
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸர்வ ஏகாதசியும் வருவது சாலச்சிறந்தது .. மஹாவிஷ்ணுவைத் துதித்து தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! இந்துதர்ம சாஸ்திரங்கள் .. புராணங்களில் ஏகாதசி விரதமகிமை பற்றி சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது .. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையில் ஒன்றும் .. தேய்பிறையில் ஒன்றும் என இரண்டு ஏகாதசிகள் வரும் .. ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒவ்வொரு பலன்கிட்டும் என்பது ஐதீகம் .. இன்றைய ஏகாதசியை ‘காமதா ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது .. இவ் ஏகாதசி விரதமானது அனுஷ்டிப்பவர்களின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி மோட்சப்பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது .. உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் காமதா ஏகாதசி விரதத்தின் புண்ணியபலனின் பிரபாவம் சகலவிதமான பாபங்களையும் நீக்குவதோடு புத்ர ப்ராப்தியையும் அளிக்கிறது .. இவ்விரதம் அனுஷ்டிப்பதால் கர்மவினையின் காரணமாக இழிநிலை பிறவி எடுத்தவர் அதிலிருந்து விடுதலை பெறுவதுடன் இறுதியில் ஸ்வர்கலோகப் பிராப்தியையும் பெறுவர் .. மஹாவிஷ்ணுவைப் போற்றி வணங்குவோம் ! சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக ! ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் .. தங்களனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த .. வெற்றிகள் தரும் புத்தாண்டாக மலர வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஆண்டுதோறும் ஆறுபருவங்கள் மாறி மாறி வருகின்றன .. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பைக் கொண்டது சித்திரை மாதம் .. இந்த மாதத்தில் இளவேனிற் காலம் இன்பமுடன் எழுகிறது .. “வந்தது வசந்தம் “ என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல்நாள் .. கரும்பு வில்லேந்தி மன்மதவருஷம் பிறந்தநாள் மாமரங்களும் .. வேப்பமரங்களும் பூத்துக்குலுங்கி நிற்கும் குதூகலப் பெருநாள் .. சித்திரை மாதத்தை ‘சைத்ரா ’ என்றும் .. ‘சைத்ரவிஷு ‘ என்றும் கூறுவர் .. சித்திரை வருஷபிறப்பன்று கோயில்களில் புதுவருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு .. சித்திர வருஷபிறப்பு தினத்தை கேரளமக்கள் “விஷுக்கனி காணல் “ என்று கொண்டாடுகின்றனர் .. தினம் வீட்டிற்கு வருவோர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பதனை கேரளமக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .. மருத்துநீர் வைத்தல் என்பது முக்கியவிடயமாக புதுவருடதினத்தில் கருதப்படுகிறது தோஷநட்சத்திரக்காரர்களுக்கு முக்கியம் .. இம்மருத்துநீர் தாழம்பூ .. தாமரைப்பூ .. மாடுளம்பூ .. துளசி .. விஷ்ணுகிராந்தி .. சீதேவியார் செங்கழுநீர் .. வில்வம் .. அறுகு .. பீர்க்குபால் .. கோசலம் .. கோமயம் .. கோரோசனை .. மஞ்சள் .. திற்பிலி .. மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும் ..மருத்துநீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்லபலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை .. விஷு புண்ணியகாலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள் .. தாய் .. தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும் .. கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும் .. சூரியபகவானை பிரார்த்தித்து ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்தபலனைத் தரும் .. தான தருமங்கள் செய்வது வழக்கம் .. அனைவரும் இனிதே மன்மத புத்தாண்டை வரவேற்போமாக .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY NEW YEAR WITH THE BLESSINGS OF LORD KRISHNA .. MAY THIS YEAR BRING YOU HAPPINESS .. PROSPERITY AND GOOD FORTUNE ..
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானை வணங்கி தங்களனைவருக்கும் மலர்ந்திருக்கும் இன்றைய நாள் ஓர் இனிமையான நன்னாளாக அமைந்திடவும் .. தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் எவ்வித தடங்களுமின்றி வெற்றிபெறவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! .. சிவன் உருவ தத்துவங்கள் - இறைவனுக்கு உருவம் இருக்கிறதா ..? .. இல்லையா .. ? .. இதைப்பற்றிய சிந்தனைகளும் .. ஆய்வுகளும் பல்லாயிரம் செய்துவிட்டனர் .. அந்த இறைவனே அதை நமக்கும் உணர்த்தியுள்ளான் சிவபெருமானுடைய வடிவம் மூன்று .. அருவம் .. அருவுருவம் உருவம் .. என்னும் மூன்றுமாம் .. அருவத்திருமேனியுடைய பொழுது சிவன் என்றும் .. அருவுருவத்திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும் .. உருவத்திருமேனியையுடைய பொழுது மஹேஷ்வரன் எனவும் பெயர் பெறுவர் .. இனி சிவனின் உருவமாக நாம் பொதுவாக காணும் உருவத்தைக் காண்போம் - பத்மாசனம் - அந்தச்சிவனே பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பதை காண்கிறோம் .. அவனின் ஒளிமிகுந்த கண்கள் முக்கால்பாகம் மூடிய நிலையில்.. இருபுருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண் .. நெற்றியில் திருநீற்றினால் மூன்றுகோடுகள் .. செம்மைநிற சடைமுடியான் .. தலையில் கங்கை ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள் .. பிறையை தலையில் சூடிய பெருமானாய் இருக்கிறான் .. சிவனுக்குக்குப் பிடித்த கொன்றைமலரை தலையில் அணிந்திருக்கிறான் .. உடல்முழுவதும் திருநீற்றுக்கோடுகள் .. கைகளிலும் .. கழுத்திலும் உருத்திராட்ச மாலை .. கழுத்தில் பாம்பு .. உடுக்கையும் .. சூலாயுதத்தையும் .. விடையாகிய காளைமாட்டை வாகனாமாகவும் .. கைலாய மலையை வீடாகவும் வைத்துள்ளான் .. நடனத்தை உருவாக்கியவனாய் நடராஜனாய் இருக்கிறான் .. இப்பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முகபாவனையோடு நமக்குப் புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள்புரிகிறான் .. சிவனைப்போற்றி வணங்குவோம் .. சகல வெற்றியையும் ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE DIVINE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE BE WITH YOU IN YOUR EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA "
Subscribe to:
Posts (Atom)




