra Pradesh.

GURUVE SARANAM...SWAMIYE SARANAM IYYAPPA......PANVEL BALAGANE SARANAM SARANAM.

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இந்நாள் கலியுகவரதானாகிய கார்த்திகேயனுக்குரிய நன்நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட வாழ்த்தி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

முருகன் தன் அடியார்கள் வேண்டும் நலங்களை எல்லாம் அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மையான குணம் வாய்ந்தவன் .. நம் உள்ளத்தைக் கவரும் பண்புடையான் .. 

தாமரைமலர் போன்ற திருவடிகளைக் கொண்டவனே !
வேதம் போற்றும் சிவசண்முகனே ! குறிஞ்சிக்கடவுளே !
ஆறு தலை அமலனே ! செங்கல்வராயனே !
ஔவைக்கு நாவற்கனி கொடுத்தவனே ! கலியுகவரதனே ! 
முத்துக்குமார சுவாமியே ! கண்கண்ட தெய்வமே !
அலைகடல் ஓரத்தில் அருளாட்சி செய்யும் செந்திலாண்டவனே! எல்லோரும் இன்புற்றிருக்க உன் அருள்மழையை எப்போதும் பொழிவாயாக !! 

முருகனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! ” ஓம் முருகா “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM MURUGA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று “ பைரவரை “ வணங்கினால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் யாவும் நீங்கும் .. நல்லருள் கிட்டும் .. தங்களைனவருக்கும் அனைத்து தொல்லைகளும் நீங்கி .. மகிழ்ச்சியுடன் வாழ .. 
“ பைரவப்பெருமானைப் “ பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே !

சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

துன்பங்களும் .. துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக 
‘ பைரவர் வழிபாடு ‘ கூறப்படுகிறது .. கடவுள்வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார் .. 

பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகிய அஷ்டமித் திதியில் பொதுவாக மக்கள் எந்த நல்லகாரியங்களும் செய்யமாட்டார்கள் .. அதன் உண்மைக்காரணம் வேறு .. இறையாணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்டலக்ஷ்மிகள் .. சொர்ணபைரவரிடம் 
சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர் .. தாங்கள் பெற்ற சக்தி குறைய .. குறைய .. ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்கின்றனர் ..

அஷ்டமி அன்று அஷ்டலக்ஷ்மிகள் பைரவவழிபாட்டில் ஈடுபடுவதால் அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபடமுடியாது .. ஆகவே அஷ்டலக்ஷ்மிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில் நாமும் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால் அஷ்டஐஸ்வர்யங்களும் கிடைக்கும் .. ஏவல் .. பில்லி.. சூனியம் .. பேய் .. பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்தும் பூரணவிடுதலை அடைய .. வாழ்வில் வளம் பெற .. பிதுர்தோஷம் .. சனிதோஷம் நீங்க பைரவர்வழிபாடு மிகவும் உதவும் .. 

இத்தையான சிறப்புவாய்ந்த அஷ்டமி வழிபாட்டினைப் பின்பற்றி எல்லா நலமும் அடைவோமாக ! 
“ ஓம் பைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும்..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HIS DIVINE BLESSINGS SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM BHAIRAVAAYA NAMAHA
"

வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!


நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம்.
அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி கலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம்.
ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது.
பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது.
இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராøக்ஷ பழம்
9. சூ பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. ஆப்பிள் – காஷ்மீர பலம்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்
ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே

Good Morning to all Sri kalyana venkateshwara swami temple,Srinivasa mangapuram near Tirupathi


SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGAN PATHAM POTRI POTRI...GURUVE SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்.. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. சூரியபகவானைத் துதித்து தங்களனைவருக்கும் எதிலும் வெற்றியும் .. மகிழ்ச்சியும் நல்லாரோக்கியமும் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 


‘ லோககர்த்தா ‘ என வேதங்கள் புகழும் சூரியபகவான் பிரத்யக்ஷ்மாக நம் கண்முன் தோன்றி அருள்புரிபவர் .. அங்கிங்கெனாதபடி எங்கும் தன் அமுத கிரணங்களை வீசி உலகை வழிநடத்துபவர் .. உலகில் எவ்வுயிர்க்கும் ஏற்றத்தாழ்வுகளின்றி தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தரும் தேவதேவன் .. பேதமில்லாமல் யாவரையும் சமமாக நோக்கும் நெறியை நமக்குச் சொல்லாமல் சொல்பவர் ..

