சென்னையில் வருண பகவான் ஆதிக்கம்...மும்பையிலே குரு (சுவாமி) ஆதிக்கம்... சென்னையிலே மழையின் தாக்கம்...மும்பையிலே பூமழையின் தாக்கம்.....பன்வேல் பாலகனின் பயணம் தொடர்கிறது... இன்று மும்பை கண்ணன் சுவாமி வீட்டிலே பாலகனின் ஆளுமை....

























POOJA AT SUNIL SWAMY HOUSE ,MULUND...SWAMY SARANAM- என்றுரைத்துன் நாமங்களை இசைத்து- பாலகன் உன் தாள் பணிகின்றேன்- நீயன்றி- எனக்கோர் புகலிடம் ஏது-சொல் -பன்வேல் பாலகனே ஸ்ரீ ஐயனே என் குல தெய்வமே என் நமஸ்காரங்கள்-









TODAY 8TH DAY VIRADHAM.....SWAMI SARANAM SARANAM..GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியாதிக்கம் பூமியில் நிறைந்த நாளாகும் .. பயன்கருதாது அன்றாடப் பணியைச் செய்துவருபவருமான சூரிய பகவானைத் துதித்து தங்கள் அனைவருக்கும் மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் .. இன்றைய நாள் மகிழ்ச்சியுடன் அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாசஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதயநேரத்தில் பிரம்மா ரூபத்திலும் .. 
உச்சிப்பொழுதில் பரமேஸ்வர ரூபத்திலும் ..
அஸ்தமன மாலைநேரத்தில் விஷ்ணுரூபமாகவும் காப்பதாக 
ஐதீகம் .. 

ஆயிரம் கரங்களை நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி ! 
அருள்பொங்கும் முகத்தைக்காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி ! 
தாயினும் பரிந்து சாலச்சகலரை அணைப்பாய் போற்றி !
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி !
தூயவர் இதயம்போலத் துலங்கிடும் ஒளியே போற்றி !
தூரத்தே நெருப்பைவைத்து சாரத்தைத் தருவாய் போற்றி !
ஞாயிறே ! நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி !
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி ! போற்றி!! 

சூரியபகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவோமாக ! 
“ சூரியாய நமஹ ” வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. 
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. HAPPINESS AND 
PROSPERITY .. " JAI SURYA DEV "

தீபாவளிக்கு மூன்று குளியல்: - மஹாபெரியவா


  தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை நதியே இருப்பதாக ஐதீகம். அதனால், அந்த நேரத்தில் எண்ணைய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவெண்டும். இதற்கு “கங்கா ஸ்நானம்“ என்று பெயர்.

* வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். ஆப்பொது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, “துலா ஸ்நானம்” என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவு வரவேண்டும்.

* வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும் “கோவிந்தேதி ஸதா ஸ்நானம்“ அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது. பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்யுங்கள்.

Good Morning to all Murudeshwara Temple Raja Gopuram and beach in Karnataka

TODAY 7TH DAY VIRADHAM.....AYYANE SARANAM SARANAM...PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐயனுக்கு மாலை அணிந்து இன்று ஏழாவது நாளாகும். சென்னையை பொறுத்தவரை இந்த வாரம் வாரந்திர பூஜை எங்கும் இல்லை.
 
சனிக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமாகும் .. விரதமிருந்து இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

” காயத்ரி மந்திரத்திற்கு ஈடான மந்திரமில்லை .. தாய்க்கு சமனான தெய்வமுமில்லை .. காசியைவிட சிறந்த தீர்த்தம் இல்லை .. ஏகாதசியை மிஞ்சிய விரதமில்லை “ என்பது சான்றோர் வாக்கு .. 

ஏகம் என்றால் - ஒன்று 
தசி என்றால் - பத்து .. 
இதன்படி பதினோராவது நாளே ஏகாதசியென்று சிறப்பிக்கப்படுகிறது .. 

இன்றைய ஏகாதசியை “ ரமா ஏகாதசி “ என்பர் ..
ர - என்றால் நெருப்பு .. 
மா - என்றால் தாய் .. அதாவது ஒளிபொருந்திய ஏகாதசி என்று பொருள் ..
இன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி பதினோருமுறை வலம்வந்து வணங்குவதால் .. தாயின் அன்பு போல பெருமாளின் அருட்கடாக்ஷ்ம் பெருகி தங்கள் வாழ்வில் 
செல்வம் .. ஆரோக்கியம் .. மனநிம்மதி அதிகரிக்கும் .. 

மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! நீடித்த ஆயுள் .. ஆரோக்கியம் .. நீங்காத செல்வம் ஆகியவற்றையும் பெற்றிடுவோமாக .. “ ஓம் நமோ நாராயணா “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED EKADASI
DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. PROSPERITY .. AND REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH TOO .. 
" OM NAMO NAARAAYANAA " ..


Good Morning to all Shri Swaminarayan Temple,Toronto,Canada.

TODAY 6TH DAY VIRADHAM....SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று .. ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் சேவித்து வணங்கப்படுகின்ற அன்னையாகிய மஹாலக்ஷ்மியைத் துதித்து .. தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்மும் திருவருளும் கிடைத்து .. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்
 !! 

இந்தபூமியே அன்னைதான் ! ஒவ்வொரு மனிதரிடமும் .. 
கல்வியாக .. பொன் .. பொருள் .. என வளர்செல்வமாக .. 
செஞ்சுரமாக .. நல்வாழ்வில் விளையும் மகிழ்ச்சியாக ..
கூடிவாழ்வதில் மலரும் அன்பாக .. நிறைவாழ்வில் புகழாக ..
இறைவாழ்வில் நித்திய சாந்தியாக .. பொலிபவள் அவளே ! 
அவள்தான் அன்னை மஹாலக்ஷ்மித் தாயே ! 

அனைத்து மங்களங்களையும் அருள்பவளே ! மங்கலியே ! எல்லாச் செல்வங்களையும் அளிப்பவளே ! நாராயணியே ! கல்யாணியே ! போற்றுகின்றோம் ! ஆயுள் .. ஆரோக்கியத்துடன் குன்றாத செல்வங்களையும் அனைவருக்கும் அருள்வாயாக தாயே ! மஹாலக்ஷ்மியே ! 

அன்னையைப் போற்றுவோம் ! மங்களங்கள் யாவும் தந்து நித்யாவாசம் செய்து தங்களனைவரையும் மகிழ்விப்பாளாக !
ஓம் மஹாலக்ஷ்மியே ! நமோஸ்துதே ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY 
MAA LAKSHMI BRING BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS .. AND PROSPERITY ..
" JAI MATA DI " ..

சர்மா சாஸ்திரிகள் article in Tamil Hindu - தமிழ் ஹிந்து:- தீபாவளி அன்று ‘கங்கா ஸ்நானம்’ மட்டும் கிடையாது. அன்று இரண்டு ஸ்நானங்கள் சொல்லியுள்ளது. உங்களுக்குத் தெரியுமா? 

சனாதன ஹிந்து மதத்தில் பல பண்டிகைகள் உள்ளன. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு புராண வரலாறு உண்டு. தனித்தன்மை உண்டு.அனைத்து பண்டிகைகளை ஆழ்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு ஆன்மிகம் கலந்த சமுதாய சிந்தனையும் ஒன்று அடிப்படை ஆதாரமாக இருப்பதை நம்மால் அதில் பார்க்க இயலும்.

எல்லா பண்டிகைகளும் ஒவ்வொரு தேவதா மூர்த்தியை அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை நாம் அறிந்ததே. அந்த குறிப்பிட்ட தேவதா மூர்த்திக்கு அன்று விசேஷ பூஜை புனஸ்காரங்கள், நைவேத்யங்கள் சொல்லப்பட்டிருக்கும்..

உதாரணத்திற்கு சிவராத்ரி சிவனை மையமாகவும், வைகுண்ட ஏகாதசி திருமாலை ப்ரதானமாகவும், விநாயக சதுர்த்தி பிள்ளையாரை அடிப்படையாகவும், கிருஷ்ண ஜயந்தியில் கண்ண பிராணும், இராம நவமியில் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியும், நவராத்திரி பண்டிகையில் அம்பாள் ஸ்வரூபவத்தை ஆராதிப்பதாகவும், சங்கராந்தியில் சூர்யநாராயண ஸ்வாமியை பூஜிப்பதாகவும் அமைந்துள்ளதை நாம் நன்கு அறிவோம். அவ்வாறே ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேரு விதமான பக்ஷணங்கள் நைவேத்யமாக சொல்லப்பட்டுள்ளதும் நமக்குத் தெரியும்.