தன்னை உதிக்கக்கூடாதென்று தன் கற்பின் சக்தியால் சாபமிட்டநளாயினி மறுபிறவியில் திரௌபதியாகப் பிறந்தபோது அவளது பக்திக்கு இரங்கி அக்க்ஷ்யபாத்திரம் அளித்த கருணைப் பெருங்கடல் சூரியபகவான் .. 

சூரியனைப் போற்றுவோம் ! நம்முடைய அனைத்து தோஷங்களையும் .. பாவங்களையும் நீக்கி நல்வாழ்வு தருவானாக .. ஓம் சூரியபகவானே ! போற்றி ! போற்றி ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. 
MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND PROSPERITY .. " JAI SURYADEV " .
.

PANVEL BALAGAN PATHAM POTRI POTRI


Good Morning to all LORD VEERA NARAYANA AT BELAVADI TEMPLE,KARNATAKA

SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மூன்றாம் புரட்டாதிச் சனிக்கிழமையாகிய இன்று சனிதோஷமுள்ளவர்கள் அதன் தாக்கம் குறைய சிவாலயம் சென்று மண்சிட்டிகையில் நல்லெண்ணையிட்டு எள்ளை சிறுபொட்டலமாகக்கட்டி அதனுள்ளே வைத்து தீபமாக ஏற்றி நவக்கிரகங்கள் முன்னால் வைத்து வழிபடலாம் .. 
ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றும் நெய்தீபம் ஏற்றலாம் .. 
இன்றைய நாள் தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி புத்துணர்வுடன் செயலாற்ற சனீஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் காகத்வஜாய வித்மஹே !
கட்கஹஸ்தாய தீமஹி !
தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத் !!

ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு எள் கலந்து உணவு வைக்கவேண்டும் .. அதன்பின்பே நாம் மதியம் உண்ணவேண்டும் .. ஏழைகளுக்கும் .. மாற்றுத்திறனாளி .. முதியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்யலாம் .. தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது .. விநாயகப்பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணை தீபம் இடுதல் நல்லபலனைக்கொடுக்கும் .. சிவவழிபாடும் சனியின் உக்கிரகத்தைக் குறைக்கும் .. 

கரிநாளில் பைரவரை சிவப்புமலர்களால் அர்ச்சித்தாலும் சனியின் தாக்கம் குறையும் .. சனிபகவான் நீதிமான் .. குற்றங்கள் புரிபவர்களையும் .. தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் .. அகந்தையுடன் .. அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார் .. சிலசமயங்களில் ஒருபாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும்பொழுது சனி என்னை இந்தநிலைக்கு ஆளாக்கிவிட்டானே என்று புலம்புவதுண்டு .. அது போனஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும் .. ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர் .. 

சனீஸ்வரனைப்போற்றுவோம் ! சகலதோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறுவோமாக ! .. ” ஓம் சனீஸ்வராய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHANIDEV .. 
MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND GIVE YOU PEACE AND HAPPINESS .. " JAI SHANIDEV "

Good Morning to all Belur Chennakesava Temple - Belur, Karnataka

SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று சங்கடஹர சதுர்த்தி விரதமும் .. கார்த்திகை விரதமும் சேர்ந்து வருவது அதிவிசேஷமாகும் ..ஆலயம் சென்று வினைகளைக் களையும் விக்னேஷ்வரனையும் .. கலியுகவரதனாகிய கார்த்திகேயனையும் தரிசிப்பது சாலச்சிறந்தது ..
வளர்பிறைச் சதுர்த்தி சாதாரண சதுர்த்தித் திதியாகும் .. 
தேய்பிறைச் சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தியாகும் .. 
சங்கடஹர சதுர்த்தியாகிய இன்று விரதமிருந்து இரவில் விநாயகரை வழிபட்டால் எல்லா செயல்பாடுகளிலும் உள்ள தடைகள் நீங்கி வெற்றி பெறலாம் ..
“ வேலுண்டு வினையில்லை ..
மயிலுண்டு பயமில்லை ..
சேவலுண்டு ஏவலில்லை ..
குகனுண்டு குறைவேயில்லை “ ..
விக்னேஷ்வரனையும் .. முருகனையும் போற்றுவோம் !
வாழ்வில் அனைத்து தடைகளையும் தாண்டி 
சகல வெற்றிகளையும் அடைவோமாக ! வெற்றி நிச்சயம் !
ஓம் கணேஷாய நமஹ ! ஓம் முருகா ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL AND A VICTORIOUS THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH AND LORD MURUGA .. MAY THEIR DIVINE BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY 
AND FOREVER MORE .. " JAI GANESH .. & OM MURUGA
 " ..