தீபாவளியை பொருத்தவரையில் எந்த குறிப்பிட்ட கடவுளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் சொல்லப்படவில்லை. தீபாவளிக்கு முக்கிய அம்சம் என்னவெனில் ஸ்நானம் செய்வதே. குளியலை மையயமாக வைத்துதான் தீபாவளி இல்லம்தோறும் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி அன்று காலையில் நாம் அன்பர்களையும் நண்பர்களையும் சுற்றார்களையும் சந்திக்கும்போது ‘கங்கா ஸ்நானம் ஆச்சா.?” என்றுதான் கேட்கிறோம்.

தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்துக்கொண்டு் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும். அன்று வெந்நீரில் அந்த முகூர்த்தத்தில் கங்கை வசிப்பதாக சாஸ்திரம் சொல்லுகின்றது. அதற்காகத்தான் இதற்கு ”கங்கா ஸ்நானம்” என்று பெயர் வந்துள்ளது.

இந்த ஒரு ஸ்நானத்துடன் நிற்கவில்லை. அன்று மற்றுமொரு குளியலும் சொல்லியுள்ளது. அன்று காலை சூரியோதயத்திற்கு பிறகு 6 நாழிகைக்குள் (அதாவது சுமார் காலை 9 மணிக்குள்) காவேரி போன்ற நதிகளிலோ அல்லது குளத்திலோ அல்லது கிணற்றிலோ அல்லது குழாயடியிலோ குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த ஸ்நானத்திற்கு பெயர் ”துலா ஸ்நானம்”.

முதலாவதாக செய்யும் கங்கா ஸ்நானத்தின்போது விஷ்ணு பகவானை ஸ்மரிக்கவேண்டும். இரண்டாவது குளியலின்போது பரமேஸ்வரனை நினைக்கவேண்டும் என பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

தீபாவளி சொல்லும் செய்தி:

கிருஷ்ணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டபோது, மரணத்தருவாயில் அவன் ஞானத்தைப் பெற்றான். ‘எனது தவறுகளுக்காக நான் துன்பம் அனுபவிக்கவே வேண்டும். ஆனால், எனது மரண தினத்தை மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் கொண்டாடவேண்டும்....” என்று கோரி இறப்பெய்தினான்.

நமக்கு தனிப்பட்ட வகையில் எத்தனையோ துன்பங்கள் இருப்பினும் கவலைகளோ குறைபாடுகளோ இருந்தாலும் சுற்றியிருக்கும் மனிதர்களையும் உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு அசுரன் தனது மரணத் தருவாயில் உணர்ந்தான். ஒரு அசுரன் அத்தனை ஞான நிலையை எட்ட முடியுமானால் நாகரிகமடைந்த மனிதர்களால் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பிறருக்கு அளிக்க முடியும் என்பதை நினவுப்படுத்தும் பண்டிகையே தீபாவளி.

நம்மை சுற்றி ஒளியேற்றுவோம்.

அனைவருக்கும் தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்

Night Dharshan of Nageshwar Mahadev,near Dwaraka


சக்கரத்தாழ்வார் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும் .....

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத் ...

Jai Ambe jagdambe maiya jai ambe jagdambe.. Ray Mann bhaj le bhaj le.. Tu maiya ka naam.. Maa ki daya se ban jaate hein sab ke bigde kaam.. Re mann bhaj.. Shubh prabhat dosto.

Good Morning to all Somnath temple in Gujarat is the JyotirLinga at the seashore

5TH DAY VIRADHAM.........சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் குருநாதர் ஷீரடி பாபாவிற்கும் உகந்த நாளாகும் ..
அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் ஐஸ்வர்யமிக்க நன்னாளாக மிளிரவும் .. பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷிர்டி வாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!

ஸ்ரீசாயின் அமுதமொழிகளை விடாமல் நாமஸ்மரணை செய்வீர்களாயின் உங்களது மனதை வருத்தும் அனைத்து கவலைகளும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிவிடும் .. என்பது சத்தியமான உண்மை .. 

இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கை வளமாவதற்கு ஷீரடியின் அனைத்து வாக்குறுதிகளும் தங்களுக்காகவே எழுதப்பட்டவையாகக் கொள்க .. அனைத்திலும் வெற்றியே காண்பீர்கள் .. என்றும் பிரகாசமாக ஜொலிப்பீர்கள் .. 
“ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. 
MAY YOU BE BLESSED WITH SUCCESS .. PROSPERITY .. AND HAPPINESS .. " OM SAI RAM " ..

TODAY OUR FOURTHDAY VIRADHAM......SWAMIYE SARANAM IYYAPPA.....PANVEL BALAGANE POTRI POTRI. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக்காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவரது இன்னல்களும் பனிப்போல் நீங்கவும் .. இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்நாளாக அமைந்திடவும் பெருமாளைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! மஹாவிஷ்ணு சயனித்திருப்பதே பாற்கடலில் தான் .. மிகக்குளிர்ச்சியானவன் .. அதனால்தான் பக்தர்களின் குளிர்கால நோய்கள் தீர்க்க எல்லாக் குளிரையும் தான் தாங்கிக்கொண்டு இருப்பதால் அதைச் சமன்செய்ய திருமகளை மார்பிலே தாங்கிக்கொண்டு ஆடை ஆபரணங்களைப்பூண்டு சுகவாசிபோல் தோற்றமளித்துக் கொண்டு நம்பாவங்கள் .. பிணிகள் இவைகளைப் போக்க நெய் .. தேன் .. பால் .. பலகாரங்கள் .. இன்ன பிற வசதிகளைச் செய்துகொண்டு நம்மைக்காத்துக்கொண்டிருக்கிறான் விஷ்ணுபகவான் .. விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோம் ! “ ஓம் நமோ நாராயணா “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM NAMO NAARAAYANAA " ..

உலக அதிசயம் மீனாட்சி அம்மன் கோவில் எழில் மிகுத்தோற்றம்..!

Good Evening to all Sunset at the Meenakshi Amman Temple - Madurai, Tamil Nadu.

Night Dharshan of Udupi Krishna.

3RD DAY OF OUR VIRADHAM....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...PANVEL BALAGANE SARANAM IYYAPPA....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று தேய்பிறை அஷ்டமித் திதியும் சேர்ந்து வருவதால் அதிவிசேஷம் .. ஆலயம் சென்று காலபைரவரை வணங்குதல் சிறப்பு .. 

தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் சிறப்புமிக்க நன்னாளாகவும் ..பகைவர்களின் தொல்லைகள் நீங்கி .. வியாபாரத்தில் முன்னேற்றமும் .. தனலாபமும் பெற்றிடவும் 
பிரார்த்திக்கின்றேன் .. 

சுவநத்வஜாய வித்மஹே !
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

எல்லா சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய்வாகனத்துடன் 
பைரவர் காட்சி தருவார் .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் 
இரவு அர்த்தஜாமத்தில் பூஜைமுடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்படவேண்டும் பார்த்த நித்யாபூஜாவிதி கூறுகிறது .. 

தேய்பிறை அஷ்டமியில் பைரவரின் சன்னதிக்கு அஷ்டலக்ஷ்மிகளும் வருகை தருகிறார்கள் .. அவர்கள் பைரவரை வழிபடும்போது நாமும்போய் வழிபட்டால் .. கோரிக்கைகள் வைத்தால் .. அடுத்த தேய்பிறைக்குள் பணப்பிரச்சினை .. கடன் தீர்ந்துவிடுகிறது ,, அல்லது பணவரவு நியாயமான வழியில் அதிகரித்து விடுகிறது ..

பைரவரைப் போற்றுவோம் சகல தொல்லைகளிலிருந்தும் .. பயம்நீங்கி அவரருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்றிடுவோமாக .. ஓம் பைரவாய போற்றி ! போற்றி !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA ..
MAY HE SHOWER YOU A PEACEFUL LIFE .. AND REMOVE ALL THE NIGHTMARES AND DISTURBANCE FROM EVIL SPIRITS .. 

" JAI BHAIRAV DEV "

MORE PHOTOS OF POOJA AT SANNIDHANAM...













PANVEL BALAGANE POTRI POTRI....GURUVE SARANAM SARANAM...

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சோமவாரவிரதமும் கூடிவருவதால் சிவாலயம் சென்று சிவனைத்தரிசிப்பது சாலச்சிறந்தது .. தீமைகளை அகற்றி சகல நன்மைகளையும் அளிக்கவல்லவர் சிவபெருமானே ! 

தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

உத்தமமான விரதங்களுள் ஒன்று சோமவாரவிரதம் என்று வேதநூல்கள் கூறுகின்றன .. தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய
சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின் பிறைதொடர்ந்து வளர அருள்செய்தார் ஈசன் .. இவ்வாறு ஈசன் சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவாரமாகிய திங்கட்கிழமையாகும் .. 

சிவனைப்போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி காண்போமாக ! என்றும் வெற்றி ! எதிலும் வெற்றி! வெற்றி நிச்சயம் ! “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY THE ALMIGHTY LORD SHIVA SHOWER YOU WITH GOOD HEALTH HAPPINESS AND GOOD FORTUNE .. " JAI BHOLE NATH " ..